Page 97 of 401 FirstFirst ... 47879596979899107147197 ... LastLast
Results 961 to 970 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #961
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #962
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

  4. #963
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

  5. Likes KCSHEKAR liked this post
  6. #964
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

  7. #965
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அரசியல் ..அரசியல்வாதிகள் அதுவும் குறிப்பாக இந்திய அரசியல் இதனை விமர்சிக்க இந்த நாட்டு பிரஜை என்ற முறையில் அனைவருக்கும் உரிமை உண்டு என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து.

    தேவையான இடத்தில் தேவையான தருணத்தில் அது நடைபெற்றால் யாருக்கும் எந்த எதிர்கருத்தும் வராது. அதே சமயத்தில் சம்பந்தமே இல்லாமல் தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்தை தேவையற்ற தருணத்தில் சம்பந்தம் இலாத இடத்தில் பதிவு செய்வது தவறான ஒரு செயல்தான். அதில் மாற்று கருத்து கிடையாது. அந்த வகையில் திரு கோபால் அவர்கள் இந்த தருணத்தில் அவர் அவருடைய தனிப்பட்ட கருத்தை பதித்தது சரியா தவிர்க்ககூடியதா என்பது கேள்விக்குரிய ஒரு தனியான சர்ச்சயாகிவிடுகிறது.

    நடிகர் திலகம் திரியில் பயணிக்கும்போது அரசியல் கருத்து அரசியல்வாதிபற்றிய கருத்து எதற்கு ? நடிகர் திலகம் அவர்களை தாக்கி ஏதேனும் கருத்து வந்தாலோ அது நேரிடையாகவோ மறைமுகமாகவோ தாகும்பட்சதிலோ, கருத்து நடுநிலயில்லாத கருத்தாக இருக்கும் பட்சத்தில் நம் கருத்தை கூறுவதில் தவறில்லை என்றும் ஒரு சாரர் நினைக்க வாய்ப்புண்டு !

    எந்த வகையிலும் ஊழல் செய்யாத அரசியல்வாதி இந்த உலகத்தில் கிடையாது.

    இன்றுவரை மட்டுமல்ல...இனி வரும்காலங்களிலும் மக்கள் பயன் அடையும் வகையில் திட்டங்களை தீட்டுவதோடு மட்டும் அல்லாமல் அதை வெற்றிகரமாக அதிக அளவில் செயல்படுத்தி மக்கள் பயனடைய வைத்த தமிழகத்தின் ஒரே முதல் அமைச்சராம் உண்மையான பொற்கால ஆட்சி கொடுத்த கர்ம வீரர் காமராஜர் அவர்கள் மீதுகூட இவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை promote செய்கிறார் என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. விமர்சனத்திற்கு அவரும் ஆளானார்.

    சமூகத்தை எந்த விதத்திலும் காமராஜர் ஆட்சிகாலம் பாதிப்படயவைக்கவில்லை பாதிப்படையவும் இல்லை. காமராஜர் என்பது காங்கிரஸ் அல்ல...காமராஜர் காமராஜரே...!

    தமிழகம் எந்த அளவிற்கு இன்று பாதித்து உள்ளது என்பதற்கு சான்று திராவிடம் என்று கூறிக்கொண்டு ஆட்சிகட்டிலில் புகுந்த "திராவிட" என்று கூறிக்கொண்டு அமர்ந்த கட்சிகளின் ஆட்சி அவலம் என்று இன்றும் மக்கள் புலம்பிகொண்டுதான் இருக்கிறார்கள், அவர்கள் கொடுக்கும் காசையும் வாங்கிகொண்டு ஒசியும் அனுபவித்துக்கொண்டு...!

    கர்ம வீரரை குறிசொன்ன வாய்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தை ஒன்றும் சொர்க்கபுரியாக மாற்றிவிடவில்லை, மாறாக அதிக அவலங்களுடன் தரித்திர பூமியாக மாற்றியதுமட்டும் அல்லாமல் பூரண நிலையில் சாராய உற்பத்தி, மக்களை குடிமகன்களாகி, ஜாதிவெறி, இனவெறி, மொழிவெறி, காலாச்சார சீரழிவை (சமீபத்திய திராவிட முட்டாள்தனத்தின், காலச்சார சீரழிவை உறுதிபடுத்தும் தாலி அறுப்பு விழா உட்பட ) தமிழகத்திற்கு தங்களுடைய அன்புபரிசாக தந்துள்ளனர். இது எவனும் மறுக்க முடியாது...மறைக்கவும் முடியாது !

    இந்துக்கள் அதிகம் இருக்கும் தமிழகத்தில்தான் ஒரு முதுபெரும் அரசியல்வாதி ராமர் எந்த ENGINEERING கல்லூரியில் படித்தார் பாலம் அமைய என்று நக்கல் விடுத்தார் ! அதையும் நாம் கேட்டுக்கொண்டுதான் இருந்தோம் ..!

    யாராவது ஒருவர் ஆமாம் அய்யா...ராமருக்கும் உங்களுக்கும் அடிப்படயிலயே ஒத்துபோகாது..உங்கள் கொள்கை வேறு அவர் கொள்கை வேறு ...அவர் ஏக பத்தினி விரதன்....என்று யாரவது ஒருவர் கூறினார்களா ? இல்லையே ..? இதை நாம் சொன்னால் அது அவரது சொந்த விஷயம் அதில் தலையிட நமக்கு உரிமை இல்லை என்பார்கள்....அதே சமயத்தில் ராமரை கிண்டல் செய்தால் அது பொதுவிஷயம் என்று நம்மை மௌனம் காக்க எதிர்பார்ப்பார்கள் ....இதுதான் திராவிட ஞாயம்...!

    ஜாதி அடிப்படையில் ஏமாந்த ஒரே சாதியம் பிராமண ஜாதியை சாடும் இவர்கள்...ஜாதி வெறி கொண்ட அதற்காக வெட்டு குத்து வரை போகும் ஜாதிகளை சாடமாட்டார்கள்...காரணம் தமக்கும் வெட்டு விழுமோ என்ற பயம்...அகவே, பயந்து ஒதுங்கும் ஜாதியை பின்தொடர்ந்து இவர்கள் தாகும் வழக்கம் ! இதுவும் திராவிட ஞாயமே..!

    ஒரு முன் உதாரணமாக இருக்கும் தகுதி இவர்களுக்கு அடிப்படையிலேயே கிடையாது...! இருந்தும் தமிழகம் இவர்களை இன்றுவரை காசுவாங்கிக்கொண்டு ஓசி வாங்கிகொண்டு தாங்கிகொண்டுதான் இருக்கிறது...!

    தேச துரோக செயல் கூட இவர்கள் ஈடுபட்டிருப்பார்கள் பண்டித நேரு மட்டும் தக்க சமயத்தில் தலையிட்டிருக்காவிட்டால்...! இந்த உண்மை அனைவருக்கும் தெரியும்...!

    இதற்க்கு முழுபொறுப்பு இந்த திராவிட சம்பந்தம் கொண்ட கட்சிகள் மட்டுமே !

    இந்த திரியில் மேற்கூறிய விஷயங்கள் சம்பந்தம் உள்ளவா என்றால் இல்லை. ஆனால் இதுவும் வந்த பதிவுகளுக்கு பதில் உரைக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு conscious impact . அவ்வளவே..!

    எந்த அரசியல்வாதியையும் அவர்கள் 100% யோகியம் உள்ளவர்களாக இல்லாத பட்ச்சத்தில் விமர்சனம் செய்ய குடிமக்களுக்கு உரிமை நிச்சயம் உண்டு...ஆனால் இந்த திரியில் அது தேவையா என்று ஒரு கேள்வியும் கூடவே எழுகிறது !

    Rks
    Last edited by RavikiranSurya; 12th April 2015 at 11:36 AM.

  8. #966
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அரசியல் என்றுமே நடிகர்திலகத்தின் விருப்பமாக இருந்ததில்லை அதையும் தாண்டி அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து நெஞ்சங்களிலும் நடிகர்திலகமாக
    வாழ்ந்து கொண்டிருப்பவரின் புகழ் பாடும் இத்திரியில் அரசியல் வட்டத்திற்குள் அவரை சிறை பிடித்து கொச்சைப் படுத்த வேண்டாமே!!

    நடிகர்திலகம் பற்றிய விமர்சனங்களும் தற்போதைய சூழலில் காலம் கடந்தவையே ....ஒருவர் புகழை ஒருவர் மறைத்து வளரும் வரலாறில்லை என்றுரைத்த நடிக மாமன்னர் .........காலத்தை வென்று வளரும் நடிகர்களுக்கும் கலையார்வம் கொண்ட எதிர்கால சந்ததியினருக்கும் கல்வெட்டாய் திகழும் காவியங்களின் நாயகனை போற்றுவது அவர்தம் புகழ் பரப்புவது மட்டுமே இத்திரி வாயிலாக நமது குறிக்கோளாக இருப்பதே மனதுக்கு இதம்.

    பதிவர்களிடையே கசப்புணர்வுகள் தவிர்க்கப்பட வேண்டும். பதிவுகளின் நோக்கம் தமிழ் திரை வரலாற்றை சிவாஜிக்கு முன் சிவாஜிக்கு பின் என்ற நிலைக்கு உயர்வடைய நடிப்பு பரிமாணங்களை தனது சுவாசமாகக் கொண்டிருந்த நடிகர்திலகத்தை பெருமைப்படுத்துவதாக மட்டுமே இருத்தல் நம்மை மகிழ்வித்தவருக்கு நாம் செலுத்தும் உண்மையான இதய அஞ்சலி!

    He remains the invincible emperor in our hearts!

    Last edited by sivajisenthil; 12th April 2015 at 12:38 PM.

  9. Likes KCSHEKAR liked this post
  10. #967
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    ஆரம்பிச்சுட்டார்யா .. பெரியார் / அண்ணா / கலைஞர் / எம்.ஜி.ஆர் மீது அரசியல் காழ்ப்புணர்வு இருந்தால் வேறெங்கோ போய் வாந்தி எடுக்கலாமே .. எதற்கு மீண்டும் மீண்டும் நடிகர் திலகம் திரியில் தொடர்ந்து இவர் வாந்தி எடுக்க அனுமதிக்கப்படுகிறார் என தெரியவில்லை .

    என்னமோ பெரிய அரசியல் ஞானி போல நினைத்துக்கொண்டு ஏன்பா இப்படி மரண மொக்கை போடுறார் இந்த rks ?
    என்னமோ நாட்டுல உள்ளவனெல்லாம் முட்டாள் மாதிரியும் இவர் மட்டுமே அனைத்தும் தெரிந்த அறிவாளி போல .

    இது பெரியார் பூமி ..இப்படியே பொலம்பிட்டே இருக்க வேண்டியது தான் .

  11. Likes venkkiram liked this post
  12. #968
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் திரு.முரளி அவர்களுக்கு,

    புரட்சித் தலைவர் பற்றி ஏதாவது வந்தால் உடனே எதிர்வினையாற்றி விடுவார் என்று என்னைப் பற்றி கூறியிருக்கிறீர்கள். புரட்சித் தலைவரைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களுக்குதான் நான் பதில் அளிக்கிறேன். இதில் என்ன தவறு இருக்க முடியும்? திரு.சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி எங்கள் திரியில் தவறாக விமர்சனம் செய்வோம்.(அரசியல் ரீதியிலேயே எடுத்துக் கொள்வோம்) ஆனால், நீங்கள் யாரும் எதிர்வினை ஆற்றக்கூடாது என்று நாங்கள் சொன்னால் அது நியாயமாகுமா?

    திரு. முக்தா சீனிவாசன் அவர்களின் பேட்டி வெளியாகும் என்று சகோதரர் திரு.செல்வகுமார் சில மாதங்களுக்கு முன் கூறினார். ‘எதிர்மறையாக இருந்தால் அதை தவிருங்களேன்’ என்று நீங்களே கோரினீர்கள். இதை ஏற்றுக் கொண்டு அவர் அந்தப் பேட்டியை பதிவிடுவதை தவிர்த்தாரே? அதேபோன்ற கோரிக்கையைத்தான் நாங்களும் வைக்கிறோம்.

    அரசியல் ரீதியாக புரட்சித் தலைவர் பற்றிய விமர்சனங்கள் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. எதிர்மறையான விமர்சனத்தை தவிர்க்கலாமே? என்றுதான் கூறுகிறோம். அப்படி உங்களுக்கு புரட்சித் தலைவரின் குறிப்பிட்ட அரசியல் நடவடிக்கை சரியில்லை என்று தோன்றினால், தாராளமாக அதைப் பற்றி நீங்கள் என்னிடமே கேள்வி கேட்கலாம். நானும் விளக்கம் அளிக்கத் தயார். அதை விட்டு, மதுரை திமுக மாநாட்டில் புரட்சித் தலைவர் ஊழலுக்கு வக்காலத்து வாங்கினார் என்று குறிப்பிட்டால், ஊழலுக்கு வக்காலத்து வாங்கியவர்களை எல்லாம் நாங்களும் பட்டியலிட முடியுமே? அரசியல் பற்றிய விவாதங்களுக்கு நமது மய்யம் இணையதளத்திலே கரண்ட் அஃபேர்ஸ் என்ற பிரிவு இருக்கிறது என்றால் நீங்களும் உங்கள் அரசியல் கருத்துக்களை அங்கேயே தெரிவிக்கலாமே? நானும் வந்து கலந்து கொள்கிறேன். எனக்கும் நீங்கள் ஆதரித்த 1975 அக்டோபர் 2 வரையிலான காங்கிரஸ் பற்றி நிறைய கேள்விகள் இருக்கின்றன. ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபடுவோம்.

    அதை விடுத்து, 1971-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பையே, ரஷ்ய மையால் கிடைத்த வெற்றி என்று சிவாஜி கணேசன் அவர்களின் திரியிலேயே கருத்து கூறுகிறீர்கள். அப்படி சொன்னவர்களை ‘‘நாம நல்லா தோத்துட்டோம். அதை முதல்ல புரிஞ்சுக்கங்க. அப்போதுதான், அடுத்த தேர்தலிலாவது வெற்றி பெறுவோம்’’ என்று கூறி பெருந்தலைவர் காமராஜரே கண்டித்தார் என்று திரு.சோ அவர்களும், நவசக்தி நாளிதழ் ஆசிரியராக இருந்த திரு.பி.சி.கணேசன் அவர்களும் பதிவு செய்துள்ளனர்.

    திரு.செல்வகுமார் சார் சொல்வது போல, எங்களுக்கும் நண்பர்களான திரு.ராகவேந்திரா சார், திரு.ரவி சார் போன்றவர்களை திரு.கோபால் அவர்கள் கடுமையாக விமர்சிக்கும்போதும், நீங்கள் கூறினீர்களே எகிப்து அதிபர் நாசர் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் வீடு தேடி வந்தார் என்று. ஆனால், நாசர் விசாரித்த பிறகுதான் நேருவுக்கே திரு.சிவாஜி கணேசன் அவர்களை தெரியும் என்று திரு.கோபால் கூறுகிறார். அதையெல்லாம் கேட்காமல், திரு.செல்வகுமாரை கேட்கிறீர்களே? நியாயமா?

    நான் கடந்த வாரம் மதுரகானம் திரியிலேயே திரு.கோபால் அவர்களை கேட்டேன். ‘திரு.ராகவேந்திரா சாரின் வயதுக்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா?’ உடனுக்குடன் பதில் சொல்லாதீர்கள், நேரம் எடுத்துக் கொண்டு, மறுநாள் சொல்லுங்கள். அப்போது, உங்கள் நகைச்சுவை உணர்வு உங்களுக்கு கைகொடுக்கும். எழுத்தாற்றல் மிக்க நீங்கள் நல்ல கட்டுரைகள் எழுதினால் பாராட்டுக்கள் குவியும், நாங்களும் மகிழ்வோம்’ என்று நட்பு ரீதியில் ஆலோசனையும் கூறினேன். அவரும் பெருந்தன்மையாக அதை ஏற்றுக் கொண்டார். ‘எனக்கும் சண்டை போடுவதில் விருப்பமில்லை’ என்று கூறினார். நானும் மகிழ்ச்சி தெரிவித்தேன்.

    ஆனால், 3 நாட்களில் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ‘தூங்காதே, திருடாதே, ஏமாற்றாதே என்று பாடிய புரட்சித் தலைவர் செய்ததென்னவோ அதைத்தான் என்று கூறுகிறார். என்ன இது? மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக இருக்கிறதே? என்று வெறுத்துப் போய்விட்டேன். நீங்களும் கேட்க மாட்டீர்கள். நாங்களும் எதிர்வினை ஆற்றக் கூடாது என்று கூறுவது நியாயமா? என்பதை நீங்களே சொல்லுங்கள் திரு. முரளி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  13. #969
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    நேரடியாகவே கேட்கிறேன் ..இந்த திரியில் சிலரின் நோக்கம் நடிகர் திலகம் என்னும் கலைஞனை பற்றி பேசுவதா இல்லை திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதா ?

    இவர்களின் அஜெண்டாவுக்கு காமராஜர் ஊறுகாய் .. என்னமோ இவர்கள் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் காமராசருக்கு நாம எதிரி போல ஒரு பிம்பத்தை உருவாக்குவது அபத்தம்.

    காமராஜரின் அருமை பெருமைகளை நீங்கள் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டிய நிலமையில் எங்களைப் போன்ற திராவிட இயக்க ஆதரவாளர்கள் இல்லை .. தன்னுடைய சீடர்களுக்கு எதிராக காமராஜரை தொடர்ந்து ஆதரித்து வந்தவர் எங்கள் தலைவன் தந்தை பெரியார். என்னமோ தமிழக மக்கள் காமராஜரை தூக்கி வீசி விட்டு அண்ணாவை கொண்டுவந்தது போல அள்ளி விடுவது இன்னொன்று .. காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டதுக்கு யார் காரணம் என இ.வி.கே.எஸ் இளங்கோவனே சமீபத்தில் தெளிவாக சொன்னாரே.


    அப்புறம் காமராசரை திராவிட இயக்கத்தார் அப்படித் திட்டினார்கள் ..ஐயகோ ..நாகரீகம் என்றெல்லாம் இவர்கள் அழுது புலம்புவார்கள் .. பேரறிஞர் அண்ணா பற்றி இவர்கள் பாடாத வசையா .. அரசியல் களத்தில் எதிர்வரிசையில் நின்றால் இரு புறமும் வரம்பு மீறுவது இயல்பு தான் , தவிர்க்கப்பட வேண்டியதென்றாலும் . இந்திரா காந்திக்காக காமராஜரை அம்போவென விட்டுட்டு ஓடினவனெல்லாம் இப்போது காமராஜர் காமராஜர் என கூப்பாடு போடுவதை விட , அரசியல் ரீதியாக எதிர்த்தாலும் அவரது இறுதி காலத்திலும் , அவர் மறைவிலும் கலைஞர் காட்டிய முதிர்ச்சிக்கு முன் இந்த காரியக்கார காங்கிரஸ் காரர்களின் விசுவாசம் ஒரு தூசிக்கு சமமாகாது .

    அப்புறம் திராவிட இயக்க ஆட்சிகளால் தமிழகம் நாசமாய் போய்விட்டது ஐயகோ புலம்பல்கள் .. தேசிய கட்சிகள் தொடர்ந்து கிழித்த மாநிலங்களை விட தமிழகம் ரொம்ப நல்லாவே எல்லா துறையிலும் முன்னேறித்தான் இருக்கு .. அதனால இந்த குஜராத் மாடல் போட்டோ ஷாப் பருப்பெல்லாம் இங்கு வேகாது . பலருக்கு எல்லா தரப்பும் முன்னேறி விட்டார்களே என அரிப்பு இருக்கத்தான் செய்யும் ..அதற்கு ஒன்றும் செய்ய முடியாது .


    இது நடிகர் திலகம் திரி .. அவர் பற்றி பேசுங்கள் ..உங்கள் திராவிட இயக்க எதிர்ப்பு வன்மத்துக்கு இது இடமல்ல .. தொடர்ந்தால் நான் பார்க்க நேர்ந்தால் தொடர்ந்து பதிலடி கொடுக்கப்படும் . கேட்க ஆளில்லைன்னு ரொம்ப ஆட வேண்டாம் நண்பர்களே.
    Last edited by joe; 12th April 2015 at 03:58 PM.

  14. Likes venkkiram liked this post
  15. #970
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    பாடல் காட்சிகளில் பார்வையாளராக நடிகர்திலகம் / NT as silent Spectator in Song Sequences
    பெரும்பாலும் புகழின் உச்சத்தில் இருக்கும் திரைக்கதாநாயகர்கள் தனக்கு முக்கியத்துவம் இல்லாத பாடல் காட்சிகளில் தலை காட்டவே தயங்குவார்கள்
    கதையோட்டத்துக்கும் காட்சியமைப்புக்கும் தேவையெனில் சாதாரணமாக வந்து போவதில் நடிகர்திலகம் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை
    இதற்கு நல்ல உதாரணம் நான் பெற்ற செல்வம் திரைக்காவியத்தில் குழந்தைகள் பாடி நடிக்கும் ஒரு காட்சியமைப்பில் ஒரே ஒரு சீன் தலை காட்டுகிறார் நடிப்பின் பரம்பொருள்

    Last edited by sivajisenthil; 12th April 2015 at 04:30 PM.

  16. Likes KCSHEKAR liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •