-
8th March 2015, 03:28 PM
#2161
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
kaliaperumal vinayagam
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
கோபால்,
நண்பர் அசோகனைப் பற்றிய என் கருத்துதான் உங்களுக்கும் என்று கூறியதற்கு நன்றி.
இவ்வளவு திரையரங்குகளில் இவ்வளவு ஓட்டம் என்பதும் கூட இன்றைய தலைமுறைக்கு ஒரு புதிய செய்திதான். அதை எல்லா படத்துக்கும் போட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. வசந்த மாளிகை செய்திக்கு பக்கத்திலேயே இடம் பெற்றிருந்த மற்ற படங்களுக்கும் (அன்பே வா உட்பட) ஓட்ட விவரங்கள் இல்லை. அதை ஒரு பத்திரிகையின் ஆசிரியர் குழுதான் முடிவு செய்யும். அதே நேரம், இடைச் செருகலாக யாரும் எதையும் செய்ய முடியாது. அப்படியே, ஆசிரியர் ஓ.கே.செய்த இறுதி வடிவத்துக்கு பின் ரகசியமாக யாரும் திருத்தங்கள் செய்தால் மறுநாள் காலை வெட்ட வெளிச்சமாகி விடாதா?
மக்கள் திலகத்தை பற்றி பத்திரிகையில் வரக் கூடாது என்றெல்லாம் கூற முடியாது. அவரை பற்றிய செய்திகளுக்கு எவ்வளவு வரவேற்பு கடிதங்கள் வருகின்றன என்று அங்குள்ளவர்களைக் கேட்டால் தெரியும். இப்போது கூட 15ம் தேதி எங்க வீட்டுப் பிள்ளை பொன் விழா பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. திருமதி. சரோஜாதேவி, ராஜ ஸ்ரீ, சச்சு, பி.சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி, உட்பட வி.ஐ.பி.க்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள். இதுபற்றிய செய்தி நாளிதழில் (இந்து அல்ல, வேறொரு பத்திரிகையில்) வெளியாகி அது மக்கள் திலகம் திரியில் பதிவிடப்பட்டுள்ளது. விழா பிரம்மாண்டமாக நடந்து விஐபிக்கள் கலந்து கொண்டு பேசும்போது எல்லா பத்திரிகையிலும் பெரிதாக போடுவார்கள். அதற்கு என்ன செய்ய முடியும்?
இதையெல்லாம் விவரம் தெரியாதவர்கள் அல்லது தெரிந்தும் தெரியாதது போல இருப்பவர்கள் யாராவது குற்றம்சாட்டி, தாங்களே நீதிபதிகளாகி தீர்ப்பும் அளிப்பார்களானால் புரிந்து கொள்ள முடியும். விவரம் அறிந்த நீங்கள் குற்றம் சாட்டுவது வியப்பளிக்கிறது.
உங்களின் புதிய பொறுப்புக்கும் வாழ்த்துக்கள். பீச்சுக்குப் போய் காத்தாட பேசிவிட்டு அப்படியே அருகில் ரத்னா கபே இருக்கிறதே போகலாம் என்று நினைத்தேன். மதுராவுக்கு போகலாம் என்றால் எனக்கு ஆட்சேபம் இல்லை. வள்ளல் வழியில் வந்த எங்களுக்கு ஏன் கஞ்சத்தனம்? செலவு என்னுடையதுதான். கவலை வேண்டாம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
8th March 2015 03:28 PM
# ADS
Circuit advertisement
-
8th March 2015, 05:11 PM
#2162
Junior Member
Seasoned Hubber
கோபால்,
வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி காரணமாக எப்போதுமே அபத்த எல்லையை மீறாமல், நியாயத்தை விளக்கும்போது அதை புரியவைக்க முற்படும்போது அளிக்கும் பதில்களில் சில சமயம் (அதுவும் உங்கள் கருத்துதான் என் கருத்து அல்ல) தானே மீறுகிறேன். நன்றி.
அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கோபால், இப்போதுதான் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தைப் பற்றிய உங்கள் விமர்சனத்தை முழுமையாக படித்தேன். நன்றாக உழைத்து, அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள். எல்லாம் நல்லாத்தான் இருக்கு. சிக்கில் சண்முக சுந்தரம் மாதிரி பொசுக்.. பொசுக்குன்னு கோபம்தான்.... இருந்தாலும் ‘குறையில்லாத மனுஷன் உலகத்தில ஏது?’ என்று அந்தப் படத்தின் வசனமும் நினைவு வருகிறது. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
Last edited by KALAIVENTHAN; 8th March 2015 at 09:02 PM.
-
8th March 2015, 07:47 PM
#2163
Junior Member
Seasoned Hubber

ஒரு சாண் வயிரை வளர்ப்பவர் உயிரை....
இலங்கை கடல் பகுதிக்குள் எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வதில் தவறில்லை. இதை சட்டம் அனுமதிக்கிறது என்று அதிர்ச்சி குண்டை வீசியிருக்கிறார் இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே.
என்ன அநியாயம்? மனித உயிர்களை எவ்வளவு துச்சமாக நினைக்கிறார் இலங்கை பிரதமர்? இத்தனைக்கும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கையில் இருக்கும்போது அவரது இந்த கருத்து வெளியாகியிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியும் 13ம் தேதி இலங்கை செல்ல உள்ள நிலையில், இவ்வளவு துணிச்சலாக ரனில் விக்கிரமசிங்கே கூறுகிறார் என்றால் இந்தியாவை எவ்வளவு பலவீனமாக நினைக்கிறார் அவர்.
ரனிலை சுஷ்மா சுவராஜ் நேற்று சந்தித்து பேசியபோது கூட இந்தியாவின் தரப்பில் கடும் கண்டனத்தை தெரிவிக்கவில்லை. மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என்று செல்லமாக அறிவுரை கூறியிருக்கிறார். ராஜபக்சே இலங்கை அதிபராக இருந்தபோது, தமிழர்களுக்காகவும் தமிழக மீனவர் நலன் குறித்தும் வாய்கிழிய பேசியவர்தான் ரனில். இப்போது எப்படி மாறிவிட்டார்?
இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இத்தாலி கடற்படை வீரர்களை இந்தியா கைது செய்தது ஏன்? எங்களிடம் எதிர்பார்க்கும் கருணையை இத்தாலி வீரர்களிடம் காட்டியிருக்கலாமே? என்று புரியாமல் பேசுகிறார் ரனில். இந்திய மீனவர்களை நமது எல்லைக்குள்ளேயே சுட்டுக் கொன்றும் கூட, இத்தாலி வீரர்களை இந்தியா சுட்டுக் கொன்று விடவில்லை. கைதுதான் செய்தது. அப்படியாவது, எங்கள் நாட்டுக்குள் நுழையும் தமிழக மீனவர்களை கைது செய்வோம் என்று ரனில் சொல்லியிருந்தாலாவது அவரது கருத்தை ஓரளவு புரிந்து கொள்ளலாம். சுட்டால் தவறில்லை என்பது ஆணவத்தின் உச்சமல்லவா?
படகோட்டி, திரைப்படத்தில் மீனவர்களின் துயர நிலை குறித்து தரைமேல் பிறக்க வைத்தான் பாடலில்,
ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்,
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
என்று தலைவர் பாடுவார். எவ்வளவு சத்தியமான உண்மை?
ரனில் விக்கிரமசிங்கே ஏதோ தெரியாமல் சொல்லி விட்டார் என்று கருத இடமில்லை. தனது அரசியல் தளத்தை வலுப்படுத்த இப்படி கூறியிருக்கலாம்.
தன்னை சிலுவையில் அறைந்து உயிரை மாய்த்தவர்களுக்காக இரங்கி ஏசுபிரான் இப்படி வேண்டினார்.
பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே, என்ன செய்கிறோம் என்று அறியாமல் செய்யும் இவர்களை மன்னியும்
நாம் இப்படி வேண்டிக் கொள்ள வேண்டியதுதான்....
பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே, என்ன செய்கிறோம் என்று அறிந்தே செய்யும் இவர்களையும் மன்னியும்
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th March 2015, 05:59 AM
#2164
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு கலைவேந்தனின் பதில்கள் மிகவும் அருமை .மறு வெளியீடுகளில் மக்கள் திலகத்தின்
நவரத்தினம் - பட்டிக்காட்டு பொன்னையா படங்கள் கோவையில் நல்ல வசூலுடன் ஓடுவது மூலம் மக்கள் திலகத்தின் படங்கள் என்றென்றுமே அமுத சுரபி என்பதை விநியோகஸ்தர்களும் ,திரை அரங்கு உரிமையாளர்களும் கூறுவதை காண முடிகிறது .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th March 2015, 06:12 AM
#2165
Junior Member
Platinum Hubber
]
15.3.2015 அன்று எங்கவீட்டு பிள்ளை படத்தின் பொன் விழாவை கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் , விழா வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்
-
9th March 2015, 06:38 AM
#2166
Junior Member
Platinum Hubber
எங்கவீட்டு பிள்ளை - 50
1. நாகி ரெட்டியின் முதல் வண்ணப்படம் .
2. மக்கள் திலகம் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்த முதல் வண்ணப்படம் .
3. முந்தைய தென்னிந்திய படங்களின் வசூலை முறியடித்த படம் .
4. சென்னை நகரில் மூன்று அரங்கில் தினசரி மூன்று காட்சிகளுடன் வெள்ளி விழா ஓடிய முதல் படம் .
5. 7 திரை அரங்கில் வெள்ளி விழா ஓடிய படம் .
6. 1978 வரை இந்த சாதனையை தக்க வைத்து கொண்ட படம் .
7. எம்ஜிஆரின் இரு மாறு பட்ட சிறந்த நடிப்பு - சிறந்த கதை - சிறந்த இயக்கம் - இனிய பாடல்கள் என்று
பல பெருமைகளுடன் வந்த படம் .
8. எம்ஜிஆர் என்ற ஒரு தனி மனிதரின் முழுமையான எம்ஜிஆர் படம் .
9. உலக விருதுகள் - ஆஸ்கார் விருது - - இவற்றுக்கெல்லாம் மேலான மக்கள் வழங்கிய விருது ''எம்ஜிஆர் எங்க வீட்டு பிள்ளை ''- இது ஒன்று போதுமே .
10.1947-1977 30 ஆண்டுகள் திரை உலகில் நடிக மன்னனராக - வசூல் மன்னனாக வலம் வந்த எங்க வீட்டு பிள்ளை .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th March 2015, 07:04 AM
#2167
Junior Member
Platinum Hubber
நல்ல நேரம் -10.3.1972
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திரை உலக வெற்றிகளிலும் , அரசியல் ஆளுமைகளிலும் கிடைத்த மாபெரும் வெற்றியின் அடையாளம் 1972.
புரட்சி நடிகர் - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற பெருமை கிடைத்தது -1972
பாரத் பட்டம் கிடைத்து விழா நடந்த ஆண்டு - 1972
எம்ஜிஆர் ரசிகர்கள் - எம்ஜிஆர் மன்றங்கள் விஸ்வரூபம் எடுத்த ஆண்டு - 1972
எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் சக்தி - உலகம் அறிந்த ஆண்டு -1972
சினிமாவிலும் - அரசியலிலும் எம்ஜிஆர் ஹீரோ என்பதை நிரூபித்த ஆண்டு - 1972
வெற்றி என்ற தாரக மந்திரத்தோடு சங்கே முழங்கு
எங்கும் எதிலும் என்றும் எம்ஜிஆர் நல்ல நேரம்
ரசிகர்களை திருப்தி செய்த ராமன் தேடிய சீதை.
வாழ்வியல் தத்துவம் உணர்த்திய நான் ஏன் பிறந்தேன்
மக்களுக்காக வாழ்ந்த அன்னமிட்டகை
கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் வாழும் இதய வீணை.
மக்கள் திலகத்தின் மகத்தான பெருமைகள் உணர்த்திய ஆண்டு -1972
மக்கள் திலகம் எம்ஜிஆர் வரலாற்றில் என்றுமே ''நல்ல நேரம் ''
-
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th March 2015, 07:16 AM
#2168
Junior Member
Platinum Hubber
1213418]

very nice still
-
9th March 2015, 11:19 AM
#2169
Junior Member
Veteran Hubber
திரு. கலைவேந்தன் சார். தலைவர் ஒரு திரைப்படத்தில் சொல்வார்.என் எதிரிகூட எனக்கு சமமாய் இல்லை என்றால் மோத மாட்டேன் என்பார். அது எந்த திரைப்படம்?
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
9th March 2015, 12:09 PM
#2170
Junior Member
Veteran Hubber
Dear Mr. Tenali Rajan,
I Just read the previous postings of our other friends and understood that you had undergone a surgery. Trust you are doing well.
Wishing you the best of health and cheer always.
Regards
RKS
Bookmarks