-
13th April 2015, 09:06 PM
#1011
Junior Member
Senior Hubber

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
13th April 2015 09:06 PM
# ADS
Circuit advertisement
-
13th April 2015, 09:09 PM
#1012
ஜோ,
நாம் பலமுறை இங்கே விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறோம். குறிப்பாக அரசியல் சார்ந்த விவாதங்களில் பங்கெடுத்திருக்கிறோம். காரசாரமாக விவாதித்திருக்கிறோம். ஆனால் ஒரு நாளும் நீங்கள் தரம் தாழ்ந்தோ அல்லது ஒருமை விளிகளை பயன்படுத்தி நான் பார்த்ததில்லை. ஆனால் நேற்று நீங்கள் பயன்படுத்திய வாக்குகளும் உங்கள் பதிவின் தொனியும் மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது என்பதை சொல்ல விரும்புகிறேன்.
அன்புடன்
-
13th April 2015, 09:09 PM
#1013
ஆர்கேஎஸ்,
உங்கள் பங்கிற்கு நீங்களும் தரம் தாழ்ந்து வார்த்தைகளை கொட்டியிருக்கிறீர்கள். அவர்கள்தான் முதலில் ஆரம்பித்தார்கள் என நீங்கள் சொல்லலாம். இருந்தாலும் கூட நீங்கள் பொறுமை காத்திருக்கலாம். தேவையற்ற வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். இந்த திரியில் அரசியல் தேவையா என்று கேள்வி கேட்ட நீங்களே அந்த அரசியலை ஆராய்ச்சி செய்திருக்க வேண்டாம். இனி மேலாவது நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட கலையுலக செய்திகளை மட்டும் பதிவிடுங்கள்..
அன்புடன்
-
13th April 2015, 09:11 PM
#1014
Junior Member
Regular Hubber
எல்லோருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
-
13th April 2015, 09:12 PM
#1015
செல்வகுமார் சார்,
சத்தியமாக இப்படி ஒரு பதிவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நான் நட்பான முறையில்தான் உங்களிடம் ஒரு சில கேள்விகளை முன் வைத்தேன். கோபாலுக்கு வக்காலத்து வாங்கி எழுப்பட்ட கேள்விகள் அல்ல அது. பல நாட்களாக உங்கள் இருவரிடமும் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்ததுதான். கோபாலுக்கு நீங்கள் போட்ட பதில் அதற்கு ஒரு காரணியாக அமைந்திருந்தது என்பதுதான் உண்மை. ஆனால் உங்கள் பதிலை பார்த்தவுடன்தான் அதில் தெறிக்கும் கோபத்தை பார்த்தவுடன்தான் என் தவறு எனக்கு புரிந்தது. உங்களை கேள்வி கேட்க கூடாது என்று எனக்கு தெரியாது. தெரியாமல் நடந்த தவறை மன்னிக்கவும்.
என் செய்கைக்கு ஒரு உள்நோக்கமும் கற்பித்திருக்கிறீர்கள். சிவாஜியை திட்டினாலும் பரவாயில்லை. எம்ஜிஆரை குறை கூறுவதால் கோபாலை ஆதரிக்கிறேன் என்று. நான் யாரையும் என்றுமே திட்டியதில்லை. இந்த இணையதளத்தில் 9 வருடங்களாக பயணிக்கிறேன். நான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேனோ அதை நான் நேரிடையாகவே சொல்லி விடுவேன் எனக்கு வேறு யார் துணையும் தேவையில்லை. இங்கே தொடர்ந்து வருபவர்களுக்கு நான் சொலவது புரியும்.
இனி நீங்களும் சரி கலைவேந்தனும் சரி சென்ற வாரம் கோபால் எழுதிய சில பதிவுகளைப் பற்றி குறிப்பிட்டு நான் அதை கண்டிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். உண்மையில் நடந்தது என்ன என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் குறிப்பிடும் சம்பவம் நடப்பது ஏப்ரல் 3 வெள்ளியன்று. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் வெளியூர் பயணம் மேற்கொண்டிருந்தேன். சென்ற இடத்தில கணினி இல்லை. என்னிடம் laptop மற்றும் mobile-ல் படிக்கும் வசதிகளும் இல்லாததால் என்னால் மய்யம் இணையதளத்தை பார்க்க முடியவில்லை. சென்ற இடத்தில அலைபேசி சிக்னலும் இல்லை என்பதால் நான் எவருடனும் அல்லது மற்றவர்கள் என்னிடமோ தொடர்பு கொள்ள இயலாத சூழல். இரவு 10 மணிக்கு மேல் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியில் வந்தபோது அலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர் திரியில் பதியப்பட்ட சில விரும்பத்தகாத பதிவுகளைப் பற்றி குறிப்பிட்டார், என்னால் access பண்ண முடியாத காரணத்தினால் உடனே மலேசியாவில் வசிக்கும் ஹப் அட்மினை (Hub Admin ) சார்ந்த சீனியர் மாடரேட்டரான NOV அவர்களை தொடர்பு கொண்டு (மலேசியாவில் அப்போது நள்ளிரவு) விஷயத்தை விளக்கி பதிவுகளை நீக்கி விடுமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் நமது இந்திய நேரத்தின்படி சனிக்கிழமை அதிகாலை சர்ச்சைக்குரிய பதிவுகள் அனைத்தையும் நீக்கி விட்டார். நான் ஞாயிறு நள்ளிரவுதான் சென்னை வந்தேன். என்னால் திங்கள் மாலைதான் ஹப் பர்ர்க்க முடிந்தது. பதிவுகள் நீக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று தினங்கள் ஆன நிலையில் மீண்டும் நடந்தவற்றைப் பற்றி பகிரங்கமாக குத்தி கிளற விரும்பவில்லை. இவை அனைத்தும் ராகவேந்தர் சாருக்கு தெரியும். மற்ற பல ஹாப் உறுப்பினர்களுக்கும் தெரியும்.
இப்போதும் கூட இவற்றையெல்லாம் சொல்லித்தான் என் நேர்மையை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. ஆனால் இந்த விவரங்களெல்லாம் தெரியாத திரியின் வாசகர்கள் ஒரு சிலருக்கேனும் இப்படிப்பட்ட சந்தேகங்கள் இருக்குமானால் அவர்களுக்காகவே இந்த விளக்கம்.
நான் மாடரேட்டர் ஆன பிறகு மிக அதிகமாக எடிட் செய்தது கோபாலின் பதிவுகளைத்தான். அதையும் நான் திரியில் பதிவு செய்திருக்கிறேன். ஆக கோபாலுக்கு சலுகை என்பதெல்லாம் அவரவர் கற்பனையே தவிர வேறொன்றில்லை
Current Affairs section பற்றி சொன்னது உங்களை அங்கே போய் எழுத் சொல்லவில்லை. அரசியல் பற்றிய விவாதங்கள் இடம் பெறும் இடம் என்பதை மட்டுமே சுட்டிக் காட்டினேன்.
அதே போல் எம்ஜிஆர் பற்றி விமர்சனம் வந்தால் எதிர்ப்போம். ஆனால் கருணாநிதி பற்றி நாங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று சொல்லியிருக்கிறீர்கள். புரிந்துக் கொண்டேன்.
அதே போல் இந்த திரியில் காங்கிரஸ்காரர்கள் யாருமில்லை. ஆகவே இன்றைய தமிழக காங்கிரஸில் நடைபெறும் விஷயங்களை நடிகர் திலகம் திரியின் பங்களிப்பாளார்களோடு தொடர்புபடுத்துவதை தவிர்க்கலாமே என்றுதான் சொன்னேன். அதற்கும் நீங்கள் தொடர்பேயில்லாமல் ஏதோ சொல்லியிருக்கிறீர்கள்.
இறுதியில் முக்கியமான ஒன்றை குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த திரியின் நடுநிலை பற்றி. அந்த வார்த்தைக்கு அர்த்தமே இந்த நடிகர் திலகம் திரிதான். நீங்கள் கலைவேந்தன் இளைய சகோதரர் யுகேஷ் பாபு போன்றவர்கள் பலமுறை கடுமையான வார்த்தைகளை இங்கே பயன்படுத்தியிருக்கிறீர்கள். அவை அனைத்தும் இன்னமும் அதே போல்தான் இருக்கிறது. இவ்வளவு ஏன், நண்பர் கலைவேந்தனின் பதிவுகளில் இருந்த ஒரு சில முரண்களை நான் சுட்டிக் காட்டியபோது என் மீது கோவம் கொண்டு என்னை வரலாறு தெரியாதவன் என்று எழுதினார். அதைகூட நீக்காமல் அப்படியேதான் வைத்திருக்கிறோம். நடிகர் திலகத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்களை கூட நாங்கள் நீக்கியதில்லை.
என்னால் இனி உங்களுக்கு தொந்தரவு இருக்காது. வருகை தந்து பதில் சொன்னதற்கு நன்றி!
அன்புடன்
-
13th April 2015, 09:13 PM
#1016
எம்ஜிஆர் திரியின் பங்களிப்பாளர் திரு c.s..குமார் அவர்களுக்கு,
என்னைக் குறிப்பிட்டு நீங்கள் எழுதிய பதிவை படித்தேன்.
நான் உங்களைப் பார்த்ததில்லை. பேசியதில்லை. பழகியதில்லை. ஆனால் நண்பர் சுவாமி உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். நீங்கள் அண்மையில்தான் ஹப்பில் சேர்ந்திருந்தாலும் பல வருடங்களாக திரிகளை வாசித்து வருபவர் என்று சொல்யிருக்கிறார். அப்படி இருந்தும் உங்கள் புரிதலில் நான் மாறுபட்டு நிற்கிறேன் என்று புரிகிறது. என்னைப் பற்றி எழுதியதற்கும், உங்கள் புரிதலுக்கும் அந்த புரிதலுக்கு காரணமாக இருந்த உங்கள் நல்ல மனதுக்கும் என் நன்றி!
அன்புடன்
-
13th April 2015, 09:15 PM
#1017
நண்பர் கலைவேந்தன்,
நான் சொல்லுவதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் வருகிறது. இல்லை உங்களைப் போல் என்னால் தெளிவாக எழுத முடியாததும் அதற்கு காரணமாக இருக்கலாம். நீங்கள் சொன்ன உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். 1972 ஆகஸ்ட் மதுரை திமுக மாநாட்டில் எம்ஜிஆர் அவர்கள் பேசியதைக் குறிப்பிட்டேன். அவர் பேசியது உண்மை. அதை நீங்கள் மறுக்கவில்லை. அதற்கு சிவாஜியும் ஊழல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கினார் என்று சொன்னீர்கள். ஒரு தவறு மற்றொரு தவறை நியாயப்படுத்திவிடாது என்பது என் எண்ணம். இருப்பினும் ஒரு விவாதம் என்ற முறையில் அதை ஒப்புக் கொண்டாலும் கூட அதை தொடர்ந்து சிவாஜி பற்றி கருணாநிதி சொன்னதாக நீங்கள் சொன்னதைத்தான் நான் எதிர்த்தேன். அதை சொல்வதற்கு என்ன தேவை வந்தது? அதை சுட்டிக் காட்டியும் கூட நீங்கள் அதை நீக்கவில்லை. பிறகு மதுர கானங்கள் திரியில் வாசுவிடமும் ராகவேந்தர் சாரிடமும் மன்னிப்பு கேட்டீர்கள் (விஷயம் என்னவென்று சொல்லாமலே). பரவாயில்லை.
எம்ஜிஆரைப் பற்றி ஒன்று சொல்லி விட்டார் ஆகவே நாமும் பதிலுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பது போலதான் நடந்து கொள்கிறீர்கள் என்பதுதான் நான் குறிப்பிட்டது. எம்ஜிஆரைப் பற்றி நாங்கள் எதாவது சொன்னால் நீங்கள் எதிர் வினையாற்றக் கூடாது என்று சொல்லவில்லை. காரண காரியங்களோடு பதில் இருந்தால் ஏன் இதை சொல்லப் போகிறோம்?.
1971 தேர்தல் பற்றி ரஷ்ய மை பற்றி நான் குறிப்பிட்டதை சுட்டிக் காட்டுகிறீர்கள். அது நான் இட்டுக் கட்டிய கட்டுக் கதையல்ல நண்பரே! அன்றைய தினம் பல்வேறு பத்திரிக்கைகளில் பருவ இதழ்களில் வெளி வந்த தகவல்களைதான் நான் குறிப்பிட்டேன். அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டன என்பதுதான் அதன் சாரம். இவ்வளவு ஏன் அன்றைய பொதுத் தேர்தலில் சென்னையில் நடிகர் திலகம் அவர்களின் வாக்கையே வேறு ஆளை வைத்து கள்ள ஓட்டுப் போட்டது உலகம் அறிந்த ஒன்றுதானே!
"ரஷ்ய மையெல்லாம் இல்லேனேன்! மக்கள் நமக்கு ஓட்டுப் போடலனேன்! அவ்வளவுதான்" என்று பெருந்தலைவர் குறிப்பிட்டது உண்மை. அது அவரின் பெருந்தன்மை. இப்படி பெருந்தலைவர் சொன்னதையும் இதே நடிகர் திலகம் திரியில் நான் பதிவு செய்திருக்கிறேன். அதை நீங்கள் படிக்கவில்லையென்றால் நான் என்ன செய்வது?
எவரையும் வேண்டுமென்றே குற்றம் சொல்வது எனது நோக்கம் அல்ல. சில விஷயங்களைப் பற்றி எழுதும்போது உங்களுக்கு அது தர்மசங்கடமான கோணமாக இருக்கலாம். ஒவ்வாமையாக இருக்கலாம். அதற்காக எழுதியவர்கலைப் பழிப்பது என்பது சரியா எனபதுதான் என் கேள்வி?
1975 அக்டோபர் 2 -கு முன்பு இருந்த காங்கிரஸ் பற்றி ஆரோக்கியமான விவாதம் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறீர்கள். நிச்சயமாக அதற்கான நேரம் காலம் கூடி வரும்போது செய்வோம்
செலவகுமார் சாருக்கும் உங்களுக்கு இத்தனை விளக்கமாக பதில் எழுதுவது நிலைப்பாட்டை விளக்கவே! விவாதங்களை வளர்க்க அல்ல!
புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்
அன்புடன்
Last edited by Murali Srinivas; 13th April 2015 at 09:24 PM.
-
13th April 2015, 09:25 PM
#1018
உலகெங்கும் வாழும் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் இந்த திரி பங்களிப்பாளர்களுக்கும் வாசகர்களுக்கும் மற்றும் அனைத்து அன்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th April 2015, 09:26 PM
#1019
Junior Member
Regular Hubber
சென்ற வாரம் என் மகன் படம் முரசு tv யில் பார்க்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.இரட்டை வேடத்தை மிக அழகாக,எளிதாக கையாண்டதை இந்த வயதில்தான் புரிந்து ரசிக்க முடிந்தது.நாம் எவ்வளவுதான் படித்திருந்தாலும் எத்தனை முறை தான் பார்த்து ரசித்தாலும் ஒவ்வொரு முறையும் நமக்கு ஒரு புது படம் பார்த்ததை போன்றே உணர்வை தருபது தான் நடிகர்திலகம் படங்கள்.
-
13th April 2015, 10:30 PM
#1020
Junior Member
Senior Hubber

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
Bookmarks