-
18th January 2015, 03:59 PM
#1661
Junior Member
Platinum Hubber
-
18th January 2015 03:59 PM
# ADS
Circuit advertisement
-
18th January 2015, 04:04 PM
#1662
Junior Member
Platinum Hubber
-
18th January 2015, 04:07 PM
#1663
Junior Member
Platinum Hubber
-
18th January 2015, 04:13 PM
#1664
Junior Member
Platinum Hubber
-
18th January 2015, 04:50 PM
#1665
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
RavikiranSurya
இனிய நண்பர் திரு கலைவேந்தன் அவர்களுக்கு
மக்கள் திலகம் அவர்களுக்கு பாரத் விருது ஏன் கொடுத்தார்கள் என்பதல்ல விவாதம் என்று நினைக்கிறன்.
திரு கருணாநிதியின் செயல்பாடு குறித்துதான் பெரும்பாலான பதில். பரத் விருது தொடங்கப்பட்ட ஆண்டு 1967 என்று நினைக்கிறன். 67 முதல் 71 வரை மக்கள் திலகம் நடித்த படங்களில் மிக சிறந்த நடிப்பை 1969இல் வந்த அடிமைபெண் படத்திற்கு வேங்கய்யன் பாத்திரத்திற்கு கொடுத்திருக்கலாம் என்று அப்போதே பலர் பேசிக்கொண்டனர். அனால் அந்த வருடம் நடிகர் திரு உத்பல் தத்திற்கு கொடுக்கப்பட்டது.
பரத் பட்டம் பெற முழு தகுதி உடையவர்தான் மக்கள் திலகம் அதில் சந்தேகம் இல்லை ...ஆனால், கதாநாயகன் சிறந்த நடிப்பை வெளிபடுத்த கூடிய காட்சியமைப்போ , கதையமைப்போ 1971இல் வெளிவந்த ரிக்க்ஷாகாரன் திரைப்படத்திற்கு நிச்சயம் இல்லை கலைவேந்தன் சார் ...ஆகையால் தான் அந்த சர்ச்சை எழுந்தது !!
கருணாநிதி அவர்கள் மற்றும் மக்கள் திலகம் இடையே உள்ள கருத்தவேருபாடு 1970 கடைசி முதலே கசிந்து வெளிவரதொண்டங்கியது அனைவரும் அறிந்ததே. இத்துணைக்கும் திரு mgr அவர்கள் அண்ணா மரணத்திற்கு பிறகு நெடுஞ்செழியனுக்கு எதிராக கருணாநிதிக்கு ஆதரவு கொடுத்தும்கூட !
மு க முத்து திரை உலக வரவு, இருக்கும் மன்றங்களை மு க முத்து மன்றங்களாக மாற்ற வற்புறுத்தல் அதை தொடர்ந்த அடக்குமுறை அதனால் mgr ரசிகர்கள் மீது கருணாநிதி காட்டம் ஆகிய நிகழ்ச்சிக்கள் ஒருபுறம் மேலும் mgr அவர்களை கோபம் அடைய செய்ய...1971 தேர்தல் நேரம் ....தி மு க நல விரும்பிகள் இந்த தருணத்தில் mgr ஐ பகைத்துகொள்ளுதல் கட்சியை பலவீன படுத்தும் ஆகையால் அவரை சமாதானபடுத்துங்கள் என்று கூறியதன் பலன் தானே 1971 பரத் விருது ? இது உண்மை என்பது அக்கால நண்பர்கள் அறியாதது அல்ல !
திரு மு கருணாநிதி , திரு அன்பழகன், திருமதி சௌந்தரா கைலாசம் இந்த மூவரும் திரு சிவாஜி கணேசன் அவர்களுக்கு தொடர்ந்து மூன்றுமுறை தேசிய விருது கிடைக்கவிடாமல் camp செய்து வெற்றிகரமாக அதை சாதித்தது யாரும் அறியாதது அல்லவே.!
இதன் வெளிபாடாகதான் தான் கௌரவம் திரை படத்தில் வியெட்னாம் வீடு சுந்தரம் அமைத்த அந்த காட்சியே !!
ஆதீமுகா ஆட்சி காலத்தில் நடிகர்திலகம் அவர்களுக்கு ஏதாவது செய்தார்களா என்ற கேள்விக்கு ..தி மு க கட்சியை விட அதிகமாகதான் செய்தார்கள் என்பதே எனது கருத்து.
முதுகில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குத்திவிட்டு ...பொய்யான இழிவு பெயர் எவ்வளவு ஏற்படுத்தமுடியுமோ அவ்வளவும் ஏற்படுத்திவிட்டு....நடிகர் திலகத்தின் பெருமையை இவர்கள் பெருமை என்று திருடிவிட்டு...இவர்கள் சிறுமையை நடிகர் திலகம் தலைமேல் சுமத்தி .....இப்போது ஊர் ஊராக சிலையை திறந்து கண்ணீர் விடும் நடிப்பை கண்டு சிவாஜி ரசிகர்கள் யாரும் ஏமாந்து விடமாட்டார்கள்.
காரணம்..இந்த சென்னை சிலை திறப்பும்.... பாண்டியில் திரு ரங்கசாமி முதலில் திறந்துவிட்டாரே என்ற அங்கலாய்ப்பில் ...தேர்தல் நெருங்குகிறதே.....ஒரு கணிசமான வாக்கு வங்கி போய்விட்டால் என்ன செய்வது என்ற அரசியல் தந்திர யோசனைதான் முக்கிய காரணம் என்பதுதான் இன்றும் முக்கால்வாசி ரசிகர்கள் கருத்து...கலைவேந்தன் சார்
rks
பதிலுக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ்.
தாங்கள் கூறியபடி புரட்சித் தலைவர் பாரத் விருதுக்கு தகுதியுள்ளவர்தான். அவரை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக நீங்கள் கூறியபடி கருணாநிதி அதை வாங்கிக் கொடுத்தாரோ என்னவோ தெரியாது. ஆனால், அப்படி கூறப்பட்டதற்காக அந்த விருதை தூக்கி எறிந்தார் புரட்சித் தலைவர். அந்தப் பட்டம் வேண்டும் என்று கருணாநிதியை அவர் வற்புறுத்தியதாகவும் கருணாநிதியே கூறியதில்லை. அந்தப் பட்டத்தை புரட்சித் தலைவர் விரும்பியதோ, அல்லது லாபி செய்ததோ அல்லது திரு.சிவாஜிகணேசன் அவர்களுக்கு கிடைக்காமல் தடுக்க வேண்டும் என்று நினைத்தவரோ அல்ல. அதற்கான செயல்களில் ஈடுபட்டவரும் அல்ல. அதோடு, ரிக்க்ஷாகாரன் படத்தில் சமூகத்தின் அடித்தட்டில் உள்ள ரிக்க்ஷாகாரர்களை பெருமைப்படுத்தும் வகையில் அந்தப் படத்தில் தலைவர் நடித்திருப்பார். மஞ்சுளாவை காப்பாற்ற ராமதாஸ் கூட்டத்தை சைக்கிள் ரிக்க்ஷாவை ஓட்டியபடியே ஹாண்ட்பாரில் படாமல் அற்புதமாக சிலம்பு சண்டையிட்டு அதற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்போது, தலைவர் மீது வக்கீல் குற்றம் சுமத்துவார். அதற்கெல்லாம் பதிலளித்து விட்டு மிகவும் இயல்பாக, நடந்ததை நான் சொல்லிட்டேன். நடக்காததை வக்கீலய்யா சொல்லிட்டாரு. நடக்கப் போவதை நீங்கதான் சொல்லணும் என்று நீதிபதியைப் பார்த்து தலைவர் கூறுவார். இந்த ஒரு காட்சிக்கே அவருக்கு பாரத் விருது கொடுக்கலாம்.
என் பதிலும் பாரத் விருது பற்றிய விவாதத்துக்கானது அல்ல. அந்தப் பட்டத்துக்காக சதிவலை, சகோதரரான பொன்மனச் செம்மல் திரு.சிவாஜி கணேசனுக்கு எதுவும் செய்யவில்லை, அதிமுக ஆட்சியில் அநீதி இழைக்கப்பட்டது போன்ற கருத்துக்களுக்காகத்தான்.
மேலும், நீங்கள் கூறியபடி, திமுகவை விட அதிமுக ஆட்சிக் காலத்தில் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு அதிகமாகவே செய்தார்கள். இறப்பதற்கு முன் திரு.சிவாஜி கணேசன் அவர்களை சந்திக்க புரட்சித் தலைவர் விரும்பினார். ஆனால், அதற்கு முன் இயற்கை அவரை அழைத்துக் கொண்டது. இந்த சந்திப்பு நடந்திருந்தால் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை திரு.சிவாஜி கணேசனே பதிவு செய்துள்ளார்.
புரட்சித் தலைவரின் பிறந்த நாளுக்கு நீங்கள் வாழ்த்து தெரிவித்ததற்கும் பதிலுக்கும் மீண்டும் நன்றி.
அன்புள்ள : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
18th January 2015, 07:06 PM
#1666
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் கலைவேந்தன் சார்
இனிய நண்பர் திரு ரவிகிரணுக்கு அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் .1960-1977 வரை நடந்த திரையுலக நிகழ்வுகள் மற்றும் தமிழக அரசியல் பற்றிய பல தகவல்களை படித்தும் , பிறர் சொல்லியும் , கேட்டு இருக்கிறேன் . அந்த வகையில் நடக்காத ஒன்றை நடந்ததாகவும் , கற்பனை வளத்துடன் யாரயோ நினைத்து தாக்கும் ''இயலாமையும்'' அறிந்து அவர்களை பதிவிடுவதை பற்றி பரிதாபம் படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் ? விட்டு விடுங்கள் கலைவேந்தன் .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th January 2015, 08:42 PM
#1667
Junior Member
Platinum Hubber
BRETTS ROAD SALEM
-
18th January 2015, 08:46 PM
#1668
Junior Member
Platinum Hubber
CHERY ROAD SALEM
-
18th January 2015, 08:51 PM
#1669
Junior Member
Platinum Hubber
வள்ளுவர் சிலை அருகில், சேலம்
-
18th January 2015, 08:59 PM
#1670
Junior Member
Seasoned Hubber
புரட்சித் தலைவர் எம். ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகள்.
ஜெயா டிவி - சரித்திரம் போற்றும் காவியத் தலைவன்
விஜய் டிவி - மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்
ராஜ் டிவி - எம்.ஜி.ஆர் தி லெஜண்ட்
கேப்டன் டிவி - நெஞ்சம் நிறைந்த புரட்சித் தலைவர்
நியூஸ் 7 - ஆயரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர்
சன் லைப் - பாரத் ரத்னா எம்.ஜி.ஆர்
தீரன் டிவி - ஹாப்பி பர்த்டே எம்.ஜி.ஆர்
புதிய தலைமுறை - நேர்பட பேசு ~ எம்.ஜி.ஆர் புகழ் தொடர்கிறது
Bookmarks