-
20th May 2015, 09:20 AM
#11
Senior Member
Senior Hubber
இந்த செய்தி எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை .. உண்மையாய் இருக்கும் பட்ச்சதில் சிலருக்கு வயிறு எரியும் 
================================================== =================
ரஜினிகாந்த்தின் அடுத்த 2 படங்களின் பட்ஜெட் ரூ. 370 கோடியாமே!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த இரு படங்களுக்கான பட்ஜெட் முறையே 70 கோடி மற்றும் 300 கோடி என்று கூறுகிறார்கள். அதாவது மொத்த பட்ஜெட் 370 கோடி ரூபாய். ரஜினி அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் மற்றும் ரஞ்சித் ஆகியோரின் படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார். முதலில் ரஞ்சித்தின் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ. 70 கோடி. இதை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க இருக்கும் பிரமாண்டமான படத்திற்கு லைகா நிறுவனம் 300 கோடி ரூபாய் தாரை வார்க்கத் தயாராக உள்ளதாம்.

இரண்டு படங்கள் ரஞ்சித்தின் புதிய படத்திலும் இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் ரஜினி. இதில் ஷங்கரின் படம் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப் பட உள்ளதாம். எந்திரன் 2 வா அல்லது வேறு படமா? ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் எந்திரன் 2 வாக இருக்குமா அல்லது வேறு புதுப் படத்தை ஆரம்பிக்கிறாரா என்று புதிதாக பேசவுள்ளனர். ஏன் லேட் எந்திரன் 2 படத்தில் ஹீரோவுக்கு சமமான வில்லன் வேடத்தில் நடிக்க எந்த பெரிய நடிகரும் தயாராக இல்லை. விக்ரமை அணுகி உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அதைப் பற்றிய எந்த செய்தியும் இன்னும் உறுதியாகவில்லை. வில்லனாக ஷாருக்கான் தற்போது இந்தி நடிகர் ஷாருக்கானை நடிக்க வைக்க இருப்பதாக கூறுகிறார்கள். தமிழ், இந்தி என இரு மொழிகளில் எடுக்கப்படும் இந்த படத்தில் தமிழில் ஷாருக்கான் வில்லனாகவும் இந்தியில் ரஜினி வில்லனாகவும் வருவது போன்று காட்சிகள் அமைக்கப்பட இருப்பதாக பேசப்படுகிறது. ரஜினியின் சம்பளம் எவ்வளவு ரஞ்சித் படத்திற்கு 30 கோடி ரூபாயும் ஷங்கர் படத்திற்கு 50 கோடி ரூபாயும் ரஜினிக்கு சம்பளம் பேசப்பட்டு உள்ளதாம். இது தவிர வியாபாரத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ரஜினிக்கு தயாரிப்பாளர்கள் கொடுக்கவுள்ளனராம். எப்போது வெளிவரும் படங்கள் 2016 பொங்கலுக்கு ரஞ்சித் படமும் 2017 பொங்கலுக்கு ஷங்கர் படமும் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்களாம். ஆனால் எந்தத் தகவலும் வழக்கம் போல அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
Read more at: http://tamil.filmibeat.com/news/raji...es-034673.html
-
20th May 2015 09:20 AM
# ADS
Circuit advertisement
Bookmarks