-
29th March 2015, 05:30 PM
#791
Junior Member
Junior Hubber
என்னவோ போங்க. மறுபடி மறுபடி....
அவர் நினைத்தால் சிவாஜியின் உயரத்தைத் தொடலாம்....
இவர் நினைத்தால் சிவாஜியை நெருங்கலாம்.....
இவர்தான் சிவாஜியின் வாரிசு....
அவர்தான் சிவாஜியின் பெயரைக் காப்பாற்ற வந்தவர்.....
இன்னும் கொஞ்ச காலத்தில் சிவாஜியை பீட் செய்து விடுவார்....
மறுபடி மறுபடி புலம்பல்களுடன் கூடிய அலம்பல்கள்.
எத்தனை முறைதான் சொல்வது.
எவரும் எட்ட முடியா எவரெஸ்ட் சிவாஜி.
அந்த எவரெஸ்ட்டை.. யாருப்பா அது... டென்சிங் தொட்டான்.
இந்த நடிப்பு எவரெஸ்ட்டை எவர்தான் நெருங்க முடியும்.
அட நெருங்க வேணாம்பா... அண்ணாந்தாவது பார்க்க முடியுமா? எந்த அண்ணாத்தையாவது பார்க்க முடியுமாங்கிறேன்.
ஒரு பிரகஸ்பதி சிவாஜி மாதிரி இன்னொரு நடிகர் ஒரு படத்துல அழுது அசத்தி இருப்பதாக எழுதுகிறார்.
அழுகைன்னா இன்னான்னு இவருக்கு தெரியாது போல இருக்கு.
அதைப் படிச்சுட்டு உண்மையாலுமே எனக்கு அழுகை வந்துடுச்சி
வெள்ளைக்காரன் கெடுத்து நிர்மூலமாகி உயிர் விட்ட தங்கையை தூக்கி வைத்து மடியில் கிடத்தி ஒரு அழுகை
தாயின் மடியில் மகனே என்று கூப்பிடச் சொல்லி ஆனந்தத்துடன் உயிர் விடும் போது ஒரு அநாதை அழுகை
தங்கையோடு சாகும் போது கை வீசம்மா என்று மெதுவாக ஆரம்பித்து குமுறி வெடிக்கும் அழுகை
ஓடிப் போன மகளின் புகைப்படத்தை நெஞ்சில் அணைத்து மனம் புழுங்கி அழும் அழுகை
மகள் கற்பை கயவர்களிடம் இழந்து கட்டாந்தரையில் கவிழ்ந்து உயிர் விட பனைமரம் ஏறி சாமுண்டி பகாசூரனாய் மாறி பதறி அழும் அழுகை
தங்கை கற்பிழந்து சுயநினைவிழந்து மருத்துவ மனையில் கிடக்க மருத்துவ அண்ணனாய் அவள் செய்த குறும்புகளை சக டாக்டரிடம் சொல்லி சொல்லி அழும் சிங்கார அழுகை
தம்பியின் காதலுக்கு தடை போட்டு அவனை சாய்த்த பண்ணையார் கும்பலை சுட்டு வீழ்த்திய கதை சொல்லி அழும் கம்பீரக் கதறல் அழுகை
வாழ்விழந்து வந்த தங்கை வாழாவெட்டியாய் உயிர்விட்டுவிட வாயில் துண்டை வைத்து அடக்கி அழும் ராஜபார்ட்டின் மௌன அழுகை
மனைவி இறந்தவுடன் காக்கி உடுப்பைக் கழற்றி வெறும் பனியனுடன் கதறி கலங்கி நம்மைக் கலக்கி வைக்கும் அழுகை
மாமா இறந்து போனதை மாலையுடன் புகைப்படத்தில் பார்த்து விட்டு அத்தையுடன் அழுது துடிக்கும் அய்யய்யோ அழுகை
25 வருடம் மனைவியைப் பிரிந்து அவள் வரைந்த ஓவியத்தை எதிர்பாராவிதமாகப் பார்த்து அவள் உயிரோடு இருக்கிறாள் என்றெண்ணி ஆனந்தத்தோடு அழும் திரிசூல அழுகை
துப்பு துலக்கும் அதிகாரி கன்வர்லால் வேடமிட்டு கயவர் கும்பலில் உள்ளே நுழைந்து அவர்கள் நம்பிக்கையைப் பெற அங்கு அந்தக் கும்பல் தன தங்கையை ஆட்டம் ஆடச் சொல்லி துன்புறுத்த ஒன்றுமே செய்ய முடியாமல் விழிகளை உருட்டி உள்ளூர அழும் அழுகை
செல்லமான தந்தையை வில்லன் பத்திரிக்கை கொடுக்கும் போது சுட்டுக் கொன்றுவிட பதறி அழுது பின் தாளாமல் அவர் நினைவுகளிலூம் மூழ்கி பழி வாங்கத் துடிக்கும் பயங்கர அழுகை
கௌரவம் போய் விட்டதே என்று மனைவியும் கூந்தலில் உள்ள பூக்களை ஒவ்வொன்றாக பிய்த்துப் போட்டுவிட்டு தன் முடிவைத் தெரிவிக்கும் சூசகமாக உள்ளார்ந்த அழுகை
அடப் போங்கய்யா...
நெஞ்சைத் தொட்டு சொல்லுங்காணும் ...நீங்கல்லாம் எத்தனை அழுகை அழுதிருக்கேள்?
சிவாஜியை நெருங்குகிறார்களாம்...அவர் சாதனையைத் தொட்டு விடுவார்களாம்.
நீங்களெல்லாம் அழுதா எவன் பார்ப்பான்? முகத்தை நேரே காட்டி அழ எந்த நடிகருக்காவது தில் இருக்கா?
அந்த மனுஷன் அழுதா அத்தனை பேரும் கதறுவான்யா.... கதறுவான்....மொத்த உலகமுமே கதறும்.
மத்த எந்த நடிகன் அழுதாலும் பாக்கிறவன் சிரிப்பான்யா...
அதான்யா சிங்கம்...
என்னவோ பெரிசா பேச வந்துட்டீங்க....
உங்களுக்கே என்னவோ போல இல்லை? சிவாஜியோட மத்தவங்கள இணைச்சி பேசறதுக்கு?
அவரை மாறி நடிக்க வேணாம்.. அவரை மாதிரி சும்மா நின்னு காட்டுங்க. நான் பீல்டுல நிக்கறதை சொல்லல... காட்சியில நிக்கறதை சொன்னேன்.
முடியாதுங்கறேன்...
இதுல சரிக்கு சமமா அவரோட இணைச்சி கம்பாரிசன் வேற.
உலக மகா நடிகருங்க எல்லாம் அவர் காலைத் தொட்டு வணங்கி பெருமை தேடிகிட்டாங்க.
'உன்னை மாதிரி என்னால நடிச்சுட முடியும் சிவாஜி... ஆனா அந்த கட்டபொம்மன்ல பொண்டாட்டிகிட்ட உத்தரவு வாங்கிகிட்டு சண்டைக்குப் போவியே! அப்போ கண்ணால தடவாம வாளை உறைக்குள் விருட்டுன்னு ஸ்டைலா போடுவியே.. அதை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னால செய்ய முடியாதுப்பா'...
அப்படின்னு சொல்லி ஏகப்பட்ட ஆஸ்கார் அவார்டு வாங்கின மார்லன் பிராண்டோ இவர் பாதம் பணிந்தானே... அந்த ஆளே எங்களுக்கு ஜூஜுபி...நீங்கல்லாம் எந்த மூலைக்கு.
வீண் ஆசை எல்லாம் வச்சி உடம்பைக் கெடுத்துக்காதீங்க. என்ன நான் சொல்றது?
முரளி! இதிலயாவது கை வைக்காம இருங்க. நான் யாரயும் குறிப்பிட்டு சொல்லல. பொத்தம் பொதுவாத்தான் சொல்லி இருக்கேன். அதுக்குள்ளே கத்தரிக்கோலை எடுத்து சாணை பிடிச்சி வைக்காதீங்க.
என்ன சரியா?
Last edited by pattaakkathi; 29th March 2015 at 05:36 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
29th March 2015 05:30 PM
# ADS
Circuit advertisement
-
29th March 2015, 06:18 PM
#792
Junior Member
Veteran Hubber

Originally Posted by
pattaakkathi
என்னவோ போங்க. மறுபடி மறுபடி....
அவர் நினைத்தால் சிவாஜியின் உயரத்தைத் தொடலாம்....
இவர் நினைத்தால் சிவாஜியை நெருங்கலாம்.....
இவர்தான் சிவாஜியின் வாரிசு....
அவர்தான் சிவாஜியின் பெயரைக் காப்பாற்ற வந்தவர்.....
இன்னும் கொஞ்ச காலத்தில் சிவாஜியை பீட் செய்து விடுவார்....
மறுபடி மறுபடி புலம்பல்களுடன் கூடிய அலம்பல்கள்.
எத்தனை முறைதான் சொல்வது.
எவரும் எட்ட முடியா எவரெஸ்ட் சிவாஜி.
அந்த எவரெஸ்ட்டை.. யாருப்பா அது... டென்சிங் தொட்டான்.
இந்த நடிப்பு எவரெஸ்ட்டை எவர்தான் நெருங்க முடியும்.
அட நெருங்க வேணாம்பா... அண்ணாந்தாவது பார்க்க முடியுமா? எந்த அண்ணாத்தையாவது பார்க்க முடியுமாங்கிறேன்.
ஒரு பிரகஸ்பதி சிவாஜி மாதிரி இன்னொரு நடிகர் ஒரு படத்துல அழுது அசத்தி இருப்பதாக எழுதுகிறார்.
அழுகைன்னா இன்னான்னு இவருக்கு தெரியாது போல இருக்கு.
அதைப் படிச்சுட்டு உண்மையாலுமே எனக்கு அழுகை வந்துடுச்சி
திரு பட்டா அவர்களே...
ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள். ஆயிரமும் உண்மையாகிவிடுமா என்ன ?
நடிகர் திலகம் அவர்களின் உயரத்தை முதலில் கணிக்க முடியுமா இவர்களால் ?
தன்னடக்கம் உள்ளவர்கள் நடிகர் திலகம் நிழலை பார்க்க நினைக்கிறன் என்று வேண்டுமானால் கூறலாம். நடிகர் திலகத்தின் சாதனையில் ஒரு சதவிகிதத்தில் ஒரு சதவிகிதம் கூட கனவிலும் எவராலும் நினைக்கவோ நெருங்கவோ முடியாது ! இப்பொழுது இருப்பவர்கள் எல்லாரும் ஜால்ராக்கள் ..தங்கள் பொழைப்பை ஓட்டுவதற்கு இப்படி ஏதாவது அபத்தமாக காமெடியாக பேசுவார்கள்...!
அழுதுனடிக்கறவன் எல்லாம் சிவாஜி மாதிரி அசத்தி இருக்கார்னு சொன்னா......லொடுக்கு பாண்டி கூட ஒரு படத்துல அழுது நடிச்சுருக்காரு...அதுக்காக ?
Rks
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th March 2015, 08:41 PM
#793
Junior Member
Veteran Hubber
இப்பொழுது சன் லைப் தொலைகாட்சியில்
இந்திய திரை உலகின் முதல் உலக நாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
மாறுபட்ட மூன்றுவேட நடிப்பில் வெளிவந்து நூறு நாட்களுக்கு மேல் ஓடி சிறந்த வெற்றிகண்ட
தமிழ் திரையுலகின் முதன் முதலில் ஆஸ்கார் விருதுக்கு இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட திரை காவியம்
"தெய்வ மகன்" ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது.


rks
Last edited by RavikiranSurya; 29th March 2015 at 08:48 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th March 2015, 09:56 PM
#794
Junior Member
Veteran Hubber

Originally Posted by
senthilvel
இதில் கவனிக்க படவேண்டிய ஒன்று...நடிகர் திலகம் அவர்கள் பிரெஞ்சு அரசாங்க தூதுவருடன் கை குலுக்கும் முறை.
நாம் பொதுவாக பார்க்கும் கைகுலுக்கல் முறையல்ல இது. இந்த விருது கொடுப்பவரும் பெறுபவரும் மாவீரன் நெப்போலியன் கை குலுக்கும் முறையில் கை குலுக்குகிறார்கள் !
மன்னர் கை குலுக்கும் பாணி கூட தெரிந்து வைத்திருக்கும் நமது நடிகர் திலகம் !
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
30th March 2015, 12:02 PM
#795
Junior Member
Veteran Hubber
தான் அழாமல் பார்ப்பவரை கதற வைப்பதிலும் நடிகர்திலகத்திற்கு ஈடு இணையில்லையே!
Last edited by sivajisenthil; 30th March 2015 at 12:25 PM.
-
30th March 2015, 09:05 PM
#796
Junior Member
Diamond Hubber
[quote name="senthilvel" post=1216829]
[/QUOTE]
இதில் கவனிக்க படவேண்டிய ஒன்று...நடிகர் திலகம் அவர்கள் பிரெஞ்சு அரசாங்க தூதுவருடன் கை குலுக்கும் முறை.
நாம் பொதுவாக பார்க்கும் கைகுலுக்கல் முறையல்ல இது. இந்த விருது கொடுப்பவரும் பெறுபவரும் மாவீரன் நெப்போலியன் கை குலுக்கும் முறையில் கை குலுக்குகிறார்கள் !
மன்னர் கை குலுக்கும் பாணி கூட தெரிந்து வைத்திருக்கும் நமது நடிகர் திலகம் ! !
இது போன்ற சிறு விஷயங்களையும் கூர்ந்து கவனித்து எழுத பேச முடிவதை பெரும்பாலும் சிவாஜி ரசிகர்களிடம் மட்டுமே காணமுடிகிறது.
Last edited by senthilvel; 30th March 2015 at 09:35 PM.
-
30th March 2015, 09:37 PM
#797
Junior Member
Diamond Hubber
Shooting Spot....
-
30th March 2015, 09:39 PM
#798
Junior Member
Diamond Hubber
-
31st March 2015, 08:17 AM
#799
Junior Member
Veteran Hubber
மக்களை முட்டாளாக்கிய திராவிட கட்சிகளின் நாத்திக கொள்கையை நிர்மூலமாக்கிய நடிகர் திலகத்தின் திருவிளையாடல் !
-
31st March 2015, 08:21 AM
#800
Junior Member
Veteran Hubber
Bookmarks