-
3rd March 2015, 01:30 PM
#11
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகத்தின் சாந்தி தியேட்டர் இடிக்கபடுவது லட்சக்கணக்கான அவரின் ரசிகர்களுக்கு வருத்தமான செய்தியாக இருந்தாலும் அதே இடத்தில் உலக தரம் வாய்ந்த வணிக வளாகம் கட்டப்படுவது மகிழ்ச்சி .இந்த நேரத்தில் நடிகர்திலகத்தின் ரசிகனாக என் மனதில் எழுந்த சில ஆசைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்:
காட்டப்படும் புதிய வணிக வளாகத்திற்கு "சிவாஜி மால் " அல்லது "சிவாஜிகணேசன் மால்" என்று பெயர் சூட்ட வேண்டும் (பெங்களூரில் கருடா மால் ,எஸ்டீம் மால் ,மந்த்ரி மால் ,கோபாலன் மால் என்று இருப்பதை போல )
திரை அரங்கங்கள் சாந்தி 1,சாந்தி 2 என்று பெயரிடப்படவேண்டும்
வளாகத்திற்குள் நுழைந்த உடனே எதிரில் நடிகர்திலகத்தின் ஆளுயர சிலை பார்வையாளர்களை கவரும் வண்ணம் அழகிய வேலைப்பாடுகளுடன் நிறுவப்படவேண்டும் (வளாகத்தின் வெளியே அல்ல )
நடிகர்திலகத்தின் மணிமண்டபம் தமிழக அரசால் காட்டப்படும் என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லை அதனால் முடிந்தால் வளாகத்தின் உள்ளேயே ஒரு சிறு அரங்கம் கட்டப்பட்டு நடிகர்திலகம் சம்பந்தப்பட்ட ஒரு மியுசியம் அமைய வேண்டும்
மேற்கண்ட விஷயங்களில் நமது திரி நண்பர்களின் மேலான கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
நடிகர்திலகத்தின் குடும்பத்தார் மனது வைத்தால் நிச்சயம் இதை நிறைவேற்றலாம் செய்வார்களா ?
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
3rd March 2015 01:30 PM
# ADS
Circuit advertisement
Bookmarks