Page 269 of 397 FirstFirst ... 169219259267268269270271279319369 ... LastLast
Results 2,681 to 2,690 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2681
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கண்ணா,

    தொழில்முறைப் பாடல்களில் செம்மீன் படம் மற்றும் பாடல்கள் பற்றி அழகாக ஆழமாக எழுதி என் நினைவுகளை கிளறி விட்டீர்கள். அன்றைய நாட்களில் தமிழகத்திலும் வெற்றிகரமாக ஓடிய படம் செம்மீன். படம் கேரளத்தில் பெற்ற வெற்றியை தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் திரையிடப்பட்டது. நமது ஊரில் மீனாட்சி டாக்கிஸில் வந்தது என்று என் நினைவு. அப்போது நான் மிகச் சிறுவன் என்பதனால் படம் பார்க்கவில்லை. ஆனால் கடலினக்கர போனோரே பாடலும் மானஸ மைனே வரு பாடலும் மதுரையிலும் வெகு பிரபலம். மானஸ மைனே வரு பாடல் மூலமாகத்தான் மன்னாடே என்னும் நல்ல பாடகரை நான் அறிந்துக் கொண்டேன். அதே போன்று சலில் சௌத்ரி பற்றியும்.

    பிற்காலத்தில் கேரளத்தில் வேலை செய்தபோது இந்தப் படத்தை பார்த்தேன். தமிழகத்தை ஒப்பிட்டு பார்த்தால் கேரளத்தில் தியேட்டர்கள் வெகு குறைவு. மலையாளம், தமிழ் மற்றும் ஹிந்தி படங்களை திரையிடுவதற்கே இருக்கின்ற தியேட்டர்கள் போதாது. அப்படியிருக்க பழைய படங்களை எங்கே திரையிடுவது? தமிழகத்தை தாண்டி ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில் பயணம் செய்யும்போது அந்த மாநிலங்களிலும் பழைய தெலுங்கு மற்றும் கன்னடப் படங்கள் ஓடுவதை பார்த்திருக்கிறேன். ஆனால் கேரளத்தில் வெகு அபூர்வமாகவே பழைய மலையாளப் படங்கள் திரையிடப்படும். அப்படி ஒரு வாய்ப்பு 90-களின் துவக்கத்தில் கிடைத்தது.

    அதற்கு முன்னரே என் சக ஊழியர்கள் செம்மீன் படத்தை பற்றியும் சத்யன் அவர்களின் நடிப்பைப் பற்றியும் மிக பிரமாதமாக சிலாகித்து பலமுறை பேசியிருக்கிறார்கள். செம்மீன் படத்தில் மட்டுமல்ல பல படங்களில் [நீலக்குயில், கர காண கடல், வாழ்வே மாயம், அனுபவங்கள் பாளிச்சகள், கடல் பாலம், ஒடயில் நின்னு, நிங்கள் என்னே கம்யூனிஸ்ட்டாகி என்று லிஸ்ட் போடுவார்கள்] சத்யன் அவர்களின் நடிப்பைப் பற்றி விமர்சையாக் பேசுவார்கள். 1912-ல் நாகர்கோவிலில் பிறந்து இளம் வயதிலே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி பின் ஓய்வு பெற்று [வயது 58 ஆக வேண்டிய அவசியமில்லை. இளம் வயதிலே ஓய்வு பெறலாம்] பின் சினிமாவில் சேர்ந்து அங்கே கொடி கட்டி பறந்த சத்யன் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1971-ம் ஆண்டு (ஜூன் மாதம் என்று நினைவு) காலமானார். என்ன ஆச்சரியம் என்றால் 71-ல் காலமான அவரை அவரின் நடிப்பை பற்றி 80-களிலும் 90-களிலும் பெருமையாக பேசுவார்கள். அதிலும் இளைஞர்கள். பேசுவார்கள் பேசும் தெய்வம் படத்திலும் நமது நடிகர் திலகத்தோடு இணைந்து நடித்திருப்பார் சத்யன். இனி விஷயத்திற்கு வருகிறேன்.

    நான் வசித்த கோட்டயம் நகரில் ஆனந்த் என்ற தியேட்டரில் ஒரு வார காலத்திற்கு செம்மீன் வெளியானது. ஒரு நாள் நூன் ஷோ போயிருந்தேன். ஹவுஸ் புல். அரங்கில் நிறைய இளைஞர்கள். படம் ஆரம்பித்து அரை மணி நேரத்திற்கு பின் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் படகுகளில் திரும்பிவர அவர்களுடன் துடுப்பு போட்டுக் கொண்டே சத்யன் அறிமுகமாகும் காட்சி. பலத்த கைதட்டல். ஆச்சரியமாக இருந்தது. படம் முழுக்க பார்த்தேன். பிடித்திருந்தது.

    மறுநாள் ஒரு சக ஊழியரிடம் இதைப் பற்றி சொன்னேன். முதல் கேள்வியே சத்யன் அறிமுக காட்சியில் கைதட்டல் இருந்ததா? என்று கேட்டார். சொன்னேன். படத்தை பற்றி சொன்னேன். பிறகு ஒரு விஷயம் சொன்னேன், பாருங்கள் அவர் டென்ஷன் ஆகி விட்டார்.

    வேறொன்றுமில்லை, அந்த காலகட்டத்தில் மம்மூட்டி நடித்து பரதன் இயக்கத்தில் அமரம் (Amaram) என்றொரு அற்புதமான படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அதுவும் கடலோரத்து மீனவர்களின் வாழ்வை, அவர்கள் சுகங்களை துக்கங்களை, காதலை நட்பை சொன்ன படம். மிக பிரபல திரைக்கதை ஆசிரியர் லோகிததாஸ் [கிரீடம், பரதம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா போன்ற பல்வேறு படங்களின் திரைக்கதை எழுதியவர்] அவர்களின் அருமையான திரைக்கதையில் மம்மூட்டி அந்த அச்சுட்டி என்ற பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.

    நான் என்ன சொன்னேன் என்றால் செம்மீன் பழனியை விட அமரம் அச்சுட்டிதான் டாப். என்றேன். அதற்கு என்னுடன் சண்டைக்கே வந்துவிட்டார். அது மட்டுமல்ல நான் சொன்னது அவரிடமிருந்து வேறு பலருக்கும் பரவி பலரும் என்னுடன் விவாதத்திற்கு வந்துவிட்டனர். நான் முதலில் குறிப்பிட்ட சத்யனின் பல படங்களை சொல்லி அது பார்த்திருக்கிறீர்களா இது பார்த்திருக்கிறீர்களா என்று தொடர்ந்து சில நாட்கள் என்னிடம் வாதம் செய்துக் கொண்டேயிருந்தனர்.

    அன்றைய நாட்களில் Satellite television ஒளிப்பரப்புகள் தொடங்கப்பட்டிருக்கவில்லை. பின்னாட்களில் அந்த நண்பர்கள் சொன்ன அனைத்துப் படங்களையும் பார்க்க முடியாவிட்டாலும் கணிசமானவற்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சத்யன் சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நமது நடிகர் திலகம் அளவிற்கு அந்த range ல் வருவாரா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் பாருங்கள் அவர்களின் மாநில மொழி நடிகர் எனும்போது ஒரே குரலில் அவர் பெருமையை பறைசாற்றுகின்றனர். ஆனால் நமது தமிழகத்திலோ நமது மக்களே அற்ப காரணங்களுக்காக நடிகர் திலகத்தை தரம் தாழ்த்துவார்கள். என்ன செய்வது நடிகர் திலகத்தின் ராசி அப்படி!

    ஸாரி கண்ணா, மிக நீண்ட பதிவாக போய்விட்டது. உங்களின் செம்மீன் பற்றிய பதிவு(கள்) பல நினைவுகளை தூண்டி விட்டது. பொறுமையாக படித்ததற்கு நன்றி.

    அன்புடன்

  2. Likes kalnayak, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2682
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    //கார்த்திக் சார் இருக்கிறாரே. அருமையாக எழுதக் கூடியவர். சிவலிங்கம் செட்டியாரின் காரில் இருந்து ஒரு நடிகை இறங்கி ஓடியதை தன் நண்பருடன் பார்த்ததை அவர் விளக்கியிருந்த விதம் காட்சியை நேரில் பார்ப்பது போலிருந்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. அந்த கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தால் நிச்சயம் திருப்தி இருக்கும்.// எங்கிட்டோ போய்ட்டீங்க.. மாதங்களைச் சொன்னேன் ஸ்வாமி..ம் ம் வீ வில் வெய்ட்.. வருவார்..
    பாடல்களை தரவேற்றியதற்கு நன்றி சின்னக் கண்ணன். ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு என்று எழுத்தைக் கூறியிருந்தேன். அதற்கு விளக்கம் அளித்திருக்கிறீர்களே. இதுதான் உங்கள் ஸ்டைல். நன்றி. அப்புறம்... என் ஸ்டைல்.... சே, சே நானே சொல்லிக்க மாட்டேன்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  5. Likes kalnayak, chinnakkannan liked this post
  6. #2683
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    முரளி, மிக்க நன்றி..

    உங்கள் நினைவலைகள் வெகு அழகு.. நீங்கள் சொன்ன மலையாளப் படங்கள் நான் பார்த்ததில்லை.. பார்க்க வேண்டும்..

    சத்யன் தான் ஷீலாவை அறிமுகம் செய்வித்தார் என்று ஷீலா எழுதியிருந்ததைப் படித்தாக நினைவு. நல்ல நடிகர்.. பரீக்குட்டி பாத்திரத்தை மதுவுக்குக் கொடுத்து பழனி பாத்திரத்தை எடுத்துக் கொண்டதிலேயே தெரிகிறது.. நம்ம ந.தி ரேஞ்சுக்கா.. ம்ஹூம் அதெல்லாம் முடியவே முடியாது..

    //பேசும் தெய்வம் படத்திலும் நமது நடிகர் திலகத்தோடு இணைந்து நடித்திருப்பார் சத்யன்// படம் பார்த்து நாளாகிவிட்டது மறுபடி பார்க்கவேண்டும்..

    என்னது மீனாட்சி தியேட்டரிலா போட்டார்கள்.. ரொம்ப ச்சின்னஞ்சிறுவனாய் இருந்திருப்பேன் என நினைக்கிறேன்.. தவிர மலையாளப் படங்கள் தான் தெரியுமே மதுரையில் அவ்வளவு தெரியாது..

    நினைவு தெரிந்து பார்த்த போஸ்டர் பெரிய ஏ போடப்பட்டிருக்க அதற்குள் சோகமாய் ஒரு பெண் கால் காயத்தைப் பார்த்துக்கொண்டிருப்பாள் ..இரட்டைத்தெரு தாண்டி வலதுபக்கம் தேவிதியேட்டர் போகும் பாதையில் திரும்பும் சுவற்றில் ஒட்டியிருப்பதைப் பார்த்த நினைவு.. அவளுடே ராவுகள்..சென் ட்ரல் என நினைக்கிறேன் (சரிதானே!)..

    இன்னொரு தமிழ்ப்படப் போஸ்டரும் நினைவில். இது தேவி தியேட்ட்ர் எதிரில் இருந்த மளிகைக் கடை தாண்டி இந்தப் புறச் சுவரில் போட்ட நினைவு.. அதே பெரிய ஏ. சற்றுத்தள்ளி பாவம் ரவிக்கை பாவாடையுடன் கலங்கிய வண்ணம் சுமி இருந்ததாய் நினைவு கலங்கலாய் இருக்கிறது! படம்..அவளும் பெண் தானே!

    கொஞ்சம் கல்லூரி வந்தவுடன் பார்த்த ஒருபடம் சலனம் என நினைக்கிறேன். ப்ளாக் அண்ட் ஒய்ட் லஷ்மி பாவம் கிராமப் பெண் மோகன் ஃபாதிரியார் எனப் போகும் கதை எனப் புகையாக நினைவு..தங்கம் தியேட்டரா பரமேஸ்வ்ரியா நினைவிலில்லை..

    அதே போல் கல்லூரியில் கட்டடித்துப் போன படம் என்னவெனில் என்பதற்கு முன் படித்த கல்லூரி விமான நிலையத்துக்கருகில்.. பிஆர்சி (பாண்டியன் போக்குவரத்துக் கழகம்) காலையில் காலேஜ் டயத்துக்கு காலேஜருகில் கொண்டு விடும் பின் சாயந்திரம் தான் பிக்கப் செய்ய வரும்.. நடுவில் ஊர் போகவேண்டுமென்றால் ஒன்றரைகிலோ மீட்டர் நடந்து பெருங்குடி கிராமத்தில் தான் மெய்ன் ரோட். அங்கே நின்றால் மொஃபஸலோ பிஆர்சியோ வரும். மதியம் கிளம்ப நினைத்தால் 12.45க்கு ஒரு பஸ் அல்லது 1.50க்கு தான்பஸ்..(அந்தக் காலத்தில்)

    ஒரு சுபயோக சுபதினத்தில் மூன்றாம் பீரியட் கட் செய்து (மொத்தம் ஏழோ எட்டோ பேர்) லொங்கிடி லொங்கிடி என பன்னிரண்டு மணிக்கே கிளம்பி(மதுரை வெய்யில்!) வந்து வெய்ட் செய்து வந்த 37ம் நம்பர் சென் ட்ரல் ஓ ஆலங்குளமோ என்னவோ அந்த பஸ்ஸில் ஏறி பெரியார் பஸ்ஸ்டாண்ட் இறங்கி மறுபடி பத்தொன்பதாம் நம்பர் பிடித்து கலெக்டர் ஆஃபீஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது மணி ரெண்டே முக்கால்.

    கிடுகிடுகென அருகாமையில் இருந்த சினிப்ப்ரியா தியேட்டருக்குள் ஓடி ( என்னபடம்டா கிச்சாமி – கிச்சாமியாகப்பட்டவன் சொன்ன மலையாளப் பெயர் நினைவிலில்லை தமிழ்ப்படுத்திய பெயர் மட்டும் நினைவில்.ஒரு வினாடி சுகம்! ஹேய் பெயர் தான் அப்படி பிரதாப்ப் போத்தன் படமாம்டா) ஹெஹ் ஹெஹ் ஹே என ஓடி கவுண்ட்டரில் டிக்கட் வாங்கி உள்ளே போனால் வஜ்ரதந்தித் தாத்தா கரும்பைக்கடித்துக் கன்னத்தில் கைவைத்துக் கொண்டிருந்தார்.

    சீட் பார்த்து அனைவரும் உட்கார்ந்து அட் முடிந்து படம் போட ஆரம்பிக்கலாம் என்றால் என்ன இது..

    ஆங்கிலத்தில் டைட்டில்கள் வர ஆரம்பிக்க.. கிச்சாமி. ட்ரெய்லராய் இருக்கும்டா வெளில போஸ்டர்ல ப்ரதாப் போத்தன் இருந்தானே. ஓ அப்படியா என அப்பாவியாய் நம்பி விழியகலத் திரைபார்த்தால் டைட்டில் முடிந்தபிறகும் திரையில் மக்கள் செவிக்கினிய ஆங்கிலத்தில் பேசியவாறே இருந்த போது தான் தெரிந்தது படம் மறு நாளிலிருந்தோ என்னவோ வரப்போகிறது என்று (கிச்சா தர்ம அடி வாங்கி எங்களுக்கெல்லாம் இன் டர்வெல்லில் எக் போண்டா வாங்கிக் கொடுத்தான்!) (அந்த ஆங்கிலப்படம் தி மேக்னிஃபிஷியண்ட் செவன்!)

    ஒரு படம் சலனம்மலையாளம் எனச் சொன்னேன்.. நினைவலைகள் கொஞ்சம் முன்பின்னாய் அடிப்பதால் வந்த வினை..இன்னும் இரு படங்கள் பார்த்திருக்கிறேன் மதுரையில். என்னாவாக்கும் அது..

    அப்பாவின் நண்பரொருவரின் ரெகமண்டேஷனின் பேரில் பார்த்தது அது..படம் நியூடெல்லி.. சிந்தாமணியில் ஓடியது..(ரைட்டா)
    மம்முட்டி ஊர்வசி சுமி..(இது வேறுசுமி..சுமலதா!)

    பின் அபிராமிதியேட்டர் திறந்தபுதிது (அலங்காரைத் தாண்டி நேரேசென்றால் வருமே) என நினைக்கிறேன்.. மஞ்ஞில் விரிந்த பூக்கள் விழியோரம் நிலா வருண்ணு என்று பாடி பூர்ணி சப்பக்கென்று மனதுக்குள் உட்கார்ந்தார்..!(மோகன் லால் வில்லன் -அறிமுகம்?)


    துபாயில் வேலை சேர்ந்ததற்குப் பின்னர் பார்த்த மலையாளப் படம் யக்*ஷ கானம் அப்புறம் சப்தபதி தெலுகுபடம் டப்டு இன் மலையாளம் (பாடல்கள் தெலுங்கில்!) வீடியோ காசட் வடிவத்தில்! பின் மம்முட்டியின் ஆகஸ்ட் 15, சிபிஐ டைரிக் குறிப்பு

    நீங்கள் சொன்ன மலையாளப்படங்கள் ஒவ்வொன்றாய்ப் பார்க்கவேண்டும்..இப்போது புது மலையாளப் படங்கள் மீன்ஸ் போனவருடம் வந்தவை சில நன்றாகவே இருக்கின்றன..பெங்களூர் டேஸ், ஆங்க்ரி பேபீஸ், விக்ரமாதித்யன் (மம்முட்டியிண்ட புத்ரன் துல்கர் சல்மான்..பெ.டேயிலும் வருவார்) ஃபஹத் பாசிலின் 22ஃபீமேல் கோட்டயம் என..

    //[நீலக்குயில், கர காண கடல், வாழ்வே மாயம், அனுபவங்கள் பாளிச்சகள், கடல் பாலம், ஒடயில் நின்னு,// amaram// ஒன்றுமில்லை நீங்கள் எழுதிய படங்களை ப் பார்க்கவேண்டுமென மறுபடி லிஸ்ட் போட்டுப் பார்த்தேன். நீலக்குயில் இட் ரிங்க்ஸ்மி எ பெல்..பாத்திருக்கேனா..

    என்னது உங்கள் பதிவு நீள் பதிவா..சுவாரஸ்யமாக இருந்ததுங்க.. நல்லா இருந்தது. என்னையும் கிளறி விட்டு விட்டீர்கள் முரளி.. மீண்டும் நன்றி..
    (உடன் பதிலிட முடியவில்லை வீட்டுக்கு வந்து உடன் பதிலிடுகிறேன் இதை..)
    Last edited by chinnakkannan; 28th January 2015 at 10:00 PM.

  7. Likes kalnayak liked this post
  8. #2684
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //அப்புறம்... என் ஸ்டைல்.... சே, சே நானே சொல்லிக்க மாட்டேன்.// கலைவேந்தன் ஒங்க ஸ்டைலும் இருங்குங்க்ணா. அரசியல் கோட்ஸ்.ஒருசம்பவம் அப்புறம் ஒரு பாட் என.. (எனக்கு அரசியல் எழுத வராதே)

  9. Likes kalnayak liked this post
  10. #2685
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நடனம் ஒன்று நடிகையர் இரண்டு...! (ம்ம் வாசு அவர்களோட சாயல் வரக்கூடாதுன்னு எப்படில்லாம் யோசிக்க வேண்டியதா இருக்கு! )

    **

    நல்ல கொதிகொதிக்கும் மதுரை வெய்யிலில் மேட்னி ஷோ பார்த்தால் உள்ளங்கையில் ஐஸ்கட்டி வைத்தாற்போல் ச்சிலீர் ஸ்ரீதேவி.. என்னா ஸ்டெப்ஸ்.


    பேரைச் சொல்லவா அது நியாயம் ஆகுமா
    தங்கமாங்கனி என் தர்ம தேவதை..(ஹெளமச் காரட்யா?) குரு கமல் ஸ்ரீதேவி

    https://www.youtube.com/watch?x-yt-t...yt-cl=84924572

    ஸ்ரீதேவியின் அடிச்சுவட்டை கடற்கரை மணலில் செய்யப் பார்த்திருப்பார் பூர்ணி(ம்)மா..

    கொஞ்சம் அந்த ஸ்டெப்ஸ் அவருக்கும் வந்தது என்றுதான் சொல்லவேண்டும்..ஆனால் பாட்டு..எழுதியது கங்கை அமரன் என்று நினைக்கிறேன்..எனக்குப் பிடிக்க்குமே


    சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
    கண்ணாளனை ப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து..


  11. Likes kalnayak liked this post
  12. #2686
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மழை ஒன்று பாடல் (இப்போதைக்கு) இரண்டு

    மனித வாழ்க்கைப் பருவங்கள்லயே மோசமான பருவம் எது தெரியுமா..இந்த இளமைப் பருவம் தாங்க..அதுவும்மழைல நனஞ்சுட்டா என்ன ஆறது..

    இந்த அழகு மழைல நனையறதாம்..டிராஜேந்தர் வரில்ல மோஹனர் (கொ.வை.ஆ) பாடறார்..

    விழியோ பிரம்மன் மயக்கத்தில் வரைந்த கவிதை
    மொழியோ அமுதம் குரலாகி ப் பொழிகின்ற போதை..ம்ம்



    ம்ம்.. இந்தப் பாட்டுல இந்த ஜோடியப் பாருங்க ..இங்கயும் மழை தான் வீட்டுக்குள்ள அப்புறம் மனசுக்குள்ள.. ஆனா ஒண்ணு இவங்க காதலர்கள் அல்லது கல்யாணமாகாதவர்களா இருக்கணும் எப்படிங்கறீங்களா பாட் கேட்டுட்டு வாங்க சொல்றேன்..

    தேன் சிந்து தே வானம் உனை எனைத் தாலாட்டுதே.. இதுக்கும் வரி சொல்லணுமா.

    பன்னீரில் ஆடும் செவ்வாழை க் கால்கள்
    பனிமேடை போலும் பால்வண்ண மேனி (ஜூரம் வராதோ)

    ஷிவ்குமார் ஜெய்சித்ரா.. பொண்ணுக்குத் தங்க மனசு..டான்ஸாடறப்பவே தெரியுதே..!



    கல்யாணமானவங்களா இருந்தா . “இவளே இந்த மழைக்கு சூடா பஜ்ஜி போட்டுக் கொடேன்”னு ஹஸ்பெண்ட் சம்சாரத்துக்கிட்ட கேட்டிருப்பான்!

  13. Likes kalnayak liked this post
  14. #2687
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Pala naatkal ingu varamal irundhaal pakkangal odi vidugindrana
    medhuvaga padikka aarambikkren

    Nanbargal anaivarukkum Vanakkangal

  15. Likes kalnayak liked this post
  16. #2688
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாங்க ராஜேஷ் வாங்க.

  17. #2689
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    வாங்க ராஜேஷ் வாங்க.
    Vandhen Vandhen meendum naane Vandhen

  18. #2690
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    காகித ஓடம் பாட்டு போட்ட பின்னால்தான் பலரும் வந்திருக்காங்க. பரவாயில்லை. எல்லோரையும் வருக வருக என்று வரவேற்கிறேன்.




    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •