-
17th December 2014, 11:05 AM
#2371
Junior Member
Platinum Hubber
சென்னையில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படங்கள் திருவிழா - நம்நாடு - 7.11.1969
மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை - பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து நாகி ரெட்டி அவர்கள் தயாரித்த இரண்டாவது படம் ''நம் நாடு ''. அனல் பறக்கும் உரையாடல்களுடன் தயாரிக்கபப்ட்ட படம் . சென்சாரில் பல காட்சிகள் வெட்டப்பட்டது .
படம் வருவதற்கு முன்னரே நம்நாடு பாடல்கள் - ஹிட்டாகி இருந்தது . ரசிகர்கள் மத்தியில் ஒரு
பரபரப்பையும் , ஆவலையும் உருவாக்கி இருந்தது . சென்னை நகரின் சித்ரா - கிருஷ்ணா - சரவணாஸ்ரீனிவாசா அரங்கில் வெளியானது .
படம் வெளியான முதல் நாள் - முதல் காட்சியில் படத்தின் பிரமாண்ட வெற்றி ரசிகர்களால் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டது .

-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
17th December 2014 11:05 AM
# ADS
Circuit advertisement
-
17th December 2014, 11:11 AM
#2372
Junior Member
Platinum Hubber
அரசியல் கருத்துக்களை மையமாக வைத்து, முழுமையாகத் தயாரிக்கப்பட்ட முதல் படம் "நம் நாடு'.
எம்.ஜி.ஆரின் அரசியல் கருத்துக்கேற்ற படம் என்பதை படம் வெளியாகும் முன்பே மக்களுக்கு உணர்த்த, முதன் முறையாக வார இதழ்கள் அட்டைப்பட சிறப்புக் கட்டுரை, செய்திகளுடன் வெளியிட்டன. அத்துடன் போஸ்டர்களிலும் வித்தியாசமான அணுகுமுறை கையாளப்பட்டது.
படம் திரையிடப்பட்டது. ரசிகர்களின் வரவேற்பை நேரடியாக அறிய விரும்பினார் எம்.ஜி.ஆர். நாங்கள் இருவரும் மாலைக் காட்சிக்காக முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் சென்றோம். நாங்கள் வருவது தியேட்டர் மானேஜரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மாலைக்காட்சியாதலால் அரங்கின் கதவுகள் எல்லாம் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருந்தது.
அரங்கின் உள்ளே பிரதான நுழைவாயிலின் கதவருகே ஒருபுறம் எம்.ஜி.ஆரும், இன்னொருபுறம் நானும் சாய்ந்தபடியே நின்றோம்.
நாங்கள் சென்ற சிறிது நேரத்தில் திரையில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆரை ஜெயலலிதா மக்களுடன் பாடி வரவேற்கும் "வாங்கய்யா... வாத்தியாரய்யா...' பாடல் காட்சி வந்தது. அவ்வளவுதான் தியேட்டர் முழுவதும் கைதட்டி, விசில் அடித்து, கரகோஷம் எழுப்பி அப்பாடலை வரவேற்று ரசித்தது.
பாடல் காட்சி முடிந்தவுடன் ரசிகர்கள் வேண்டுகோளின்படி "ஒன்ஸ்மோர்' என அப்பாடல் திரையிடப்பட்டது. இரண்டாம் முறையாக திரையில் பாடல் தோன்றியவுடன் எம்.ஜி.ஆரைப் பார்த்தேன். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர். ""ரெட்டியார்... நான் ஜெயிச்சுட்டேன்... எனக்கு அங்கீகாரம் கிடைச்சுட்டுது'' என்று மகிழ்ச்சி பொங்க என்னை ஆரத் தழுவியபடியே கூறினார். அப்போதே தமது அரசியல் வெற்றியை உறுதி செய்துவிட்டார் எம்.ஜி.ஆர்.
-
17th December 2014, 11:13 AM
#2373
Junior Member
Platinum Hubber
-
17th December 2014, 11:23 AM
#2374
Junior Member
Platinum Hubber
சென்னையில் மக்கள் திலகத்தின் ''ஹாட்ரிக் '' திருவிழா - மாட்டுக்கார வேலன் -14-1-1970
அடிமைப்பெண் - நம்நாடு தொடர்ந்து மூன்றாவது மெகா ஹிட் மாட்டுக்கார வேலன் புதிய சாதனை .
சென்னை - மதுரை வெள்ளிவிழா
சென்னை நகரில் 4 அரங்கில் 400 காட்சிகள் தொடர்ந்து ஹவுஸ் புல் சாதனை ...
தொடரும் ....
Last edited by esvee; 17th December 2014 at 11:38 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
17th December 2014, 11:38 AM
#2375
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th December 2014, 02:13 PM
#2376
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th December 2014, 04:31 PM
#2377
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
கொடூரமான விலை
சிரித்து வாழ வேண்டும் படத்தில் கடத்தல் லாரியை ஓட்டி வரும் மனோகரை தடுத்து நிறுத்த செக்போஸ்டில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் தலைவர் காத்திருப்பார். ஆனால், தடுப்பு கட்டையை உடைத்துக் கொண்டு புயல் வேகத்தில் செல்லும் லாரி, எதிரே வரிசையாக சாலையை கடந்து செல்லும் பள்ளிக் குழந்தைகள் மீது மோதும். குழந்தைகள் என்று தெரிந்தும் லாரியை நிறுத்தாமல் செல்வார் மனோகர். பள்ளிக் குழந்தைகள் ரத்தச் சேற்றில் இறக்கும்.
இந்தக் காட்சியை சாணை பிடிப்பவரான லதா பார்த்துக் கொண்டிருப்பார். ஆனால், சாட்சி சொல்ல மாட்டார். லதாவை மனம் மாறச் செய்ய அவரை தலைவர் இழுத்துச் சென்று, வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் லாரி மோதி இறந்த குழந்தைகளின் உடல்களைக் காட்டுவார்.
‘இதில் எத்தனை குழந்தைகள் எதிர்காலத்தில் டாக்டராக, மருத்துவராக இருந்தார்களோ. இந்த குழந்தைகளில் நான் அறிஞர் அண்ணாவை பார்க்கிறேன், அய்யா பெரியாரை பார்க்கிறேன், மூதறிஞர் ராஜாஜியை பார்க்கிறேன்..’ என்று குமுறுவார்.
இந்தக் காட்சிதான் எனக்கு நினைவு வந்தது,நேற்றிரவு நீண்ட நேரம் தூக்கத்தை தொலைத்தபோது. பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளியில் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் 132 பள்ளிக் குழந்தைகள் பலியாகியுள்ளனர். 118 குழந்தைகளுக்கு காயம். ரத்த சகதியில் சிதைந்த மலர்களாய் பள்ளிக் குழந்தைகள் அள்ளிச் செல்லப்பட்ட காட்சிகளே நான் தூக்கத்தை தொலைக்கக் காரணம். எந்த நாடாய் இருந்தால் என்ன? குழந்தைகள், குழந்தைகள்தானே?
இதயமே இல்லாமல் வெறித்தாண்டவமாடியிருக்கும் தீவிரவாதிகளை என்ன பெயரிட்டு அழைப்பது? வன்முறை என்பது இருபுறமும் கூரான கத்தி. அது தாக்கியவர்களையே திருப்பித் தாக்கும் என்றார் பேரறிஞர் அண்ணா. வன்முறையை, தீவிரவாதத்தை ஊக்குவித்த பாகிஸ்தான் இன்று அதற்கான விலையை கொடுக்கிறது. கள்ளமில்லா அந்த பிஞ்சுகள் கொல்லப்பட்டது கொடூரமான விலை. தீவிரவாதத்துக்கு எதிராக உலகம் ஒன்று திரள கொடுக்கப்பட்ட விலையாகவும் இந்த கொடூரம் இருக்கட்டும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th December 2014, 04:54 PM
#2378
Junior Member
Veteran Hubber
Dear Esvee Sir. Though belated kindly accept my congratulations for your 11K milestone. Amazing proportions yet superlative achievement. My respectful regards,
senthil
கடமைக்காக உடலும் மனமும் பலம் பெற கதிரவனின் வாழ்த்துக்களுடன்
Last edited by sivajisenthil; 17th December 2014 at 05:05 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th December 2014, 05:44 PM
#2379
Junior Member
Platinum Hubber
உடல்நிலை சரியில்லை அதனால் பதிவுகளை மேற்கொள்ள முடியவில்லை ...மீண்டும் தொடருகிறேன் நண்பர்களே...
-
17th December 2014, 05:46 PM
#2380
Junior Member
Platinum Hubber
Bookmarks