-
17th January 2015, 07:30 PM
#3601
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
17th January 2015 07:30 PM
# ADS
Circuit advertisement
-
18th January 2015, 12:35 AM
#3602
ஜோ,
என் பதிவை நீங்கள் சரியாக படித்திருந்தால் உங்கள் பதிவிற்கு அவசியம் வந்திருக்காது நான் குறிப்பிட்டிருக்கும் அன்றைய இன்றைய ஆட்சி என்பது எல்லாம் 2001 ஜூலை 21-ந் தேதியோடு முடிவுக்கு வந்துவிட்ட ஒன்று. நடிகர் திலகம் மறைந்த பிறகு நடைபெற்ற எந்த நிகழ்வையும் நான் இதில் உட்படுத்தவேயில்லை. அவர் இருக்கும்போது அதாவது 1955 முதல் 2001 வரை அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைதான், அதை அமுதவன் மறக்காமல் குறிப்பிட்டிருப்பதைத்தான் நான் என் பதிவில் சொல்லியிருந்தேன். குறிப்பாக தெய்வ மகன் படம் ஆஸ்கார் விருதுக்கு (சிறந்த வெளிநாட்டுப் படம்) தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படும் சூழலில் அன்றைய திமுக ஆட்சியில் அதை அனுப்பக் கூடாது என்று எதிர்த்தவரும் அதை ஆதரித்து அந்த படத்திற்கு முட்டுக்கட்டை போட்டவரும் உங்கள் பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு பேரும்தான். அதே போன்று 1971-ம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருது சவாலே சமாளி படத்திற்காக நடிகர் திலகத்திற்கு வழங்கப்பட இருந்த சூழலில் அன்றைய தமிழக ஆட்சியாளர்கள் பின்னிய சூழ்ச்சி வலைகள் பற்றியெல்லாம் உங்களுக்கு தெரியாததல்ல. அது திமுக ஆட்சியாகட்டும் அதிமுக ஆட்சியாகட்டும் நடிகர் திலகம் இருக்கும்வரை அவருக்கு அநீதிகளைத்தான் இழைத்தார்கள். எந்த நடிகர் சங்கத்திற்காக உயிரை கொடுத்து உழைத்தாரோ எந்த நடிகர் சங்கத்தின் கடனை அடைத்து சொந்த கட்டிடம் கட்டிக் கொடுத்தாரோ அந்த சங்கத்திலேயே அவருக்கு எதிராக ஆட்களை தூண்டிவிட்டதும் அதிமுக ஆட்சியில்தான். அதே போல் யார் யாருக்கோ பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்ட போதும் இவருக்கு எத்தனையோ காலம் தாழ்த்தித்தான் வழங்கப்பட்டது. பால்கே விருது கூட வேறு யாருக்கோ போகவேண்டியது சோ போன்றவர்களின் முயற்சியால் இவருக்கு வந்தது. இன்னும் எத்தனையோ சொல்லலாம்.
காங்கிரஸ் ஆட்சியில் இவருக்கு என்ன செய்தார்கள் என்று கேட்டிருக்கிறீர்கள். 1965-ல் தான் அவர் காங்கிரஸ் உறுப்பினரானார். 67-ல் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. 1969-ல் காங்கிரஸ் பிளவுபட்டபோது இவர் ஆண்ட காங்கிரஸ்-ல் இல்லை.எதிர்கட்சியில்தான் இருந்தார். மற்றொன்றும் இருக்கிறது. தங்கள் கட்சியில் இருக்கிறார் என்ற காரணத்திற்காக பதவியைப் பயன்படுத்தி அவருக்கு ஏதாவது செய்வது என்பது திராவிட இயக்க அரசியல். அது பெருந்தலைவருக்கு வராது. 1975 அக்டோபர் 2-க்கு பின்னால் நான் காங்கிரஸ் ஆதரவாளன் இல்லை. ஆகவே அதற்கு பிறகு நடிகர் திலகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டது என்ற உங்கள் குற்றச்சாட்டில் நானும் பங்கு கொள்கிறேன்.
கருணாநிதியின் அரசியல் பற்றிய விமர்சனம் அல்ல அது. நடிகர் திலகத்திற்கு மறுக்கப்பட்ட நியாயமான மரியாதைகள், அவர் அடைந்திருக்க வேண்டிய பெருமைகளைப் பற்றிய ஒரு ஆதங்கம் அது. சிலை வைத்தது பற்றி நாம் முன்பே ஒரு முறை பேசியிருக்கிறோம். அதை நான் பாராட்டுகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். அதே நேரத்தில் அதில் எனக்கு இரண்டு குறைகள் உண்டு. ஒன்று சரியான முறையில் அனைத்து அனுமதிகளையும் 2006-ல் அவரது அரசாங்கம் வாங்கி செயல்பட்டிருந்தால் சென்ற வருடம் சிலை தொடர்பாக எழுந்த அனைத்து பிரச்சனைகளையும் தவிர்த்திருக்கலாம். இரண்டாவது என் நண்பனுக்கு சிலை வைத்தேன் என்று சொன்னார். அவரது நண்பனாக இல்லாமல் இருந்திருந்தால் வைத்திருக்க மாட்டாரா? நடிகர் திலகம் தமிழ் கலாச்சாரத்தின் அடையாள சின்னம் என்ற முறையில் அந்த சிலை வைக்கப்பட்டது என்றல்லவா அவர் சொல்லியிருக்க வேண்டும். அது மட்டுமல்ல சிலையின் கீழே உள்ள பீடத்தைப் பார்த்தால் சிலை யார் பெயரில் இருக்கிறதோ அந்த பெயரை விட திறந்து வைத்தவரின் பெயர் கொட்டை எழுத்தில். அதில் கூட கல்யாண வீடானாலும் இழவு வீடானாலும் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் திராவிட கலாசாரம். எந்த ஆட்சியையும் எந்த முதல்வர்களும் அவருக்கு ஆத்மார்த்தமாக எதையும் செய்யவில்லை என்பதுதானே வரலாற்று உண்மை!
இதையெல்லாம் அமுதவன் சரியாக எழுதியிருக்கிறார் என்பதனாலும் அதிலும் இன்றைய காலகட்டத்தில் சொந்த விருப்பு வெறுப்புகளை மனதில் வைத்துக் கொண்டு தாங்கள் பணி செய்யும் பாரம்பரியமிக்க ஊடக நிறுவனங்களின் நம்பகத்தன்மையை பயன்படுத்தி வரலாற்றை வளைத்து ஒடித்து எழுதும் சிலரை போல் இல்லாமல் உண்மையை பதிவு செய்ததற்கு பாராட்டு தெரிவித்தேன் என்பதே உண்மை!
என்னுடைய பதில் உங்களுக்கு திருப்தி தராமல் இருக்கலாம். ஒரு விஷயம். நான் பல வருடம் முன்பே உங்களுக்கு சொன்னதுதான். 1972-ல் பிறந்து ஒரு சிவாஜி வெறியனாக வாழும் உங்களுக்கு உங்கள் ரசனைக்கு தலை வணங்குகிறேன். ஆனால் அதே நேரத்தில் 60-களிலும் 70-களிலும் ஒரு சிவாஜி ரசிகனாக தமிழ் நாட்டில் வாழ்ந்து பார்த்தவர்களுக்குதான் அந்த வலியும் வேதனையும் புரியும்.
அன்புடன்
இது எனக்கும் ஜோவிற்குமான ஆரோக்கியமான விவாதம். இதில் வேறு எந்த விதமான வாதங்களையும் நுழைக்க வேண்டாம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
joe thanked for this post
-
18th January 2015, 08:22 AM
#3603
Junior Member
Senior Hubber
வெள்ளையர்களை நாட்டை விட்டு விரட்ட பாடுபட்ட வீரமிகு வீரபாண்டிய கட்டபொம்மனாய் வாழ்ந்து காட்டிய சிம்மக்குரலுக்கு சொந்தக்காரன் அகில உலகையும் நடிப்பால் நடுங்க வைத்த சிங்கத்தமிழன் சிவாஜியின் சரித்திரம் படைத்த சாதனைக்காவியம் டிஜிட்டலில்
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
18th January 2015, 08:28 AM
#3604
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Murali Srinivas

முரளி சார்
1975 அக்டோபர் 2க்குப் பிறகு என்று எழுதியிருக்கிறீர்கள். அதற்கப்புறம் நடைபெற்ற நிகழ்வுகளில் விவாதம் வரக்கூடாதா. மறைமுகமாக தங்கள் கருத்தை யாரும் எதிர்க்கக் கூடாது என்ற தொனி எழுகிறதே...
அதற்குப் பிறகு தானே நடிகர் திலகத்திற்கு ஓரளவிற்காவது அங்கீகாரம் கிடைத்தது. அது எல்லாம் தந்திருக்கக் கூடாது என்கிறீர்களா அல்லது இதைப் பற்றிய விவாதத்தைத் தவிர்க்க வேண்டும் என்கிறீர்களா
தயவு செய்து விளக்கவும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th January 2015, 03:23 PM
#3605
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Murali Srinivas
ஜோ,
என் பதிவை நீங்கள் சரியாக படித்திருந்தால் உங்கள் பதிவிற்கு அவசியம் வந்திருக்காது நான் குறிப்பிட்டிருக்கும் அன்றைய இன்றைய ஆட்சி என்பது எல்லாம் 2001 ஜூலை 21-ந் தேதியோடு முடிவுக்கு வந்துவிட்ட ஒன்று. நடிகர் திலகம் மறைந்த பிறகு நடைபெற்ற எந்த நிகழ்வையும் நான் இதில் உட்படுத்தவேயில்லை. அவர் இருக்கும்போது அதாவது 1955 முதல் 2001 வரை அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைதான், அதை அமுதவன் மறக்காமல் குறிப்பிட்டிருப்பதைத்தான் நான் என் பதிவில் சொல்லியிருந்தேன். குறிப்பாக தெய்வ மகன் படம் ஆஸ்கார் விருதுக்கு (சிறந்த வெளிநாட்டுப் படம்) தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படும் சூழலில் அன்றைய திமுக ஆட்சியில் அதை அனுப்பக் கூடாது என்று எதிர்த்தவரும் அதை ஆதரித்து அந்த படத்திற்கு முட்டுக்கட்டை போட்டவரும் உங்கள் பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு பேரும்தான். அதே போன்று 1971-ம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருது சவாலே சமாளி படத்திற்காக நடிகர் திலகத்திற்கு வழங்கப்பட இருந்த சூழலில் அன்றைய தமிழக ஆட்சியாளர்கள் பின்னிய சூழ்ச்சி வலைகள் பற்றியெல்லாம் உங்களுக்கு தெரியாததல்ல. அது திமுக ஆட்சியாகட்டும் அதிமுக ஆட்சியாகட்டும் நடிகர் திலகம் இருக்கும்வரை அவருக்கு அநீதிகளைத்தான் இழைத்தார்கள். எந்த நடிகர் சங்கத்திற்காக உயிரை கொடுத்து உழைத்தாரோ எந்த நடிகர் சங்கத்தின் கடனை அடைத்து சொந்த கட்டிடம் கட்டிக் கொடுத்தாரோ அந்த சங்கத்திலேயே அவருக்கு எதிராக ஆட்களை தூண்டிவிட்டதும் அதிமுக ஆட்சியில்தான். அதே போல் யார் யாருக்கோ பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்ட போதும் இவருக்கு எத்தனையோ காலம் தாழ்த்தித்தான் வழங்கப்பட்டது. பால்கே விருது கூட வேறு யாருக்கோ போகவேண்டியது சோ போன்றவர்களின் முயற்சியால் இவருக்கு வந்தது. இன்னும் எத்தனையோ சொல்லலாம்.
காங்கிரஸ் ஆட்சியில் இவருக்கு என்ன செய்தார்கள் என்று கேட்டிருக்கிறீர்கள். 1965-ல் தான் அவர் காங்கிரஸ் உறுப்பினரானார். 67-ல் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. 1969-ல் காங்கிரஸ் பிளவுபட்டபோது இவர் ஆண்ட காங்கிரஸ்-ல் இல்லை.எதிர்கட்சியில்தான் இருந்தார். மற்றொன்றும் இருக்கிறது. தங்கள் கட்சியில் இருக்கிறார் என்ற காரணத்திற்காக பதவியைப் பயன்படுத்தி அவருக்கு ஏதாவது செய்வது என்பது திராவிட இயக்க அரசியல். அது பெருந்தலைவருக்கு வராது. 1975 அக்டோபர் 2-க்கு பின்னால் நான் காங்கிரஸ் ஆதரவாளன் இல்லை. ஆகவே அதற்கு பிறகு நடிகர் திலகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டது என்ற உங்கள் குற்றச்சாட்டில் நானும் பங்கு கொள்கிறேன்.
கருணாநிதியின் அரசியல் பற்றிய விமர்சனம் அல்ல அது. நடிகர் திலகத்திற்கு மறுக்கப்பட்ட நியாயமான மரியாதைகள், அவர் அடைந்திருக்க வேண்டிய பெருமைகளைப் பற்றிய ஒரு ஆதங்கம் அது. சிலை வைத்தது பற்றி நாம் முன்பே ஒரு முறை பேசியிருக்கிறோம். அதை நான் பாராட்டுகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். அதே நேரத்தில் அதில் எனக்கு இரண்டு குறைகள் உண்டு. ஒன்று சரியான முறையில் அனைத்து அனுமதிகளையும் 2006-ல் அவரது அரசாங்கம் வாங்கி செயல்பட்டிருந்தால் சென்ற வருடம் சிலை தொடர்பாக எழுந்த அனைத்து பிரச்சனைகளையும் தவிர்த்திருக்கலாம். இரண்டாவது என் நண்பனுக்கு சிலை வைத்தேன் என்று சொன்னார். அவரது நண்பனாக இல்லாமல் இருந்திருந்தால் வைத்திருக்க மாட்டாரா? நடிகர் திலகம் தமிழ் கலாச்சாரத்தின் அடையாள சின்னம் என்ற முறையில் அந்த சிலை வைக்கப்பட்டது என்றல்லவா அவர் சொல்லியிருக்க வேண்டும். அது மட்டுமல்ல சிலையின் கீழே உள்ள பீடத்தைப் பார்த்தால் சிலை யார் பெயரில் இருக்கிறதோ அந்த பெயரை விட திறந்து வைத்தவரின் பெயர் கொட்டை எழுத்தில். அதில் கூட கல்யாண வீடானாலும் இழவு வீடானாலும் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் திராவிட கலாசாரம். எந்த ஆட்சியையும் எந்த முதல்வர்களும் அவருக்கு ஆத்மார்த்தமாக எதையும் செய்யவில்லை என்பதுதானே வரலாற்று உண்மை!
இதையெல்லாம் அமுதவன் சரியாக எழுதியிருக்கிறார் என்பதனாலும் அதிலும் இன்றைய காலகட்டத்தில் சொந்த விருப்பு வெறுப்புகளை மனதில் வைத்துக் கொண்டு தாங்கள் பணி செய்யும் பாரம்பரியமிக்க ஊடக நிறுவனங்களின் நம்பகத்தன்மையை பயன்படுத்தி வரலாற்றை வளைத்து ஒடித்து எழுதும் சிலரை போல் இல்லாமல் உண்மையை பதிவு செய்ததற்கு பாராட்டு தெரிவித்தேன் என்பதே உண்மை!
என்னுடைய பதில் உங்களுக்கு திருப்தி தராமல் இருக்கலாம். ஒரு விஷயம். நான் பல வருடம் முன்பே உங்களுக்கு சொன்னதுதான். 1972-ல் பிறந்து ஒரு சிவாஜி வெறியனாக வாழும் உங்களுக்கு உங்கள் ரசனைக்கு தலை வணங்குகிறேன். ஆனால் அதே நேரத்தில் 60-களிலும் 70-களிலும் ஒரு சிவாஜி ரசிகனாக தமிழ் நாட்டில் வாழ்ந்து பார்த்தவர்களுக்குதான் அந்த வலியும் வேதனையும் புரியும்.
அன்புடன்
இது எனக்கும் ஜோவிற்குமான ஆரோக்கியமான விவாதம். இதில் வேறு எந்த விதமான வாதங்களையும் நுழைக்க வேண்டாம்.
சுருக்கமாக சொன்னால் ....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th January 2015, 08:40 PM
#3606
Senior Member
Diamond Hubber
முரளி சார்,
உங்கள் விளக்கத்துக்கும் பெருந்தன்மைக்கும் நன்றி . உங்களுடைய ஆதங்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது .அது போல என்னுடைய ஆதங்கமும் சிறிதளவாவது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன் . குறைந்தபட்ச மாற்றுக்கருத்தின் குரலாக தனித்து நின்றாலும் தளராமல் நிற்பேன் .அந்த மாற்றுகருத்தை பதிய எனக்கிருக்கும் ஜனநாயக உரிமையை என்றைக்கும் மறுக்காத உங்கள் மாண்புக்கு என் வந்தனங்கள்
-
18th January 2015, 10:15 PM
#3607
Junior Member
Veteran Hubber
எனது பொதுவான கருத்து யாதெனில் ...அது திரு கருணாநிதியாக இருந்தாலும் சரி....அல்லது கர்ம வீரர் காமராஜராக இருந்தாலும் சரி...இருவருமே நடிகர் திலகம் அவர்களை உரிய முறையில் கட்சிபணியாற்றியமைக்காக உரிய பதவி அளித்து கெளரவம் செய்திருக்கவேண்டும்...!
கட்சிக்கு பொருள் திரட்ட மட்டும் நடிகர் திலகம் தேவைபட்டார் அன்றைய தி மு க விற்கு ...பெரும் பொருள் திரட்டி கட்சிக்கு கொடுத்ததன் விளைவு...அதுவரை தி மு க வை சேராத காங்கிரஸ் அனுதாபியாக இருந்த மக்கள் திலகம் அவர்கள் முதல் முறையாக திமுக மாநாட்டில் கட்சி நிதிக்கு அதிகம் வசூல் செய்து கொடுத்தவர் என்று நாகூசாமல் பொய் பேசி அறிமுகபடுத்தபடுகிறார் ஒருவர் !!! இது ஒரு மாபெரும் கேவலமான செயல் என்பது தெரிந்தும்...! இது தான் அவர் மாண்பு !!!!
அப்படி செய்த அவருக்கே தனது வயதில் இரெண்டை தந்து ஆயுட்காலத்தில் இரண்டு வருடத்தை வரவில் வரும்படி செய்கிறார் அவரால் எந்த காலத்திலும் பாதிப்படைந்த இவர்...!!!! இதுதான் இவர் பண்பு !!!!
யாரோ ஒருவனுக்கு செய்ய அவசியம் இல்லை..! ஆனால் காங்கிரஸ் என்கிற மூழ்குகின்ற கப்பலை பல வருடம் மூழ்காமல் காப்பாற்றிய ஒரு உண்மை தொண்டனுக்கு செய்ய வேண்டிய மரியாதை, கடமை பெருந்தலைவருக்கும் உள்ளதே..! அதை கூட அவர் ஒரு மறத்தமிழனுக்கு செய்யவில்லை என்பதுதான் நாம் வாங்கி வந்த வரம் !
இருவருமே காரியவாதிகளே என்னை பொறுத்தவரையில் !
சாம்பார்கள் மணக்க கருவேப்பிலை தேவைப்பட்டது..உணவு உண்ணும் தருணத்தில் கருவேப்பிலை இடம் ...?
Last edited by RavikiranSurya; 18th January 2015 at 10:18 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
18th January 2015, 11:41 PM
#3608
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan – Definition of Style 16
புனர் ஜென்மம்

சிவாஜி கணேசன் - அள்ள அள்ளக் குறையாமல் கொடுக்கும் அட்சய பாத்திரம் – நம்முடைய ரசிப்புப் பசிக்குத் தீனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.. ஊற்றாய் சுரக்கும் நடிப்பு, வெள்ளமாய்ப் பாய்ந்தோடி என்றும் வற்றாத ஜீவநதியாய் விளங்குகிறது.
எவ்வளவு நுணுக்கங்கள் எவ்வளவு அர்த்தங்கள்... வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும் அவருடைய நடிப்புச் சுரங்கத்திலிருந்து மற்றோர் கோஹினூர் வைரம்..
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஈடு காண முடியாத அந்த தெய்வப் பிறவியின் புனர் ஜென்மம்...
ஸ்ரீதரின் உரையும் மணியின் இயக்கமும் நாட்டியப் பேரொளியின் அற்புத நடிப்பும் வின்சென்ட்டின் ஒளிப்பதிவும் சலபதி ராவின் பின்னணி இசையும் நம்முள் ஓர் இனம் புரியாத உணர்வை இப்படம் முழுதும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். படம் முடியும் போது எழுந்திருக்க மனமின்றி அந்த Hangoverலிருந்து மீண்டு நாம் வெளிவருவது கடினம்
இப்படிப்பட்ட உன்னத்த் திரைக்காவியத்திலிருந்து பதமான ஒரு சோறு.
****
சங்கர் ... மிகச்சிறந்த சிற்பி... மிகச் சிறந்த மனிதன். நற்குணங்கள் யாவையும் கொண்டவன். ஆனால் அதைவிட அதிகமாய் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவன். இதனால் அவனுக்கு நல்ல பெயர் இல்லை. இதன் காரணமாய் அவன் தாய் அவனைப்பற்றிய கவலையிலேயே எப்போதும் மூழ்கியிருக்கிறாள். ஆனால் அவனைப் புரிந்து கொண்ட ஒருத்தி பாரு என்கிற பார்வதி. அவனுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் அவனை நல்வழிப்படுத்தும் என்று நம்புகிறவள்.
சங்கரின் சிற்பக்கூடம் அவன் வீட்டிலேயே ஒரு பகுதியாக உள்ளது. அன்று அவன் வீட்டில் நுழையும் போது சிற்பக்கூடத்தில் இருவர் நிற்பதைப் பார்க்கிறான். யாரென்று தெரியாமல் திகைத்து நின்றாலும் உடனே சுதாரித்துக் கொண்டு அவர்களை வெளியே அனுப்ப எத்தனிக்கிறான். ஆனால் அவர்கள் அவனுடைய சிற்பத்தில் லயித்து அதனை வாங்க வந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, அதனை விற்று பணம் சம்பாதிக்கிறான். அவன் தாயார் அந்தப் பணத்தை அவன் குடித்து செலவு செய்து விடுவான் என்று நினைத்து, அந்தப் பணத்தை வீட்டுச் செலவிற்குத் தருமாறு கேட்கிறாள். அவனோ தானே வாங்கி வருவதாகச் சொல்கிறான். சிறிது தயக்கத்திற்குப் பின் அவள் சம்மதிக்கிறாள்.
பணத்தை எடுத்துக் கொண்டு செல்லும் போது காதலி வழிமறிக்கிறாள். தாயாரைப் போலவே அவளும் அவன் மேல் சந்தேகம் கொள்கிறாள். அவனோ இந்த முறை தான் உண்மையிலேயே தன் வீட்டுக்கு பொருள் வாங்கி வருவதற்காகவே செல்வதாக்க் கூறுகிறான். அவளும் அவனுடைய கூற்றில் உண்மையை உணர்ந்து அவன் மேல் கொண்ட அன்பினை உறுதிப்படுத்திக் கொள்கிறாள்.
... இதுவே காட்சியமைப்பு.
காட்சி 18.30ல் துவங்கி 24.00ல் முடிகிறது.
இந்த ஆறரை நிமிடக் காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பில் உள்ள நுணுக்கங்களை வைத்து ஏராளமான நூல்களை எழுதி விடலாம்.
18.30ல் தொடக்கமே அட்டகாசம். துள்ளலுடன் உள்ளே நுழைந்து ஒரு விநாடியில் கண்களால் அந்தப் படிக்கட்டை கவனித்து சட்டென்று குதிக்கிறார்..
புதியதாக ஒரு வீட்டில் நுழைபவர் படிக்கட்டில் இறங்கும் முறைக்கும் வீட்டில் பழகியவர் படிக்கட்டில் இறங்கும் முறைக்கும் உள்ள வேறுபாடு இங்கே மிகத் தெளிவாக நடிகர் திலகத்தால் எடுத்துரைக்கப்படுகிறது.
ஓரிரு படிக்கட்டுகளில் கால் வைத்த உடனேயே குதிக்கும் பாங்கு, அந்த வீட்டில் பழகியவரால் மட்டுமே முடிந்த ஒன்று. அதிக பட்சம் ஓரிரு முறைகளுக்கு மேல் இந்த படப்பிடிப்பின் போது பயிற்சி எடுத்திருக்க மாட்டார். இதிலேயே அந்தப் பாத்திரத்தை ஆழமாக பதிக்கிறார். அது அவர் வீட்டின் முன்புறம் உள்ள அவருடைய சிற்பக் கூடம். நுழைந்த உடனேயே அவர் பார்வையில் காட்டும் பாவனையில் உள்ளே யாரோ இருக்கிறார்கள் என்பதை பார்வையாளனுக்கு உணர்த்துகிறார். உடனே காமிரா திரும்புகிறது. ஆம், அவருடைய சிற்பங்களை இருவர் பார்வையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அந்த சிற்பங்களை அவர்கள் பாராட்டிக் கொண்டிருக்கும் போது மெல்ல உள்ளே வருகிறார். அந்தப் பாராட்டைக் கேட்கும் போது உள்ளுக்குள் புளகாங்கிதமும் ஒரு வித கர்வமும் உண்டாகின்றன. – இயல்பு தானே.. இதை அவர் விழிகளில் எதிரொலிக்கிறார். இயல்பு நடிப்புக்கென்றே இலக்கணம் வகுத்தவராயிற்றே.. அவர்கள் பாராட்டை இன்னும் கொஞ்சம் கேட்போமே என்ற உந்துதல் காரணமாக ஒலியெழுப்பாமல் மேலும் கவனிக்கிறார். இந்த உணர்வை இம்முறை அவர் வெளிப்படுத்துவது – தன் கால்கள் வாயிலாக... ஆம் கால்களாலும் நடிக்க முடியும் என்பதை உணர்த்தும் சகலகலா வல்லவராயிற்றே. இங்கே அதை நிரூபிக்கிறார். ஒரு கால் தரையிலும் இன்னொரு கால் நாற்காலியின் மேலும் வைத்து, முகவாய்க்கட்டையில் கைகளை வைத்துக் கொண்டு அவர்களை கவனிக்கும் பாங்கு... ஆஹா... ரசிக்க ரசிக்க இன்பம் பெருகுதய்யா... இந்த பிறவிக் கலைஞனின் நடிப்பை..
இப்போது அவர்கள் திரும்பி இவரைப் பார்க்க, கண்களாலேயே அருகில் அழைக்கிறார்..
இந்தக் கண்களால் அழைக்கும் பாவனையில் ஆண்மையின் கம்பீரம் ஜொலிக்கிறதே...
உறுதிப்படுத்த மீண்டும் அதே போல அழைப்பு..
அவர்கள் வர..
ஒருவிதமான மிரட்டலான தொனியில் யார் நீங்க, யாரைக் கேட்டு வீட்டுக்குள் வந்தீர்கள் என வினவுகிறார், கையிலிருக்கும் சிகரெட்டைப் புகைத்தபடியே... அங்கே ஒரு கலைஞனுக்கே உரித்தான செருக்கு மிளிர்கிறது..
சிரித்துக்கொண்டே ... கூறுகிறார்.. பாத்துட்டீங்க இல்லே.. என இருமுறை நிதானமாக கேட்டு விட்டு, சட்டென்று உடனே போய்ட்டு வாங்க என விரட்டும் தொனி...
இப்போது அவர்கள் அந்த சிலையை விலைக்குக் கேட்கிறார்கள்..
அவ்வளவு தான்.. இவ்வளவு நேரம் இருந்த செருக்கின் எதிரொலியாக கோபம் வருகிறது.
எங்கிருந்து தான் அந்த முகத்தில் அந்த உணர்வுகளைத் தேக்கி வைத்திருந்தாரோ.. சட்டென்று முகம் மாறுகிறது.. இது கலை சார் கலை என்றவாறு அந்த சிலையை உரிமையுடன் அரவணைக்கும் போது அதில் அந்தக் கலையின் மீது அவருக்குள்ள ஆழமான ஈடுபாடும் உரிமையும் வெளிப்படுகிறது... இதை அந்த முகத்தில் அவர் வெளிப்படுத்தும் முறையைப் பாருங்கள். காசுக்காக கலையை விற்க மாட்டேன், பட்டினி கிடந்து செத்தாலும் சாவேன் எனக் கூறும் போது அந்த முகத்தில் அந்தப் பாத்திரத்தின் உணர்வுகள் பரிபூர்ணமாக வெளிப்படுவதைப் பாருங்கள்..
மீண்டும் தன்நிலைக்கு வந்து மிகவும் பணிவுடன் அவர்களை அனுப்ப முயல்கிறார். அவர்களும் மன வருத்த்த்தோடு நகர்கிறார்கள். இருந்தாலும் தன் சிலை மேல் அவர்கள் வைத்திருக்கும் ஈடுபாடு அவருக்குள் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தி அவர்களிடம் அதை விற்க வைக்கிறது. அதைத் தரும்போது அந்த முகத்தில் ஏற்படும் மலர்ச்சியைப் பாருங்கள்.
தன் கலை, தன் உழைப்பு, உரியவரிடம் போய் சேர வேண்டும், அதை மதிப்பவரிடம் போய் சேர வேண்டும் என்கின்ற ஆதங்கத்தை ஒரு கலைஞன் எப்படி உணர்வானோ அதை அப்படியே சித்தரித்திருக்கிறார் இக்காட்சியில்..
ஆயிரம் ஆயிரமாய் கொடுக்கலாமே என அவர்கள் கூறுவதைக் கேட்டு அப்படியே வியக்கிறார் சிற்பி சங்கர். அவர்கள் நூறு ரூபாயைத் தந்து விட்டுப் போகிறார்கள். அதுவே அவருக்கு மிகப் பெரிய தொகை.. அப்படியே வியந்து போய் வாய் பிளக்கிறார்.
பல்லாயிரம் கதைகளில் வியப்பு மேலிட பார்த்தார் என்று படித்திருப்பீர்கள். அதற்கு சரியான விளக்கம் இக்காட்சியில் நடிகர் திலகத்தின் முகத்தில் கிடைக்கிறது. அந்த நூறு ரூபாய்த் தாளை அவர் பார்க்கும் பார்வையில் எத்தனை அர்த்தங்கள்...
இப்போது அவன் காதலி இதைப் பார்க்கிறாள். சிலை வியாபாரம் ஆவதைப் பார்த்த்தும் அவன் கையில் பணம் வரும் என்பதைத் தெரிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் நழுவுகிறாள்.
வீட்டைத் திரும்பிப் பார்த்து விட்டு ஏதோ ஒரு தீர்மானத்துடன் வெளியே செல்ல எத்தனிக்கிறான் சங்கர்..
இதை அப்படியே அவர் சித்தரிப்பதைப் பாருங்கள்.. உற்சாகம் பொங்க படிக்கட்டுகளில் ஏறாமல் அப்படியே வாசலின் மீது குதித்தேறுவதை...
இப்போது அவன் தாயார் அழைக்கும் குரல் கேட்டுத் திரும்புகிறார்.
பரிவோடு அவன் தாயார் சாப்பிட அழைக்கிறார். அந்த சிலை விற்ற பணத்தை தாயார் வீட்டுச் செலவுக்கென கேட்க அதைத் தராமல் மழுப்பியபடி பதில் சொல்லி கிளம்புகிறார் சங்கர்.
இப்போது இந்த மழுப்பலை திரையில் அவருடைய நடிப்பில் பாருங்கள்...
தாயார் நம்பாமல் அவன் தன்னுடைய குடிப்பழக்கத்திற்காக செலவழிக்கப் போகிறான் என எண்ணுகிறாள். ஆனால் அவனோ, இல்லையில்லை, இந்த முறை நான் குடிக்கப் போவதில்லை, இரண்டு மாத்த்திற்கு வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்களைக் கொண்டு வரப்போவதாக சொல்கிறார்.
இந்த இடத்தில் அவருடைய நடிப்பு முத்திரை பதிக்கிறது. தாயாரிடம் உரிமையோடு மழுப்பும் பாங்கு.. அந்த கதாபாத்திரத்திற்கென எந்த அளவிற்குத் தன்னைத் தயார் படுத்தியிருக்கிறார் என்பதற்கு ஓர் உதாரணம்.
பணம் உனக்கெதுக்கம்மா எனக் கேட்கும் போது அவர் குரலிலேயே அந்த மழுப்பலை உணரலாம்..
தாயார் சந்தேகத்தோடு நீ போகப் போகும் கடை எதுவென எனக்குத் தெரியும் எனக் கூறும் போது குடிப்பழக்கத்திற்குள்ளானவர்களுக்கே உரிய தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் ஓவ்... என மறுக்கும் விதம்...
சங்கர் இனிமேல் திருந்திடுவாம்மா என்றவாறே தாயாரிடம் பாசத்தோடு கூறும் போது அவருடைய அன்பின் வெளிப்பாடு நம்மையும் அறியாமல் அந்தப் பாத்திரத்தின் மேல் ஒரு நம்பிக்கையை உண்டாக்குகிறது..
வெளியே நடக்கும் போது திடீரென ஒரு கை மறித்து பணத்தை எடுக்கச் சொல்லும் போது முகத்தில் ஏற்படும் அந்த மின்னல்.. பணமா என எகத்தாளமாய்க் கேட்கும் பாணி... ஏது பணம் என்னும் போது ஒரு மயக்கமான சிரிப்பு..
ஆஹா.. இந்த சிரிப்பை வேறு எந்த முகத்திலய்யா பார்க்க முடியும்..
இதை ரசிக்கவே கோடானு கோடி தவமிருக்க வேண்டுமே...
உடனே காதலி குறும்பு செய்ய அதை சிரித்தவாறே ரசிக்கும் போது அந்த காதலின் ஆழம் புலப்படுகிறது...
இப்போது அதே முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை... சிகரெட்டைப் புகைத்தவாறே சிரிக்கும் ஸ்டைல்..
உரிமையோடு அவள் பணம் கேட்க, மறுப்பேதும் சொல்லாமல் அவளிடம் அதைக் கொடுக்க முற்படுகிறார். எதற்காக என காரணம் கேட்க, அவள் அதைச் சொல்லும் போது..
அதுவரை இருந்த மலர்ச்சி சட்டென மறைகிறது.. முகத்தில் லேசாக ஓர் இருள் சூழ்கிறது. அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை யூகித்து அந்த முகம் சொல்கிறது..
அவள் அந்தப் பணத்தைப் பிடுங்குகிறாள். எதிர்ப்பேதும் தெரிவிக்காமல் அமைதியாக சற்றே நகர்கிறார்..
உலகத்திலே எல்லோரும் நல்லவங்க, நான் ஒருத்தன் தான் கெட்டவன், அயோக்கியனா சொல்லு பாரு.. எனக் காதலியிடம் கேட்கிறார்..
இப்போது பத்மினியின் நடிப்பு போட்டி போடுகிறது.
தன் காதலனைத் தான் சற்று கடுமையாகவே நடத்தி விட்டதாக ஒரு குற்ற உணர்ச்சி தோன்ற அவரை சமாதானப் படுத்த முயல்கிறார். இந்தக் காட்சியில் பத்மினியின் முகத்தைப் பாருங்கள்.. நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுக்கும் திறமை பெற்றவராயிற்றே.. இந்த உணர்வைத் தத்ரூபமாக பிரதிபலிக்கிறார்.. மெல்ல சமாதானப் படுத்துகிறார்.
சங்கர் காரணம் கேட்க, உரிமையோடு தன் வருத்ததை அவரிடம் வெளிப்படுத்துகிறார் பாரு..
தன்னுடைய நிலைப்பாட்டை பாருவிடம் விளக்குகிறார் சங்கர். இந்த உரையாடலில் அந்த பாத்திரத்தின் நிலைப்பாட்டை எவ்வளவு அழகாக தன் வசன உச்சரிப்பின் மூலமாக வெளிப்படுத்துகிறார் நடிகர் திலகம்..
இப்போது சங்கரை சமாதானப் படுத்தும் விதமாக, சங்கர் உங்களுக்கு கெட்ட பெயர் உண்டாக்குவதை நான் என்றும் விரும்ப மாட்டேன் என பாரு கூறுகிறார்.
இப்போது திரும்பி நின்றவாறே சங்கர் ஒரு வித சலிப்போடு, ம்..என்ற உணர்வை பிரதிபலிக்கிறார்.
இதை எழுதி விடலாம்.. எப்படி பார்வையாளருக்கு உணர்த்துவது..
அங்கே தான் நடிகர் திலகம் தான் யாரென ஆணித்தரமாக நிரூபிக்கிறார்.
காமிரா முதுகைத் தானே காட்டப் போகிறது, தான் நடித்தால் என்ன நடிக்கா விட்டால் என்ன என்று இருக்காமல் அப்போதும் தன் தலையை லேசாகத் தூக்கி சிலிர்ப்பிக்கும் காட்சி....
ஒரு வினாடியில் ஓராயிரம் அர்த்தங்கள் சொல்லும் ஈடு இணையற்ற கலைஞன் நடிகர் திலகம் என உலகிற்கு உரக்கச் சொல்கிறது..
தன் அன்பான வார்த்தையால் பாரு சங்கரை சமாதானப் படுத்த, ஆண்டவனால் தான் சொர்க்கத்தைத் தெரிந்து கொள்ள வைக்க முடியும் என்றிருந்தேன், உன்னைப் போன்ற பெண்களாலும் அந்த சொர்கத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதை இன்று தான் உணர்கிறேன் என உணர்ச்சியுடன் கூறுகிறார் சங்கர். இந்த வரிகளைச் சொல்லும் போது இருவரின் குரல்களிலும் உள்ள அந்த காதலை நாம் துல்லியமாக உணரலாம். என் சொர்க்கம் எது தெரியுமா என பாரு கேட்க, மௌனமாக தலையசைத்து சங்கர் எது என கேட்க, அவன் இதயத்தில் கை வைத்து அவள் உணர்த்த, அங்கே காதல் தன் ஈடு இணையற்ற சாம்ராஜ்யத்தை நிலைநாட்டுகிறது..
இந்தக் காட்சியினை இந்த விளக்கத்திற்குப் பிறகு இப்போது பாருஙகள். என் கருத்தில் தாங்கள் உடன்படுவீர்கள் என்பது திண்ணம்.
உலகில் நடிகர் திலகத்தோடு வாழ்ந்தவரைப் போல் கொடுத்து வைத்தவர்கள் வேறு யாருமில்லை..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
19th January 2015, 12:51 AM
#3609
ராகவேந்தர் சார்,
உங்கள் கேள்விகளைப் பார்த்தேன். நான் சென்ற பதிவின் இறுதியில் சொன்னது போல் இந்த விவாதங்களை வளர்க்க விரும்பவில்லை. ஆனாலும் நீங்கள் என்னிடம் சில விளக்கங்கள் வேண்டும் என்று கேட்டிருப்பதால் சொல்கிறேன். முதலில் 1975 அக்டோபர் 2. நீங்கள் நினைப்பது போல் வேறு எந்தவித எண்ணமுமில்லை. அந்த தேதியின் முக்கியத்துவம் உங்களுக்கு ஏன் இந்த திரியின் வாசிப்பாளர்கள் அனைவருக்கும் தெரியும். இங்கே அதை குறிப்பிட காரணம் என்ன?
என் பதிவிற்கு எதிர்வினையாற்றிய ஜோ, காங்கிரஸ் அரசாங்கம் என்ன செய்தது என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். நான் காங்கிரஸ் ஆதரவாளன் என்ற முறையில் அந்த கேள்வி தொடுக்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலளிக்கும் போது நடிகர் திலகம் காங்கிரஸ்-ல் இணைந்த காலம், அதன் பின் நடந்த அரசியல் மாற்றங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு விட்டு 1975 அக்டோபர் 2-ற்கு பிறகு உள்ள காலகட்டத்தில் என்னை காங்கிரஸ் ஆதரவாளன் என்ற ரீதியில் கேள்வி கேட்காதீர்கள் என்பதற்காகவே குறிப்பிட்டேன். இதை இன்று நேற்றல்ல இந்த திரியில் இணைந்த நாள் முதலே சொல்லி வருகிறேன். திரியை தொடர்ந்து வாசித்து வரும் அனைவருக்கும் இது தெரியும்.
அதன் பிறகு நிகழ்ந்த வரலாற்று சம்பவங்களில் நடிகர் திலகத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது என நீங்கள் குறிப்பிடுவது 1982-ல் மாநிலங்களவையில் உறுப்பினர் பதவி மற்றும் 1984-ல் கிடைத்த பத்மபூஷன் விருது ஆகியவற்றைப் பற்றி என நினைக்கிறேன்.
மாநிலங்களவையில் கலைத்துறையில் சேவை செய்தவர்களுக்கு வழங்கப்படும் உறுப்பினர் பதவியில் திருமதி நர்கீஸ் தத் அவர்கள் இருந்தார்கள். 6 வருட பதவியான அந்த உறுப்பினர் பதவியில் இரண்டு வருடங்களே நிறைவு செய்த நிலையில் திருமதி நர்கீஸ் தத் காலமாகி விட அந்தப் பதவியைத்தான் நடிகர் திலகத்திற்கு தருவதாக அன்றைய பிரதமர் அன்னை இந்திரா அவர்கள் யோசனை செய்ய அதை தன் doon school நண்பன் அமிதாபிற்கு கொடுக்க வேண்டும் என்று அன்றைய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராஜீவ் வற்புறுத்த அதை மற்றொரு பொதுச் செயலாளரான மூப்பனார் ஆதரிக்க வெறும் 4 வருட காலயளவு மட்டுமே எஞ்சியிருந்த அந்த MP பதவி என்னவோ மிகப் பெரிய பதவியை நடிகர் திலகத்திற்கு கொடுப்பது போல் தரப்பட்டது என்பதே என் எண்ணம்.
அதே போன்று பத்மபூஷன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 1976 பிப்ரவரி முதல் 1979 ஜனவரி வரை மூப்பனாரும், 1979 ஜனவரி முதல் 1980 ஜனவரி வரை R.V. சுவாமிநாதனும், 1980 ஜனவரி முதல் 1982 செப்டம்பர் வரை M.P. சுப்ரமணியனும், 1982 செப்டம்பர் முதல் மரகதம் சந்திரசேகரும் பதவி வகிக்க அந்த தலைவர் பதவிக்கு நடிகர் திலகமே தகுதியானவர் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுக்க அந்த ஓங்கி ஒலிக்க செய்ய நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சென்னையில் 1984 பிப்ரவரியில் ஒரு மாபெரும் பேரணி ஒன்றை நடத்தி அது சென்று சேர்ந்த திடலான சாந்தோம் MRC நகரில் ஒரு மாநாடு நடத்தியதும் உங்களுக்கு நினைவிருக்கும். அன்றைய குடியரசு துணைத்தலைவர் திரு R. வெங்கடராமன் அவர்களும் கர்நாடக முன்னாள் முதல்வர் குண்டுராவ் அவர்களும் கலந்துக் கொண்டு தமிழகத்தில் காங்கிரஸ் காங்கிரஸாக இருக்க வேண்டுமென்றால் சிவாஜி அவர்கள் தமிழக காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் மூப்பனாரின் தலையீடு காரணமாக அவரின் ஆதரவாளரான திரு பழனியாண்டி தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இது அன்னை இந்திரா இருக்கும்போதுதானே நடைபெற்றது.
அதே வருடம் 1984 அக்டோபர் 31 அன்று தீவிரவாதிகளால் அன்னை இந்திரா அவர்கள் கொலை செய்யப்பட்டதும் அதன் பிறகு அரியணை ஏறிய ராஜீவ் 1984 டிசம்பரில் நடைபெற்ற மக்களவை மற்றும் தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல்களில் நடிகர் திலகத்தின் ஆதரவாளர்களை புறக்கணித்ததும் அதன் பின் ஏற்பட்ட கொந்தளிப்பால் ஏதோ கண்துடைப்பு போல் ஒரு சில பேருக்கு மட்டும் டிக்கெட் கொடுக்கப்பட்டதும் நாம் அறிந்ததுதானே! தலைவர் பதவி தாராமல் இருந்தது, ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காமல் இருந்தது போன்ற மனக்கசப்பை மாற்றுகிறோம் என்ற பெயரில் மீண்டும் ஒரு கண்துடைப்பு நாடகம் நடத்தப்பட்டு பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்டது என்பதுதானே வரலாறு! இவரை விட தகுதி குறைந்தவர்கள் எல்லாம் இதே பத்மபூஷன் விருதை முன்னரே அடைந்து விட்ட சூழலில் இவருக்கு வெகு தாமதமாகவே வழங்கப்பட்டது என்பதுதானே நம் பெரிய குறை!
1985-ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளை தேர்ந்தெடுக்க அமைக்கப்பட்ட குழுவிற்கு தலைவராக நியமனம் செய்யப்பட்ட திருமதி ஜெயா பச்சன் தன் கணவருக்கு MP பதவி வழங்கப்படாத பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு ஜூரி உறுப்பினர்களில் சரிபாதி பேர் முதல் மரியாதை படத்திற்காக நடிகர் திலகத்திற்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தபோது அதை நிராகரித்து தன் ஜூரி சேர்மன் பதவியை பயன்படுத்தி சசிகபூர் அவர்களுக்கு சிறந்த நடிகர் விருது கொடுத்தாரே (New Delhi Express என்ற படத்திற்காக) அதுவும் ராஜீவ் காலத்தில்தானே நடந்தது.
இதையெல்லாம்தான் மத்திய காங்கிரஸ் அரசாங்கமும் நடிகர் திலகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என்று சொல்வதில் உண்மை இருக்கிறது என்று குறிப்பிட்டேன். இந்த நிகழ்வெல்லாம் நாம் அனைவருக்கும் தெரிந்ததுதான். பலமுறை இங்கே பேசியதுதான். ஆகவே அந்த விவாதங்களெல்லாம் மீண்டும் வர வேண்டாம் என்பதற்காகத்தான் வேறு எந்த வாதங்களும் வேண்டாம் என்று சொன்னேன். சரி பரவாயில்லை. நீங்கள் கேட்டதை நான் தவறாக நினைக்கவில்லை. காரணம் எனக்கு எப்படி பெருந்தலைவர் மேல் ஒரு பிடிப்போ அது போல் தங்களுக்கு அன்னை இந்திரா மேல் அதே போன்ற பிடிப்பு உண்டு என்பதை நான் அறிவேன்.அதை நான் தவறாகவும் நினைக்கவில்லை.
ஆனால் ஒன்றே ஒன்று. நடிகர் திலகத்திற்கு ஒரு பெருமை ஒரு சிறப்பு ஒரு கெளரவம் வந்து சேர்ந்ததை நீங்கள் விரும்பவில்லையா என்ற கேள்வி மட்டும் என்னை காயப்படுத்திவிட்டது. நடிகர் திலகத்திற்கு கிடைத்த கிடைக்கப் போகும் எந்த சிறப்பையும் நான் விரும்பவில்லை என்ற எண்ணம் மட்டும் எந்த நிலையிலும் எந்த சூழலிலும் என்றுமே என் கனவிலும் தோன்றாது.
இத்துடன் இந்த விவாதங்களை நிறுத்திக் கொள்ளலாம், தொடர வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
19th January 2015, 07:06 AM
#3610
Senior Member
Seasoned Hubber
முரளி சார்
தங்களுடைய விளக்கத்திற்கு மிக்க நன்றி. நானும் விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை. ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் கூறி என் நிலைப்பாட்டை தெளிவு படுத்த விரும்புகிறேன்.
பெருந்தலைவர் மீது தங்களுக்கு இருக்கும் பிடிப்பிற்கு சற்றும் குறையாத அளவிற்கு என்னிடம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மாணவர் காங்கிரஸ் நண்பர்களுடன் சிவாஜி மன்றத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என நேருக்கு நேராய் வாதாடியவன் என்பதில் எனக்கு மிகவும் பெருமை உண்டு. அந்நாட்களில் பழைய காங்கிரஸுக்காக உழைத்து தங்களுடைய கல்வி மற்றும் வாழ்நாட்களைப் பெரிதும் அர்ப்பணித்த ஏராளமான இளைஞர்களில் நானும் ஒருவன். சத்தியமூர்த்தி பவன் மட்டுமின்றி தமிழகமெங்கும் ஸ்தாபன காங்கிரஸ் நிர்வாகத்தால் சிவாஜி ரசிகர் மன்றம் எந்த அளவிற்கு உதாசீனமும் கேவலமும் படுத்தப்பட்டது என்பது எங்களைப் போன்று அப்போது உழைத்த இளைஞர்களுக்குத் தான் தெரியும். இந்த வலி உங்களுக்குத்தெரிய வாய்ப்பில்லை. இதற்காக நாங்களெல்லாம் காமராஜர் மேல் இருக்கும் மதிப்பை விட்டு விடவில்லை.
அதே போல காமராஜரை விட இந்திரா காந்தி மேல் எனக்கு பிடிப்பு என்பதெல்லாம் உண்மையில்லை. நடிகர் திலகத்திற்கு சிறிதளவேனும் அங்கீகாரம் கிடைத்தது என்பது என்னைப் போன்ற எண்ணற்ற சிவாஜி ரசிகர்களுக்கு நிச்சயம் ஆறுதல் தான். நம்முடைய யானைப் பசிக்கு அது சோளப் பொறி தான் என்றாலும் ஒன்றுமே இல்லாததற்கு அது மேல் என்கின்ற அடிப்படையில் தான் ஆறுதல் கொண்டோம். தமிழனைத் தமிழனே கேவலப்படுத்துவதற்கு இது மேல்.
மூப்பனாரைப் பற்றிக் கூறியிருக்கிறீர்கள். முற்றிலும் உண்மை. அது மறுக்க முடியாது. இது ஒவ்வொரு சிவாஜி ரசிகர் உள்ளத்திலும் மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டது.
பெருந்தலைவர் மேல் எனக்கிருக்கும் கோபம் அவர் மேல் கொண்ட உரிமைபாற்பட்டது. வாழ்க்கையில் ஒரே ஒரு தவறை பெருந்தலைவர் செய்ததன் பலன் இன்று தமிழகம் அனுபவிக்கிறது. அகில இந்திய அளவில் கிங் மேக்கராக விளங்கிய அவர் தமிழகத்தின் நலனில் அக்கறை கொண்டு, தன்னலமற்று உழைத்த நடிகர் திலகத்தை தனக்குப் பின் அடையாளம் காட்டியிருந்தாரானால், தமிழக ஸ்தாபன காங்கிரஸ் நிர்வாகிகளின் ஒத்துழைப்பு கிடைத்திருக்கும், அவர்களுக்கும் நடிகர் திலகத்திடமும் சிவாஜி மன்றத்திடமும் சற்றேனும் பயமும் மரியாதையும் ஒத்துழைக்க வேண்டும் என்கின்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கும்.
காரணம் அன்னாளைய ஆட்சிக்கெதிரான மக்கள் சக்தியை ஒன்று திரட்டி ஆட்சி மாற்றம் கொண்டு வரும் அளவிற்கு பெரும் வலிமையை உண்டாக்கியது சிவாஜி மன்றங்களின் பங்கினால் தான் . இதன் பலனை யார் அறுவடை செய்தார்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.
பெருந்தலைவரின் மறைவிற்குப் பிறகு ஸ்தாபன காங்கிரஸ் நிர்வாகிகளின் ஒத்துழையாமையால் வேறு வழியின்றி இந்திரா காங்கிரஸுக்கு நடிகர் திலகம் சென்றார்.
அப்போது கூட நடிகர் திலகத்திடம் தான் தமிழக இந்திரா காங்கிரஸின் தலைமைப் பொறுப்பு வந்தது. அவர் தன் தொழிலுக்கு முதலிடம் தந்ததால் அந்த இடத்திற்கு மூப்பனாரை அடையாளம் காட்டினார்.
இதற்குப் பிறகு நடைபெற்ற வரலாறெல்லாம் விளக்கத் தேவையில்லை என எண்ணுகிறேன்.
என்னைப் பொறுத்த வரையில் காமராஜரானாலும் சரி அ்ல்லது வேறு எந்தத் தேசிய தலைவரானாலும் சரி, அவர்களை நடிகர் திலகத்தின் மூலம் தான் தெரியும். என்னைப் பொறுத்த வரையில் நடிகர் திலகம் தான் என்னுடைய ஒரே தலைவர். அவரை நடிகர் என்ற சிறிய கோணத்தில் மட்டும் பார்க்க விரும்பாமல் அவருடைய சமுதாய பங்களிப்பினையும் கருத்தில் கொண்டு அவரை மட்டுமே தலைவராக பாவிக்கும் ஏராளமான சிவாஜி ரசிகர்களில் ஒருவன்.
தங்களை காயப்்படுத்த வேண்டும் என்கின்ற எண்ணத்தில் அந்த கேள்வியைக் கேட்கவில்லை. யதார்த்தமாகத் தான் கேட்டேன்.
இருந்தாலும் இதற்காக மன்னிக்கவும்.
அன்புடன்
ராகவேந்திரன்.
இத்துடன் இந்த விவாதத்தை நிறுத்திக் கொள்ளலாம் என நானும் விரும்புகிறேன்.
Last edited by RAGHAVENDRA; 19th January 2015 at 07:12 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
Bookmarks