-
2nd April 2015, 09:02 PM
#11
Junior Member
Regular Hubber

Originally Posted by
venkkiram
எனக்கு மற்றவர்கள் எப்படி நினைத்துக் கொள்வார்கள் என்பதில் கவனமில்லை. என் அகராதியில் ஒரு இளையவர் ஒரு மூத்தவரை அணுகுவதுதான் சரியெனப் பட்டது. மேலும் எதிர்காலத்தில் இருவரும் இணைவது என்பது ஒரு கற்பனை மற்றும் விருப்பம். அதன் அடிப்படையில் மட்டுமே பதிவுகள் ஆரம்பித்ததால் நான் எனது கருத்தினை அவ்வாறு வைத்தேன்.
மற்றவர்கள் என்ன நினைத்து கொள்வார்கள் என்பதில் கவனம் செலுத்தி இங்கே பதிவிடுதல் சரியான விவாதங்களுக்கு வழிவகுக்காது. ஐரீனும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து பதிவிடவில்லை. ஆனால் நீங்கள் அவர் என்ன கூறியிருக்க வேண்டும் என்று கூறுவதுதான் பிரச்சனையே.
இளையவர்கள் மூத்தவர்களை அணுக வேண்டும் என்பது சரிதான். ஆனால் அதற்கான அவசியம் என்ன வந்தது? உங்களது விருப்பம் அது என்றால் சரி. அது போல் மற்றவர்களும் அவர்களது விருப்பத்தையும் கருத்தையும் தெரிவிக்கின்றனர். இதில் என்ன பிரச்சனை?
ரவி நடராஜன் எழுதிய பதிவை இங்கே குறிப்பிட்டதற்கு நன்றி. ஆனால் யார் இந்த ரவி நடராஜன்? இவர் நினைப்பது அனைவருக்கும் பொருந்துமா? இசையை ஏதாவது அளவுகோல் கொண்டு அளப்பதே என்னை பொறுத்தவரை அநாகரீகம். அதற்காக அமைப்பது அல்ல இசை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இசை வடிவம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். ஐரீனுக்கு "கண்டுகொண்டேன்" பாடல் பிடித்திருக்கிறது. அவரது பார்வையில் அது ஒரு சிறந்த இசை கோர்வையாக படுகிறது. உங்களுக்கு படவில்லை என்றால் மகிழ்ச்சி. அதற்கு ஏன் அவரது இசை கேட்கும் அனுபவத்தை விமர்சிக்க வேண்டும்?
வாலி ரங்கராஜனாக இருந்து வெல்ல இயலாமல் ஊர் செல்ல எத்தனித்த போது "மயக்கமா கலக்கமா" பாட்டை கேட்டாராம். அதன் பிறகு முடிவை மாற்றி பிறகு வென்றாராம். வள்ளுவனை படிக்காதவர் அல்ல வாலி. வள்ளுவன் கூறாததையா கண்ணதாசன் கூறிவிட்டான்? அந்த நேரத்தில் அது ஒரு பாதிப்பை அவருக்கு ஏற்படுத்தியிருந்தது. அதனால் அதுதான் சிறந்த பாடல் என்று அர்த்தமில்லை. ஏனென்றால் அனைவருக்கும் அந்த பாதிப்பை அந்த பாடல் ஏற்படுத்தியிருக்க வேண்டியதுமில்லை.
எத்தனையோ சிறந்த இசை கோர்வைகளை இளையராஜா இசையமைத்திருந்தாலும், எனக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இன்று வரை என்னை கட்டிப்போட்டிருப்பது "இதயம்" திரைப்படத்தின் இசைதான். இசையை விரும்பி கேட்க ஆரம்பித்த காலத்தில் கேட்டதினால் இருக்கலாம். அப்போது எனது வயது காரனமாக இருக்கலாம். ஆனால் எனக்கு அதுதான் மிகவும் பிடித்தது. இந்த அனுபவத்தை எல்லாம் விளக்க முடியுமா? இதனால் தான் இசையை அளக்க முடியாது, அளக்க வேண்டிய அவசியமில்லை என்கிறேன். அதனால் எனது இசை கேட்கும் அனுபவத்தை விமர்சிப்பது, மன்னிக்கவும், நாகரீகமல்ல*.
-
2nd April 2015 09:02 PM
# ADS
Circuit advertisement
Bookmarks