Page 332 of 397 FirstFirst ... 232282322330331332333334342382 ... LastLast
Results 3,311 to 3,320 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3311
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    அம்மா எங்கே யில் வேறொரு நிலவுப்பாட்டு இருக்கே..ஆனா சொல்ல மாட்டேனே
    எந்தப் பாட்டு ? நெஞ்சுக்கு தெரியும் நிலவுக்கு தெரியும் பாட்டா ? அல்லது ஆகாசப் பந்தலிலே ஆயிரம் பூ பூத்திருக்கும் ஆனாலும் நிலவு வந்தால் அல்லியைத்தான் பார்த்திருக்குமா ? இதெல்லாம் பௌர்ணமி மாதிரி பல்லவியிலேயே அந்த வார்த்தையைக் கொண்ட பாடல்கள். இன்னும் "தொட்டுப்பார்..தொடும்போது.... கண்ணில் வந்து கொஞ்சும் நிலா" என்றும் "பாடி வரும் நிலவோ வெண்பளிங்கான மேனியோ" என்று பிறைச்சந்திரன் போல மறைந்து வெளிப்படும் பாடல்களும் உண்டுங்கோ..

    அம்மா எங்கேனு நிலாவைக் கேட்போம்..

    கல் நாயக் சாருக்கு... உடல் நிலை காரணமாக நிலவுப் பாடல்கள் முழுவதும் படிக்க முடியவில்லை. ... இருப்பினும் இந்தப் பாடல்கள் இல்லாமல் இருந்தால் லிஸ்டில் சேர்த்துக்குங்க

    சந்திரப் பிறை பார்த்தேன் - கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன

    சந்திர குலத்தவன் சிந்தையில் கலந்திட - சிரி சிரி மாமா ( சந்திரனின் குலமும் சேர்த்திதானே ? )

    வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ - ஹலோ பார்ட்னர்

    நிலவுப் பெண் முகம் பார்க்க நீலமேகம் கண்ணாடி - பால் மனம்

    ஏற்கனவே சேர்க்கப்பட்டு இருந்தால் மன்னிக்கவும்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3312
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //அம்மா எங்கே பாட்டு உங்க நெஞ்சுக்கு தெரிஞ்சா சரிதான்.// கல்ஸ்

    //எந்தப் பாட்டு ? நெஞ்சுக்கு தெரியும் நிலவுக்கு தெரியும் பாட்டா ? அல்லது ஆகாசப் பந்தலிலே ஆயிரம் பூ பூத்திருக்கும் ஆனாலும் நிலவு வந்தால் அல்லியைத்தான் பார்த்திருக்குமா ? இதெல்லாம் பௌர்ணமி மாதிரி பல்லவியிலேயே அந்த வார்த்தையைக் கொண்ட பாடல்கள். // மதுண்ணா வாங்க வாங்க இன்னிசைக் களஞ்சியமே மதுண்ணா எங்களின் அதிரசமே (ஸ்வீட் பெர்ஸன்னு சொன்னேன் )

    இந்த நெஞ்சுக்குத் தெரியும் பாட் திடீர்னு தேடற்ச்சே கிடைச்சது.. சரி இவர் போடறாரா பாக்கலாம்னு இருந்தேனா.. பட்டூ சார் வேற கேட்டாரா அதான் கல்ஸூக்குத் தெரியுமான்னு கேட்டேன்..இந்தப் பாட் சொன்னாற்போல முந்தா நாள் தான் பார்த்தேன்.. ரொம்ப நாளைக்கு முன்னால் இசைக்களஞ்சியத்தில (சிலோன்) கேட்டது இல்லை பாட்டும் பதமும்லயா

    (பாட்டும்பதமும் பற்றித் தெரியாதவற்களுக்காக.. சிலோனில் ஒரு வார்த்தை எடுத்துக் கொள்வார்கள்.. கண்ணனை எண்ண நெஞ்சுக்கு எப்போதும் நல்லதே நடக்கும் அப்படின்னு வரி குன்ஸா எழுதி

    கண்ணனைக்கு ஒரு பாட்டு கண்ணனைக் காண்பாயோ நிலவே

    எண்ண - எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ இனிக்குது வண்ண வண்ணத் தோரணம் அஞ்சு ரூபா

    நெஞ்சுக்கு - நெஞ்சுக்குத் தெரியும் நிலவுக்குப் புரியும் நீயார் நான் யார் என்பது

    நல்லதே - நல்லதுகண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு

    நடக்கும் - நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்து விடும்

    என்று பாடல்கள் போடுவார்கள்..அல்மோஸ்ட் இந்த நிகழ்ச்சி மயில்வாகனம் தான் சொல்வார் என நினைக்கிறேன்..அதில் கேட்டிருக்கிறேனா நினைவில்லை..ஆனால் பாடல் மட்டும் கொஞ்சம் த்ரில்லிங்க்காக குரலும் உருக்கும் (நெ தெ பாட்டு))

    இதே போல சிலோன் ரேடியோவில் மாலை 5டு 5.30 இசையும் கதையும் என்றுகூட வரும்..

    மதுண்ணா உடல் நிலைசரியில்லாமல் வந்த போது சி.க அவரைப் பார்த்துக் கேட்டான் எனக் கதை ஆரம்பித்து நலந்தானா பாட்டு போடுவார்கள்.. (தி.மோ பாட்டுங்க.. சிம்பு பாட்டு இல்லை ) அந்தப் ப்ரோக்ராமும் நன்றாக இருக்கும்..

    ஆமாம் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் மதுண்ணா..மை ப்ரேயர்ஸ் ஆர் வித் யூ..

    ஆமாம் இந்த அம்மா எங்கே என்ன கதை.. நெஞ்சுக்குத் தெரியும் பாட்டில் வரும் பெண்மணி ஆர் பேய் யார்.. இன்னொரு பாட்டில் முத்துவும் ராஜஸ்ரீயும் பாடினார்கள்.. என்னவாக்கும் கதை.. நடுவில் ஏன் அந்தக் குழந்தை நடந்து வீட்டை விட்டு வெளியில் வருகிறது.. கன்ஃப்யூஷன்

  4. #3313
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சரி சரி.. மதுண்ணா முரளி வந்ததனால செலிப்ரேட் பண்ணலாம்..என்ன பண்ணலாம்.. பறவைப்பாட்டா பாடலாமா..
    பறவைப் பாடல்கள் 1

    மொதல்ல மயில்.
    .
    எழிலாய் நடைகொண்டு ஏற்றமுடன் ஆடும்
    மயிலிவளா மான் தானா சொல்..
    *

    இந்த சிவகுமார் சுமி ஜோடிப்பாட்டு சிலோன்ல போட்டு தேய்த்துஇருப்பார்கள்.. கண்ணா இப்பத் தான் பார்க்கறானாக்கும்
    மயிலே மயிலே உன் தோகை எங்கே ம்ம் கொஞ்சம் சற்றே குண்டான சுமி..கடவுள் அமைத்த மேடை – படம் பார்த்ததில்லை எப்படி இருக்கும்..

    Last edited by chinnakkannan; 11th April 2015 at 01:21 AM.

  5. #3314
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பறவைப் பாடல்கள் 2

    இன்னொரு பார்க்காதபடத்தில் வரும் நந்தவனக் கிளியும் புன்ன மரக் குயிலும்..

    விழிகளோ குட்டியாய் வீர்யக் குரலில்
    கிளிகொஞ்சும் கிள்ளையா நீ..
    *
    ஒயிலாய் நடக்காமல் ஓட்டமாய் ஓடும்
    குயிலேயுன் மன்னனைக் கூறு..
    *
    ..
    ஆரம்பத்தில் ஸ்ரீதேவி ஏதோ பேசுகிறார்..ஆனால் ஆடுவது வேறு இருவர்..சிவகுமார் என நினைத்தால் சிவகுமார் இல்லை..ஆடும் நடிகை யார்..

    இதுவும் ரேடியோ சிலோன் ஹிட் பாட்டுத் தான்..

    தென்னமரத்துல தென்றல் அடிக்குது நந்தவனக்கிளியே
    அடியே புன்னமரக் குயிலே..
    //திடுதிப்பென டிரஸ் மாற்றிக் குளிப்பதென்பது சினிமாவில் தான் நடக்கும் //



    *

  6. #3315
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *
    பறவைப் பாடல்கள் 3

    நான்கு சுவர்கள் படம் வெகுகாலம் முன்னால் பார்த்தது.. அடுத்த பறவை பாக்கலாம்னு பார்த்தா.. ரவி..வாணு..

    பையச் சிறகடித்துப் பாய்ந்தே சென்றிடும்
    மைனாவிற் கென்ன மொழி..

    *
    ஓ மைனா ஓமைனா இது உன்கண்ணா பொன் மீனா
    முன்னுரையை நான் எழுத
    முடிவுரையை நீ எழுத
    நல்லுறவை ஊரறிய நான் தரவா நீ தரவா


  7. #3316
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பறவைப்பாடல்கள் 4

    அடுத்ததா என்னதுங்கோவ்..

    ஆமா

    புகாத உயரத்தில் பூத்ததுபோல் செல்லும்
    புறாவே அருகிலே வா..

    யெஸ்.. கமல் ஓடிஓடிப் பாடும் மாடப்ராவே வா..டைப்போ இல்லீங்க்னா பாடறதே அப்படித்தான்.. நல்ல இசை..



    யாராக்கும் இந்தப் புறா.. ரேடியோ சிலோன்ல கேட்டது..இப்பத் தான் பார்க்கறேன்.. (ஹிஹி..மலையாள வெர்ஷனாயிட்டு) இதோ தமிழ் வெர்ஷன்.. மலையாளப் படத்தோட பெயர் மதனோற்சவம் தமிழ்ப்படம் பெயர் பருவமழையாமே..எப்படி இருக்கும்.. ரொம்ப நனையுமோ..


  8. #3317
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பறவைப் பாடல்கள் 5

    கீச்சென்று கத்தினாலும் கிள்ளை மொழிவீச்சு
    கூச்சமாய்க் கொண்ட குருவி..

    யெஸ்..சிட்டுக்குருவில்லாம் பார்த்தாலேஒரு சந்தோஷம் தானே வரூ..ஸாரி வரும்.. குட்டியா அப்புறம் வெகுகுட்டிக் கண்,வெகுகுட்டிக் கால்.. கூர்மையான அலகு வெகுகுட்டித்தலையோட என் ஃப்ளாட் பால்கனில அமருமாக்கும்.. தலையைத் தலையைச் சாய்த்து கண்ணாடிச் சுவருக்குள் இருக்கும் என்னைப்பார்த்து ( நான் அறையுள் இருப்பேன்) பின் சொய்ங்க் என்று தரையிறங்கி அங்கு போட்டிருக்கும் சிறிதளவு அரிசியில் ஒரு அரிசியை எடுத்துக்கொண்டு மறுபடி பால்கனி கைப்பிடியில் உட்கார்ந்து கண்ணால் பார்த்து சட்டெனத்திரும்பி சிட்டெனப் பறந்துபோகும் சிட்டுக்குருவி..

    இன் டாமில் வி ஹேவ் ஸோ மெனி சிட் குருவி ஸாங்க்ஸ்..எனில் முதல்ல ஒரு மலையாளப் பாடல்..ஓகேயா

    ஓலஞ்சாலிக் குருவி இளம்காற்றிலாடி வருதி..இனிமையாய் மனதை வருடும் மலையாளப் பாடல்..குருவிகளும் வெகு இளமையாய் இருக்குங்க்ணா..



    சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதிதெரியுமா
    எனை விட்டுப்பிரிஞ்சு போனகணவன் வீடு திரும்பல..

    அந்தக்காலப் படம் எனில் வருத்தம் தான் படறாங்க இந்தம்மா.. இந்தக்காலம்னா. ஹையா வரலை ஹிந்தி சீரியல் நிம்மதியா பாக்க்லாம்னு இருப்பாங்க..யாரு..யாரோ..


  9. #3318
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பறவைப் பாடல்கள் 6

    சாதல் வழியில்லை சாற்றுவேன் நானுமக்கு
    காதல் பறவையே காண்..

    ஆமா இந்தலவ்பேர்ட்ஸ்க்கு தமிழ்ல்ல என்னவாம்.. வெகு குட்டியா யெல்லோ அல்லது வெளிர்க்ரீன் கலர்ல க்குட்டியா இருக்கும்.. ஜோடியைப் பிரிச்சா செத்துப் போய்டுமாமே இஸிட் ட்ரூ..

    என்னவோ..லவ்பேர்ட்ஸ் லவ்பேர்ட்ஸ்னு இங்க ஒருகிளி பாடுது..


  10. #3319
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பறவைப் பாடல்கள் 7

    ஊக்கமாய்க் கூவி உறவுடன் உண்கின்ற
    காக்கைபோல் எங்குண்டு சொல்..

    யெஸ்.. பாரதி தான் நினைவுக்கு வருது..காக்கை ச் சிறகினிலே நந்தலாலா உன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா..



    ஏழாவது மனிதன் – தேவி தியேட்டர் தான் ரிலீஸ்.. ரொம்ப ஆசையாய்ப் போய்.. பாரதி பாடல்கள் மட்டும் நெஞ்சை அள்ளும் படம்.. ஸோ ஸோ தான் சிமெண்ட் ஃபாக்டரி என என்னவெல்லாமோ வரும்.. ஆமா ரகுவரன் முதல் படம்.. ஹீரோயின் யாரு தெரியலையே..

  11. #3320
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பறவைப் பாடல்கள் – 8

    ஆத்தங் கரையதனில் அழகாய்த் தவமிருக்கும்
    ..ஆழ மனத்திடையில் குறியாய்க் காத்திருக்கும்
    பார்த்தால் தூங்குதற்போல் பொய்யாய்த் தோற்றமிடும்
    ..பாய்ந்து மீனைத்தான் அலகில் கவ்விவிடும்
    தோற்றம் ஒல்லியென்றால் நோக்கம் வலிதன்றோ
    …சோர்வும் கொள்ளாமல் கால்கள் வலித்தாலும்
    வேட்டை ஆடுகின்ற கொக்கைப் போல்நெஞ்சில்
    ..வேகம் கொண்டாலே வெற்றி வருமன்றோ..

    ஆமாங்க்ணா.. அடுத்து வருவது கொக்கு..

    ஹச்சோ.. ஆதிபராசக்தியில கொக்குபறக்கும் அந்தக் குளக்கரையில் தேடினேனா அது கிடைக்கலை..அழகாக கண்ணுக்கு அழகாக இந்தப் பாட் தான் கிடைச்சது..

    A maiden has come beautifully from karpaka grove..ஆமா இங்க்லீஷ் ட்ரான்ஸ்லேஷனோட..

    மோகக் கவிதைக்கு முன்னுரை கேட்டிடும்
    நாதச் சலங்கைகள் கொண்டு
    மலர்ச் செண்டு மணம் கொண்டு

    முத்துப் பதித்தொரு ரத்தினப் பல்லக்கு
    வந்ததுபோல் வந்து நின்று
    வட்டமிடுவதைத் தட்டிப்பறித்திட
    வாடுது உள்ளங்கள் ரெண்டு ம்ம் கண்ணதாசன் அண்ட் வாணிஸ்ரீ..



    சரி சரி திட்டாதீங்க. .கொக்கு பாட் லேடஸ்ட் தான் இருக்கு கொக்குப் பற பற, கொக்கு சைவக் கொக்கு, கொக்கு மீனைத் திங்குமான்னு தான் இருக்கு..எனில் பழைய கொக்கு இருந்தால் நீங்கள் போடுங்கள்
    Last edited by chinnakkannan; 11th April 2015 at 01:24 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •