-
6th May 2015, 03:20 PM
#3531
Junior Member
Seasoned Hubber
வாசு சார்,
-----------
கொஞ்சம் ஏ.எல்.ராகவன், கொஞ்சம் கண்டசாலா, கொஞ்சம் ஜேசுதாஸ், கொஞ்சம் சாய்பாபா இந்தக் குரல்களை எல்லாம் ஒரு குடுவையில் போட்டு கலந்தால் என்ன கிடைக்குமோ அது போன்ற ஒரு குரல் இந்தப் பாடலில் ஒலிக்கும் பாலாவின் குரல். ஆனால் குரல் தேன் அமுதம் இல்லாமல் வேறென்ன?
-------------
இதுபோன்ற அமுதத்தை விட சுவையான வர்ணனைகளை கொடுக்காமல் 3 மாதம் காயவைத்து விட்டீர்களே? நியாயமா?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
6th May 2015 03:20 PM
# ADS
Circuit advertisement
-
6th May 2015, 03:25 PM
#3532
Junior Member
Seasoned Hubber
ரவி சார்,
சிறந்த ரசிப்புத்தன்மை இருந்தால்தான் இதுபோன்ற பாடல்கள் தோன்றும். பாராட்டுக்கள். நன்றிகள்.
சின்னக்கண்ணன்,
தொழில்பாட்டும் உங்கள் உழைப்பும் பாராட்டத்தக்கது. நீங்கள் சொல்வது சரிதான். மறுக்க முடியவில்லை. ஞாயிறு என்பது... பாடலில் ‘சேர்ந்தே வந்தாள் அழகாக....’ என்று இருந்திருக்கலாம். ஏனென்று தெரியவில்லை. ஏதாவது காரணம் இருந்தால் தெரிந்தவர்கள் விளக்க வேண்டுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
6th May 2015, 04:30 PM
#3533
Senior Member
Senior Hubber
//பாடலில் ‘சேர்ந்தே வந்தாள் அழகாக....’ என்று இருந்திருக்கலாம். ஏனென்று தெரியவில்லை. ஏதாவது காரணம் இருந்தால் தெரிந்தவர்கள் விளக்க வேண்டுகிறேன்.// வாங்க கலை.. நன்றி.. வேறென்ன இந்த ஆணாதிக்க மனப்பான்மை தான் 
இன்னொரு பாட்டில்..
அந்த மலைத்தேன் இது என மலைத்தேன்.. என்பார் டி.எம்,எஸ் நடிப்புச்சுடர் வாயசைக்க.. அதுவே காஞ்ச் மலைத்தேன் இவரென மலைத்தேன் என்பார்.. ம்ம் என்னபண்ண..இந்தக்கால்த்தில் மாறிவிட்டது என்று சொல்ல மட்டும் செய்கிறார்கள்.. பட்.. நதிங்க் இஸ் சேஞ்ச்ட் இஸிண்ட் இட்? (ஹை இதை வச்சே நீங்க ஒரு ஆர்ட்டிகிளும் பாட்டும் போடலாம் கலை..(விடறதாயில்லை
)
-
6th May 2015, 06:13 PM
#3534
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
ராஜநடை போடும் ராஜேஷ்ஜி!
பன்மொழிப் பாடல்களில் புலமை
தென்னக மொழிகளில் திறமை
தெய்வப் பாடகியின் அடிமை
தெவிட்டாத பாடல்கள் அளிக்கும் வளமை
வாலி அய்யாவின் தமிழ் வளர்ப்பு
வான் புகழ் கொண்ட சிறப்பு
நடிகர் திலகத்தின் மீது மதிப்பு
அது என்றும் நீர் கொண்ட சிறப்பு
கன்னட கானங்களின் கர்ணன்
மலையாள கானங்களில் மன்னன்
இந்திப் பாடல்களின் இந்திரன்
சமத்துவமே நாடும் சந்திரன்
ராட்சஸியை ரசிக்கும் ரசிகன்
ராப்பகலாய் உழைக்கும் ராஜன்
முகநூல் நடத்தும் முதல்வன்
முத்தாய் விவரம்தரும் முனைவன்
அந்நிய நாட்டில் வாழும் தமிழன்
அருமைப் பாடல்கள் தருவதில் தலைவன்
மதுரை தந்த மாணிக்கம்
மறக்கவே முடியாத அன்பு ஆதிக்கம்
பிறந்தநாள் காணும் சுசீலாவின் பித்தனே
அன்புப் பித்து பிடிக்க வைத்த எத்தனே
இந்த நெய்வேலி வாசுதேவன் வாழ்த்துகிறேன்
பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டுமென்று.
ராஜேஷ்ஜி!
என் இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாசு ஜி. அருமை .. இதைவிட சிறந்த பிறந்த நாள் பரிசு ஒன்று கிடைக்குமா .. நன்றி நன்றி நன்றி
-
6th May 2015, 06:17 PM
#3535
Senior Member
Seasoned Hubber
வாழ்த்திய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
-
6th May 2015, 08:09 PM
#3536
Junior Member
Seasoned Hubber
‘சேவல் வந்து முட்டையுமிட்டது
தேசம் நல்லால்லே...’
சின்னக்கண்ணன், திடீரென்று ஐடியா கொடுத்து விட்டீர்கள். ஆமால்ல, என்ன அநியாயம்? (நானும் விடறதா இல்ல)
பெண்களை சமமாக மதிக்கும் போக்கு சமுதாயத்தில் இன்னும் வரவில்லை (நான் பாடலை சொல்லவில்லை). யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு லேகியத்தை தயாரித்து ‘இதை சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும்’ என்று கூறி மருந்தை விற்கிறார். இது பாலியல் சமத்துவத்துக்கு எதிரானது என்று நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பியுள்ளன எதிர்க்கட்சிகள். பஞ்சாபிலே மோகா என்ற இடத்தில் ஓடும் பேருந்தில் இரக்கமற்ற அரக்கர்களால் பாலியல் தொல்லை காரணமாக பேருந்தில் இருந்து தாயும் மகளும் குதித்துள்ளனர். இதில் மகள் 13 வயது சிறுமி பலியாகியிருக்கிறாள். நமது நாட்டில் இன்னும் இப்படித்தான் இருக்கிறது பெண்களின் நிலை.
இந்தக் கொடுமைகளுக்கு நடுவே சமீபத்தில் ஆறுதல் அளிக்கும் செய்தி ஒன்று. மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு, சமூக அரவணைப்பு, உரிமைகளை பாதுகாக்க தனி நீதிமன்றங்கள், நல ஆணையம் போன்றவற்றை அமைக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியிருக்கிறது. இருந்தாலும் பாதிக்கிணறுதான் தாண்டியிருக்கிறது. இன்னும் மக்களவையில் மசோதா நிறைவேற வேண்டும்.
மனித உயிர்களாகவே அவர்களை மதிக்காமல் ஓட்டுரிமை கூட இல்லாமல் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்தான் அதுவும் உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது. அவர்களின் உரிமைகளுக்காக தனிநபர் மசோதா கொண்டு வந்து, நிறைவேற்ற காரணமாக இருந்த திமுக எம்.பி. திருச்சி சிவா பாராட்டுக்குரியவர்.
திருநங்கைகள் கலந்து கொள்ளும் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் திருவிழா நடந்து வருகிறது.
-----
இந்த நேரத்திலே, விஜயபுரி வீரன் படத்தின் பாடல் நினைவுக்கு வருகிறது. என்னைக் கவர்ந்த பாடலும் கூட. திரு.ஆனந்தன் அவர்கள் பெண் வேடமிட்டு பாடி நடித்துள்ள பாடல்.
‘வெத்தல போட்ட பத்தினி பொண்ணு சுத்துது பின்னாலே.. ’ திரு.ஆனந்தன் அவர்கள் வாள் வீசும் திறன் கொண்டவர் மட்டுமல்ல, நல்ல டான்ஸர். இந்தப் பாடலில் அவர் போடும் ஸ்டெப்ஸ்களே அதை நிரூபிக்கும்.
பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் பார்த்தால், அவர்கள் சம உரிமை பெற்று மதிக்கப்படுவது எப்போது? இந்தப் பாடலில் வரும் கீழே உள்ள வரிகளில் காணப்படும் அசாத்திய சம்பவங்கள் நடந்தால்தான் அதுவும் நடக்குமா? என்று தோன்றுகிறது.
‘சேவல் வந்து முட்டையுமிட்டது
தேசம் நல்லால்லே
சினை காளை மாடு கன்று போட்டது
காலம் நல்லால்லே.....’
பெண்களை இழிவாகப் பேசுகிறவர்களை பார்த்தால்,
‘சிலர் வாக்கு நல்லால்லே
அதைக் கேட்க நல்லால்லே
போற போக்கு நல்லால்லே..’
என்று தோன்றுகிறது.
திருநங்கைகள் மசோதா கூட பல்வேறு தடைகளை தாண்டித்தான் நிறைவேறியிருக்கிறது. பல எம்.பி.க்கள் மட்டுமல்ல, மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் (Social Justice and Empowerment) துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் கூட மசோதாவை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு திரு. சிவாவை கேட்டுள்ளார். பல்வேறு தடைகளை தாண்டித்தான் ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டியிருக்கிறது.
ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே சட்டசபையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறேன். யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த டி.என்.அனந்தநாயகி அம்மையாரும் நகைச்சுவையாகவே எடுத்துக் கொண்டார்.
டி.என். அனந்தநாயகி அம்மையார் கூட்டங்களிலே மிகக்கடுமையாக பேசுவார். 1971ம் ஆண்டு தேர்தலில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் திமுக வேட்பாளராக திரு.ம.பொ.சி. அய்யா அவர்களும் (அவர் தமிழரசு கழகத் தலைவராக இருந்தாலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டார்) ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் டி.என்.அனந்தநாயகி அம்மையாரும் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் அனந்தநாயகி அம்மையாரின் பேச்சுக்களும் அதையடுத்து ஏற்பட்ட கலாட்டாவும் ஜகப்பிரசித்தம்.
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் (1971-76) அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த மசோதாவை காங்கிரஸ் எதிர்த்தது. சட்டப் பேரவையில் மசோதா மீது பேசிய அனந்த நாயகி அம்மையார் ‘‘இந்த மசோதா தேவையற்றது. எங்கள் ஊரில் பிடாரி கோயிலில் தாழ்த்தப்பட்டவர்தான் பூசாரியாக இருக்கிறார். பிறகு எதற்கு இந்த மசோதா?’’ என்றார்.
(ஆனால் சட்ட மசோதாவின் நோக்கம் வேறு. இடதுபதம் தூக்கி நடராஜப் பெருமான் ஆடும் (உங்கள் ஊரில் மட்டும் மீனாட்சிக்கு மரியாதை கொடுத்து அம்மன் இருக்கும் திசையில் காலை தூக்காமல் வலது பதம் தூக்கி ஆடும் நடராஜரை பாராட்ட வேண்டும் சின்னக்கண்ணன்) தில்லையம்பலத்திலும்,
குடதிசை முடியை வைத்து குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ என்செய்கேன் உலகத்தீரே.
.... என்று தொண்டரடிப்பொடியாழ்வார் வியந்து போற்றிய அழகன், அரங்கமாநகருளான் கோயிலிலும் தாழ்த்தப்பட்டோர் அர்ச்சகராக வேண்டும் என்பதே மசோதாவின் நோக்கம்)
அதுபற்றி சர்ச்சை தேவையில்லை. மசோதா பற்றிய விளக்கத்தைத்தான் சொன்னேன். விஷயத்துக்கு வருவோம். அனந்த நாயகி அம்மையாரின் எதிர்ப்புக்கு முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் சொன்ன பதில்...
‘‘தாழ்த்தப்பட்டோர் அர்ச்சகர் ஆவதை பிடாரிகள் கூட ஏற்கிறார்கள். சில அடங்காப் பிடாரிகள் ஏற்க மறுக்கிறார்கள்’’
அவையே சிரிப்பால் குலுங்க அதில் தானும் கலந்து கொண்ட அனந்த நாயகி அம்மையார் அமர்ந்து விட்டார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
6th May 2015, 10:16 PM
#3537
Junior Member
Seasoned Hubber
திரு கலை வேந்தன் - உங்கள் பதிவு ,மிகவும் அருமை - ஞாபக சக்தி எல்லோருக்கும் வந்துவிடாது - அதற்க்கு ஒரு குடுப்பினை இருக்க வேண்டும் - அந்த இறைவனின் கருணையும் இருக்க வேண்டும் - உங்களுக்கும் , திரு முரளிக்கும் , திரு ராகவேந்திரா வுக்கும், திரு வாசுவிர்க்கும், திரு கல்நாயக் அவர்களுக்கும் , பெரிய கண்ணனாக பதிவுகள் போடும் திரு சின்ன கண்ணனுக்கும் இந்த அபூர்வ சக்தி இயற்கையாகவே அமைந்துள்ளது - நேற்று நடந்தது என்னவென்று என்று என்னை யாராவது கேட்டால் கூகுள் உதவி இல்லாமல் எனக்கு சொல்ல வராது . நீங்கள் எடுத்துக்கொண்ட சப்ஜெக்ட் யை விவாதிக்க தனி திரியே வேண்டும் . அவ்வளவு விஷயங்கள் உள்ளன --- discrimination என்றால் என்ன ? differentiation என்றால் என்ன ? என்று பலருக்கு புரிவதில்லை - differentiation is tolerable but not discrimination ---
ஒரு வேட்டைக்காரனை ஆதிசங்கரருக்குள் வரவழைத்த உங்களால் எதைத்தான் இனிமையாக எழுத முடியாது !!
அன்புடன்
ரவி
Last edited by g94127302; 7th May 2015 at 11:59 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
7th May 2015, 12:04 AM
#3538
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜேஷ்!
இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th May 2015, 04:17 AM
#3539
Senior Member
Veteran Hubber
Zubin Mehta in Madras -Oct 2015
We have heard song in Tamil,Telugu,Kannada, Malayalam and Hindi.
I take the liberty to post a Western Classsical piece conducted by Zubin Mehta, former conductor of New York Philharmonic.
Bolero
If you never attended a western classical concert you might consider attending his concert in Madras in Oct 2015.
Getting used to western classical takes some time. Just sample it in person!
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
7th May 2015, 06:30 AM
#3540
Senior Member
Seasoned Hubber
ஜூபின் மேத்தா..
உலக அளவில் இந்தியனின் பெருமையை அந்தக் காலத்திலேயே நிலை நாட்டிய இசை மேதை..
அவருடைய வருகையைப் பற்றிய தகவலுக்கு நன்றி ராஜ்ராஜ் சார்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks