-
9th April 2015, 03:55 PM
#3541
Junior Member
Seasoned Hubber
-
9th April 2015 03:55 PM
# ADS
Circuit advertisement
-
9th April 2015, 03:57 PM
#3542
Junior Member
Seasoned Hubber
-
9th April 2015, 04:00 PM
#3543
Junior Member
Seasoned Hubber
-
9th April 2015, 04:12 PM
#3544
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
g94127302
அவர்கள் சுட்டது , தமிழர்களை அல்ல , நம்மிடம் மிஞ்சி , இன்னும் கொஞ்சமாக ஒட்டிகொண்டிருந்த மனிதாபிமானத்தை ! இன்று மிகவும் சுலபமாக கிடைக்கும் ஒரே பொருள் மனித உயிர் மட்டுமே - மலர்ந்தும் மலராத , விடிந்தும் விடியாத , வாழ்க்கையின் முதல் படிகளில் கால்களை வைத்த அந்த பள்ளி சிறுவர்களை , மனித போர்வையில் திரிந்த மிருகம் ஒன்று குருவிகளைப்போல் சுட்டு கொன்ற ஈரம் இன்னும் மறையவில்லை - வானத்தில் depression வரலாம் - ஆனால் வந்ததோ ஒரு co -pilot க்கு - முடிவு 300 பேர்களுக்கும் மேல் , விமானம் மலைகளில் மோதி அவர்களின் உயிர்களை குடித்தது - இப்படியே சென்று கொண்டிருந்தால் இந்தியாவோ , மற்ற நாடுகளோ வல்லரசுகளாக மாறாமல் , சுடுகாடுகளாக மாறும் அபாயம் உள்ளது - நாம் இதயங்களுடன் வாழ வேண்டும் - வெறும் எலும்புகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் !!
கண்ணதாசன் நம் தலைவர்களுக்கு எழுதிய பாடல்கள் தான் இன்னும் சிரஞ்சீவியாக உள்ளன -
"யாரடா மனிதன் இங்கே ! கூட்டி வா அவனை இங்கே - இறைவன் படைப்பில் குரங்கு தான் மீதி இங்கே !!"
" எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவன் தீயவன் ஆவதும் , நல்லவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே !!"
பிறக்கும் முன் இருந்த உள்ளம் , வாழும் போது நம்மிடம் விடை பெற்று செல்கிறது - இறந்தபின் கிடைக்கும் அமைதி வாழும்போது நம்மிடம் வர மறுக்கின்றது ----
ஒரு சின்ன புராண கதை ஒன்று நினைவிற்கு வருகின்றது - பல யுகங்களுக்கு முன் , மனிதனுக்கும் , தெய்வத்திற்கும் வித்தியாசமே இல்லாமல் இருந்ததாம் - மனிதனிடம் தெய்வீகத்தன்மை நன்றாக குடியிருந்த காலம் அது - சில வருடங்களுக்கு பின் - மனிதனிடம் குடியிருக்க - பொறாமை , கர்வம் , அகம்பாவம் , விஷம் கக்கும் வார்த்தைகளை பேசும் சுபாவம் இவைகள் கெஞ்சியதாம் - இறைவன் தடுத்தும் , மனிதனின் இரக்க குணத்தால் அவைகளுக்கு அவன் மனதில் வசிக்க இடம் கிடைத்ததாம் --- இந்த கொடிய குணங்களுடன் போட்டி போட முடியாமல் , அவனிடம் இதுவரை குடி கொண்டிருந்த தெய்வீகத்தன்மை அவனை விட்டு பிரிந்ததாம் - இறைவன் மீண்டும் அவனிடம் இரக்கப்பட்டு அவன் உள்ளத்திலே அதை ஒளித்து வைத்தாராம் - ஆனால் இன்று வரை மனிதன் அதை தேடுவதும் இல்லை - எங்கே இறைவன் ஒளித்து வைத்திருக்கிறான் என்பதையும் அறியவும் இல்லை - இதனால் மிகவும் சுலபமாக கிடைக்கும் மிருக குணத்தை தனக்குள் அதிகமாக சேர்த்து வைக்க ஆரம்பித்து விட்டான் மனிதன் - விளைவு ??? இப்படிப்பட்ட கொலைகள் தினமும் நடந்தவண்ணம் உள்ளன ..
இரு திலகங்களும் அவர்கள் வாழும் போதே , ஒளித்து வைத்த தெய்வீகத்தன்மையை கண்டு பிடித்து விட்டார்கள் - அதனால் தான் , எதிலும் , எந்த விஷயத்திலும் அவர்களை சம்பந்த படுத்தி , நாம் தொலைத்த நிம்மதியை திரும்ப பெற்றுக்கொண்டுருக்கின்றோம் .
அன்புடன்
ரவி
நன்றி திரு. ரவி சார். ஆந்திர சம்பவம் என்னை மிகவும் பாதித்து விட்டது. தங்கள் கருத்துக்கள் மிகவும் அருமை. அவை உங்களின் இளகிய இதயத்தை காட்டுகிறது. மிக்க நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
9th April 2015, 04:16 PM
#3545
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
makkal thilagam mgr
ஏழைகள் மீது அளவற்ற அன்பு, பாசம், நேசம், இரக்கம் காட்டி அவர்களின் பங்காளனாகவே வாழ்ந்து வரலாறு படைத்த நம் ஏழைப்பங்காளன் இப்போது இல்லையே என்ற ஏக்கம் மிக மிக அதிகமாகவே உள்ளது.
உலகத்தின் எந்த ஒரு மூலை முடுக்கிலாவது ஒரு தமிழன் தாக்கப்பட்டால், அதனை கண்டித்து முதலில் ஓங்கி ஒலிப்பது நமது மக்கள் திலகத்தின் குரலாகத்தான் இருக்கும். அது மட்டுமல்லாமல், அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் உடனடி தேவைகளையறிந்து, உரிய நடவடிக்கை எடுத்தவர்தான் உத்தமத்தலைவர் உன்னதமான நம் மக்கள் திலகம். அதன் காரணமாகவே உலகத்தமிழர்களின் உண்மைத்தலைவர் என்று நம் பொன்மனச்செம்மல் அவர்கள் அழைக்கப்பட்டார்.
நன்றி திரு.செல்வகுமார் சார். தாங்கள் கூறியது போல உலகில் எங்கு தமிழன் தாக்கப்பட்டாலும் முதலில் ஒலிப்பது தலைவரின் குரலாகத்தான் இருக்கும். அருமையான கருத்தை கூறியிருக்கிறீர்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
9th April 2015, 04:17 PM
#3546
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
saileshbasu
ENGA VEETU PILLAI - 50 YEARS FUNCTION ON TV
Podhigai TV - 14/4/2015 between 1-2 in the afternoon
தகவலுக்கு நன்றி திரு.சைலேஷ் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
9th April 2015, 04:48 PM
#3547
Junior Member
Seasoned Hubber

திராவிட இயக்க பாடகரும் இனிய குரலுக்கு சொந்தக்காரருமான இசை முரசு திரு.நாகூர் ஹனீபா அவர்களின் மறைவு வருந்தத்தக்கது. திரு.குமார் சார் கூறியிருப்பதை போல மக்கள் திலகத்தைப் பற்றி அவர் பாடிய பாடல்கள் ஒரு காலத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
தலைவர் நடித்த குலேபகாவலி படத்தில் டைட்டில் பாடலான ‘நாயகமே நபி நாயகமே...’ பாடலை திரு.எஸ்.சி. கிருஷ்ணன் அவர்களோடு இணைந்து ஹனீபா பாடியிருப்பார். தஞ்சை ராமையாதாசின் வரிகளில் மிகவும் அருமையான பாடல். தொடக்க காட்சியிலும் தொழுகைக்கு அழைக்கும் பாங்கு ஒலியில் அவர் குரல் மனதை உருக்கும்.
திரு.ஹனீபா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.
‘‘நாயகமே நபி நாயகமே
நலமே அருள் நபி நாயகமே
இணையிலாத எங்கள் பாதுஷா
தந்த நெறியின் படியே நாயகமே
இந்து முஸ்லிம் ஒற்றுமையோடு
இன்புற வேண்டும் நாயகமே
நாயகமே நபி நாயகமே
நலமே அருள் நபி நாயகமே
அறியாமை இருள் நீங்கி
இன்ப ஒளி வேண்டும் நபியே நாயகமே
அன்பின் இதயம் காணிக்கை செய்தோம்
அருள் தாரும் நபி நாயகமே
நாயகமே நபி நாயகமே
நலமே அருள் நபி நாயகமே.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
9th April 2015, 06:14 PM
#3548
Junior Member
Platinum Hubber
-
9th April 2015, 06:16 PM
#3549
Junior Member
Platinum Hubber
-
9th April 2015, 06:18 PM
#3550
Junior Member
Platinum Hubber
Bookmarks