என்னை அறிந்தால் படம் ஓபனிங் வசூலில் லிங்காவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



கடந்த 5 -ஆம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் 12.8 கோடியும், கேரளாவில் 3.75 கோடியும், கர்நாடகாவில் 2.54 கோடியும் பிற மாநிலங்களில் 1.36 கோடியும், வெளிநாடுகளில் மொத்தமாக 9.75 கோடியும் வசூலித்ததாக கூறப்படுகிறது. மொத்தமாக முதல் நாளில் மட்டும் 30.20 கோடிகள்.

தமிழ்ப் படங்களின் முதல்நாள் ஓபனிங்கில் 37 கோடிகளுடன் லிங்கா முதலிடத்தில் உள்ளது. என்னை அறிந்தால் இரண்டாவது இடம். ஷங்கரின் ஐ 27 கோடிகளுடன் அதற்கு அடுத்த இடத்திலும், விஜய்யின் கத்தி 23 கோடிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.

லிங்காவின் தெலுங்கு டப்பிங்கையும் சேர்த்தே 37 கோடி வசூல். என்னை அறிந்தாலின் தெலுங்கு டப்பிங் இன்னும் திரைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


COURTRSY wEBDUNIA