-
28th January 2015, 12:54 PM
#11
Senior Member
Seasoned Hubber
http://cinema.maalaimalar.com/2015/0...l-movie-r.html
அஜித் படம் ரிலீஸ் அன்று சென்னையில் 8 தியேட்டர்களில் குண்டு வெடிக்கும்: மர்ம நபர் கடிதம் மூலம் மிரட்டல்
அஜித் – திரிஷா நடிப்பில், கவுதம்மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'என்னை அறிந்தால்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அப்படம் ரிலீஸ் ஆவது தள்ளிப்போனது.
இந்நிலையில் என்னை அறிந்தால் படம் வருகிற 5–ந் தேதி வெளியாகிறது. சென்னையில் அந்த படம் 15–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அப்படத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உதயம் தியேட்டரிலும் 'என்னை அறிந்தால்' படம் திரையிடப்படுகிறது. அந்த தியேட்டருக்கு நேற்று மர்ம கடிதம் ஒன்று வந்தது. தியேட்டர் மானேஜர் அரிகரன் அந்த கடிதத்தை வாங்கி படித்தார்.
அதில், வருகிற 5–ந் தேதி 'என்னை அறிந்தால்' படம் ரிலீஸ் ஆகும் அன்று உதயம் தியேட்டர் உள்ளிட்ட 8 தியேட்டர்களில் குண்டு வெடிக்கும். முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மிரட்டல் கடிதத்தில் அஜித்குமாரின் உயிருக்கும் ஆபத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதத்தின் முடிவில் அஜித் – திருவான்மியூர் என்று பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதைப்பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குமரன் நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஸ்வநாத் ஜெயின் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து சென்றனர்.
தியேட்டர் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பியது யார்? என்பது தெரியவில்லை. கடிதத்தில் முகவரி எதுவும் இல்லை. அது மொட்டைக் கடிதமாக இருப்பதால் மிரட்டல் ஆசாமியை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த கடிதம் எங்கிருந்து வந்தது? அதனை அனுப்பியது யார்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 'என்னை அறிந்தால்' படம் வெளியாகும் நாளில் அதற்கு இடையூறுகளை ஏற்படுத்துவதற்காக யாரோ திட்டமிட்டு இதனை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
confirmed.
-
28th January 2015 12:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks