-
12th December 2014, 06:59 AM
#1
Junior Member
Devoted Hubber
பல வருடங்களுக்கு முன் எனக்கு வில்லியம், ஜக்குலின் என்ற இரு நண்பர்கள் இருந்தார்கள். இருவரும் வெனிசுவேலா நாட்டை சேர்ந்தவர்கள். ( then they were boy friend and girl friend, now they married and have kids) நாங்கள் மூவரும் சேர்ந்து licensing exam க்கு படிப்போம். இப்போ அட்லாண்டாவில் cardiologist இருக்கான். நாங்கள் படிக்கும் பொழுது அவன் அடிக்கடி என்னிடம் சொல்லும் வார்த்தை. " I hate Indians" முதல் முறை அவன் சொன்ன பொழுது பதறி ஏன்டா என்றேன். அதற்கு அவன் சொன்ன பதில் " they always want to be inside of other's life, why should they care about what is going on in my personal life" .அவன் சொன்னதின் அர்த்தம் மெல்ல புரிபட ஆரம்பித்து அது எவ்வளவு தூரம் உண்மை எனபதும் புலப்பட ஆரம்பித்தது. இந்தியர்களை பற்றி பல மேல் நாட்டவர்களின் கருத்துவும் இதுதான். 10 வருடங்களுக்கு மேல் வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நான் சொல்வதை ஆமோதிப்பார்கள்.
இதை இங்கே இப்போ சொல்ல காரணம் உண்டு. இன்று ஒருவர் அடுத்தவரை பற்றி கண்ணியம் இன்றி அடித்த comment னால் அவர் அக்கௌன்ட் முடக்கபட்டுள்ளது என்பதே. இணையம் வந்த பின் அனைவரும் எழுத்தாளர் ஆகி உண்மையான எழுத்தாளர்கள் கோமாளி ஆகிவிட்டார்கள். எழுத முடியும் /தெரியும் என்ற ஒரே காரணத்தினாலும் யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்ற நினைப்பிலும் அடிப்படை நாகரிகம், கண்ணியம் ஏதும் இன்றி அடுத்தவர்களை அவமானபடுத்தும் போக்கு அதிகமாகி வருது. எல்லோருடனும் ஒத்து போவது என்பது நடவாத காரியம். அந்த நேரங்களில் பரஸ்பர மரியாதை யுடன் விலகி செல்வதே சாலச் சிறந்தது.
" எல்லாம் படிச்சீங்க , படிச்சு என்ன கிழிச்சீங்க " என்ற சமூகத்தின் மீதான கோபத்தை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மட்டும் அல்ல,சமூதாயத்தின் மீது அக்கறை கொண்ட பாரதி, பாரதிதாசன், போன்றவ ர்களும் வெளிப்படுத்தி இருக்காங்க.!!
" வீழ்வேன் என்று நினைத்தாயோ என்றான் பாரதி. அது தான் நல்ல மனம் மட்டும் அல்ல உறுதியான மனம் கொண்டவர்களுக்கும்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மிகவும் நெருங்கிய உறவினர் ஒருவர் இங்கு உண்டு. இதை படித்தால் மிகவும் சந்தோஷ படுவார்.
"பூமி என்னும் கிண்ணம் இசையில் நிரம்பி வழியுதம்மா "
Last edited by poem; 12th December 2014 at 07:55 AM.
-
12th December 2014 06:59 AM
# ADS
Circuit advertisement
Bookmarks