-
12th February 2015, 09:30 PM
#801
Junior Member
Platinum Hubber
திரு. பிரதீப் பாலுவுக்கு திரு. மணியரசன் பொன்னாடை போர்த்திய காட்சி.
-
12th February 2015 09:30 PM
# ADS
Circuit advertisement
-
12th February 2015, 09:35 PM
#802
Junior Member
Platinum Hubber
திரு. பி.எஸ். ராஜுவுக்கு திரு. மணியரசன் பொன்னாடை போர்த்தினார்.
-
12th February 2015, 09:36 PM
#803
Junior Member
Platinum Hubber
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் நெடுநாட்களாக வைக்கப்பட்டுள்ள பேனர்.
-
12th February 2015, 09:38 PM
#804
Junior Member
Platinum Hubber
பெங்களூர் , அல்சூர் பகுதியில் உள்ள லாவண்யா அரங்கு
-
12th February 2015, 09:39 PM
#805
Junior Member
Platinum Hubber
பெங்களூர் , அல்சூர் பகுதியில் உள்ள லாவண்யா அரங்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனர்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th February 2015, 10:34 PM
#806
Junior Member
Diamond Hubber

TOMORROW ONWARDS AT SHANMUGHA THEATRE
DAILY 4 SHOWS.
Last edited by ravichandrran; 12th February 2015 at 11:14 PM.
-
12th February 2015, 10:38 PM
#807
Junior Member
Diamond Hubber

Originally Posted by
KALAIVENTHAN
மன்னாதி மன்னன் - 8
‘நன்றிக்கோர் நாயகர்’
மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில், நடிகர் திரு.மோகன்ராம் கூறிய கருத்துக்கள் தலைவரின் நன்றி மறவா குணத்தை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. தனது தாத்தா திரு.ஏ.வி.ராமன் அவர்களுக்கும் தலைவருக்கும் உள்ள நெருக்கத்தை எடுத்துக் கூறினார். அதற்கு அவர் கூறிய உதாரணமே திரு.ஏ.வி.ராமன் அவர்களுக்கு தலைவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை விளக்கும்.
தலைவரின் ‘நான் ஏன் பிறந்தேன்?’ சுய சரிதையில் முதல் அத்தியாயத்தில் தனது தாயார் அன்னை சத்யாவைப் பற்றி கூறியிருப்பார். அதையடுத்து, இரண்டாவது அத்தியாயத்தில் திரு.ஏ.வி.ராமன் அவர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளதை திரு.மோகன்ராம் சுட்டிக் காட்டினார். கண்ணதாசன் பதிப்பகத்தின் சார்பில் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தையும் கையில் எடுத்துக் காட்டினார் அவர்.
திரு.மோகன்ராமின் வீட்டுக்கு ஒரு நாள் தலைவர் சென்றிருக்கிறார். அங்கு மாட்டப்பட்டிருந்த திரு.ஏ.வி.ராமன் படத்தை பார்த்திருக்கிறார். இவருக்கு இந்த படம் போதாது. பெரிய உருவப் படம் வைத்து வணங்க வேண்டும் என்று கூறி அந்த படத்தை தன்னுடன் எடுத்துச் சென்றிருக்கிறார் தலைவர். இரண்டு வாரங்களில் திரு.ஏ.வி.ராமனின் பெரிய உருவப் படத்தை தலைவருடன் வந்த உதவியாளர்கள் தூக்கி வந்து மோகன்ராமின் வீட்டில் சரியான இடத்தில் அவர்களே மாட்டியுள்ளனர். அந்தப் படத்துக்கு மாலை அணிவித்து விட்டு 15 நிமிடம் படத்துக்கு முன் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார் தலைவர்.
அந்த அளவுக்கு திரு.ஏ.வி.ராமன் மீது தலைவர் மரியாதையும் அன்பும் வைத்திருந்ததற்கு காரணம்.... தனது தாய் சத்யா அம்மையாருடன் தான் குடியிருந்த வீட்டை சொந்தமாக, தலைவரே வாங்கிக் கொள்ள காரணமாக இருந்தவர் திரு.ஏ.வி.ராமன். அந்த உருவப்படம் இன்னும் தன் தம்பியின் வீட்டில் இருப்பதாக குறிப்பிட்ட திரு. மோகன் ராம், தான் பிறந்தபோது தனக்கு தலைவர் வெள்ளி பால் கிண்டி கொடுத்ததையும் தனது திருமணத்தின்போது வெள்ளிப் பாத்திரம் கொடுத்ததையும் நன்றியுடன் நினைவு கூர்ந்து, சுருக்கமாக ‘புரட்சித் தலைவர் எனக்கு சேச்சா (சித்தப்பா)’ என்றார்.
தலைவரின் படங்களை மட்டுமே திரையிட்டு வரும் ஸ்ரீ முருகன் தியேட்டர் உரிமையாளரும் சுரோத்தியம்தார் திரு. பரமசிவ முதலியாரின் மகனுமான திரு.பாலசுப்பிரமணியம், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை தங்களது திரையரங்கில் 100க்கும் மேற்பட்ட முறை திரையிட்டதாகவும் ஒவ்வொரு முறையும் வசூலை அள்ளும் என்றும் கூறியதோடு, தலைவர்தான் வசூல் சக்ரவர்த்தி என்பதை பதிவு செய்தார்.
திரு.சின்னப்பா தேவரின் மருமகன் திரு. தியாகராஜன் படங்களில் தலைவரின் ஒத்துழைப்பு, உதவி குறித்து கூறினார்.
‘இதயக்கனி’ விஜயன், ‘தலைவரின் திரைப்படங்களையும் சாதனைகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்’ என்று கூறினார்.
(திரு.பாலசுப்பிரமணியன், திரு. தியாகராஜன், திரு.விஜயன் ஆகியோர் மிகவும் குறைவாகவே பேசினர். மேலும் பேசியிருக்கலாம். அவர்கள் பேசவில்லையா? அல்லது எடிட் செய்யப்பட்டதா? என்று தெரியவில்லை.)
இந்த நிகழ்ச்சி ஒளிப்பதிவின்போது கலந்து கொண்ட சகோதரர் திரு.லோகநாதன் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, இயக்குநர் திரு.ஞானராஜசேகரன், மாற்றுத் திறனாளி ஒருவருக்கு உதவி கோரி போஸ்ட் கார்டில் தலைவருக்கு தான் எழுதி அனுப்பியதையும், யார், என்னவென்றே தெரியாவிட்டாலும் அதற்கு கூட முக்கியத்துவம் கொடுத்து, அந்த மாற்றுத் திறனாளிக்கு தலைவர் தொடர்ந்து உதவித் தொகை அனுப்பியதையும் குறிப்பிட்டு வள்ளலின் பெருமையை எடுத்துரைத்தார்.
திரு.மோகன் ராம் கூறியதில் கவனிக்க வேண்டிய அம்சம் ஒன்று இருந்தது. தனது தாத்தாவுக்கும் தலைவருக்கும் உள்ள நெருக்கத்தை அவர் கூறியது இருக்கட்டும். தலைவர் நன்றிக்கோர் நாயகன் என்பதற்கு அவர் கூறிய ‘நறுக்’ கருத்து சான்று. தலைவர் மிகப் பெரிய மனிதாபிமானி என்றும் அவரது ‘பவர்’ தெரியவேண்டுமானால், அவரால் தூக்கிவிடப்பட்ட கலைவாணர் குடும்பத்தினரையும் கே.ஆர்.ஆர். (நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி) குடும்பத்தினரையும் கேட்டுப் பாருங்கள். வேறு எதுவும் தேவையில்லை என்று உணர்ச்சிகரமாக கூறினார். தலைவர் நன்றிக்கோர் நாயகர் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அசோகனிடமிருந்து மஞ்சுளாவையும் தன்னையும் தப்பிக்க உதவிய லதாவைப் பார்த்து தலைவர் கூறுவார். ‘‘லில்லி, சந்தர்ப்பம் வரட்டும். நிச்சயம் இதற்கு கைமாறு செய்தே தீருவேன்’ என்பார். அவரது தனிப்பட்ட பண்பு நலன்களே அவரின் திரைப்பட பாத்திரங்களிலும் எதிரொலித்தன.
அரசியலிலாகட்டும், திரைப்படத்துறையிலாகட்டும், சொந்த வாழ்க்கையிலாகட்டும், அவர் யாருக்கும் எந்தக் கடனையும் வைக்கவில்லை. நன்றிக் கடன் உட்பட.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Mannadhi Mannan you tube video is now "private" for more than one week? Any idea why?
-
12th February 2015, 11:25 PM
#808
Junior Member
Platinum Hubber
mgr birthday
பெங்களூர் தமிழ் சங்கத்தில் (அல்சூர் ஏரி அருகில் ) கடந்த ஞாயிறு அன்று (08/02/2015) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 98 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பெங்களூர் மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்களுடன், சென்னை, மதுரை, திருவண்ணாமலை மற்றும் பல நகரங்களில் இருந்து பெருவாரியான எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
விழா நிகழ்ச்சிகளை உரிமைக்குரல் பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நற்பணி
அறக்கட்டளை , (பெங்களூர் மாநகரம்) தலைவர் திரு. எம்.ஜி.ஆர். ரவி, மற்றும்
செயலாளர் திரு. ஸ்ரீதரன் , மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆதரவோடு
சிறப்பாக செய்திருந்தனர்.
காலையில், மருத்துவ முகாம், ரத்ததான முகாம் போன்றவை ஏழை, எளியமக்களுக்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர் .மருத்துவர் திரு.முரளி அவர்களின் மேற்பார்வையில் உடல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு ,
உரிய மருந்து மாத்திரைகள் இலவசமாக அளிக்கப்பட்டன.
மாலை 4 மணியளவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் கொள்கைப் பாடல்கள் , காதல் பாடல்கள், தாய்மையை போற்றும் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன.
மாலை 6 மணியளவில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். "மன்னாதி மன்னன் " திரைபடத்தில் உள்ள "ஆடாத மனமும் உண்டோ "
பாடலுக்கு ஏற்ப நாட்டியம் ஆடி மக்களை மகிழ்ச்சி அடையச் செய்தார் .
அதன்பின் பிரபல நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள் குத்துவிளக்கேற்ற
நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் புரட்சி தலைவரின் 98 வது பிறந்த நாள் முன்னிட்டு பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது.
கவிஞர்கள் மதுரை மணி, சேகர், கல்யாண்குமார் , மீனாதேவி போன்றோர் புரட்சி
தலைவரின் பெருமைகள் /அருமைகள் போற்றும் வகையில் கவிநயத்தோடு
கவிதைகள் பாடினர்.
சிறப்பு விருந்தனர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு, பொன்னாடைகள் போர்த்தப்பட்டும் , மாலைகள் அணிவிக்கப்பட்டும், நினைவுபரிசுகள் வழங்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டனர்.
அதே போன்று, கவிஞர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.
பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன .
பிறந்த நாள் கேக் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் அனைவருக்கும்
இலவச உணவு வழங்கப்பட்டது.
மக்கள் வெள்ளத்தால் அரங்கம் நிரம்பி வழிந்தது.
புரட்சி தலைவரின் பாடல்கள் ஒளிபரப்பியபோதும் , கவிஞர்கள் புரட்சி தலைவரைப் புகழ்ந்து பாடும்போதும், பலத்த கரகோஷங்கள் அரங்கில் ஒலித்தது .
வரவேற்புரையை , உரிமைக்குரல் பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நற்பணி
அறக்கட்டளை யின் செயலாளர் திரு. ஸ்ரீதரன் நிகழ்த்தினார்.
விழாவின் சிறப்பு விருந்தனரான பிரபல நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடித்த அனுபவங்கள் பற்றியும்,
மாண்புகள், பெருமைகள், மனிதநேயங்கள் ,கொடைதன்மைகள்,நலத்திட்டங்கள் ,
ஆட்சி செயல்பாடுகள், மருத்துவ மனையில் (5000 மைல்களுக்கு அப்பால் )
அமெரிக்காவில் படுத்துக் கொண்டே வெற்றிபெற்று ஆட்சி யை தக்க வைத்துக்
கொண்ட இமாலய சாதனைகள் பற்றி பேசி ரசிகர்களையும், பக்தர்களையும்
கவர்ந்தார்.
இறுதியில் அறக்கட்டளையின் தலைவர் திரு. எம்.ஜி.ஆர். ரவி அவர்கள்
நன்றியுரை கூறினார்.
ஆர். லோகநாதன்.
.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th February 2015, 11:30 PM
#809
Junior Member
Platinum Hubber
திரு.பெருமாள் மற்றும் திரு. சி.எஸ். குமார். பெங்களூர் தமிழ் சங்க கட்டிட மாடியில்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th February 2015, 11:34 PM
#810
Junior Member
Platinum Hubber
திரு.பெருமாள் மற்றும் திரு. லோகநாதன் . பெங்களூர் தமிழ் சங்க கட்டிட மாடியில்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks