-
25th November 2014, 07:42 AM
#21
Junior Member
Devoted Hubber
Mr. Krishna, இப்பொழுதுதான் பார்த்தேன். மன்னிக்கவும்.
அப்பர் -600-681- CE
சம்பந்தர் = 644- 660 CE
சுந்தரர் - 710-735 CE
மாணிக்கவாசகர் -660-692 CE
இதில் அப்பர் சம்பந்தர் ,மாணிக்கவாசகர் மூவரும் 6ம் நூறண்டிலும் சுந்தரர் ஏழாம் நூர்ரண்டிலும் இருந்தவர்கள் என்று ஒரு குறிப்பு சொல்லுது. நான் ரொம்ப புத்திசாலி எல்லாம் கிடையாதுங்க! எல்லாமே தெரிந்து கொண்டு எதுவுமே தெரியாதது போல இருக்கும் பல பேருக்கு நடுவில் அரை குறையான நான்!! 
I am not offending you, just telling the truth !
சரித்திர கால சான்றுகள் எவ்வளவு தூரம் மிக சரியாக இருக்கும் என்பதில் எனக்கு எப்பவுமே ஒரு தயக்கம் உண்டு, கண் முன்னாலேயே பல சரித்திரங்கள் மாறுவதை பார்க்கிறோம். பல நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்ததை பற்றி சொல்லவும் வேண்டுமா ?
கொஞ்சம் டைம் கொடுங்க , கட்டாயம் சரியான பதிலை சீக்கிரம் சொல்லகிறேன்.
தேவாரத்தில் முதலாம் திருமுறை, இரண்டாம் திருமுறை, மூன்றாம் திருமுறை, மற்றும் ஏழாம் திருமுறை சுந்தர்ரரால் இயற்ற பட்டது.
சம்பந்தரின் மூன்றாம் திருமறையில் "மதுரையை" பற்றி
செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!
. சித்தனே! திரு ஆலவாய் மேவிய
அத்தனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பத்தி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச்
சொக்கனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பக்கமே சென்று, பாண்டியற்கு ஆகவே!
சிட்டனே! திரு ஆலவாய் மேவிய
அட்டமூர்த்தியனே! “அஞ்சல்!” என்று அருள்
துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பட்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய்
அண்ணலே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எண் இலா அமணர் கொளுவும் சுடர்
பண் இயல் தமிழ்ப் பாண்டியற்கு ஆகவே!
“தஞ்சம்!” என்று உன் சரண் புகுந்தேனையும்,
“அஞ்சல்!” என்று அருள், ஆலவாய் அண்ணலே!
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர்
பஞ்சவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
செங்கண் வெள்விடையாய்! திரு ஆலவாய்
அங்கணா! “அஞ்சல்!” என்று அருள் செய், எனை;
கங்குலார் அமண்கையர் இடும் கனல்,
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே!
தூர்த்தன் வீரம் தொலைத்து அருள் ஆலவாய்
ஆத்தனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர்
பார்த்திவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
தாவினான், அயன்தான் அறியா வகை
மேவினாய்! திரு ஆலவாயாய், அருள்
தூ இலா அமணர் கொளுவும் சுடர்
பாவினான், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
அண்டனே! “அஞ்சல்!” என்று அருள் செய், எனை;
குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பண்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
அப்பன்-ஆலவாய் ஆதி அருளினால்,
வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்கு
ஒப்ப, ஞானசம்பந்தன் உரைபத்தும்,
செப்ப வல்லவர் தீது இலாச் செல்வரே.
அடுத்த முறை மதுரை சென்று மீனாக்ஷி அம்மன் கோவில் செல்லும் சந்தர்பம் கிடைத்தால் சுவாமி சன்னதிதையும் ( எப்பவும் கூட்டமே இருக்காது ) பொற்றாமரை குளத்தின் வலது பக்கத்தில் அமர்ந்து இருக்கும் விபூதி பிள்ளையாரையும் ( திருவிளயாடல் படத்தில் நாகேஷ் ஸ்பெசலாக வணக்கம் வைத்து விட்டு போவார் ) தவறாமல் வணங்கவும்.
Last edited by poem; 25th November 2014 at 08:27 AM.
-
25th November 2014 07:42 AM
# ADS
Circuit advertisement
Bookmarks