-
20th November 2014, 11:27 PM
#331
Junior Member
Devoted Hubber
#IFFI2014 pays tribute to great dancers in Indian cinema; dance performance by Actor-dancer shri Vineet:Live from Goa
-
20th November 2014 11:27 PM
# ADS
Circuit advertisement
-
20th November 2014, 11:27 PM
#332
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
radiochandra1977
Fantastic movie. Superb performancea by all 3 leads ... especially sripriya.
Second that. SriPriya was kinda playing the lead role in my opinion. What a perspective in early 80's! Rajini-Kamal interactions were again quite entertaining with one of those sarcastic villain roles played by Rajini.
I remember a scene where he tells Kamal 'poda fool - she's a sex crazed bit**' !!
-
21st November 2014, 12:09 AM
#333
Member
Senior Hubber
Sorry to point out something that might seem trivial. I feel kamal rajni is the correct order by seniority in the industry. At least in films like aval appadithaan ..... where KH had a bigger role. Rajni kamal is ok in moondru mudichu for example.
Kalaikkadavul Kamalin Bakthan
-
21st November 2014, 12:11 AM
#334
Member
Senior Hubber
And to be shedding off chaunisms ..... i would say sripriya, kamal and rajni ..... for this particular movie.
Kalaikkadavul Kamalin Bakthan
-
21st November 2014, 12:14 AM
#335
Member
Senior Hubber
Anyway .... its a matter of personal opinion. No big deal.
Kalaikkadavul Kamalin Bakthan
-
21st November 2014, 09:01 PM
#336
Junior Member
Devoted Hubber
சம்பிரதாய தமிழ் திரைக்கதை அமைப்பை மாற்றியமைப்பதில் கமலுக்கு தனி பங்குண்டு.
- எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்.
திரைகதையாடல் என்ற வகையில் அவர் செய்துள்ள முயற்சிகள் இந்திய சமூகத்தின் சம கால நிகழ்வுகளின் எதிர்வினை கொண்டதாக அமைந்துள்ளன. 80 ஆண்டு தமிழ் சினிமாவில் எழுத தெரிந்த நடிகர் என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக உள்ள கலைஞர் கமல்ஹாசன், நடிகராக மட்டுமல்லாமல் தன்னை ஒரு கவிஞராக, இலக்கிய வாசகராக, திரைக்கதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக தனது படைப்பு திறனை வெளிபடுத்துக் கொண்ட முன்னோடி ஆளுமை. சினிமாவின் தொழில் நுட்ப வளர்ச்சியை உணர்ந்து, அதை பயன்படுத்திக் கொள்வதிலும் கமலே முன்னோடி. ஆவிட் எனப்படும் நான்லீனியர் எடிட்டிங் துவங்கி ஸ்பெஷல் எபெக்ட், டிஜிட்டல் பிலிம் மேக்கிங், ஆன்லைன் எடிட்டிங், இன்று ரெட் காமிரா வரை சினிமாவின் புதிய தொழில் நுட்பங்களை உள்வாங்கிக் கொண்டு, அதை தனது திரைப்படங்களுக்கு சரியாக பயன்படுத்திக் கொள்கிறார். அதை போலவே ஒப்பனை மற்றும் வட்டார பாஷையை அதன் உச்சரிப்பு சுத்தத்தோடு பேசுவதில் அவர் காட்டும் அக்கறையும் கவனமும் தனித்துவமானது. தென்னிந்திய மொழிகள் யாவும் அவர் நடித்துள்ளார். குறிப்பாக மலையாள திரையுலகில் அவருக்குள்ள நெருக்கமும் உறவும் யதார்த்தமான கதைகளும் நிகழ்வுகளையும் சினிமாவாக்குவதற்கான உந்துதலை அவருக்குள் உருவாக்க கூடும். பக்கம் பக்கமாக வசனம் பேசுவது, குரலை உயர்த்தி கர்ஜித்துக்கொண்டிருக்கும் காலத்தில் பேசும்படம் என்ற மௌன படத்தில் அவர் நடித்ததே அவரது நடிப்பாற்றலுக்கு சான்று. ஒரு நடிகனாக தனது உடலையும் பாவனைகளையும் கொண்டு வசனங்களின்றி தன்னை முழுமையாக வெளிபடுத்திய விதம் அவரது நுண்திறனை வெளிபடுத்தியது. — எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்.
-
22nd November 2014, 10:04 AM
#337
Junior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd November 2014, 11:02 AM
#338
Junior Member
Newbie Hubber

Kalakkal simple Kamal
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd November 2014, 03:03 PM
#339
Junior Member
Devoted Hubber
சகலகலா வல்லவன் பட வெற்றி ருத்ரய்யாவுடன் நான் சேர்வதைத் தடுத்தது!- கமல்
இயக்குநர் ருத்ரய்யாவின் முதல் படத்தின் நாயகனான கமல் ஹாஸன், அவருடனான தனது அனுபவங்கள் நினைவுகளை தி இந்து நாளிதழில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதோ கமலின் நினைவுப் பகிர்வு... "சினிமாவில் எனது வழிகாட்டிகளில் ஒருவரான அனந்து தான் முதன்முதலில் ருத்ரய்யா குறித்து என்னிடம் பேசியது. 'திரைப்படக் கல்லூரியிலிருந்து புத்திசாலி மாணவர்' என குறிப்பிட்டார். ருத்ரய்யாவின் இயற்பெயர் ஆறுமுகம். அவரை அப்படித்தான் நாங்கள் முதலில் அறிந்திருந்தோம். சென்னை திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற துடிப்புள்ள இளைஞர். அங்கு மாணவர்கள் யூனியனுக்குத் தலைவராக இருந்து தீவிரமாக செயல்படும் போராளியாகவே பெயர் பெற்றிருந்தார்.
தமிழ் சினிமாவை உருமாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நான், ஆர்.சி. சக்தி, அனந்து ஆகியோர் அடங்கிய எங்கள் குழுவிற்கு சீக்கிரத்திலேயே நெருக்கமானார். நாங்கள் சந்தித்தால் மணிக்கணக்கில் எங்கள் பேச்சு நீளும் என்பதால் எங்களது சந்திப்பு குறித்து அச்சப்பட்டவர்களும் இருந்தனர். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் பிரசன்னா என்ற பாத்திரத்தில் ஒன்றி நடிப்பதற்கு ருத்ரய்யா எனக்கு உதவினார். அந்தப் பாத்திரத்தைப் போலவே ருத்ரய்யாவும் இடதுசாரி கொள்கை உடையவர் என்பதால், அவரால் எனக்கு சிறப்பாக வழிகாட்ட முடிந்தது.
முதன்முதலில் ஆறுமுகத்துடன் எனது நினைவுகள் இதுவே. எங்களது உரையாடல்கள் எனக்கு ஞாபகத்தில் உள்ளன. கோடார்ட், போலன்ஸ்கி, ரோஸெலினி, பிரெஸ்ஸான் ஆகிய இயக்குநர்களது படங்கள் எங்கள் பேச்சில் அடிக்கடி வந்து போகும். சென்னை திரைப்படக் கல்லூரியில் அவருக்கு இருந்த செல்வாக்கை வைத்து, வெளிநாட்டுத் திரைப்படங்களை வரவழைத்து, பார்த்து, அதை ஒரு நாள் தாமதமாக பூனே திரைப்படக் கல்லூரிக்கு அனுப்புவோம். எல்டாம்ஸ் சாலையில் ஒரு சிறிய திரைப்பட விழாவைப் போலவே இருக்கும். நாங்கள் பெருமைபட்டுக் கொள்ளுமாறு, தமிழ் சினிமாவை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்லுமாறு ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்தோம்.
அதன் விளைவே 'அவள் அப்படித்தான்'. கோபத்தால் உந்தப்பட்ட ஆளாக ஆறுமுகம் எனக்குத் தோன்றினார். ஒருவேளை அதனால்தான் தன் பெயரை ருத்ரய்யா என்று மாற்றிக் கொண்டார் என நினைக்கிறேன். அவரது முதல் படம் எங்கள் குழுவின் செல்லப் படமாக இருந்தது. அதனால் வெறும் பேச்சு மட்டுமல்ல, செய்தும் காட்டுவோம் என மற்றவர்களிடமிருந்து நாங்கள் வித்தியாசப்பட்டு நின்றோம். ஒரு வருடத்திற்கு 20 படங்கள் வரை நான் நடித்த காலகட்டம் அது. எனவே, என் ஓய்வு நேரத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. அப்படி இருந்தும் படத்திற்கு எங்களால் சிறப்பான வடிவத்தைத் தர முடிந்தது.
அவள் அப்படித்தான் படத்தின் முதல் காட்சியில், நான் கேமராவைப் பார்த்து "கொஞ்சம் லெஃப்ட்ல உட்காருங்க" என்று கூறுவது, இடதுசாரி சிந்தனையை ரசிகர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என ஊக்குவிக்கும் குறியீடுதான். அப்போதைய தமிழ் சினிமாவின் மீது இருந்த கோபத்தின் விளைவாகவே அவள் அப்படித்தான் துவங்கப்பட்டது. சலிப்பை ஏற்படுத்தும் படமாக அது மாற வாய்ப்பிருந்தது, ஆனால் அப்படி ஆகவில்லை. பணத் தட்டுப்பாடு இருந்ததால் தொழில்நுட்ப ரீதியில் படத்துக்கு சிறப்பு சேர்க்க முடியாமல் போனது. அப்போது, இளையராஜா பிஸியாக இருந்தார். ஆனாலும் எங்களுக்காக அவரை வலுக்கட்டயமாக இசையமைக்க வைக்க முடிந்தது. கையில் கிடைத்த கேமராவைக் கொண்டு, எங்களை வைத்து ருத்ரய்யா நடத்திய படப்பிடிப்பு ஆச்சரியமானதாக இருந்தது. எங்கள் நோக்கம் ஒழுங்காக இருந்ததால், சிறிய பட்ஜெட்டாக இருந்தாலும் அனந்து, ரஜினி, ஸ்ரீப்ரியா போன்றோர் படத்தில் இணைய ஒப்புக் கொண்டனர். பெண் விடுதலையைப் பற்றி அனந்து அப்போதே எழுதினார். படப்பிடிப்பு சமயத்திலும் நாங்கள் வெளிநாட்டுத் திரைப்படங்கள் குறித்து நிறையப் பேசுவோம். ஒவ்வொரு காட்சிக்கு முன்பும், இதை கோடார்ட் எடுத்தால் எப்படி எடுப்பார், கேமராவின் கோணம் எப்படி இருக்கும் என பேசிக் கொண்டிருப்போம். ஐந்து மாதங்கள், இரண்டு இரண்டு மணி நேரங்களாக எங்கள் படப்பிடிப்பு நடந்தது. படத்தைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது.
'ராஜா என்னை மன்னித்துவிடு' என்ற ருத்ரய்யாவின் இரண்டாவது படத்திலும் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தப் படத்தை எங்களால் தொடங்க முடியவில்லை. அந்தப் படத்தின் கதை சிறப்பாக இருந்தது. ஆனால் 'சகலகலா வல்லவன்' போன்ற படங்களின் வெற்றி, எங்கள் கூட்டணியை தடுத்தது. தமிழ் சினிமாவில் ராஜபார்வைக்குப் பிறகு என் மீதான நம்பிக்கை மிகுந்தது. அதே வேளையில், 'சகலகலா வல்லவன்' திரைப்படத்தில் நான் நடித்தது ருத்ரய்யாவுக்கு பிடிக்கவில்லை. வணிக ரீதியிலான படங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டுதான் நாம் நினைக்கும் சிறந்த படங்களை எடுக்க முடியும் என்று அவரை சமாதனப்படுத்தியது என் நினைவில் உள்ளது.
அப்போது அவர் 'கிராமத்து அத்தியாயம்' திரைப்படம் எடுத்தார். அதில் எங்களுக்குள் சில கருத்து வேறுபாடு நிலவியது. அந்தக் கரு எனக்குப் பிடித்திருந்தாலும், அவள் அப்படித்தானில் இருந்த அடர்த்தி அதில் இல்லை. ருத்ரய்யா வித்தியாசமான மனிதர். சிறந்த விமர்சனங்களைவிட, வணிகரீதியிலான வெற்றியையே நாம் நினைவில் வைத்துக் கொண்டாடுவது பரிதாபகரமானது. ருத்ரய்யாவிடம் பல படங்களுக்கான கதைகள் இருந்தன. ஆனால், அவரால் இரண்டு படங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இப்படிப்பட்ட கலைஞர்கள் விரக்தியடைக் கூடாது என்றுதான் மேற்கத்திய நாடுகளில் 'சன்டான்ஸ்' போன்ற திரைப்பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. அவள் அப்படித்தான் படத்தை நினைவுகூர்வதன் மூலம் மாற்று சினிமாவுக்கான தளத்தை அமைக்க சிலர் முயற்சிக்கலாம்.
தனது படைப்பின் மீது அதீதமான பெருமை கொண்டவராக ருத்ரய்யா இருந்தார். வேறு யாரிடமும் பணியாற்ற அவர் விரும்பவில்லை. சினிமாவைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்ததால், தன்னை யாரும் கட்டுப்படுத்துவதை அவர் விரும்பவில்லை. தான் கட்டுப்படுத்துவதையே அவர் விரும்பினார். அவள் அப்படித்தான் திரைப்பட தயாரிப்பில் இருந்த தோழமை, மற்ற படங்களிலும் இருக்கும் என்று அவர் நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை.
ஒரு வருடத்திற்கு முன்னால் அவரை சந்தித்தேன். அப்போதும்கூட, அடுத்த படம் எடுப்பதற்கான நம்பிக்கையை அவர் விட்டுவிடவில்லை. உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். படம் எடுப்பது போதையைப் போல. சிலர் விலகினாலும், சிலர் தொடர்ந்து முயற்ச்சித்திக் கொண்டே இருப்பார்கள். ருத்ரய்யா இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். அதற்காக அவரை நான் மதிக்கிறேன். துறையிலிருந்து அவருக்கும் இன்னும் உதவிகள் செய்யப்பட்டிருக்கலாம். பாரதியின் கவிதைகளுக்காக அவரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது போல, ருத்ரய்யாவும் அவர் எடுத்த ஆகச் சிறந்த படத்திற்காக நினைவில் நிற்பார். தமிழ் சினிமாவின் அடித்தளத்தையே உலுக்கிய 'அவள் அப்படித்தான்' எடுத்ததற்காக இந்த உலகம் அவரை என்றும் நினைவுகூரும். இன்றும் கல்லூரி மாணவர்கள் பலர், படத்தைப் பார்த்து, இது எப்படி இவர்களால் சாத்தியமானது என்று யோசிக்கின்றனர். சினிமாவின் மீது காதல் கொண்ட ஒருவராக ருத்ரய்யா என் நினைவில் நிற்கிறார். ஒரு காட்சி சிறப்பாக வரவேண்டும் என்றால், தெர்மகோலை தூக்கிப் பிடிக்கும் வேலை செய்யவும் தயங்கமாட்டார் ருத்ரய்யா.
Read more at: http://tamil.filmibeat.com/specials/...ya-031949.html
Last edited by Ravi Ravi; 22nd November 2014 at 03:05 PM.
-
22nd November 2014, 08:03 PM
#340
Senior Member
Diamond Hubber
Bookmarks