-
20th January 2015, 02:17 PM
#1931
Junior Member
Platinum Hubber
ஸ்ரீரங்கம் சட்ட மன்ற தொகுதியில் மக்கள் திலகம் எம்ஜிஆர் தலைமயில் 1977, 1980, 1984 மூன்று தேர்தல்களிலும் அதிமுகவை சேர்ந்த நடிகர் திருச்சி சௌந்தராஜன் தொடர்ந்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .
-
20th January 2015 02:17 PM
# ADS
Circuit advertisement
-
20th January 2015, 02:26 PM
#1932
Junior Member
Platinum Hubber
நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
குமரி மாவட்ட அதிமுக சார்பில், கட்சியின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி வடசேரியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் தலைமை வகித்து மாலை அணிவித்தார். இதில் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன். மாவட்ட துணை செயலாளர் ராஜன், நகர செயலாளர் சந்திரன், அணி செயலாளர்கள் காரவிளை செல்வன், அசோகன், மனோகரன், மற்றும் அக்ஷயா கண்ணன், நகர அவை தலைவர் வடிவை மகாதேவன், ஜெ. பேரவை இணை செயலாளர் பொன் சுந்தர்நாத், அண்ணா தொழிற்சங்க பொருளாளர் அழகேசன், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார், கே.சி.யு.மணி. இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜெயசீலன், அதிமுக சிறுபான்மை நல பிரிவு இணை செயலாளர் இமாம் பாதுஷா, கோட்டார் கிருஷ்ணன், கவுன்சிலர்கள் சீனு, ஜெயச்சந்திரன். ரமேஷ், பொறியாளர் லட்சுமணன், ஹியாம் பாதுஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் குமரி மாவட்ட தேமுதிக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜெகநாதன் தலைமை வகித்து, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் வக்கீல் பொன் செல்வராஜன், ஜெயபிரபாகர், நகர செயலாளர் ரமேஷ், கிருஷ்ணராஜ், மரிய அற்;புதம், ஜேம்ஸ் மார்ஷல், ஒன்றிய செயலாளர்கள் புஷ்பராஜ், சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமூக சார்பில் நடந்த விழாவுக்கு, மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் தலைமை வகித்தார். தொடர்ந்து நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் அவை தலைவர் புளியடி பால்ராஜ், மாவட்ட துணை செயலாளர் ஜெயசீலன், வர்த்தக அணி தர்மராஜன், வக்கீல் அணி செண்பக வள்ளி, உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
-
20th January 2015, 02:34 PM
#1933
Junior Member
Platinum Hubber
காலத்தை வென்றவன் நீ!
காணும் பொங்கலும் எம்.ஜி.ஆர் பிறந்த நாளும் ஒன்றாக வருவது என்ன பொருத்தம் பாருங்கள்.
கிராமத்தில் மாட்டுப் பொங்கல் கொண்டாடிய மக்கள் மறுநாள் அந்த மாட்டை வண்டியில் பூட்டி அருகிலுள்ள நகரத்துக்கு சென்று முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்து, ஆங்காங்கே நிழல் கண்ட இடத்தில் கட்டுச்சோற்றை காலி செய்து இளைப்பாறி, குதூகலமாக பாடிச் சிரித்து இருள் கவியுமுன் வீடு திரும்பும் பழக்கம் எப்போது தொடங்கியது என்பது தெரியவில்லை. பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம் என பாடிக் கொண்டு முண்டாசு கட்டிய எம்.ஜி.ஆர் சென்னையில் மாட்டு வண்டி ஓட்டி வரும் காட்சி பசுமையாக மனதில் நிழலாடுகிறது.
குடும்ப தலைவன் வண்டியோட்ட, மனைவியும் குழந்தைகளும் பட்டணத்தின் கட்டடங்களையும் காட்சிகளையும் இளம்பெண்களின் ஆடைகளையும் வாய்பிளந்து பார்த்து அமர்ந்திருக்கும் காட்சிகளும் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் வரை சென்னை சாலைகளில் கண்டு ரசித்தவைதான்.
மாட்டு வண்டி திரும்புவதற்காக எதிரில் வரும் கார்களுக்கு STOP பிளேட் காட்டி தடுத்து நிறுத்திய கான்ஸ்டபிளையும், திடீர் மரியாதையால் மெய்சிலிர்த்து விரைப்பாக எழுந்து நின்று அவருக்கு சல்யூட் வைத்த குழந்தைகளையும், பொறுமையாக காத்திருக்கும் கார்கள் ஒன்றினுள் அமர்ந்து இந்தக் காட்சியை புன்சிரிப்புடன் உள்வாங்கும் ஐ.ஜி.யையும் கடற்கரை சாலையில் பார்த்ததுண்டு.
ஏழைப் பங்காளர்…
நகரமும் அதை சுற்றி பசுமை நிறைந்த கிராமங்களும் தனித்தன்மை மாறாமல் சார்ந்தும் சேர்ந்தும் இயங்கிய காலம் அது. மனிதர்களிடம் எளிமை இருந்தது. விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் செல்லும் பெருந்தன்மை இருந்தது. ஒருவருக்கொருவர் உதவும் மனம் இருந்தது. சட்டத்தையும் விதிகளையும் மதிக்கும் கட்டுப்பாடு இருந்தது. அனைத்திலும் உயர்ந்த மனிதாபிமானம் இருந்தது. அந்த உன்னத மனித குணங்களை ஒவ்வொரு திரைப்படத்திலும் உயர்த்திப் பிடித்த எம்.ஜி.ஆர் அப்போது இருந்தார்.
சினிமா எனும் வெகுஜன ஊடகத்தின் அசாதாரணமான சக்தியை முழுவதுமாக அறிந்திருந்தார் அவர். அவர் அரசியலில் ஈடுபட்டதையும், கட்சி தொடங்கி முதல்வர் ஆனதையும், மக்கள் நல அரசு என்ற வாசகத்துக்கு புது அர்த்தம் கொடுத்ததையும் இறுதி மூச்சு வரையில் வெல்ல முடியாத தலைவனாக விளங்கியதையும் விட்டுத் தள்ளுங்கள்.
அந்த சாதனைகள் ஆயிரக்கணக்கான ஆவணப் பதிவுகளாக அரசுக் கோப்புகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. திரைப்படங்கள் மூலமாக அவர் தமிழ் சமுதாயத்தில் தூவிய நல்ல விதைகள் அவர் காலத்திலேயே செடியாகி காயாகி கனியாகி வளர்ந்து அடுத்த தலைமுறைகளுக்கு நிழல் தரும் விருட்சங்களாக விசுவரூபம் எடுத்த கதைதான் இதுவரையிலும் சரியாக பதிவு செய்யப்படவில்லை.
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி…
அவரது கதாபாத்திரங்கள் தவறு செய்வதில்லை, குடிப்பதில்லை, குற்றம் புரிவதில்லை, அநீதிக்கு அடிபணிவதில்லை, தீயசக்திகளை விட்டுவைப்பதில்லை. அவ்வாறான பாத்திரப் படைப்பை தேர்வு செய்வதே பெருமைக்குரிய விஷயம். சுயநல நோக்கத்தில் திட்டமிட்டு ஒரு சுய பிம்பம் உருவாக்க அப்படி செய்தார் என்ற குற்றச்சாட்டு அபத்தமானது. ஒரு கலைஞன் தான் விரும்பும் பாத்திரத்தை தேர்வு செய்ய சகல சுதந்திரமும் இருக்கும்போது, அந்த தேர்வுக்கு உள்நோக்கம் கற்பிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏனைய கலைஞர்களும் அவ்வாறு நல்லவனாக ‘வேஷம்’ போடக்கூடாது என்று தடை ஏதும் கிடையாதே.
அவரது ரசிகர்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் என்று அந்தக் காலத்திலேயே மட்டமாக வர்ணிக்கப்பட்டனர். அந்த குஞ்சுகள்தான் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பீ, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, தூங்காதே தம்பி தூங்காதே, உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால், சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, தாயில்லாமல் நானில்லை, வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்… போன்ற காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை திரும்பத் திரும்ப கேட்டும் பாடியும் வளர்ந்தன.
தான் தலைவராக ஏற்றுக் கொண்ட பெருந்தலைவர் காமராஜ் வழியில்.. புரட்சித் தலைவர்.. சத்துணவு நாயகன்!
பள்ளியில் ஆசிரியர்கள் போதித்த நல்லொழுக்கம், வீட்டில் அப்பா அம்மா சொல்லித் தந்த நல்லது கெட்டது ஆகியவற்றுடன் தியேட்டரில் எம்.ஜி.ஆர் வலிந்து திணிக்காமல் தேன் தடவி ஊட்டிய நல்ல பண்புகளையும் உண்டு உணர்ந்து வளர்ந்தன. பள்ளிக்கூடம் செல்லாத பாமரர் வீட்டு குழந்தைகள் மட்டுமல்ல, மேல்தட்டு குடும்பங்களில் செல்லமாக வளர்க்கப்பட்ட குழந்தைகளும் எம்.ஜி.ஆர் என்ற நடிகர் சினிமா வழியாக நடத்திய பாடங்களை மனப்பாடமாக்கி ரத்தத்தில் சேர்த்தன.
காதல் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்ற போதிலும் எம்.ஜி.ஆர் படங்களுக்கு குழந்தைகளை பெற்றோர் தவறாமல் அழைத்துச் சென்றதன் காரணம் இதுவே. வாத்தியார் என்ற பட்டம் அவரது கழுத்தில் மாலையாக வந்து விழுந்த காரணமும் அதுதான். ஆசிரியர்களுக்கே ஆசானாக திகழ்ந்தவர் அவர். இந்த தகவல்கள் மிகையற்ற உண்மைகள்.
அந்த தலைமுறை இன்று 40+, 50+ வயதுகளில் இருந்தாலும் அன்று அவரால் மனதில் பதிக்கப்பட்ட நல்லியல்புகள் சேதமின்றி செயல்களில் வெளிப்படுவதை பார்க்கலாம். ஆட்டோ டிரைவர்கள் வில்லன்களாக பார்க்கப்படும் இந்த நாளில், எம்.ஜி.ஆர் ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்டோ என்றால் கண்ணை மூடிக் கொண்டு ஏறி அமரும் பயணிகள் அதிகம். எம்.ஜி.ஆர் பாடல்களை ரிங்டோனாக வைத்திருக்கும் ரியல் எஸ்டேட் புரோக்கர்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஓடும் ரயிலில் பிச்சை எடுப்பவர்கள் அவரது பாடல் வரிகளை கடூரமாக உச்சரித்தால்கூட அலுமினிய குவளையில் நாணயங்கள் கொட்டுவதை பார்க்கலாம்.
தலைவர்களில் முதல்வர்!
தலைமுறைகளை தாண்டியும் அவரது ஈர்ப்பு விசை இயங்குவதை எவரால் மறுக்க முடியும்? பேரியக்கமாக சித்தரிக்கப்படும் அதிமுக என்ற கட்சி அவர் விட்டுச் சென்ற எத்தனையோ அசையும் அசையா சொத்துகளில் ஒன்று. அவ்வளவுதான். எல்லா கட்சிகளிலும் மதங்களிலும் ஏன் மொழிகளிலும்கூட எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு வாசிக்குமுன் எம்.ஜி.ஆர் படத்தின் முன் கண்மூடி ஒரு நிமிடம் நின்று செல்லும் நீதிபதி ஒருவரையும் அறிவோம்.
டிசம்பர் 24, ஜனவ்ரி 17 தேதிகளில் ஊரை வலம் வந்தால் எத்தனை இடங்களில் வீட்டு முன் ஸ்டூல் போட்டு அதில் எம்.ஜி.ஆர் படத்துக்கு 2 முழம் பூச்சரம் சூட்டி விளக்கேற்றி வைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கலாம். அவர்கள் கட்சிக்காரர்கள் அல்ல. வாத்தியாரின் மாணவர்களாக தங்களை கண்ணாடியில் பார்க்கும் சாமானியர்கள்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இந்தப் பெருங்கூட்டம் இருக்கும் வரை, எத்தனை வில்லன்கள் வந்தாலும் இந்த நாடு நாசமாகி விடாது என்ற நம்பிக்கை மேலோங்குகிறது.
‘பிறப்பால் வளர்ப்பால் இருப்பவர் எல்லாம்
மனிதர்கள் அல்ல என்றாராம்
இனத்தால் அல்ல மனத்தால் மட்டும்
வாழ்பவன் மனிதன் என்றாராம்..’
எம்.ஜி.ஆர் சமாதியை வலம் வரும் ஏழை – பணக்காரன், பாமரன் – படித்தவன், ஆண் – பெண், சிறுவன் – முதியவர் கூட்டத்தை பார்த்து வியக்கும்போது அந்தப் பாடல் ஒலிக்கிறது.
(ஜனவரி 17, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள்)

குறிப்பு: இரு தினங்களுக்கு முன் வெளியிட்டிருக்க வேண்டிய கட்டுரை இது. ஆனால் பொங்கல் விடுமுறை, சொந்த ஊர்ப் பயணம் போன்ற காரணங்களால் தள்ளிப் போய்விட்டது. ஆனால், இது புரட்சித் தலைவர், மனிதருள் புனிதர், எட்டாவது வள்ளலின் நூற்றாண்டு விழாவை எதிர்நோக்கும் ஆண்டு என்பதால், எப்போது வெளியிட்டாலும் எவர்கிரீன் கட்டுரைதான்!
என் சொந்த ஊரில் புரட்சித் தலைவருக்கு நான் எடுத்த பிறந்த நாள் விழா!
என் சொந்த ஊரில் புரட்சித் தலைவருக்கு நான் எடுத்த பிறந்த நாள் விழா!

தலைமுறைகளைத் தாண்டிய தலைவர்!
courtesy -என்வழி
Last edited by esvee; 20th January 2015 at 02:43 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th January 2015, 02:40 PM
#1934
Junior Member
Diamond Hubber

Originally Posted by
esvee

20th January 2015, 03:06 PM
#1935
Junior Member
Platinum Hubber
NO WORDS .... GREAT MADAM
-
20th January 2015, 03:29 PM
#1936
Junior Member
Platinum Hubber
VIJAY TV- MNNADHI MANNAN - COMMENTS PORTION .
THANK YOU FRIENDS
I'm 18 years old... I have only seen 40 to 45 movies of MGR. But I am proud to even say that I know him.... He's really a great person... Thanks Vijay TV for this Special Heart Touching Show...
Jessy Julia
நான் உங்களுக்கு மன்னாதி மன்னன், நாடோடி மன்னன், மகாதேவி, மதுரைவீரன் திரைப்படங்களை பார்க்க பரிந்துரைக்கிறேன். தமிழ் மொழியின் அழகு, வசனங்களில், பாடல்களில் உள்ள கருத்துக்கள் என ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுபவை.
Prasanthi Balaji
OUR HEART FELT THANKS TO VIJAY TV AND ALSO MR.GOPINATH FOR GIVING THIS GREAT PROGRAMME ABOUT OUR GREAT LEGEND OUR BELOVED GOD PURATCHI THALAIVAR PONMANACHEMMAL BHARATRATNA DR.M.G.R
- DEVOTEE OF GOD MGR - RAJAGOPALA BALAJI AND TEAM OF PRASANTHI OLD AGE WELFARE HOME
We are young generation. We don't know much about Thalaivar. Please share your memorable moments heree for us
Prasanthi Balaji
Thanks he is a great legend he lived for poor people and he is very generous mgr means magnetic power gods strength revolutionary leader
எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் என தெரியவில்லை. எம்ஜியார் தன்னுடைய படங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்த இன்னும் ஒரு முக்கிய கருத்து - விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். தன்னுடைய படங்களில் தான் என்ன கதாபாத்திரம் ஏற்று இருந்தாலும், விவசாயி, படித்த இளைஞர் அல்லது பணக்காரர் என என்னவாக இருந்தாலும் அவரது தொழில் விவசாயமாக தான் இருக்கும். சமுதாயத்திற்கு ஒரு விவசாயிதான் ஏற்றம் கொடுக்க முடியும் என தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தவர்.
kumar jais
மிக்க நன்றி விஜய் தொலைக்காட்சி. அரிய நிகழ்ச்சியை ஒளிபரப்பியதுடன் மீண்டும் காண வழி வகுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்...
Sundararajan D
விஜய் டிவியில் மன்னாதி மன்னன் MGR நிகழ்ச்சி பார்த்தேன்.மிகவும் ரசித்தேன்.இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. இரண்டு மணி நேரமும் பேட்டியை கண்டு அழுதுவிட்டேன்.நானும் பெட்டியில் கலந்து கொண்டதாக கற்பனை செய்து கொண்டேன்.என்னிடம் கோபிநாத் MGR இடம் நீங்கள் ரசித்தது என்ன என்று கேட்டிருந்தால் நான் கீழ்கண்டவாறு சொல்லியிருப்பேன்:-
MGR பார்த்து எல்லோரும் வலது கையில் கடிகாரம் அணிகிறார்கள்.ஆனால் படத்தில் MGR வலது கையில் கட்டப்பட்ட கடிகாரத்தின் அழகு பளிச் என்று மின்னிடும்.அவர் வலது கையை தூக்குவது அழகு.அசைப்பது அழகு.மொத்தத்தில் வாட்ச் கட்டப்பட்ட வலது கையே அழகுதான்.
sekaran Srinivasan
தயவுசெய்து மிமிக்ரி செய்வது என்ற பெயரில் மக்கள் திலகம் குரலை கேலி செய்வதை தவிர்க்கவும்.அவர் காலமான பிறகு பிறந்தவர்கள் அவரின் கஷ்டப்பட்டு அவர் பேசுவாதி தான் அதிகம் கேட்டு இருப்பார்கள்.
துப்பாக்கி குண்டு தாக்குதலுக்கு முன்பு அவரின் நாடோடிமன்னன்,மர்மயோகி,மதுரைவீரன்,குலேபகாவலி, போன்ற அவரின் படங்களில் அவரின் வசன உச்சரிப்பை பார்த்தால் அவர்கள் இதுபோல் கேலி செய்வதை நிறுத்தி விடுவார்கள் என்பது உறுதி.
To be continued....
-
20th January 2015, 03:45 PM
#1937
Junior Member
Platinum Hubber
No words, tears of joy, thanks to Vijay TV & Mr.Gopinath.
S Vimalan
Being born in 1960 watching the program brought back a lot of good memories. If you watch MGR movies the messages & songs were always towards society's GOODness; not about him. One could say what about 'நான் ஆனை இட்டால்' if you listen to the whole song it is not about him.
However now a few actors with aspiration of getting into politics all are propaganda movies about own self with no GOOD messages.
Reply
Ajshakthi
Ramesh KP
மனிதருள் மாணிக்கம்
நம் தெய்வம் அமரர் எம்.ஜி.ஆர்!
இனிவரும் வருடங்களிலும் தெய்வத்தின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாள் இரண்டிலும் இது போன்ற நிகழ்சிகளைத் தயாரித்து வழங்குமாறு வேண்டுகிறேன், அனைத்து எம்.ஜி.ஆர் உடன்பிறப்புகளின் சார்பாக!
விஜய் டிவிக்கு நன்றி!
srinivasan venkataraman
MGR is the real hero and one and only hero in Tamil Cinema for ever. Also he is only people's leader. All others are not even the leader within their own family.
Once again hats of to Vijay TV to telecast such a wonderful show. As recommended by another brother, We are requesting you to come with sequel of this program.
Venkatesh Karpagam
MGR எப்போதும் எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். உலகத்தில் ஒரே ஒரு சூரியன் , அது போல் ஒரே ஒரு நடிகர், தலைவர் என்றும் MGR தான்.
A selvam Hart
Excellent ,Marvelous, Superb, Fantastic & Outstanding Program of Vijay TV.
No Words to express... This Program Clearly tells that THERE WAS ,THERE IS & THERE WILL BE NO OTHER SUPER STAR THAN THE ONLY ONE M G R.
May GOD GRANT ETERNAL REST TO HIS SOUL.
Selvam Hart -Bnagalore
Awesome program. So many new things about MGR I learned. The memory of that gentleman with a ton of facts speaks for his passion and love of MGR. I think there should be an interview just of him so that many facts are recorded for the future. Listening to all the stories of MGR's giving, I recollect the famous song "...orutharukka koduthaan illai oorukkaga koduthaan...:. MGR must have truly believed in it those words. Thanks to all the participants and to Vijay TV.
Sathia Raj
Munthaya kaala kattangalel erukkum paadalgal thathuvam,arevurai,nalla karuthukkal neraintha paadalgalai eayzuthenaarga paadal asereyargal,enraya kaala paadal asereyargal eayn auvaaru eayzuthu vathu ellai?
Reply
Kachibabu Babu
Ravi Appletv
இந்த நிகழ்ச்சியில் முழுமையாக தலைவர் எம்ஜியார் அவர்களை பற்றியே பேசப்பட்டுள்ளது. வேறு யாரைப் பற்றியும் இங்க பேசப்பட்டிருக்கவில்லை. எம்ஜியார் அவர்களுடன் இருந்த எல்லாரையும் பேசி TMS அவர்களை மட்டும் சொல்லாமல் விட்டிருந்தால் நீங்கள் சொல்வது சரி.
Balaji Ramesh
Truly a legend. which present day politicians or actors have donated their studio place worth crores of rupees to start a arts and science college for women and their house which they lived to start a school for deaf and dumb childred. Dr. M.G.R has done it. really a great human being. unparalleled legend.......... Ramesh Balaji
Ramesh
Truly a legend. which present day politicians or actors have donated their studio worth crores of rupees to start a arts and science college for women in the heart of the city or their house which they live to start a school for deaf and dumb children. Dr. M.G.R has done it. really a great human being. unparalleled legend... Balaji Ramesh
Padmanaban
He was the only actor who lived as per the positive characters he played in his movies... That's how he became Thalaivar for Tamil people from not only Tamil nadu but for Tamil People from other parts of the world as well.... NOBODY can ever become like him.. There is only one MGR
-
20th January 2015, 03:50 PM
#1938
Junior Member
Platinum Hubber
THANKS PROF. SELVAKUMAR SIR
There is no word to describe by us, for thanking the Vijay TV, since
the programme reached millions of people, taking the pride of our
beloved God M.G.R., between the people.
The programme, in fact, was enjoyed by the Viewers, with emotions at
times, weeping tears in the eyes.
Please convey our special thanks to Mr. Gopinath, who conducted this
Session, in a nice manner.
Wishing the Vijay TV Team, all success.
At this point of time, it is suggested that Vijay TV (a Neutral
Channel) should also come forward to organize similar Programmes, on
the occasion of Death Day of our beloved God M.G.R., observed on 24th
December, every year, by interviewing MGR Fans, on their attraction
towards our beloved God M.G.R.
It is necessitated to put-forth the above suggestion, in view of the
less participation of MGR Fans / Devotees, in the Yesterday's
Programme and to give the opportunity to more crazy fans, at all
levels.
Hope you will consider our suggestion and do the needful.
With Kind Regards,
Affectionately Yours,
S. Selvakumar
Secretary, ANAITHTHULAGA M.G.R. PODHU NALA SANGAM
-
20th January 2015, 04:08 PM
#1939
Junior Member
Veteran Hubber
koranthangal
-
20th January 2015, 04:22 PM
#1940
Junior Member
Veteran Hubber
Bookmarks