-
23rd April 2015, 10:29 PM
#1291
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
ரவி.
தங்களுடைய பங்களிப்பில் இம்மய்யத்தில் 800 பதிவுகளைக் கடந்துள்ளதற்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
மிகவும் நன்றி சார் . இங்கு பதிவு செய்யும் அனைவரையும் பார்க்கும் பொழுது , ஒவ்வொருவருடைய சாதனைகளையும் நினைக்கும் போது , என்னுடைய பதிவுகளின் எண்ணிக்கை ஒரு மழைத்துளியை விட மிகவும் சிறியது சார் - போக வேண்டிய பாதை இன்னும் வெகு தூரம் .
அன்புடன்
ரவி
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd April 2015 10:29 PM
# ADS
Circuit advertisement
-
23rd April 2015, 11:59 PM
#1292
பாவமன்னிப்பு 51 - பாகம் 5
29. இப்படத்தின் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுகளை 'கொலம்பியா' நிறுவனம் வெளியிட்டது. இசைத்தட்டுகள் விற்பனை வரலாற்றில், "பாவமன்னிப்பு" படப்பாடல்களின் இசைத்தட்டுகள் இமாலய சாதனையை ஏற்படுத்தின.
30. "பாவமன்னிப்பு" வெளியாகி சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தது. படம் மட்டுமன்றி பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஏற்கனவே பிரபலமாகியிருந்தன. இதனை அறிந்த ஏவிஎம் நிறுவனத்தினர் - இன்னொரு நூதன விளம்பர யுக்தியாக - "பாவமன்னிப்பு பாட்டுப் போட்டி"யை படம் வெளியான நான்காவது வாரத்தில் [7.4.1961] அறிவித்தனர்.
31. ஏவிஎம் அறிவித்த "ரசிகப் பெருமக்களுக்கு பரிசு - பாவமன்னிப்பு பாட்டுப் போட்டி" அறிவிப்பு இதுதான்:
"இப்படத்திலுள்ள பாட்டுகள் அனைத்துமே சிறப்பாக இருப்பதாய் ஏகோபித்த பாராட்டுதல்கள் வருகின்றன. இப்பாட்டுகளை அதனதன் தராதரத்தின்படி, வரிசைப்படுத்தும்போது பாட்டின் இசை, பாட்டின் கருத்து மற்றும் ஒவ்வொரு பாட்டும் எவ்விதம் அந்தந்த காட்சிக்கு உறுதுணையாய் இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு படத்திலுள்ள எட்டு பாட்டுகளையும் வரிசைப்படுத்தி எழுதி பரிசு பெறுங்கள்...
முற்றிலும் சரியான விடைக்கு முதல் பரிசு ரூ.4000/-
ஒரு தவறுள்ள விடைக்கு இரண்டாவது பரிசு ரூ.2000/-
இரண்டு தவறுள்ள விடைக்கு மூன்றாவது பரிசு ரூ.1000/-
திருவாளர்கள் டாக்டர் மு.வரதராசனார், சங்கீத கலாநிதி முசிறி சுப்ரமண்ய ஐயர், ஔவை டி.கே.ஷண்முகம், தொழிலாளர் தலைவர் பட்டாபிராமன் எம்.பி. ஆக நால்வரும் தேர்வு குழுவிலிருக்க இசைந்துள்ளார்கள். அவர்களின் தீர்ப்பே முடிவானது. தீர்ப்பின் முடிவுப்படி பரிசு பெற்றவர்களுக்கு 'பாவமன்னிப்பு' 100வது நாள் விழாவன்று பரிசளிக்கப்படும். உங்கள் விடைகளை 10.6.1961 தேதிக்குள், 'பாவமன்னிப்பு பாட்டுப் போட்டி', ஏவிஎம் ஸ்டூடியோ, சென்னை - 26 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். முடிவு தேதிக்குப் பின் வரும் விடைகள் கவனிக்கப்படமாட்டாது."
32. ரசிகப்பெருமக்கள் பெருமளவில் இப்போட்டியில் கலந்து கொண்டனர். ஏவிஎம் நிறுவன அலுவலகத்தின் ஒரு பெரிய அறை முழுவதும் விடைகள் வந்து குவிந்தன. அதன் பின்னர் தேர்வுக் குழுவினரும் முடிவு செய்து தங்களது தீர்ப்பினை வெளியிட்டனர். அத்தீர்ப்பின்படி வரிசைப்படுத்தப்பட்ட படத்தினுடைய எட்டு பாடல்கள்:
"1. காலம் பல கடந்து / சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
2. அத்தான் என் அத்தான்
3. வந்தநாள் முதல் இந்தநாள் வரை
4. காலங்களில் அவள் வசந்தம்
5. பாலிருக்கும் பழமிருக்கும்
6. ஓவியம் கலைந்ததென்று
7. எல்லோரும் கொண்டாடுவோம்
8. சாயவேட்டி தலையில கட்டி"
சரியான விடைகளை எழுதி வெற்றி பெற்ற ரசிகப் பெருமக்களுக்கு, "பாவமன்னிப்பு" 100வது நாளன்று பரிசுகளும் வழங்கப்பட்டன.
33. "பாவமன்னிப்பு" திரைப்படம்தான், தமிழ் சினிமா வரலாற்றில், முதன்முதலில், ஒரு படத்தினுடைய பாடல்களையும், ரசிகர்களைவும் சம்பந்தப்படுத்தி ஒரு போட்டி நடத்தப்பட்ட முதல் படம்.
34. 1961-ல் பம்பாய் மாநகரில் இக்காவியம் வெளியான போது, இசைச் சகோதரிகள் லதா மங்கேஷ்கரும், ஆஷா போன்ஸ்லேவும் காணச் சென்றனர். படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பு அப்படியே அவர்களை உருக்கி விட்டது. பல காட்சிகளின் போது அவர்கள் இருவரின் கண்களிலும் தாரைதாரையாகக் கண்ணீர். படம் முடிந்தவுடன் வீட்டிற்குச் சென்றவர்கள் என்ன நினைத்தார்களோ மறுநாள் அதிகாலையே சென்னைக்கு விமானம் ஏறி அன்னை இல்லம் வந்தனர். நடிகர் திலகத்தை சந்தித்தனர். இசையரசிகளின் கண்களில் ஆனந்தக்கண்ணீர். நடிப்பரசரை அவர்கள் மனதாரப் பாராட்டி வாயார வாழ்த்திச் சென்றனர்.
35. 1961-ம் ஆண்டிலேயே இக்காவியம் "பாபபரிகாரம்" என்கின்ற தலைப்பில் தெலுங்கில் மொழிமாற்றம்(டப்பிங்) செய்யப்பட்டு ஆந்திராவில் வெளியிடப்பட்டது.
நன்றி பம்மல் r. சுவாமிநாதன்
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
24th April 2015, 10:34 AM
#1293
Junior Member
Senior Hubber

Originally Posted by
senthilvel
raghavenderan SIR my belated congratulaions on your successful compeletion of NT.COM 8YEARS. my best wishes to you for many more laurels in the coming years.
Thanks to senthilvel for my taking your VASANTHAALIGAI NT stills. myone of the fav stills.
-
24th April 2015, 01:47 PM
#1294
Breaking News
எல்லோரும் கொண்டாடுவோம் என்று பாடிக்கொண்டே அறிமுகமாகும் சமுதாய மத நல்லிணக்கத்தின் அடையாளம் ரஹீம் என்ற சமூக ரோல் மாடலை காண காலையிலே மதுரை சென்ட்ரல் திரையரங்கிலே ஆட்கள் குவிந்து விட்டனராம். முதல் நாள் வெள்ளிக்கிழமை காலைக் காட்சிக்கு இதுவரை எந்த மறு வெளியீட்டு படத்திற்கும் வராத அளவிற்கு அதிகபட்ச ஆட்களும் அதே போன்றே அதிகபட்ச வசூலும் செய்திருக்கிறது பாவ மன்னிப்பு என்று மதுரையிலிருந்து சற்றுமுன் வந்த செய்தி கூறுகிறது.
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
24th April 2015, 04:54 PM
#1295
Junior Member
Diamond Hubber
கருநாகத்தைகொஞ்ச முடியுமா?
சிவாஜியை மிஞ்ச முடியுமா?
விழுப்புரத்தின் வித்து
கலையுலகின் சொத்து
காமராஜர் தங்கமடா
சிவாஜி சிங்கமடா
கடவுளை கண்டவருமில்லை
சிவாஜியை வென்றவருமில்லை
சிவாஜியின் கூட்டம்
தமிழ்நாட்டின் மாற்றம்
நடிப்புதான் சிவாஜிக்கு முச்சு
சிவாஜிதான் எங்களுக்கு மூச்சு
நடிகர்திலகத்தின் படங்கள் ரிலீஸ் ஆகும் தியேட்டரை சுற்றி இப்படிஇரண்டு வரிகளில் விதவிதமாக சார்ட் பேப்பரில்எழுதி வைப்பதுண்டு.இவற்றைதான் இப்போது பன்ச் வசனங்கள் என்கின்றனர்.இவற்றை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் நம்மிடத்தில் உண்டு.
ஒரு நினைவு(பொள்ளாச்சி)
தேவர்மகன் ரிலீஸ் சமயம். பொள்ளாச்சி நல்ல்லப்பா தியேட்டரைச் சுற்றி கமல் ரசிகர்கள் பேனர் வைத்திருந்தனர்.அந்த காலகட்டத்தில் பொள்ளாச்சியில்
சிவாஜி ரசிகர்கள் நாங்கள் ஒருசிலர் மட்டுமே படங்களுக்குசெய்து வந்தோம்.அவர்கள் அளவுக்கு செலவு செய்ய ஆட்கள்,வசதி இல்லையென்றாலும் இருப்பதை வைத்து மக்களை கவர்வதுஎன்று முடிவு செய்து வேலை செய்தோம்
இந்தமாதிரி வசனங்களை கேட்டு வளர்ந்தவர்கல்லவா சிவாஜி ரசிகர்கள். அதன்படி சார்ட்பேப்பரில் சிவாஜி அவர்கள் தலைவர்களுடன்(காமராஜர் நேரு சர்வபள்ளிராதாகிருஷ்ணன் ராஜாஜி பெரியார் இந்திராகாந்தி...) இருந்த படங்களைஒட்டி ஒரு சார்ட் பேப்பரிலும்,நடிகர்திலகத்தின்படவரிசையை எழுதி அதில் 100 நாள் படங்கள் இவ்வளவு.,வெள்ளிவிழா படங்கள் இவ்வளவு.,விருது பெற்றவை.,சிறப்புகள் போன்றவை இன்னொரு சார்ட் பேப்பரிலும்,நாட்டிற்காக அவர் கொடுத்த நன்கொடைகள்,அர்ப்பணிப்புகள்இன்னொரு சார்ட் பேப்பரிலும்,அவர்பெற்ற
கெளரவங்கள்மற்றொன்றிலும்
எழுதி தியேட்டருக்குள் வைத்துவிட்டோம்.அவர்களை விட பெரிய மாலை போட்டது நாங்கள்.தியேட்டரை சுற்றி பன்ச் வசனங்கள் எழுதிய பேப்பர்களை ஒட்டினோம்.அதுபோக மூன்று பேனர்கள் ,சிவாஜியின் சாதனைகள் பற்றிய நோட்டீஸ்,தியேட்டரின் வெளிப்புற சுவர்களில் ஜெராக்ஸ் காப்பிகள் ஒட்டப்பட்டன.இது மாதிரி யாரும் அப்போது செய்யவில்லை ..தியேட்டர் மானேஜர் முதல் போஸ்டர் ஒட்டுபவர் வரை வியந்தது இன்றும் நெஞ்சில் ஓடும்.திரையில்அவரை
பார்த்ததும் எழுப்பிய கோஷங்களும் வீசிய லாட்டரி டிக்கட்டுகளும் இடைவேளை வரை குறையவேயில்லை.
தீபாவளி அன்று நாங்கள் அனைவரும்வெள்ளை வேட்டி சட்டையில்வந்ததிருந்தோம்.
பொள்ளாச்சியில்தான்தேவர்மகன் எடுக்கப்பட்டது.பேப்பரில் நடிகர்திலகம் இளையராஜா கமல்
பரதன் இடம்பெற்ற விளம்பரம் வந்திருந்தது.தாடியுடன் நடிகர்தலகம் நடிப்பார் போலும்என்றுதான் நாங்கள் நினைத்திருந்தோம்.சூட்டீங் பார்த்துவிட்டு வந்த எங்களுரைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்த செய்தி
மலைக்க வைத்து விட்டது.
அது
ு
சிவாஜியின்
மீசை.
Last edited by senthilvel; 24th April 2015 at 08:13 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
24th April 2015, 06:06 PM
#1296
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
24th April 2015, 06:06 PM
#1297
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th April 2015, 06:58 PM
#1298
Senior Member
Devoted Hubber

இது எந்தப்பட ஸ்டில்?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th April 2015, 07:00 PM
#1299
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
24th April 2015, 07:04 PM
#1300
Senior Member
Devoted Hubber

விஜயலட்சுமி பண்டிட்டுடன் நடிகர்திலகம்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks