-
14th May 2015, 03:14 PM
#3721
Junior Member
Seasoned Hubber
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 70 
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
இங்கே ந.தி.யின் உதடுகள் பேசுகின்றன ; கன்னங்கள் பேசுகின்றன ; நெற்றி பேசுகின்றது - உடுத்திய உடை பேசுகின்றது ; தலை முடி பேசுகின்றது ; அவர் கீழே உருட்டி விட்ட மது பாட்டில் பேசுகின்றது; ஊதும் சிகரெட் பேசுகின்றது - நாம் மட்டும் ஊமையாக , சிலைபோல பார்த்துக்கொண்டே இருக்கிறோம் - இப்படிப்பட்ட ஒரு மேதை மீண்டும் பிறந்து வர மாட்டாரா என்று .
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
14th May 2015 03:14 PM
# ADS
Circuit advertisement
-
14th May 2015, 03:29 PM
#3722
Senior Member
Senior Hubber
ஆயிரம் கரங்கள் நீட்டி ரொம்பச் சுடுதே முருகா முருகா..
(ரவி ஒரு தமாஷிற்காகச் சொன்னேன்)
*
கதிர்களிலே கண்களையும் வைத்து வைத்து
..கண்போன போக்கினிலே காய வைத்தாய்
கதிர்காமக் கதிர்வேலா முருகா உந்தன்
..கட்டழகைக் காணுகின்றச் சிறுவன் நானே
விதிவசமா வெய்யிலிலே ம்தியு மிங்கு
..வேகமாக மயங்குதய்யா அருள்செய் யப்பா
கதியில்லை உந்த்னது கழலில் நானும்
..கட்டுண்டு கிடந்திடுவேன் அருள்வாய் நீயே!
*
பழமுதிர்ச் சோலை - அழகர் கோவிலெல்லாம் பிக்னிக் ஸ்பாட் போல மதுரைக் காரர்களுக்கு..
மிகப் பல வருடங்களுக்கு முன்னால் அக்கா அத்திம்பேர், அண்ணா, அம்மா சகிதம் சென்றது புகையாய்
நினைவில்
அழகர் கோவிலில் பெருமாளைச் சேவித்துவிட்டு கட்டிவைத்திருக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டு
மரங்களினூடே நிழல்கள் இருக்க லொங்க் லொங்க் என்று நடந்து சென்று முருகனை சேவித்துப் பின்
அங்கிருந்து நூபுர கங்கை என்ற இடத்திற்குச் சென்று - அதற்குள் ஸ்டமக் கவாங்க் கவாங்க்கென
குரலெழுப்ப கொண்டுவந்திருந்த இட்லி மொளகாப்பொடி, புளியோதரை, தயிர்சாதம் பிரித்து
சாப்பிட்டலாம் என நினைத்தால் சூழும் பலவய்துகளினாலான குரங்குகள்..
கொஞ்சம் அதற்கும் போட்டுவிட்டு உண்டு நூபுரகங்கையில் ஒல்லியாக வரும் தண்ணீரில் கை கழுவி
அந்தத் தண்ணீரைக் குடித்தால் (ரொம்ப ஸ்வீட்டா இருக்கும் அந்தக் காலத்தில்) அதுவல்லவோ சுகம்..
*
இன்னொரு கன்னி..முருகனைக் கூப்பிடுகிறாள்..என்னவாம்..
கன்னி விழி வேலைக் கண்ட வடி வேலன்
தன்னை மறந்தானடி - நானும்
தஞ்சம் புகுந்தேனடி!
வள்ளிக் குற மாது, பள்ளி வரும் போது
சொன்ன கதை தானடி - நானும்
சொல்லப் புகுந்தேனடி!
ஆறு முகவேலன், ஆசை மனதோடு
ஏறு மயிலாக, மாறி வருவேனோ?
வண்ண மலரும், கன்னி இதழும்,
தந்த உறவு, என்ன பெறுமோ?
நிலவிலே...அழகிலே...உறவிலே...
நெருங்கி நெருங்கி மயங்குமோ?
பழமுதிர் சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி - அவன்
அழகுத் திரு முகத்தில் இளைய நகை எடுத்து
ஆரம்பம் சொன்னானடி தோழி!
குழந்தையும் தெய்வமும்.. வழக்கம்போல ஆடுபவரைப் பற்றி வாசு சொல்லியிருப்பினும் மறந்து போச்!
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
14th May 2015, 03:53 PM
#3723
Senior Member
Senior Hubber
அதுல பாருங்கோ..இந்த பாலகன் முருகனை நினைச்சா உருகுது எப்பவாவது நினைக்கிற நம்ம மனமே
அப்படி இருக்கச் சொல்ல இந்தப் பெரியவர் முருக பக்தர் அவருக்கு உருகாதா என்ன..
யாராக்கும் அவர்
விஸ்வநாதர்னு வெச்சுக்குவோமா..படத்துல அவர்பெயர் மறந்து போச்சு..தீவிர முருக பக்தர்..ஆனாக்க
அவருக்கும் ஒரு ஃப்ரண்ட் ஃபாதர் ஜேம்ஸ்.. அவர் விஸ்வனாதன்கிட்ட ஒருவரை அனுப்பறார்..அந்தாள் பேரு தாமஸ் தியாகராஜன்.
தாமஸ் தியாகராஜன் ரொம்ப நல்லவன்.. டாக்ஸி டிரைவர்..ஒரு நா ஒரு பொண்ண ஒரு வீட்ல விட்டுட்டு
வெளில நின்னுக்கிட்டிருந்தானா..வீல்னுசத்தம்
என்னடான்னு உள்ள பொய்ப் பாத்தா அவனோட டாக்ஸில வந்த பொண்ணை ஒரு பையன் மானபங்கப் படுத்த முயற்சித்துக்கிட்டு
இருக்கான்..டிரைவர் தடுக்கப் பார்த்து சண்டை போடறச்சே தவறி கத்தியோ கத்திரியோ பட்டு அந்த்ப் பையன் இறந்து போய்டறான்..
அந்த டாக்ஸில வந்த பொண்ணு கீதாவும் ஓடி ப் போய்டுது..
இந்த தாமஸ் இருக்கானே நேர சர்ச்ல வந்து ஃபாதர் ஜேம்ஸ்கிட்டக்க சொல்றான்..எப்படியும் பிடிச்சுட்டுப் போய்டுவாங்க என்னை
ஸோ நான் கடைசி முறையா கர்த்தரைப் பார்க்க வந்தேன் ஃபாதர்..
ஃபாதர் சொல்றார்..ஓ மை பாய் எப்பவும் உண்மை ஜெயிக்கும்
ஓ நோ ஃபாதர்..கடகடன்னு சிரிக்கறான் தாமஸ்.. நான்கொன்ன பையன் ஒரு மிகப்பெரிய பணக்காரத் தொழிலதிபர் ஜார்ஜோட பையன்..
அவர் எனக்குத்தூக்கு வாங்கித் தராம விடமாட்டார்..
ஜேம்ஸ் அவனை விஸ்வ நாதன் கிட்ட அனுப்பறார்..இந்தப் பையனைப் பார்த்துக்குங்கோ..ன்னு..
விஸ்வனாதன் தாமஸ்கிட்ட ஒன் பேர் என்னப்பா
தாமஸ் தியாக ராஜன் (அவ்ன் ஒரு கன்வர்டட் கிறிஸ்டியன்)
ஓ.. தாமல் தியாகராஜனா..அடடா..நானுமே தாம்ல போய் பார்க்கணும்னு இருக்கேன்ன் என அவனை ஹிந்துவாக நினைத்துவிடுகிறார்.
அடைக்கலமும் கொடுக்கிறார்..
கடைசியில் எவ்வளவோ விதமாக ஜார்ஜ் தாமஸைப் பிடிக்க முயன்றாலும் முடியவில்லை.. உண்மை வெல்கிறது..தாமஸ் விடுதலையாகிறான்..
ஆனால் உண்மைக்குப் பரிசாக ஃபாதர் ஜேம்ஸின் உயிர் போகிறது..
இது சோவின் உண்மையே உன்விலை என்ன என்ற திரைப்படக் கதையின் சுருக்க்கம்..
ஃபாதர் ஜேம்ஸ் முத்துராமன் தாமஸ் விஜயகுமார் விஸ்வ நாதனாக - வி.கே ஆர், வக்கீலாக சோ என .. நல்ல படம்
இதில் இந்த விஸ்வனாதனாகிய வி.கே ஆர் கோவில்களில் சுற்றிப் பாடும் பாடல் தான் இப்போது பார்க்க, கேட்கப் போகிறோம்..
*
முருகா முருகா..முருகா...
இத்தனை மாந்தருக்கு
ஒரு கோவில் போதாது
சத்தியத் திருநாயகா முருகா
சத்தியத் திருநாயகா
எத்தனை மனமுண்டோ
அத்தனை குணமுண்டு
ஏனென்று சொல் வேலவா ?
முருகா ஏனென்று சொல் வேலவா
படைத்தாலும் உயிர்களுக்கு குருபீடமே
பெரும் பணத்தாசையே சிலரின் பலிபீடமே
படுத்தாலும் எழுந்தாலும் கண் முன்னமே
சிலர்க்கு பதவி பதவி என்னும் ஒரு எண்ணமே
பாவிகள் பலருண்டு உன் இனத்திலே
அப்பாவிகள் சிலருண்டு உன் படைப்பிலே
கோவில் எவர்க்கு வைத்தாய் கோல முருகா
வெறும் கோஷத்தில் என்ன பயன் ?
கூறு முருகா
தான் என்ற அகங்காரம் அழித்திடுவாய்
செல்வம் தமக்கென்று நினைப்போரை ஒழித்திடுவாய்
நீதி நியாயங்கள் நிலைக்கட்டுமே
நல்ல நேர்மையை இவ்வுலகம் மதிக்கட்டுமே
நேர்மையை இவ்வுலகம் மதிக்கட்டுமே
*
கொஞ்சம் சீரியஸாகப் போகும் படத்தில் இந்தப் பாடல் மிகப் பெரியரிலீஃபாக இருக்கும்.. அதுவும் எம்.எஸ்.வி யின் கணீர்க் குரல்.
வி.கே.ஆர் மிகச் சிறப்பாக நடித்திருந்த படங்களில் இதுவும் ஒன்று..
ஜார்ஜான அசோகன் தாமஸை விடச்சொல்லி பேரம் பேசுவார் வி.கே.ஆரிடம்..
அப்போது வி.கே.ஆர் பேசும் வசனங்களெல்லாம் வெகு நன்றாக இருக்கும் கடைசியில்
தாமல் தியாகராஜன் என்று - தாமஸ் தியாகராஜனை ஹிந்து வென ஃபாதர் பொய் சொல்லிவிட்டார்
எனத்தவறுதலாக நினைத்து விஜயகுமாரை அசோகனிடம்கொடுத்துவிடுவார்..
*
வாங்க பாட் பாக்கலாம்..
**
Last edited by chinnakkannan; 14th May 2015 at 03:56 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
14th May 2015, 04:04 PM
#3724
Junior Member
Seasoned Hubber
Ck - எனக்கே தெரிகின்றது - அதிகமாக எழுதுகிறேன் என்று - 1000 கரங்கள் நீட்ட முடியாவிட்டாலும் , குறைந்தது 100 வது நீட்டலாம் என்று நினைக்கிறேன் - தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்கிறது - கண்டிப்பாக 100 பதிவுகளுடன் நிறுத்திக்கொண்டு , நிலா வருவதற்கு வழி விடுகிறேன் . கவலை வேண்டாம் . முருகன் இருக்க பயம் ஏன் ??
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th May 2015, 04:17 PM
#3725
Senior Member
Senior Hubber
அதிகமாக எழுதுகிறேன் என்று - // கம்மியா எழுதினீர்னா அடிப்பேன்
எழுதும் எழுதும்.. நிறைய.//முருகன் இருக்க பயம் ஏன் ??//
-
14th May 2015, 04:36 PM
#3726
Senior Member
Senior Hubber
ரவி கோச்சுண்டுட்டார்.. கூல்பண்ண குமரன் பாட்டு போட்டுடலாம்! 
எழுபது வயதுக் குமரனுக்கும் என்னை ஒருதரம் பார்த்தால் கிளுகிளுக்கும்
ஆனால்
இருபது வயதுக் கிழவனுக்கே இங்கே என்றும் என்மனம் இடம் கொடுக்கும்..(ஓஹோ)
வெல் ஃபோல்க்ஸ் டைம்ஸ் ஆர் சேஞ்சிங்
அண்ட் ஸோ ஆர் ஃபாஷன்
ஸ்லீவ் லெஸ் பிளௌஸஸ் வாட்ஸ் நெக்ஸ்ட்
பிளௌஸ் லெஸ் ஸ்லீவ்ஸ்... (ஹிஹி..)
நான் ஒரு காதல் சந்யாசி.. (நித்தியோட சிஷ்யையோ..வாசுவைக் கேக்கணும்!)
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
14th May 2015, 05:38 PM
#3727
Junior Member
Seasoned Hubber
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 71
CK - கதிருக்கும் , கந்தனுக்கும் அதிகமான பொருத்தம் உள்ளது . இந்த பாடல் ஒன்றே இதற்க்கு சாட்சி
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th May 2015, 05:56 PM
#3728
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
g94127302
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 67
Sakthi Leelai is a tamil devotional movie released in the year 1972 starring Gemini Ganesan, B.Saroja Devi,Jayalalithaa and Chittor V. Nagaiah in lead roles.The movie is directed by T. R. Ramanna. The music of the film is composed by M.S Viswanathan.
காலை பொழுதே வருக வருக
கண்ணிக்கதிரே வருக வருக --------------
music by T.K.Ramamoorthy
-
14th May 2015, 09:00 PM
#3729
Junior Member
Seasoned Hubber
நன்றி ராஜேஷ் - அதிகமாக duediligence பண்ணவில்லை - youtube இல் MSV என்றுதான் உள்ளது . பிழைக்கு மன்னிக்கவும்
-
14th May 2015, 09:10 PM
#3730
Junior Member
Seasoned Hubber
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 72
நிழல்களாக நம்மை என்றும் தொடர்ந்து குளிமை படுத்தும் பாடல் - எவ்வளவு தடவை கேட்டாலும் இன்னும் கேட்கத்தூண்டும் பாடல்
ஹே ஹோ ஹ்ம்ம் லா லா லா
பொன்மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வான மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
பொன்மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள்
சாமரங்கள்
வீசாதோ ..
[இது ஒரு பொன்மாலைப் பொழுது]
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால்
வேள்விகளை
நான் செய்வேன்..
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வான மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
ஹே ஹோ ஹ்ம்ம் லா லா லா
ஹே ஹோ ஹ்ம்ம் லா லா லா
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks