-
10th February 2015, 01:48 PM
#3991
Junior Member
Seasoned Hubber
Mr SS
You certainly deserve this honour and everyone will have their turn in this glorious thread.
Do not hesitate and because you have carried the thread single handedly and come out with flying
colours.
Start the part 15 as posted by Mr MS
Regards
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th February 2015 01:48 PM
# ADS
Circuit advertisement
-
10th February 2015, 02:16 PM
#3992
செந்தில் சார்,
உங்கள் முடிவை ஏற்றுக் கொள்கிறேன். நண்பர் சந்திரசேகர் அவர்களிடமும் பேசி விட்டேன். அவரும் பாகம் 15-ஐ துவக்குவதற்கு ஒப்புக் கொண்டு விட்டார். இன்றைய தினம் அவர் வெளியூரில் இருப்பதனால் நாளை காலை அவர் புதிய பாகத்தை தொடங்குவார். ஆகவே அதுவரை நண்பர்கள் இந்த பாகத்தில் 400 அல்லது 401 பக்கத்தை தாண்டாமல் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர் kc சேகர் அவர்களுக்கு வாழ்த்துகள்! நண்பர் செந்தில் அவர்களுக்கும் நன்றிகள்!
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th February 2015, 02:37 PM
#3993
Junior Member
Veteran Hubber
முரளி சார் மிக்க நன்றி எனது மன ஓட்டத்தை சரியாக புரிந்து கொண்டமைக்கு.
திரு சந்திரசேகர் அவர்களின் ஒப்புதலுக்கும் மனமார்ந்த நன்றிகளும் நல்வாழ்த்துக்களும். எப்போதும் போல் என் கடமையான நடிகர்திலகம் புகழ் பரப்புவதில் மனமொன்றிய ஒத்துழைப்புக்களை நல்குகிறேன்.
என்பால் அன்புடன்பெயர் முன்மொழிந்த வாசுதேவன் அவர்களுக்கும் புரிதலுடன் கூடிய நன்றிகள்
நடிகர்திலகம் பேரவையை மிகுந்த சவாலான சூழ்நிலைகளில் மனதைரியத்துடன் வழிநடத்திக் கொண்டிருக்கும் நண்பர் சந்திரசேகருக்கு உரிய மரியாதையை நாம் அளித்து அவருடன் கரம் கோர்த்து நடிகர்திலகத்தின் மேன்மையை இன்னும் பரப்பிட ஏற்ற தருணம் இதுவே.. பணி சிறந்திட மீண்டும் நல்வாழ்த்துக்கள்!
நான் சோர்வுற்ற சமயத்தில் என்னை சரியான வழியில் திருப்பிய திரு ரவிகிரண் சூர்யா அவர்களுக்கு என் தனிப்பட்ட நன்றியறிதல்கள்
regards, senthil
Last edited by sivajisenthil; 10th February 2015 at 03:01 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th February 2015, 08:17 AM
#3994
Senior Member
Seasoned Hubber
சாதனைக்கென்றே பிறந்த மாமன்னன்...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மய்யத்தை மட்டும் விட்டு வைப்பாரா என்ன..
33 தலைப்புகள்...
24.01.2005 தொடங்கி இன்று வரை பத்து ஆண்டுகளில் இந்தப் பயணம் படைத்துள்ள வரலாறு.. மலைக்க வைக்கும் வரலாறு..
தொடர்ந்து பத்து ஆண்டுகள் இடைவெளியின்றி இயங்கி சாதனை படைத்துள்ளது, நடிகர் திலகத்தின் ரசிகர்களின் மிகப் பெரிய வெற்றியாகும்.
சமீப காலத்தில் திரியில் ஏற்படுத்தப்பட்ட வடிவமைப்பு மாற்றத்தினால் ஒவ்வொரு பாகமும் 400 பக்கங்கள் என்னும் போது இதனுடைய தாக்கம் இன்னும் அதிகமாகும்.
முப்பதிற்கும் மேற்பட்ட தலைப்புகளில் மக்கள் தலைவரின் மகத்தான வரலாறு பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.
இன்று வரை அநைத்து பாகங்களுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 58 லட்சம் பார்வையாளர்களை நடிகர் திலகம் திரியின் பல்வேறு பாகங்கள் கவர்ந்துள்ளன என்பதிலேயே அவருடைய ஆளுமை உள்ளங்கை நெல்லிக்கனி போல் புலப்படும்.
பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகள், பல்வேறு கோணங்களில் அவருடைய நடிப்பைப்பற்றிய திறனாய்வுகள், அவருடைய சமுதாய பங்களிப்பு, நேர்மையான அவருடைய அரசியல் வாழ்க்கை.. கர்ணனைப் போல் வலது கை தருவதை இடது கை அறியாத கொடையுள்ளம், தேசியவாதியாக, தன்னலமற்ற தொண்டனாக என அவரின் வாழ்க்கையின் திறந்த புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமும் புரட்டிப் பார்த்து அலசிய ஒவ்வொரு ரசிகரின் எழுத்து வன்மை..
இவ்வாறு பல்வேறு வகையில் வரலாறு படைத்திட்ட நடிகர் திலகம் திரி, இம்மய்யம் திரியின் திலகமாகவும் விளங்குவதில் வியப்பேது...
குறிப்பாக நடிகர் திலகம் திரியின் உச்சகட்ட சாதனை, பம்மலார், வாசு உள்ளிட்ட அனைத்து நண்பர்கள் ஒருங்கிணைந்து படைத்த நடிகர் திலகம் திரி பாகம் 9... கிட்டத்தட்ட பத்து லட்சம் பார்வையாளர்கள்.. இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது. முடிந்து இரண்டரை ஆண்டுகளான பின்னும், இன்று வரை இத்திரி தொடர்ந்து பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது என்றால்..
அதில் பம்மலார் மற்றும் வாசு இருவரின் பங்கு மகத்தானது என்பதில் சிறிதும் ஐயமில்லை.
வரும் நாட்களில் வரும் பாகங்களில் இவர்கள் இருவரும் மீண்டும் தொடர்ந்து பங்காற்றி இந்த ஐம்பத்தெட்டு லட்சம் பார்வையாளர்கள் என்பதை ஒரு கோடி என்கிற இலக்கை தாண்ட வைக்க தோள் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடனும் வேண்டுகோளுடனும்
பாகம் 15ஐ ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
நடிகர் திலகம் என்கிற மாபெரும் சக்தியினை உலகிற்கு உணர்த்த, அவருடைய செல்வாக்கின் ஆழத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த அனைத்து சிவாஜி ரசிகர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், அதில் நண்பர் சந்திரசேகர் அவர்களின் பங்கு இருக்க வேண்டும், என்ற என் விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டு
பாகம் பதினைந்தை துவக்கி வைக்க முரளி சாருடன் சேர்ந்து அவரை அழைக்கிறேன்.
Last edited by RAGHAVENDRA; 11th February 2015 at 08:23 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th February 2015, 11:33 AM
#3995
400 பக்கங்களை நிறைவு செய்த இந்த பாகம் 14-ன் தொடர்ச்சியாக புதிய திரியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாகம் 15 இன்று தொடங்கப்பட்டுள்ளது.
Please contunue your discussions here.
http://www.mayyam.com/talk/showthrea...anesan-Part-15
அன்புடன்
Bookmarks