-
6th February 2015, 06:01 PM
#11
Member
Senior Hubber
முதல் நாள் வசூல்.. லிங்காவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது என்னை அறிந்தால்! Posted by: Shankar Published: Friday, February 6, 2015, 17:38 [IST] இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க: ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் முதல் நாள் வசூலில் ரூ 28 கோடியை வசூலித்து, ரஜினியின் லிங்கா படத்துக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது என்னை அறிந்தால். நேற்று உலகம் முழுவதும் வெளியானது அஜீத் நடித்த என்னை அறிந்தால். இந்தப் படத்துக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ 12 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் செய்திகள் கூறுகின்றன. கேரளாவில் ரூ.3.5 கோடியும், கர்நாடகாவில் ரூ.2.54 கோடியும், பிற மாநிலங்களில் ரூ.1.36 கோடியும், வெளிநாடுகளில் ரூ.8 கோடியும் என மொத்தம் கிட்டத்தட்ட 28 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது இந்தப் படம். இது தோராய கணக்குதான். முழு விவரங்கள் திங்களன்று கிடைத்துவிடும். ரஜினி நடிப்பில் வெளியான ‘லிங்கா' படத்தின் முதல்நாள் வசூல் ரூ.37 கோடி என கணக்கிடப்பட்டிருக்கிறது. லிங்கா முதலிடத்திலும் என்னை அறிந்தால் இரண்டாவது இடத்தில் உள்ளது. விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஐ' ரூ.27 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்திலும், விஜய்யின் ‘கத்தி' ரூ.23 கோடி வசூல் செய்து நான்காவது இடத்திலும் உள்ளது.
Read more at: http://tamil.filmibeat.com/news/yenn...rt-033116.html
"You can't make an omelet without breaking a few eggs." 
-
6th February 2015 06:01 PM
# ADS
Circuit advertisement
Bookmarks