-
13th March 2015, 09:53 PM
#2261
Junior Member
Diamond Hubber

SOON AT COIMBATORE
-
13th March 2015 09:53 PM
# ADS
Circuit advertisement
-
13th March 2015, 10:04 PM
#2262
Junior Member
Diamond Hubber
Tdy 11 pm in meha tv - chakravarthi thirumagal.
-
13th March 2015, 11:29 PM
#2263
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th March 2015, 07:12 AM
#2264
Junior Member
Seasoned Hubber
dinaethal 14-03-15
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th March 2015, 07:13 AM
#2265
Junior Member
Seasoned Hubber
dinaethal 12-03-2015
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th March 2015, 07:14 AM
#2266
Junior Member
Seasoned Hubber
dinaethal 13-03-2015
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th March 2015, 07:14 AM
#2267
Junior Member
Seasoned Hubber
dinaethal 14-03-2015
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th March 2015, 04:01 PM
#2268
Junior Member
Seasoned Hubber
நண்பர் திரு. முரளி அவர்களுக்கு, தங்களின் மேலான பார்வைக்காக...
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி மக்கள் திலகம் திரி பாகம் 10-ல் பக்கம் 272ல் பதிவு எண் 2711-ல் திரு.எஸ்.வி. போட்ட பதிவில் திவ்யா பிலிம்ஸ் சார்பில் தினந்தந்தி நாளிதழில் கொடுக்கப்பட்ட விளம்பரம் வெளியாகியுள்ளது. அதில் 2 தியேட்டர்களில் படம் ஓடுவதாக தகவல் உள்ளது. அதற்கான இணையதள இணைப்பு இது.
http://www.mayyam.com/talk/showthread.php?11061-Makkal-thilagam-mgr-part-10/page272
ஆகஸ்ட் 30ம் தேதி மாலை மலர் நாளிதழில் வெளியான செய்தியை அன்றைய தினம் திரு.எஸ்.வி பதிவிட்டுள்ளார். இதில் இரண்டு தியேட்டர்களில் படம் ஓடுவதாக செய்தி உள்ளது. அந்த தேதியில் (30 ஆகஸ்ட்) படம் வெளியான மார்ச் 14 முதல் கணக்கிட்டால் இரண்டு தியேட்டரில் 170வது நாள். இது மக்கள் திலகம் திரி பாகம் 10-ல் 278ம் பக்கம் வந்துள்ளது. பதிவு எண். 2778. அதற்கு அடுத்த பதிவிலேயே (2779) திரு.சொக்கலிங்கம் அவர்கள் அப்போது முதல்வராக இருந்த செல்வி.ஜெயலலிதா அவர்களை சந்தித்து வெள்ளிவிழாவுக்கான அழைப்பிதழை வழங்கும் படத்தையும் திரு.எஸ்.வி.பதிவிட்டுள்ளார். அந்த படத்தில் திரு.பந்துலு அவர்களின் மகள் விஜயலட்சுமியும் உள்ளார். அதற்கான இணையதள இணைப்பு கீழே.
http://www.mayyam.com/talk/showthread.php?11061-Makkal-thilagam-mgr-part-10/page278
ஆகஸ்ட் 31ம் தேதி சத்யம் தியேட்டர் டிக்கட் புக்கிங் நிலவரத்தை திரு. ரூப்குமார் சார் பதிவிட்டுள்ளார். இது மக்கள் திலகம் திரி பாகம் 10-ல் 284வது பக்கத்தில் வந்துள்ளது. பதிவு எண். 2840. அன்றைய தேதியில் படம் வந்து 171வது நாள்.
Sathyam Serene screen booking status for today 9.30 morning show of Puratchi Thalaivar MGR's Ayirathil Oruvan
http://www.mayyam.com/talk/showthread.php?11061-Makkal-thilagam-mgr-part-10/page284
திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்கள் இந்து தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் படம் இரண்டு தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடும் தகவலை தெரிவித்துள்ளார். அதன் ஒரு பகுதி...
அதன் பின்னணியை விவரிக்கிறார் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட திரைப்பட விநியோகஸ்தர் ஜி.சொக்கலிங்கம். அவர், தி இந்து-விடம் கூறியதாவது:
பொக்கிஷம்
1965-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து வெளியான ஆயிரத்தில் ஒருவன், 35எம்எம், மோனோ சவுன்ட் தொழில்நுட்பத்தில் வெளியான செல்லுலாய்ட் படைப்பாகும்.
அதனை இக்காலத் தொழில்நுட்பத்துக்கேற்ப மாற்றி வெளியிட முடிவு செய்தோம். திரையரங்குகள் தற்போது “கியூப் பார்மட்” என்னும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால், பழுதடைந்திருந்த அப்படத்தின் நெகடிவ் சுருள்களை அதற்கேற்ப சுத்தம் செய்து டிடிஎஸ், 5.1 சரவுண்ட், சினிமாஸ்கோப் உள்ளிட்ட பல நவீன மாற்றங்களுடன் வடிவமைத்தோம். இதற்கு 2 ஆண்டுகள் பிடித்தது. இது பொக்கிஷத்தை பாதுகாக்கும் முயற்சியாகும்.
கடந்த மார்ச் 14-ம் தேதியன்று தமிழத்தில் 122 திரையரங்குகளில் முதல்வரின் வாழ்த்துக்களுடன் வெளியிடப்பட்ட அந்த வெற்றிச்சித்திரம், சென்னை ஆல்பட் திரையரங்கில் 175-வது நாளை கொண்டாடுகிறது. சத்யம் திரையரங்குகளில் 175-வது நாளை நெருங்கிவிட்டது.
.........
ஒரே நாளில் படம் வெளியாகியிருந்தாலும் திரு.சொக்கலிங்கத்தின் பேட்டியின் மூலம் ஆல்பட்டுக்கும் சத்யம் சினிமாவுக்கும் வெள்ளி விழா நாட்களில் வேறுபாடு இருப்பது தெரியும். காரணம்... வியாழக்கிழமைகளில் சத்யத்தில் ஆங்கிலப் படம் போடுவார்கள். அங்கு ஓடிய எல்லா படத்துக்கும் அப்படித்தான்.
திரு.சொக்கலிங்கம் பேட்டியின் முழு விவரத்துக்கான இணைப்பு:
http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/49-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%A E%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D% E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%A E%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%A E%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%A F%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%A F%8D/article6372156.ece
வெள்ளி விழா கொண்டாட்ட செய்திகள் பற்றி நேற்று இணையதள இணைப்புகள் கொடுத்திருந்தேன். வெள்ளி விழாவுக்கு முதல்வரே வாழ்த்து செய்தி அனுப்பி, அந்த செய்தி விழா மேடையில் படிக்கப்பட்ட தகவலும் அதில் வெளியாகியுள்ளது.
இப்போதும் தகவல்கள் அதற்கான இணைப்புகள் அளித்துள்ளேன். திரு.எஸ்.வி. வேண்டுமென்றே தவறான தகவல்கள் அளிக்கக் கூடியவர் அல்ல. அப்படி தவறான தகவல்களை கூறி புரட்சித் தலைவருக்கு புகழ் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த செய்திகளை பார்த்து கூறியிருப்பார் என்றும் நீங்களும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்றும் கருதுகிறேன். ஆல்பட் காம்ப்ளக்சில் படம் மொத்தம் 190 நாட்கள் ஓடியது என்ற தகவலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த விளம்பரத்தை தேட வேண்டும். நண்பர்கள் பதிவிடுவார்கள் என்று கருதுகிறேன். நன்றி.
திரு.ஆர்.கே.எஸ்.
உங்கள் பதிலை படித்து சிரித்தேன். இப்போதெல்லாம் நீங்கள் உணர்ச்சி வசப்படுவது மிகவும் குறைந்து நகைச்சுவையோடு அணுகுகிறீர்கள். பாராட்டுக்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பின்குறிப்பு: இரண்டாவது பாராவில், ஆகஸ்ட் 30ம் தேதி என்று தொடங்கும் பாராவில் 2வது வரியில்... ‘அந்த தேதியில் (30 ஆகஸ்ட்)’.. என்று இருக்க வேண்டும். ஆனால், தவறுதலாக (31 ஆகஸ்ட்) என்று முதலில் போட்டு விட்டேன். பின்னர் படித்துப் பார்த்தபோது தவறு தெரிந்ததால் அதை சரி செய்து விட்டேன். அதற்காகத்தான் இப்போது மறுபடியும் எடிட் செய்தேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
Last edited by KALAIVENTHAN; 14th March 2015 at 05:36 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th March 2015, 04:39 PM
#2269
Junior Member
Seasoned Hubber
எங்க வீட்டு பிள்ளை -பொன்விழா - என் நினைவலைகள் . 14.1.1965
நம் இதய தெய்வம் மக்கள் திலகத்தின் ஆசான் பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சியில் நான் பிறந்து வளர்ந்து படித்து கொண்டிருந்த போது 1965 பொங்கல் அன்று ராஜா திரை அரங்கில் எங்க வீட்டு பிள்ளை படத்தை என்னுடய தாயாருடன் சென்று பார்த்தேன் .கண்களும் காவடி பாடல்
காட்சியில் ''உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும் '' என்ற வரிகள் வரும் நேரத்தில் மக்கள் திலகத்தை க்ளோஸ் அப் காட்சியில் காட்டிய போது ரசிகர்களின் ஆரவாரம் , விசில் காதை பிளந்தது .
மக்கள் திலகம் வீட்டை விட்டு வெளியேறும் நேரத்தில் தனது பெற்றோர்களின் படம் முன் ஜாடையால் பேசும் காட்சி அருமை .குழந்தை ஷகீலா
காசுக்கு என்னை செய்வீர்கள் என்று கேட்கும் நேரத்தில் எம்ஜிஆர் முழிக்கும் இடம் அபாரம் . இளங்கோ எம்ஜிஆர் ஓட்டலில் நடத்தும் தர்பார் சூப்பர் .பணம் கொடுக்காமல் வெளியேறி தனது தவறை உணருமிடத்தில் யதார்த்தமான நடிப்பு .
நான் ஆணையிட்டால் - பாடலில் எம்ஜிஆரின் சுறுசுறுப்பான நடிப்பை பார்த்த போது என் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் ஓர் உணர்வு .
மக்கள் திலகம் எம்ஜிஆர் உயில் பிரதியை வாங்கி படிக்கும் காட்சியில் அவரது முகத்தில் ஏற்படும் மாற்றம் - நடிப்பு பிரமாதம் .மலருக்கு தென்றல்
பாடல் காட்சியில் எம்ஜிஆரை காட்டும் விதம் அருமையான ஒளிப்பதிவு .
எம்ஜிஆர் நடித்த படங்களிலே மிக அருமையான தலைப்பில் வந்த படம் எங்க வீட்டு பிள்ளை . அதற்கேற்றார் போல் தமிழ் நாட்டில் எல்லோரும் அவரை எங்க வீட்டு பிள்ளையாக கருதி தமிழக முதல்வராக்கி பெருமை சேர்த்தார்கள் . உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத புகழ அல்லவா ?
சென்னை மாநகரில் முதன் முதலில் தினசரி மூன்று காட்சிகளுடன் 100, நாட்கள் கடந்து மூன்று அரங்கில் வெள்ளி விழா கண்ட முதல் படம் .
காங்கிரஸ் தலைவர் ஒருவரின் சொந்த அரங்கான தஞ்சை -யாகப்பா அரங்கில் வெள்ளி விழா கண்ட ஒரே படம் .திருச்சி - ஜூபிடரில் 236 நாட்கள்
ஓடியது மறு வெளியீட்டில் 85 அரங்கில் 50 நாட்கள் மேல் ஓடியது . இந்த சாதனையை உரிமைக்குரல் முறியடித்து .1965ல் கிடைத்த பிரமாண்ட வெற்றி - 1977 வரை யாராலும் நெருங்க முடியாமல் தனி சரித்திரமாக நிலைத்து விட்டது .
எங்க வீட்டு பிள்ளை வெற்றி விழாவில் பேசிய அண்ணா கூறியது
''என் தம்பி எம்ஜிஆர் எந்த துறையில் ஈடு பட்டாலும் அதில் தனி திறமையை நிரூபிப்பார் . அவர் சொன்னது போலவே நடந்தது . எங்க வீட்டு பிள்ளை - திரைப்படம் மட்டும் அல்ல . கோடிகணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் என்றென்றும் வாழும் எங்க வீட்டு பிள்ளை . கலை உலகின்
ஒளிவிளக்கு . ஏழைகளின் இதய தெய்வம் .
பொன்விழா கொண்டாடும் இந்த நேரத்தில் எங்க வீட்டு பிள்ளை - நினைவலைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவதில் மிக்க மகிழ்ச்சி .
Last edited by Varadakumar Sundaraman; 14th March 2015 at 04:53 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th March 2015, 04:50 PM
#2270
Junior Member
Seasoned Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் வாழ்ந்த காலத்திலயே அவருடைய திரைப்பட வெற்றிகளை ஜீரணிக்க முடியாதவர்கள் செய்த விமர்சனங்கள் மற்றும் கிண்டல்கள் நாம் அறியாதது அல்ல .திரு இராம .வீரப்பன் கூறியதை போல் எம்ஜிஆருக்கு என்றுமே தோல்வி படம் கிடையாது . சில படங்கள் வெற்றி அடையாமல் போகலாம் .மறு வெளியீடுகளில் அந்த படங்கள் வசூலில் சரி செய்து விடும் .
நவரத்தினம் - பட்டிக்காட்டு பொன்னையா போன்ற படங்கள் கடந்த 30 ஆண்டுகளாக பல முறை மறு வெளியீடுகளில் வந்து வெற்றி படமாக திகழ்வது - எம்ஜிஆருக்கு மட்டும்தான் சாத்தியம் .
Bookmarks