Page 318 of 397 FirstFirst ... 218268308316317318319320328368 ... LastLast
Results 3,171 to 3,180 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3171
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நிலாப் பாடல் 49: "ஓ வெண்ணிலாவே வா ஓடி வா"
    ----------------------------------------------------------------------------

    அடுத்த ஓ வெண்ணிலா(வே) பாடல். இதன் படம் வெற்றி அடையாமல் போயிருந்திருக்கலாம். ஆனால் இதன் பாடல்களுக்காக இன்னும் நினைவில் உள்ளது. வைரமுத்துவின் கதை, இளையராஜாவின் சொந்த படம் என்று நினைக்கிறேன். இதுவும் காதல் பாடல்தான். எதிர்பாராதது, மூன்று முடிச்சு, போன்று காதலுக்குள் முரணான உறவு முறைகளை நுழைத்த படம். புதிய முகங்கள் நடித்திருக்கிறார்கள். நாயகன் பெயர் பாலச்சந்தர் என்று போட்டிருக்கிறது. நாயகி அஷ்வினி பின்னாட்களில் பார்த்திபனின் பொண்டாட்டி தேவை படத்தின் மூலம் பெயர் பெற்று பல படங்களில் நடித்தார். படத்தை இயக்கியவர் பாலகிருஷ்ணன்(?) பாடலை எழுதியவர் கங்கை அமரன் என்பதை ராஜேஷ் உறுதிப் படுத்துவார். பாடியவர்கள் S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி.

    பாடல் வரிகள்:
    ------------------------
    ஆண் : ஓ வெண்ணிலாவே வா ஓடி வா
    ஓ வெண்ணிலாவே வா ஓடி வா

    பெண் : ஓ வெண்ணிலாவே வா ஓடி வா

    {ஆண் : நாளை இந்த வேளை எமை நீ காண வா ஓ
    பால் போல வா

    பெண்குழு : ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...ஆ..} (ஓவர்லாப்)

    {பெண் : நாளை இந்த வேளை எமை நீ காண வா ஓ
    பால் போல வா

    பெண்குழு : ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...ஆ..} (ஓவர்லாப்)

    ஆண் : ஓ வெண்ணிலாவே

    பெண் : வா ஓடி வா

    (இசை) சரணம் - 1

    பெண் : நிலவின் ஜாடை தெரியும் ஓடை
    அழகே நீயும் நீராடு ஹோ

    ஆண் : மலர்கள் சேர்ந்து மாலை கோர்த்து
    அடடா நீயும் பூச்சூடு

    பெண் : கதைகள் பேசு கவிகள் பேசு
    விடியும் வரையில் நீ பாடு

    ஆண் : நிலவே நீயும் தூங்காதே ஹோய்

    {ஆண் : நாளை இந்த வேளை எமை நீ காண வா
    பால் போல வா
    பெண்குழு : ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...ஆ..} (ஓவர்லாப்)

    பெண் : ஓ வெண்ணிலாவே வா ஓடிவா

    ஆண் : ஓ வெண்ணிலாவே வா ஓடி வா

    {பெண் : நாளை இந்த வேளை எமை நீ காண வா ஓ
    பால் போல வா

    பெண்குழு : ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...ஆ..} (ஓவர்லாப்)

    {பெண் : லாலி லாலி லாலி லாலி லா
    பெண்குழு : லாலி லாலி லாலி } (ஓவர்லாப்)

    {பெண் : லாலி லாலி லாலி லாலி லா
    பெண்குழு : லாலி லாலி லாலி } (ஓவர்லாப்)

    {பெண் : லாலி லல்லாலி லாலி லல்லாலி லா
    பெண்குழு : லாலி லாலி லாலி } (ஓவர்லாப்)

    {பெண் : லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லா
    லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லா
    லாலி லல்லேல லாலி லல்லேல ஓ

    பெண்குழு : லா...ஆ.. ஆ..ஆ.. ஆ..ஆ.. ஆ..ஆ..
    ஆஆஆ ஆ...ஆ.. ஆஆஆஆ...ஆ...} (ஓவர்லாப்)

    (இசை) சரணம் - 2

    ஆண் : இதமாய்ச் சாய்ந்து இமைகள் மூடு
    இது தான் முடிவு வேறேது ஹோய்

    பெண் : இறக்கும் போதும் இதுவே போதும்
    இனிமேல் பிறவி வாராது

    ஆண் : காதல் மாலை சூடும் வேளை
    அழுகை ஏனோ கூடாது

    பெண் : நிலவே நீயும் தூங்காதே ஹோய்

    {பெண் : நாளை இந்த வேளை எமை நீ காண வா ஓ
    பால் போல வா

    பெண்குழு : ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...ஆ..} (ஓவர்லாப்)

    இருவர் : ஓ வெண்ணிலாவே வா ஓடிவா
    ஓ வெண்ணிலாவே வா ஓடி வா

    நாளை இந்த வேளை எமை நீ காண வா ஓ
    பால் போல வா

    ஆனந்தம் கொண்டு நீங்கள் இன்று போல் வாழ்கவே
    ஆயிரம் பௌர்ணமிகள் கண்டு தான் வாழ்கவே
    ஆதியில் சேர்ந்த காதல் ஆனந்தம் காணவே
    ஆகாயம் உள்ள மட்டும் அழியாமல் வாழ்கவே


    காணொளி காட்சி:
    ---------------------------


    பாட்டைக் கேட்டுவிட்டு ஆனந்த கும்மி கொட்டுங்கள்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3172
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //பாடலை எழுதியவர் கங்கை அமரன் என்பதை ராஜேஷ் உறுதிப் படுத்துவார்.//

    ஆனந்தக் கும்மி படம் பார்த்ததில்லை பாடல்கள் கேட்டிருக்கிறேன் ஃபேமஸ் பாட்டு ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா..
    இந்தப் பாட்டு நினைவில் வரவில்லை..வீட் போய் பார்க்கணும்.. தாங்க்ஸ்

  5. Likes kalnayak liked this post
  6. #3173
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சந்திரன் பாடல் 50: "வதனமே சந்திர பிம்பமோ?"
    -----------------------------------------------------------------------

    நிலவை இதுவரை நிலவு, வெண்ணிலவு, வெள்ளி நிலவு, தங்க நிலவு, மஞ்சள் நிலவு, வானத்து நிலவு என்று கவிஞர்கள் பாடி காதல் பாடல்கள் எழுதி பார்த்தோம். இதை மாற்றுவார்களா என்று பார்த்தால் அதே நிலவை பல பாடல்களில் சந்திரன் என்று அழைத்தும் பாடியிருக்கிறார்கள். தொடர்ந்து சில சந்திரன் பாடல்களைப் பார்த்துவிட்டு நிலவு பாடல்களுக்கும், மதி, அம்புலி பாடல்களுக்கும் போகலாம்.

    50வது பாடல் வித்தியாசமாக எழுத நினைத்தேன். கிடைத்தார் M.K. தியாகராஜ பாகவதர். அதுவும் சந்திரன் பாட்டை பாடி. விடுவோமா?

    பாபநாசம் சிவன் பாடல் எழுத தமிழ் இசை சாம்ராட் G. ராமநாதன் இசையில் M.K. தியாகராஜ பாகவதர் நடித்து பாடிய பாடல். உடன் நடித்தவர் நடிகை எஸ். ஜெயலக்ஷ்மி. 1943-ல் வெளிவந்த படமாம். ராகவேந்திரா போன்றவர்கள் அதிக விவரம் கொடுக்கக் கூடும். பாடல் நன்றாகவே உள்ளது. எப்பொழுதிருந்து காதலை சொல்ல சந்திரனை அழைத்தார்கள் என்ற விவரம் சி.க. சொல்லக் கூடும்.

    பாட்டு வரிகள்:
    -----------------------

    வதனமே சந்திர பிம்பமோ மலர்ந்த சரோஜமோ?
    வதனமே சந்திர பிம்பமோ மலர்ந்த சரோஜமோ?
    வதனமே சந்திர பிம்பமோ?

    மாறன் அம்போ நீள் விழியோ?
    மாறன் அம்போ நீள் விழியோ மதுர கானமோ?
    மாறன் அம்போ நீள் விழியோ மதுர கானமோ?

    வதனமே சந்திர பிம்பமோ மலர்ந்த சரோஜமோ?
    வதனமே சந்திர பிம்பமோ?

    மின்னும் மோகனக் கொடியிடையாள் ஆ..
    மின்னும் மோகனக் கொடியிடையாள்
    அன்னமோ மடப் பிடி நடையாள்
    மின்னும் மோகனக் கொடியிடையாள்
    அன்னமோ மடப் பிடி நடையாள்

    புன்னகை தவழ் பூங்கொடியாள்
    புன்னகை தவழ் பூங்கொடியாள் புவன சுந்தரியோ?
    புன்னகை தவழ் பூங்கொடியாள் புவன சுந்தரியோ?

    வதனமே சந்திர பிம்பமோ மலர்ந்த சரோஜமோ?
    வதனமே சந்திர பிம்பமோ?
    ----------------------------------------------------------------------------------------

    காணொளி:
    -----------------



    ஒரே திரை அரங்கில் மூன்று வருடம் ஓடிய சிவகவி என்பார்கள்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  7. Likes chinnakkannan liked this post
  8. #3174
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ஒரே திரை அரங்கில் மூன்று வருடம் ஓடிய சிவகவி என்பார்கள்.//என்னா எக்ஸர்ஸைஸ்.. இளைச்சு துரும்பா போயிருப்பாரோ

    அது சரீ ஈ.. சந்திரனையும் எடுத்துக்கிட்டீங்களா..ரொம்ப வெய்ட்டான டைட்டில் தான்.. ஒரு இருநூறு பாட் ஓடும்னு நினைக்கறேன்..

  9. Likes kalnayak liked this post
  10. #3175
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சி.க.,
    நான் அதிக பட்சமாக நூறு பாடல்களில் முடித்துக் கொள்கிறேன். நான் விட்டுவிடும் பாடல்கள் நீங்கள் உங்கள் பாணியில் தொடரலாம்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  11. #3176
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //நான் அதிக பட்சமாக நூறு பாடல்களில் முடித்துக் கொள்கிறேன். நான் விட்டுவிடும் பாடல்கள் நீங்கள் உங்கள் பாணியில் தொடரலாம்// ஏன்.. நான் சும்மா தானே சொன்னேன்..எழுதுங்க்ணா...

    ம்ம் இந்தியா தோல்வி..ஏற்பது கடினமாகத் தான் இருக்கிறது..

  12. #3177
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    டபக்கென நினைவுக்கு வரும் திரைப்படங்களான நாவல்கள்

    தில்லானா மோகனாம்பாள் -அதே பெயர்
    ராவ் பகதூர் சிங்காரம் - விளையாட்டுப் பிள்ளை
    பாவை விளக்கு - அகிலன் - அதேபெயர் படத்திலும்
    வாழ்வு எங்கே - அகிலன் - குலமகள் ராதை
    சுமைதாங்கி - ராகி ரங்கராஜன் - அதே பெயர்
    இது சத்தியம் - ரா.கி. ரங்கராஜன் -அதேபெயர்
    மோக முள் தி ஜானகிராமன் 0 அதே பெயர்
    கையில்லாத பொம்மை - ராகி ரங்கராஜன் - கைராசிக்காரன்
    அனிதா இளம்மனைவி - இது எப்படி இருக்கு
    ப்ரியா - ப்ரியா
    காயத்ரி - காயத்ரி
    கரையெல்லாம் செண்பகப்பூ - க.செ. எல்லாம் சுஜாதா நாவல்கள்
    சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
    புவனா ஒரு கேள்விக்குறி மகரிஷி
    வணக்கத்துக்குரிய காதலியே - ராஜேந்திர குமார்..
    பார்த்திபன் கனவு கல்கி

    எதாச்சும் விட்டுப் போச்சா..

  13. #3178
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    திரையில் மலர்ந்த நாவல்கள் - நாலு பாரா திடீர்த் தொடர் 1


    விஷூவலுக்கும் எழுத்துக்கும் வித்யாசமென்பது அகண்ட காவிரியைவிட அகலமானது..கற்பனையில் எழுத்தாளர் உருக்கமாக இரண்டு மூன்று பாராக்களில் கதானாயகனான சின்னக் கண்ணன் இந்தியா தோல்வியை நினைத்து மெழுகுவர்த்தீ எரிந்து உருகியதைப் போல உருகி உருகி வருத்தப் பட்டான் என ஈஸியாக எழுதிவிடுவார்.. சி.கவை நடிக்கவைப்பதே கஷ்டம் அதுவும் உருகி நடிக்க வேண்டுமென்றால் அந்த் அந்த மெழுகால் சுட்டாலும் வராது..

    எனில் விஷீவல் அல்லது சினிமா என்பதில் நாவலைக் கொண்டுவருவது மிகக் கடினம்..சில சமயங்களில் எழுத்தாளரின் கதை என்று வாங்கிவிட்டு தலைப்பை வைத்து வேறு கதை பண்ணிய சம்பவங்க்ள் நிகழ்ந்திருக்கின்றன..

    ஸ்ரீதர் ரா.கி ரங்கராஜனின் கதையான சுமைதாங்கியைக் கொஞ்சம் முக்காலே மூணுவீசம் கொண்டுவந்துவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்..கடைசி கிளைமாக்ஸ் மட்டும் மாற்றிவிட்டார்.. //திடுதிப்பென கதானாயகன் எந்தக் காட்சியிலும் சொல்லாத - சொல்லப் படாத கிறிஸ்தவ மதத்தில் பாதிரியாராகச் சேர்கிறான் -என ஸ்ரீதர் மாற்றியது கொஞ்சம் எனக்கு திடுக்கெனத் தான் இருந்தது என்கிறார் ரா.கி ர. தனது சுயசரிதையான அவன் -இல்//

    சுமைதாங்கியில் பிடித்த பாடல் பல இருந்தாலும் உருகி உருகி ப் பாடும் என் அன்னை செய்த பாவம் எனக்கு ப் பிடிக்குமாக்கும்..



    என் அன்னை செய்த பாவம்..
    நான் மண்ணில் வந்தது..
    என் அழகு செய்த பாவம்
    நீ என்னை கண்டது..

    என் அன்னை செய்த பாவம்..
    நம் கண்கள் செய்த பாவம்..
    நாம் காதல் கொண்டது..
    இதில் கடவுள் செய்த பரிகாரம்..
    பிரிவு என்பது..

    mm நிறைய எழுதலாம் ..ஆனா நறுக் சுறுக்னு எழுதிடலாம்னு பாக்கேன்
    Last edited by chinnakkannan; 26th March 2015 at 06:14 PM.

  14. Likes kalnayak liked this post
  15. #3179
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    திரையில் மலர்ந்த நாவல்கள் -2 ( நாலு பாரா திடீர்த் தொடர்)


    சோகையாய் ஒரு ரயில்வேஸ்டேஷன்.. சோம்பலாய் ஒரு கிராமம். அதில் இறங்கும் ஒரு பட்டணத்து இளைஞன்.. வந்திருப்பது நாட்டுப்புற ப் பாடல்கள் ஆராய்ச்சி. பார்ப்பது ஒரு ஒல்லி ஒல்லி ஆனால் அழகான வெள்ளரிபிஞ்சு விற்பவள்.. அவளே கிராமத்து ஜமீன் வீட்டை வழிகாட்டுகிறாள்..பின் ஜமீன் வாரிசு என ஒரு பெண் வந்து சேர்ந்து பின் பின் பின்.. கொலையாகிறாள்..

    விகடனில் வெகு ஜோராய் சுஜாதாவால் ஆரம்பிக்கப் பட்ட நாவல் கரையெல்லாம் செண்பகப்பூ.. வாரா வாரம் வெள்ளிக்கிழமை காலை அக்காவீட்டுக்குப் போய் விகடன் படித்து விட்டுத் தான் போவேன் (வீட்டில் குமுதம் மட்டும்தான்வாங்குவார்கள்) வெகு சுவாரஸ்யம்.. அதில் நாட்டுப்புற இளைஞன் கல்யாண ராமன் வெ.பி.விற்கும் வெள்ளி என்ற கிராமியப் பெண்ணின் மீது கொள்ளும் மெல்லிய காதல் வெள்ளியோ தன் மாமன் மருதமுத்துவை நினைத்து உருகி பின் க.ரா.காதலைப் புரிந்து க்ளைமாக்ஸில் க.ரா வுடன் சேர ஆசைப்பட்டு மனதுள் பேச...எதுவும் பேசாமலேயே ரயில் கடகடவென வேகமெடுக்க முடியும் கதை.. நடுவில் அந்தக் கொலை கொலைகாரன் யார் என்பது தெரிவது எல்லாம் வெகு நன்றாக இருக்கும்..போதாக்குறைக்கு ஜெ.. எனச்சொல்லப்படும் ஜெயராஜின் ஓவியங்கள்..பின் இருக்கா - என ரெண்டு வார்த்தை சினேகலதா சொல்வதாக சுஜாதா எழுதியிருக்க அந்த இரண்டு வார்த்தைக்கு சினேகலதாவிற்குச்சட்டை போட்டு பின் போடாமல் கேட்பதாக வரைந்திருக்கும் படமிருக்கிறதே இன்னும் நினைவிருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.... நைஸ்

    கதை படித்த ஹேங்க் ஓவரில் இருக்கும் போதே படக் படக் கென படமெடுக்கப்பட்டு மதுரை கல்பனாவில் ரிலீஸாக போய் பார்த்தால் வெகு ஏமாற்றம் தான் மிஞ்சியது..என்ன கல்யாண ராமனாக பிரதாப் வெள்ளியாக ஸ்ரீப் ரியா மருத முத்துவாக சுந்தர் கிழவியாக வரும் மனோரமா ஜமீன் பொண்ணாக வரும் சுமலதா ஜமீன் பங்களா கிராம லொகேஷன் எல்லாமே கன ஜோர் ஆஆஆனால்...... அந்த மெல்லிய காதல்.. கூடாதாம்.. லேடீஸ் செண்டிமெண்ட்டிற்கு ஒத்து வராதாம்..எனில் அதை வெட்டி விட...படம் என்னவோ நா.பு பா ரிசர்ச் செய்யறவன் ஒரு கிராமம் விசிட் செஞ்சுட்டு திரும்ப வர்றான் என்ற ஒன்லைனுக்கு ஏற்றபடி இருந்து வெறுமை தான் மிச்சம்..

    ஆறுதலாய் இசை இளையராஜா.. மற்றபாடல்கள் நினைவிலில்லை பிஜிஎம் நன்று என நினைவு.. ஏரியிலே இலந்த மரம் நினைவில் இருக்கிறது..ஆரம்ப அத்தியாயத்தில் - காடெல்லாம் பிச்சி கரையெல்லாம் செண்பகப்பூ.. நாடே மணக்குதில்ல நல்ல மகன் போற பாதை - நாட்டுப்புறப் பாடலை முதல்வனில் யூஸ் பண்ணியிருப்பார் சுஜாதா..


    Last edited by chinnakkannan; 26th March 2015 at 06:19 PM.

  16. Likes kalnayak liked this post
  17. #3180
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    lakshmi's novel was made as kulamagal radhai

    yes aandha kummi lyircs by GA
    Last edited by rajeshkrv; 26th March 2015 at 11:03 PM.

  18. Thanks kalnayak thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •