-
13th February 2015, 02:01 PM
#11
Senior Member
Veteran Hubber
உறுதியானது மணிரத்னம் படத்தின் தலைப்பு! - VIKATAN
குழப்பத்திலேயே இருந்த மணிரத்னம் இயக்கிவரும் படத்தின் தலைப்பு உறுதியாகியிருக்கிறது. ”ஓகே கண்மணி” தலைப்பை மாற்றவில்லை இயக்குநர் மணிரத்னம்.
“வாயை மூடி பேசவும்” படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிய மலையாள இளம் நடிகரான துல்கர் சல்மான் ஹீரோவாகவும், ஹீரோயினாகவும் நித்யா மேனன் நடிப்பில் காதல் சார்ந்த கதையை உருவாக்கி வருகிறார் மணிரத்னம். “அலைப்பாயுதே” படத்தின் ரசனைக்கும் மேல் படம் இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தின் தலைப்பில் நீண்ட நாளாக குழப்பம் நிலவியது. முன்னதாக ”ஓகே கண்மணி” என்று தலைப்பு வைக்கப்பட்டது. பின்னர் ஓகே என்பது ஆங்கிலச் சொல் என்பதால் வரிச்சலுகை கிடைக்காது என்று படத்தின் தலைப்பை “ஓ காதல் கண்மணி” என்று மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இப்படத்தை தயாரித்து வரும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் தன்னுடைய சமுக வளைதளத்தில் மணிரத்னம் இயக்கிவரும் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் ”ஓகே கண்மணி” என்று பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் படத்தின் தலைப்பு எது என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தீர்வாக படத் தலைப்பின் வடிவமைப்பை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் மணிரத்னம்.
மணிரத்னத்தின் ஃபேவரைட் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஒளிப்பதிவை பி.சி.ஸ்ரீராம் கவனிக்க விரைவில் படம் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
13th February 2015 02:01 PM
# ADS
Circuit advertisement
Bookmarks