-
1st May 2015, 09:44 AM
#11
Senior Member
Diamond Hubber
இந்த எதிர்பார்ப்புகளை குறைந்துக் கொள்ளுங்கள், 5க்கு 3.75 மதிப்பெண்கள், ஓடுமா ஓடாதா, அங்கே தொய்வு இங்கே தொய்வு போன்ற இத்யாதிகளையெல்லாம் பழுதென நினைத்து தாண்டிச் செல்லுங்கள். உத்தமவில்லன் அவை அனைத்திற்கும் அப்பாற்பட்டது. திரையுலகில் ஒரு சரித்திரம். பாத்திரங்கள், அவைகளுக்கேற்ற கலைஞர் தேர்வுகள், படைப்பில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் கொடுக்கப்பட்ட இடம், நிஜத்திலும் கனவிலும் மாறி மாறி பயணிக்கும் திரைக்கதை, நிஜத்திற்கும் கனவிற்கும் தொடர்புடைய முடிச்சிகள், உணர்வு பூர்வமான வசனங்கள், நேர்த்தியான சிரிப்பு வெடிகள், அரங்கு அமைப்பு, கேமரா, எடிட்டிங், இயக்கம் எல்லாமே சிறப்புடன் ஒன்றுகூடி தலைவாழை விருந்து படைத்திருக்கிறது. உத்தமவில்லன் கமலின் படைப்புகளில் மிகவும் முக்கியமானது.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 3 Thanks, 3 Likes
-
1st May 2015 09:44 AM
# ADS
Circuit advertisement
Bookmarks