-
15th January 2015, 10:35 AM
#1271
Junior Member
Platinum Hubber
சென்னை சரவணாவில் இன்று முதல் (15/01/2015) பொங்கல் மற்றும் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு , 1974ம் ஆண்டில் ஈடு இணையற்ற வசூல் சாதனை புரிந்த ஒரே காவியமான "உரிமைக்குரல் " தினசரி 3 காட்சிகளில் திரையிடப்படுகிறது .
-
15th January 2015 10:35 AM
# ADS
Circuit advertisement
-
15th January 2015, 10:39 AM
#1272
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
மக்கள் திலகத்தின் மற்றுமோர் வெற்றிக்காவியமாம் ''வேட்டைக்காரன் '' 100 வது நாள் விளம்பரத்தை, நமது மக்கள் திலகம் திரியில் பதிவிட்ட அருமை சகோதரர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி .[/quote]
-
15th January 2015, 10:41 AM
#1273
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் திரியின் நண்பர்கள், பார்வையாளர்கள், விமர்சகர்கள் , நடிகர் திலகம் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

ஆர். லோகநாதன்.
-
15th January 2015, 10:56 AM
#1274
Junior Member
Veteran Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
சென்னை சரவணாவில் இன்று முதல் (15/01/2015) பொங்கல் மற்றும் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு , 1974ம் ஆண்டில் ஈடு இணையற்ற வசூல் சாதனை புரிந்த ஒரே காவியமான "உரிமைக்குரல் " தினசரி 3 காட்சிகளில் திரையிடப்படுகிறது .

பொதுவாக பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் புதிய திரைப்படங்களை வெளியிடுவது திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வாடிக்கை. ஆனால், புரட்சித்தலைவரின் பழைய படங்களை திரையிடுவதன் மூலம், புதிய படங்களின் வசூலை விட அதிக அளவில் வசூலை பார்த்து விடலாம் என்ற அவர்களின் எண்ணம் நன்கு புலப்படுகிறது.
தலைநகர் சென்னை சரவணா அரங்கில், தினசரி 3 காட்சிகளுடன், "உரிமைக்குரல்",
கூடல் மாநகர் மதுரை சென்ட்ரல் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் "குடியிருந்த கோயில்"
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவை மாநகரில் தினசரி 2 காட்சிகளுடன் "உழைக்கும் கரங்கள்"
இப்படி பொன்மனசெம்மலின் பொற்காவியங்கள்தான் திரையரங்குகளை மீண்டும் மீண்டும் ஆக்கிரமித்து வருகின்றன என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் உண்டோ ?
தமிழ் திரையுலகின் ஒரே நிரந்தர வசூல் சக்கரவர்த்தி நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !
மறு வெளியீட்டு செய்திகளை, புகைப்பட ஆதாரத்துடன் , இத்திரியில் தொடர்ந்து பதிவிட்டு வரும் இனிய சகோதரர்கள், திருவாளர்கள் ரவிச்சந்திரன், லோகநாதன், ராமமூர்த்தி உள்ளிட்ட பலருக்கும் அன்பான நன்றி !
Last edited by makkal thilagam mgr; 15th January 2015 at 11:07 AM.
-
15th January 2015, 11:04 AM
#1275
Junior Member
Platinum Hubber
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய சிறப்பு நிகழ்ச்சி பதிவு கடந்த ஞாயிறு அன்று
விஜய் தொலைக்காட்சி பதிவு செய்த விதம் பற்றியும், அதில் பங்குற்ற சிறப்பு
விருந்தினர்கள் உரையாடலையும் பதிவிட்டதை , வரவேற்று, பாராட்டுக்கள்
தெரிவித்த அனைத்து நல்ல இதயங்களுக்கும் இதயங்கனிந்த நன்றி.

நண்பர்களின் கவனத்திற்கு ,
இந்த நிகழ்ச்சி நாளை (16/01/2015) காலை 9 மணியளவில் விஜய் தொலைகாட்சி
ஒளிபரப்ப உள்ளது. இந்த செய்தியினை ஏற்கனவே பெங்களுரு நண்பர் திரு. சி.எஸ். குமார்.அவர்கள் திரி மூலம் தெரிவித்துள்ளார் .
ஆர். லோகநாதன்.
-
15th January 2015, 11:12 AM
#1276
Junior Member
Devoted Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்களுக்கு இனிய செய்திகள். 15.1.2015 வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ் டிவியில் 'எம்ஜிஆர் தி லெஜெண்ட்" சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. மக்கள் திலகம் - தெய்வம் - வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
-
15th January 2015, 11:18 AM
#1277
Junior Member
Veteran Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய சிறப்பு நிகழ்ச்சி பதிவு கடந்த ஞாயிறு அன்று
விஜய் தொலைக்காட்சி பதிவு செய்த விதம் பற்றியும், அதில் பங்குற்ற சிறப்பு
விருந்தினர்கள் உரையாடலையும் பதிவிட்டதை , வரவேற்று, பாராட்டுக்கள்
தெரிவித்த அனைத்து நல்ல இதயங்களுக்கும் இதயங்கனிந்த நன்றி.
நண்பர்களின் கவனத்திற்கு ,
இந்த நிகழ்ச்சி நாளை (16/01/2015) காலை 9 மணியளவில் விஜய் தொலைகாட்சி
ஒளிபரப்ப உள்ளது. இந்த செய்தியினை ஏற்கனவே பெங்களுரு நண்பர் திரு. சி.எஸ். குமார்.அவர்கள் திரி மூலம் தெரிவித்துள்ளார் .
ஆர். லோகநாதன்.
சகோதரர் திரு. லோகநாதன் அவர்கள் அறிவது -
தாங்கள் விவரித்தபடியே விஜய் தொலைக்காட்சி நிறுவனம், இந்த நிகழ்ச்சியினை ஒளி-ஒலி பரப்பினால், மிகவும் உற்சாகமாக இருக்கும். ஆனால், விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தினர், தங்களுக்கே உரிய ஆதிக்க மனப்பான்மையில், சில காட்சிகளை எடிட் செய்யக்கூடும் என்பதனையும் மறுப்பதிற்கில்லை.
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அவரைப்பற்றி சிலாகித்து கூறுவதை விட, மற்ற நடிகரின் ரசிகர், அரசு உயர் அதிகாரி திரு. ஞான ராஜசேகரன் போன்ற வர்கள் நம் பொன்மனசெம்மலை பற்றி நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவதை நன்கு படம் பிடித்து காட்டி விட்டீர்கள்.
quote :
ஞான ராஜசேகரன் (அரசு உயர் அதிகாரி ): நான் ஆரம்பத்தில் சிவாஜி கணேசன் படங்கள் அதிகம் பார்த்ததுண்டு . எம்.ஜி.ஆர். படங்கள் அவ்வளவாக பார்த்தது இல்லை.ஒரு சமயம் என்னை நாடி வந்த நண்பர் ஒருவர், எம்.ஜி.ஆர். அவர்களிடம் உதவி கேட்டு கடிதம் எழுதி தரும்படி வேண்ட , போஸ்ட் கார்டில் எழுதி நான்தான் போஸ்ட் செய்தேன். சினிமாவில் தான் எம்.ஜி.ஆர். நல்லவர், நிஜத்தில் அப்படி இல்லை என்று பலபேரிடம் நான் வாதம் செய்துள்ளேன் . இந்த காலத்திலும் சினிமா நடிகர்களை நம்பி இப்படியும் ஆட்கள் இருக்கின்றார்களே என்று சொல்லி திரிவேன். என்ன ஆச்சர்யம் என்றால், ஒரு வாரம் கழித்து, கணிசமான தொகை மாதா மாதம் , மணிஆர்டர் மூலம் அந்த நபருக்கு பல ஆண்டுகள் வந்துகொண்டு இருந்தது . அந்த நபர் என்னிடம் கூறியதும் வாயடைத்துப் போனேன் .அன்றைய சூழ்நிலையில், அவருடைய தகுதிக்கு, அந்த கடிதத்தை பொருட்படுத்தி இருக்க வேண்டாம் . இருப்பினும் அடுத்தவருக்கு உதவும் குணம் இன்றைக்கு யாருக்கு இருக்கு.தன்னிடம் உதவி என்று கேட்டு எந்த வடிவில் வந்தாலும், அதை ஏற்று , அந்த நபரின் வேண்டுகோளை நிறைவேற்றிய எம்.ஜி.ஆர். அவர்களின் பண்புகள் அறிந்து நெகிழ்ந்து போனேன். அதன்பிறகு தான் நிறைய எம்.ஜி..ஆர். படங்கள் அதிகம் பார்க்க ஆரம்பித்து, அவருடைய வெற்றியின் ரகசியத்தை தெரிந்து கொண்டேன். எல்லாவற்றிற்கும் அப்பால் தனித்து நிற்கும் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு சிறந்த மனிதநேய பண்பாளர் .
விஜய் தொலைக்காட்சி நிறுவத்தினர் இதை காண்பிக்காவிட்டாலும் கவலையில்லை.
-
15th January 2015, 11:19 AM
#1278
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Tenali Rajan
மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்களுக்கு இனிய செய்திகள். 15.1.2015 வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ் டிவியில் 'எம்ஜிஆர் தி லெஜெண்ட்" சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. மக்கள் திலகம் - தெய்வம் - வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

தகவலுக்கு நன்றி திரு. தெனாலி ராஜன் அவர்களே !
-
15th January 2015, 12:41 PM
#1279
Junior Member
Platinum Hubber
அந்தநாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது..நான் சினிமா ஆபரேட்டராக பணிபுரிந்த நாட்களில் எனது முதலாளி பொங்கல் போனசாக ரூபாய் 240 ஒருமாத சம்பளத்தை கொடுப்பார்..என்ன ஒரு சந்தோஷமான தருணம் அது..இன்று பொங்கல் தினம் என் முதலாளி இன்று இல்லை..நானும் அரசாங்க உத்தியோகத்தில் உள்ளேன்..நினைவுகளை நன்றியோடு நினைத்து பார்கிறேன்..அனனவருக்கு எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்...வாழ்க தலைவரின் புகழ்..வளர்க அவரது பக்தர்கள்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th January 2015, 03:55 PM
#1280
Junior Member
Seasoned Hubber
மக்கள் திலகத்தின் ''வேட்டைக்காரன் '' படம் 100 வது நாள் விளம்பரத்தை காண கடந்த பல வருடங்களாக நான் முயற்சி செய்தேன் . எங்கும் கிடைக்கவில்லை .பொங்கல் பரிசாக நேற்று இரவு வேட்டைக்காரனின் 100 வது நாள் விளம்பரத்தை பதிவிட்ட இனிய நண்பர் திரு வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி . 50 வருடங்களாக போற்றி பாதுகாத்து வைத்து உங்களுக்கு தந்துதவிய திரு பாஸ்கரன் அவர்களுக்கு என் அன்பான நன்றியை தெரிவிக்கவும் .
Bookmarks