-
7th December 2014, 07:16 AM
#241
Senior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th December 2014 07:16 AM
# ADS
Circuit advertisement
-
7th December 2014, 07:22 AM
#242
Senior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th December 2014, 07:24 AM
#243
Senior Member
Devoted Hubber
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 1
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]
சாந்தி தியேட்டரின் நுழைவாயிலை நோக்கி எனது கால்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது சரியாக மாலை நாலேகால் மணி. எதிரே மகானின் பக்தர்கள் - பெற்ற குழந்தையை சிரத்தையுடன் சுமந்து வரும் அன்னை போல் - தாங்கள் பெற்ற தந்தைக்கு அணிவிப்பதற்காக ராட்சத மலர் மாலையை தங்களது கைகளிலும், தோள்களிலும் இருபுறமும் சுமந்து கொண்டு, "சிவாஜி புகழ் வாழ்க!', "எங்கள் தெய்வத்தின் புகழ் வாழ்க!" என்கின்ற கோஷங்களுடன் அமைதியான முறையில் ஊர்வலமாக அரங்க நுழைவாயிலை நெருங்கினர். ராட்சத மலர் மாலைக்கான முழு பங்களிப்பும் பெங்களூர் பக்தர்களைச் சேர்ந்தது. அவர்கள் இந்த மாலையை ஒரு கன்டைனர் லாரியில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு எடுத்து வந்தனர். ஊர்வலத்தில் சென்னை மற்றும் பெங்களூர் பக்தர்களுடன், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மற்றும் புதுச்சேரியிலிருந்தும் வருகை புரிந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நுழைவாயிலில் ஊர்வலம் சில மணித்துளிகள் நின்றது. "அடி என்னடி ராக்கம்மா", "கேட்டுக்கோடி உருமி மேளம்", "வரதப்பா" பாடல்கள் பேண்ட் வாத்தியத்தில் முழங்க, ட்ரம்ஸ் ஒலிக்க, பக்தர்கள் பக்திப் பரவசத்தில் திளைக்க ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான்!
தியேட்டரினுள்ளே 5000 வாலா(சரம்) சப்தம் ரீங்காரமிட, மாபெரும் மலர் மாலா(மாலை), கோமகன் சிவாஜி அளித்த கோயில் யானை போல், பக்தர்கள் புடை சூழ மிக அழகாக, நேர்த்தியாக, கம்பீரத்தோடு அரங்கிற்குள் நுழைந்தது. மிக உயரமான அந்த மலர் மாலையை 60 அடி உயர ராட்சத பதாகைக்கு(கட்-அவுட்) கீழே, அருகே வாத்தியங்கள் முழங்க எடுத்து வந்தனர். பின்னர் அதனை தூக்கி, ஏற்றி அண்ணலின் அன்பு சொட்டும் முகத்துக்கு சூட்டினர். கரவொலிகளும், குரலொலிகளும் விண்ணைப் பிளந்தன. வாலாக்கள் தொடர்ந்து வெடித்த வண்ணம் இருந்தன. ஊர்வலம், டான்ஸ், வாணவேடிக்கைகள், மாலை சாற்றுதல், பாலாபிஷேகம் முதலிய சுபகாரியங்கள் கிட்டத்தட்ட ஒண்ணேகால் மணி நேரம் நீடித்தது. சரியாக மாலை 5:45 மணிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்ட இறைவனுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இந்த சமயத்தில் மேட்னி ஷோ முடிந்து கூட்டம் உள்ளிருந்து வெளியே வர, கற்பூர ஆரத்தியைக் கண்டு அனைவருக்கும் மெய் சிலிர்த்தது. இதயதெய்வத்தின் புகழ் பாடும் கோஷங்கள் அரங்கத்தில் குழுமியிருந்த ஒவ்வொரு நல்லிதயத்திலிருந்தும் அவர்களது இரத்தநாளங்களிலிருந்தும் உணர்வுபூர்வமாகக் கிளம்பி விண்ணைப் பிளந்தன. மணவிழாவில் கூடும் உறவினர் போல், திருவிழாவில் கூடும் தோழர்கள் போல், இத்திரைவிழாவில் பக்தர்கள் ஆங்காங்கே ஒன்று கூடி நலம் விசாரித்துக் கொண்டதையும், தங்கள் இறைவனின் நடிப்பைப் பற்றியும், சாதனைகள் குறித்தும் அளவளாவிக் கொண்டதையும் காணக் கண்கோடி வேண்டும். எங்கு பார்த்தாலும் பக்தர் வெள்ளம். சரியாக ஆறு மணிக்கு "shanti housefull" என்கின்ற போர்டு மாட்டப்பட விசில் சத்தம் விண்ணை வீழ்த்தின. சென்னை பக்தர்கள் 10000 வாலா சரவெடியை கொளுத்திப் போட, ஆடியிலே தீபாவளி. காலதேவன் 6:30 நோக்கி நெருங்க, கலைத்தேவனைக் காண அடியவர் கூட்டம் அரங்கினுள் ஆர்ப்பரித்தது. மன்னவனுக்கு சூட்டப்பட்ட மாபெரும் மாலை கண்டு, பொழுதான மாலை வெட்கி, நாணி, மங்கி இரவுக்குள் புகுந்தது.
(தொடரும்...)
பக்தியுடன்,
பம்மலார்.
-
7th December 2014, 07:26 AM
#244
Senior Member
Devoted Hubber
பம்மலார் அவர்களின் வர்ணனை எந்த அளவிற்கு துல்லியமாக உள்ளது என்பதை இதோ இந்த காட்சியில் காணுங்கள். நன்றி யூட்யூப் மற்றும் நமது ஹப் நண்பர்களுக்கு.
ராகவேந்திரன்
Last edited by sivaa; 7th December 2014 at 07:29 AM.
-
7th December 2014, 07:31 AM
#245
Senior Member
Devoted Hubber
From Dinamalar website
மீண்டும் சிவாஜிகணேசனின் புதிய பறவை!
--------------------------------------------------------------------------------
நடிகர் திலகம் சிவாஜிகணேசன், சரோஜா தேவி, சவுகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, நாகேஷ், மனோரமா நடிப்பில் 1964ம் ஆண்டு திரைக்கு வந்து சக்கை போடு போட்ட படம் புதிய பறவை. 46 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த படத்தை சிவாஜி பிக்சர்ஸ் தயாரிப்பில், தாதா மிராஸ் இயக்கியிருந்தார். தற்போது சிவாஜி கணேசனின் 9வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சாந்தி தியேட்டரில் புத்தம் புது டிஜிட்டல் காப்பியாக திரையிடப்பட்டுள்ளது. புதிய படங்களுக்க இணையாக தியேட்டரை சுற்றிலும் சிவாஜி ரசிகர்கள் கட்-அவுட்களை *வைத்துள்ளனர். ரசிகர்கள் பலர் சிவாஜி கட்-அவுட்டுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
புதிய பறவை படம் 1964ம் ஆண்டு பாரகன் தியேட்டரில் திரையிடப்பட்டது. அந்த காலகட்டத்திலேயே நல்ல வசூலை வாரி குவித்த இந்த படம் இப்போதும் நல்ல வசூலை கொடுத்துக் கொண்டிருக்கிறதாம்.
http://cinema.dinamalar.com/tamil-ne...ning-again.htm
-
7th December 2014, 07:33 AM
#246
Senior Member
Devoted Hubber
மிக்க நன்றி மகேஷ் அவர்களே, அன்றைய மாலைக் காட்சியில் முரளி சார் அவர்களால் பங்கேற்க முடியாமல் போனது நமக்கெல்லாம் மிகுந்த வருத்தம் தான். இருந்தாலும் முடிந்த வரையில் நம்மால் இயன்ற வரையில் அன்றைய நிகழ்ச்சிகளை இங்கு பதிந்து கொள்வோம். தங்களுடைய அனுபவங்களையும் எண்ணங்களையும் அறிய மிகுந்த ஆவலாய் இருக்கிறோம்.
அன்று மாலை கட்அவுட்டுக்கு சாற்றுவதற்காக பெங்களூரு ரசிகர்கள் கொண்டு வந்திருந்த பிரம்மாண்ட மாலையை ஊர்வலமாய் எடுத்துச் சென்றதைக் கண்டோம். இதோ அம்மாலை மேலே தூக்கி ஏற்றப் படும் காட்சி.
அன்புடன்
ராகவேந்திரன்
-
7th December 2014, 07:35 AM
#247
Senior Member
Devoted Hubber
 |
|
| SIVAJI STILL DRAWS HOUSEFUL AUDIENCE |
|
| July 27, 2010 |
|
| Home > More news |
|
 |
|
The name Sivaji always makes news in Tamil Nadu. What with the Rajinikanth starrer Sivaji breaking all box office records 3 years back, it is time now for the actual name bearer to make news. We all know that the Sivaji Ganesan and Saroja Devi starrer "Pudhiya Paravai" was a milestone in Tamil cinema. This thriller which was released in 1964 also had Nagesh and MR Radha in important roles.
So what if it has been 46 years since it was first released, this movie is still drawing record audience in movie halls. Relased with a brand new copy by Sivaji films, Pudhiya Paravai, now showing in Shanthi theatre complex is running to houseful shows. So chennai folks, if you want to relive the memories of your favourite Sivaji in action, book a ticket today and enjoy the thriller !!! |
|
| Tags : Sivaji Ganesan, Saroja Devi, Pudhiya Paravai |
|
Dear friends,
After print media, now it's the turn of e-media to cover the reception for Pudhiya Paravai. See what behindwoods would like to say:
http://www.behindwoods.com/tamil-mov...-27-07-10.html
Raghavendran
-
7th December 2014, 07:38 AM
#248
Senior Member
Devoted Hubber
Blast from the past as Sivaji movie runs housefull
The author has posted comments on this articleTNN | Jul 27, 2010, 11.03PM IST
CHENNAI: For the last three days, movie buffs have been thronging Shanthi theatre on Anna Salai. It's not a new release which has set off such fan frenzy, but the re-release of Sivaji Ganesan-starrer Pudhiya paravai.' The movie has been running to full houses since Friday and fans are now asking for a Sivaji' year of movies.
"We screened Pudhiya paravai' because of demands form fans to mark his 9th death anniversary on Friday, but now the request for a Sivaji' film mela has come up," said actor Prabhu, son of Sivaji Ganesan. "The state of the prints of all his films need to be examined," he added.
The negatives of Pudhiya paravai' were cleaned up' at a lab, much to the delight of Sivaji's die-hard fans. Made in 1964, the film, has Sivaji playing the role of a man tortured by guilt over his past. "It came as a shock when people called me up for tickets," said Prabhu, in whose family-held theatre, Shanthi, the film could not be released in 1964. "Bollywood film Sangam' was running in the theatre and we had to release it at Paragon theatre, which does not exist anymore," he recollected.
Dear Pammalar,
Thank you for your kind words of appreciation. It was possible only because of friends and fans like you. There are many more assignments we have to complete.
Times of India has covered the Pudhiya Paravai success:
http://timesofindia.indiatimes.com/c...ow/6224856.cms
Raghavendran
-
8th December 2014, 12:44 AM
#249
இன்றைய தினம் [07.12.2014] மதுரை மாநகரில் நடிகர் திலகம் சரித்திரம் படைத்தார். ஞாயிறு மாலைக்காட்சிக்கு ரசிகர்களும் பொது மக்களும் அமோக ஆதரவளிக்க ஞாயிறு மாலைக்காட்சி பழைய படங்களின் வசூலில் மிக அதிகமாக வசூல் செய்த படம் என்ற பெருமையை அண்ணன் ஒரு கோவில் பெற்றது. பால்கனி டிக்கெட்டுகள் புல் ஆகி விட கீழேயும் சரியான கூட்டம் வந்திருக்கிறது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன.
இது தீபாவளி அல்லது பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் வெளியாகவில்லை. அது போன்ற விடுமுறை நாட்கள் படத்திற்கு பலம் சேர்க்கும். அப்படியில்லாமல் சாதாரண நாட்களில் வெளியாகி வசூல் சாதனை புரிவது என்பது சாதாரண விஷயமில்லை. ஆனால் நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்தவரை எந்த நேரத்தில் வெளியிட்டாலும் வசூலிக்கும் என்பதுதானே உண்மை!
இரண்டாவது விஷயம் இந்த படத்தை திரையிடலாம் என்று பேசிக் கொண்டிருக்கும்போது இந்த படமா இது கிளாஸ் படம். மக்கள் வர மாட்டார்கள் வசூலாகாது என்றெல்லாம் அரங்க நிர்வாகத்தினரிடம் சில "நல்ல உள்ளம்" படைத்தோர் சென்று அவர்கள் மனதை குழப்ப, படத்தின் வெளியிட்டாளார் அரங்க நிர்வாகத்தினரிடம் சென்று நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்தவரை கிளாஸ் அல்லது மாஸ் என்ற வித்தியாசமே கிடையாது. தமிழ் சினிமாவின் 83 வருட சரித்திரத்திலேயே Class Actor அதே நேரத்தில் Mass Hero என்ற இரு வேறுபட்ட நிலைகளிலும் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக பொருந்தக் கூடியவர் நடிகர் திலகம் ஒருவரே என்ற உண்மையை விளக்கியிருக்கிறார். இந்த மூன்று தினங்களில் படத்திற்கு வருகை தந்த audience-ஐயும் படத்திற்கு வசூலான தொகையையும் பார்த்து விட்டு அரங்க நிர்வாகம் தாங்களாகவே முன் வந்து படத்தின் வெளியிட்டாளரிடம் நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்று சொல்லியிருக்கிறார்கள்.
மாலையில் டவுன் ஹால் ரோட்டில் ஒரே அலப்பரை என்றால் அரங்கதினுள்ளிலும் ரசிகர்கள் ஆரவாரமாக ரசித்திருக்கின்றனர். ரசிகர்களின் வேண்டுகோளுகிணங்க இடைவேளையில் மல்லிகை முல்லை பாடல் காட்சி மீண்டும் போடப்பட்டிருக்கிறது. அதற்கு ஒரே ஆரவார வரவேற்பு என்றால் அதற்கு பின்னால் ஆண்டவன் கட்டளையின் ட்ரைலர் காண்பிக்கப்பட ரசிகர்கள் ஆனந்த கூத்தாடினர் என்று செய்திகள்.
இன்றைய மாலைக்காட்சி முடிவடைந்தவுடன் தியேட்டர் வாசலில் எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு நன்றி சுந்தர்!
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th December 2014, 01:00 AM
#250
மதுரையில் இன்றும் [08.12.2014] Dr.ரமேஷ் அண்ணனுக்கு வரவேற்பு குறையாமல் தொடர்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை மதுரை நண்பர்கள் பகிர்ந்துக் கொண்டனர். வேலை நாளான போதிலும் மக்கள் இன்றும் சென்ட்ரல் திரையரங்கிற்கு கணிசமான அளவில் வந்திருந்தனர் என்று சொன்னார்கள். இந்த வரவேற்பு இனி வரும் நாட்களிலும் தொடரும் என்ற நம்பிக்கை செய்தியையும் அவர்களிடமிருந்து கிடைத்தது.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks