-
22nd January 2015, 12:37 PM
#11
Senior Member
Veteran Hubber
கேரளாவில் சூப்பர்ஹிட்டான ஐ
கேரளாவில் ஐ படத்தை குளோபல் யுனைடெட் மீடியா சுமார் 230 திரையரங்குகளில் வெளியிட்டுள்ளது.
ஷங்கரின் படத்துக்கு கேரளாவில் எதிர்பார்ப்பு எப்போதும் உண்டு. ஐ முதல் இரு தினங்களில் 5.57 கோடிகள் வசூலித்துள்ளதாக குளோபல் புனைடெட் மீடியா தெரிவித்துள்ளது. ஐந்து தினங்களில் பத்து கோடியை படம் தாண்டும் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அவர்களின் நம்பிக்கை கைகூடினால் அது தமிழ்ப் படம் ஒன்றின் கேரளா சாதனையாக கருதப்படும்.
இதேபோல் தெலுங்கிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. லிங்காவுடன் ஒப்பிட்டால் ஐ மிகப்பெரிய ஹிட் என்று குதூகலிக்கிறார்கள் ஐ -யை ஆந்திராவில் வெளியிட்டவர்கள்.
-
22nd January 2015 12:37 PM
# ADS
Circuit advertisement
Bookmarks