Page 251 of 402 FirstFirst ... 151201241249250251252253261301351 ... LastLast
Results 2,501 to 2,510 of 4013

Thread: Makkal Thilakam MGR -PART 15

  1. #2501
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Tenali Rajan View Post

    வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.


    இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை உரைக்கும் முக்கிய சாராம்சம்/ கோட்பாடு / தத்துவம் எல்லாமே கடமை என்ற கருப்பொருள் ஆகும் / வழிதான் / வாழ்க்கைக்கு உரித்தான உலகில் எல்லா ஜீவன்களும் கடைபிடிக்க வேண்டிய நிமித்தம் / நியதி ஒன்றேதான், இறைவனை அடையும் சிறந்த நெறிமுறை. இதனையேதான் நமது மக்கள் திலகம் தன் வாழ்க்கையில் கடைபிடித்து வந்துள்ளார். ஒரு ஜீவன் பிறந்து நல்லவைகளை நினைத்து, நல்லவைகளை பேசியும், நல்லவைகளை செய்தும், நல்லவைகளையே நாடி, தனக்கும், தன் குடும்பத்திற்கும், மனித குலத்திற்கும், நாட்டிற்கும் எந்த ஜீவன் நல்லவைகளை செய்கிறதோ அந்த ஜீவன் உத்தம ஜீவன் / உத்தம கொள்கையாகும். அதாவது, கடமைகளை செய்வதில் பற்றுதலையும், பலனையும் தியாகம் செய்து வருபவன் உத்தமன் ஆவான். அது சாத்வீக தியாகம் என்று கருதப்படும். இந்த ஜீவனுக்கு, நாம் செய்ய வேண்டிய கடமை நல்ல எண்ணம், நல்ல உடல்நிலை பேணுதல், நல்லவைகளை செய்தல், இந்த உடலை எந்த தீய பழக்கத்திற்கும் ஆட்படுத்தாமல் பேணி காத்தல். அதன்பிறகு நம் குடும்பத்திற்கும், மனித சமுதாயத்திற்கும், நாட்டிற்கும், நல்லவைகள் சொல்லி, நன்மைகளை செய்து வருதல். அந்த ஜீவன் ஒன்றேதான் இறைவன் திருவடியை சென்று அடையும். இதைதான் மக்கள் திலகம் தன் வாழ்நாளில் கடைபிடித்தார். திரை உலகத்திலும், சொந்த வாழ்க்கையிலும், குடும்பத்திற்கும், மனித சமுதாயத்திற்கும், நாட்டிற்கும், உலகத்தில் வாழும், அணைத்து ஜீவன்களுக்கும் ஒரு உத்தம தலைவராய் வாழ்ந்தார்.

    கடமை என்ற சொல்லினை எவ்வாறு தன்னுடைய திரை காவியங்களில் பயன்படுத்தி இருக்கிறார் என்று இதோ பாருங்கள்




    1.
    முன்னேற்றம் என்பதெல்லாம்
    உழைப்பவர் உழைப்பதனாலே
    கடமைகளை புரிவதெல்லாம்
    விடுதலை வேண்டுவதாலே

    2. ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
    அதை எப்போதும் காத்திருப்பேன்
    எதிர்காலம் வரும் என் கடமை வரும்
    இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்
    பொது நீதியிலே புதுப் பாதையிலே
    வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
    வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்.

    3. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
    கடமை அது கடமை
    கடமை அது கடமை


    4. உள்ளதை சொல்லி நல்லதை செய்து
    வருவதை வரட்டும் என்றிருப்போம்
    கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
    கடமையின் வழியே நின்றிருப்போம்.

    5. மக்களை ஒருவன் மதிப்பது கடமை
    மக்கள் ஒருவனை மதிப்பது பெருமை
    துணை இருந்தால்தான் வலிமையும் ஓங்கும்
    துணை இல்லாவிடில் திறமையும் தூங்கும்.. தூங்கும்

    6. பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன்
    அந்த பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்
    பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன்
    அந்த பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்

    7. கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
    கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
    பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
    மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
    இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

    8. போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் -
    உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
    கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் -
    கொண்டகடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் .

    9. கடமை செய்வோம் கலங்காமலே
    உரிமை கேட்போம் தயங்காமலே
    கடமை செய்வோம் கலங்காமலே
    உரிமை கேட்போம் தயங்காமலே
    வாருங்கள் தோழர்களே
    ஒன்றாய் வாருங்கள் தோழர்களே

    10. நன்மை செய்வதே என் கடமையாகும்
    நன்றி சொல்வதே என் கண்ணியமாகும்
    நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும்
    அருமை திரு.தெனாலிராஜன் சார். தலைவரின் புகழை கவிதையால் பாடுவதை கடமையாக கொண்டுள்ள உங்களுக்கு நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. Likes ujeetotei liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2502
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Varadakumar Sundaraman View Post
    நன்றி திரு.குமார் சார்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  5. #2503
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post
    " மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்." இந்த இடத்தில் மாலைகள் என்பது பூமாலைகளை தான் குறிக்கவேண்டும் என்பதில்லை.. அவை புகழ் மாலைகளாகவும் இருக்கலாம்.
    அப்பா அவருக்கு எழுதிய வார்த்தைகளின் படி இறுதிவரை புகழ்மாலை சூடிக்கொண்டே இருந்தவர்களுள் எம்.ஜி.ஆரும் ஒருவர். பிற அரசியல் தலைவர்கள் போலல்லாமால் செல்வாக்கின் உச்சியில் புகழின் உச்சியில் மறைந்தவர் அவர். பல அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் இறுதிக் காலம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
    ஆனால் எம்.ஜி.ஆர். வாழும் காலத்தில் புகழோடு வாழ்ந்து புகழோடு மறைந்து இதோ அண்ணாவுக்கு பக்கத்தில் கடற்கரையில் சமாதியில் இருக்கிறார். .
    இன்றைக்கும் எம்.ஜி.ஆருக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் இருக்கிறார்கள். என்னுடை பேரக்குழந்தைக்கு இப்போது கூட எம்.ஜி.ஆர். என்றால் அவ்வளவு பிரியம்.
    இதற்கெல்லாம் காரணம் என்ன? அவர் செய்த தான தருமங்கள் அவரை இறுதி வரை காப்பாற்றியது.
    - திரு காந்தி கண்ணதாசன் பேட்டியிலிருந்து
    நன்றி திரு.யுகேஷ் பாபு.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  6. #2504
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு.எஸ்.வி.சார், திரு.சைலேஷ் சார், நீங்கள் இருவரும் பதிவிட்ட வீடியோ காட்சிகள் அருமை.

    திரு.ரூப் குமார் பதிவிட்ட ரிக்க்ஷாக்காரன் படத்தின் தகவல்கள் பேப்பர் கட்டிங்குகளுக்கு நன்றி.

    சைதாப்பேட்டை இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் குழுவின் தலைவர் திரு.ராஜ்குமார் மற்றும் திரு.எம்ஜிஆர் பாஸ்கரன் ஆகியோர் தொடர்ந்து பங்களிக்க வேண்டும்.


    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  7. Likes ujeetotei liked this post
  8. #2505
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    ‘மத்தவங்களுக்கு வயிறு நிறைஞ்சா....’


    ரிக்க்ஷாக்காரன் படத்தில் ஆரம்பத்தில் ரிக்க்ஷாபோட்டியில் தலைவர் கலந்து கொண்டு வெற்றி பெறுவது முதல் கடைசியில், அண்ணா சமாதி அருகே மஞ்சுளாவை ரிக்க்ஷாவில் வைத்து ஓட்டியபடி வருவதுவரை எல்லாவற்றையும் எழுதத்தான் ஆசை. நேரம் போதாது.

    ரிக்க்ஷா போட்டி காட்சியை அவுட் டோரில் சென்னை அண்ணா நகரில் எடுத்திருப்பார்கள். நிஜமாகவே போட்டி மனப்பான்மையோடு தலைவர் ரிக்க்ஷா ஓட்டியிருப்பது தெரியும். தனது முழு திறனையும் பயன்படுத்தி வேகமாக ஓட்டியிருப்பார். ரிக்க்ஷா ஓட்டிப் பார்த்தால் அதன் கஷ்டம் தெரியும். சைக்கிள் மாதிரி இல்லாமல் நாம் ஒரு பக்கம் இழுத்தால் அது ஒரு பக்கம் போகும். பெடலில் அதிக அழுத்தம் கொடுத்து மிதிக்க வேண்டும். பயணிகள் இருந்தால் இன்னும் கஷ்டம்.(என்னையும் ரிக்க்ஷாக்காரன் போலிருக்கிறது என்று நினைக்காதீர்கள். அது ஒன்றும் அவமானகரமான தொழில் அல்ல. ஆனால், சிறுவயதில் ரிக்க்ஷா ஓட்டியான எனது நண்பரின் (அவரும் தலைவரின் ரசிகர்தான்) ரிக்க்ஷாவை ஓட்டி பார்த்திருக்கிறேன்) ரிக்க்ஷாவை மிகவும் அனாயசமாக ஸ்டைலாக ஓட்டியிருப்பார் தலைவர். இதற்காகவே ரிக்க்ஷா வாங்கி பயிற்சி எடுத்தார். வெளிப்புறப்படப்பிடிப்பு என்பதால் தலைவரின் கூடவே ஓடிவரும் ஜனத்திரள். கொடுத்து வைத்த கூட்டம்.

    அதிலும், படத்தின் ஹைலைட்களில் ஒன்றான, தலைவருக்கே உரிய தனித்துவமாய் ரிக்க்ஷாவை வட்டமாக ஓட்டிக் கொண்டே, ராமதாஸ் குழுவோடு தலைவர் போடும் சிலம்பு சண்டை காண கண்கோடி வேண்டும். நாமே ஒரு வேலையை செய்யும்போது இன்னொரு வேலையை செய்ய முடியாது. ரிக்க்ஷாவை ஓட்டிக் கொண்டே, அதாவது கால்களால் பெடலை மிதித்துக் கொண்டிருக்கும்போதே தலைவரின் கைகள் குச்சியை சுழற்றும். அப்போதும் குச்சியின் சுழற்சி வேகம் குறையாது. நின்று கொண்டு குச்சியை சுழற்றுவது வேறு. இந்தக் காட்சியில் அதிலும் ஒரு தடை. அந்தக் குச்சி சுழலும் போது ரிக்க்ஷாவின் ஹேன்ட் பாரில் படக் கூடாது. ஹேன்ட் பாரில் படாமல் மின்விசிறியாய் சுழலும் குச்சியின் சுழற்சியில் ராமதாஸ் கோஷ்டி க்ளோஸ்.

    ராமாதாசின் குச்சியை தடுத்து, லாவகமாய் தன் குச்சியையும் ராமதாஸ் குச்சியையும் ஒன்றாக சேர்த்து, சேர்க்கப்பட்ட இரண்டு கழிகளுக்கு இடையே ராமதாசின் விரல்களை மாட்டிக் கொள்ளவைத்து அவரை ரிக்க்ஷாவோடு சேர்த்து தலைவர் இழுத்து வந்து சுழற்றி வீசும் அழகே அழகு. (இந்த சண்டைக் காட்சியை நண்பர்கள் தரவேற்றினால் மகிழ்ச்சி)

    தலைவருக்கு எப்போதுமே ஒரு வழக்கம் உண்டு. எதிராளி என்ன ஆயுதம் வைத்திருக்கிறானோ அதே அளவுக்கு ஈடு கொடுக்கும் ஆயுதத்தைத்தான் தானும் வைத்திருப்பார். கத்தி என்றால் கத்தி, ஈட்டி என்றால் ஈட்டி. எதிராளி ஆயுதத்தை இழந்து நிராயுதபாணியாகிவிட்டால் தன் கையில் உள்ள ஆயுதத்தையும் தூக்கிப் போட்டு விடுவார். இந்த சண்டைக் காட்சியிலும் ராமதாஸ் கோஷ்டியினர் கம்புகளை இழந்ததும், தலைவர் தன் கையில் உள்ள கம்பையும் தூக்கி வீசிவிட்டு ரிக்க்ஷாவில் அமர்ந்து ஓட்டியபடியே சூப்பர் மேனாய் பறந்து வரும்போது தியேட்டரில் இறக்கை இல்லாமல் நாமும் பறப்போம். இந்த ஸ்டில்லை திரு.முத்தையன் ஏற்கனவே தரவேற்றியுள்ளார். கடந்த திரியில் என்று நினைவு.

    சண்டைக்கு முன், ராமதாஸ் குழுவோடு தலைவர் பேசும் அட்டகாசமான வசனங்களையும் சண்டைக்கு பின் கோர்ட்டில் பேசும் கலாய்ப்பு வசனங்களையும் பிறகு பார்ப்போம்.

    படத்தில் முக்கியமான ஒரு காட்சி. சாப்பாடு விற்கும் பெண்ணாக பத்மினி. அவர் கொண்டு வந்த சாப்பாடு மீந்து விடும். அதை அப்படியே மொத்தகமாக பணம் கொடுத்து வாங்குவார் தலைவர். சக தொழிலாளி ஒருவர் உடல் நலமில்லாமல் ரிக்க்ஷா ஓட்டாமல் இருக்கிறார். அவரது வீட்டில் இந்த சாப்பாட்டை கொண்டு கொடுக்கச் சொல்வார் தலைவர். தொழில் செய்பவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது. தொழிலாளியும் அவரது குடும்பமும் பட்டினியோடும் இருக்கக் கூடாது என்ற உயர்ந்த தத்துவத்தை விளக்கும் காட்சி.

    அப்படி பத்மினியிடம் வாங்கிய சாப்பாட்டில் சிறிதளவு கூட தான் எடுத்துக் கொள்ளாமல் அப்படியே அந்த தொழிலாளியின் வீட்டில் கொடுக்கச் சொல்வார். ‘நீ சாப்பிடவில்லையா?’ என்று தலைவரைப் பார்த்து பத்மினி கேட்கும்போது, அருகில் இருக்கும் கரிக்கோல் ராஜ் கூறுவார்...

    ‘மத்தவங்க வயிறு நிறைஞ்சா, இவருக்கு மனசு நிறைஞ்சுடுமே’

    இதை விளக்க ஒரு சம்பவம்.

    தலைவர் முதல்வராக இருந்தபோது, ஊட்டியில் திரு.கமல்ஹாசன் நடித்த ஒரு கைதியின் டைரி படப்பிடிப்பு. இயக்குநர் திரு. பாரதி ராஜா. அப்போது ஊட்டியில் தமிழகம் கார்டனில் தலைவர் தங்கியிருக்கிறார். அங்கு படப்பிடிப்பு வைத்துக் கொள்ள ஏற்கனவே திட்டமிட்டுள்ளார் பாரதிராஜா. ஆனால், தலைவர் அங்கு தங்கியிருப்பதால் கார்டன் பூட்டப்பட்டு உள்ளே யாருக்கும் அனுமதி இல்லை.

    படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. திரு.கமல்ஹாசன் படப்பிடிப்பை முடித்து விட்டு மும்பை செல்ல வேண்டும். பதற்றமாகி இருக்கிறார் திரு.பாரதிராஜா. சிம்ஸ் பூங்காவுக்கு சென்று ‘ஏபிசி நீ வாசி’ பாடலை படமாக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்.

    படத்தின் ஸ்டில் போட்டோகிராபர் திரு.சங்கர் ராவ். இவர் ஏற்கனவே தலைவரின் பல படங்களுக்கு ஸ்டில் எடுத்தவர். தலைவரின் ஆஸ்தான போட்டோகிராபர் நாகராஜராவின் மருமகன். தலைவருக்கு நன்கு அறிமுகமானவர். அவர் பாரதிராஜாவை சமாதானப்படுத்தி முதல்வரை பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார். பாரதிராஜாவுக்கு நம்பிக்கை இல்லை.

    அவரை கூட்டிச் சென்று முதல்வராக இருந்த தலைவரை சந்தித்திருக்கிறார் சங்கர் ராவ். நிலைமையை விளக்கியுள்ளனர். தலைவர் உடனே, ‘யாரு தடுத்தது? நானே ஷூட்டிங் பார்த்து நாளாச்சு. தாராளமா படப்பிடிப்பு நடத்துங்க. நானும் வரேன்’ என்று சொல்லி ஷூட்டிங் பார்க்கவும் வந்திருக்கிறார். அப்போதும் சினிமா தொழிலில் கவனமாக இருந்த அந்த மேதையைப் பாருங்கள். டிராலி ஷாட் ஒன்று படமாக்கப்பட்டபோது, ‘அந்த டிராலி இப்படி வராமல் அப்படி வந்தால் காட்சி நன்றாக இருக்கும்’ என்று ஆலோசனை கூறியிருக்கிறார்.

    படப்பிடிப்பில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் தலைவரே மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். கிட்டத்தட்ட 100 பேருக்கு தடபுடல் விருந்து. தலைவர் நுட்பமானவர் என்பதற்கு உதாரணம்... முன்னதாகவே, சங்கர் ராவிடம் சைவம் எத்தனை பேர், அசைவம் எத்தனை பேர் என்று கேட்டிருக்கிறார். அதற்கேற்ப உணவு தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் விருந்து.

    இரண்டு பேர் மட்டும் தலைவரை நேருக்கு நேராய் பார்க்காமல் அங்கே இங்கே பார்த்தபடி இருந்திருக்கின்றனர். அவர்களைப் பற்றி சங்கர் ராவிடம் தலைவர் கேட்டுள்ளார். பார்வையிலேயே ஆட்களை எப்படி எடை போடுகிறார் பாருங்கள். சங்கர் ராவிடம் தலைவர் கேட்ட கேள்வி, ‘‘அவர்கள் இரண்டு பேரும் திமுகவா?’......... தலைவர் கணக்கு தப்புமா? சங்கர் ராவும் அதை ஆமோதித்துள்ளார். ஒருவர் எடிட்டிங் பிரிவிலும் மற்றொருவர் ஆர்ட் பிரிவிலும் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார். அவர்களது பெயர்களை சங்கர் ராவிடம் கேட்டு தலைவர் தெரிந்து கொண்டுள்ளார்.

    சாப்பாடு பரிமாறிய பிறகு ஒவ்வொருவராக சென்று நன்கு சாப்பிடச் சொல்லி உபசரித்துள்ளார். திமுகவை சேர்ந்த இருவர் அருகில் தலைவர் வந்தபோது, அவர்கள் தலையை குனிந்தபடி சாப்பிட்டுள்ளனர். இருவரையும் தலைவர் பெயர் சொல்லி அழைத்து, முதுகில் தட்டி ஒவ்வொரு உணவு வகைகளை எடுத்துக் கூறி, நன்றாக சாப்பிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். தலைவரின் இந்த அன்பை பார்த்து திமுகவினரான தொழிலாளர்கள் இருவரும் கண்கலங்கியுள்ளனர்.

    விருந்து முடிந்த பின் தலைவர் செய்தது, நம்மையும் கண்கலங்க வைக்கும். எல்லாரும் சாப்பிட்ட பின் அவர்களுக்கு பீடா கொடுப்பதற்காக, பீடாக்கள் வைக்கப்பட்டிருந்த தட்டை தானே எடுத்து எல்லாருக்கும் கொடுத்திருக்கிறார் தலைவர். விருந்தோம்பலில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. ஒரு மாநிலத்தின் முதல்வர், சினிமா தொழிலாளர்களுக்கு (அரசு செலவு இல்லை, சொந்த செலவில்) விருந்தளிப்பதோடு இல்லாமல் அவர்களுக்கு தானே தட்டை தூக்கி பீடா எடுத்து கொடுக்கிறார் என்றால், ‘பதவி வரும்போது பணிவு வரவேண்டும்..’ என்று தான் பாடிய பாடல் வரிகளுக்கு தானே இலக்கணமானவர் தலைவர்.

    இந்த நிகழ்ச்சியை திரு.சங்கர் ராவ் கூறி, அது நக்கீரன் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட, ‘தரணி கண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர்’ என்ற புத்தகத்தில் உள்ளது.

    கரிக்கோல்ராஜ் கூறுவது போல தலைவருக்கு...

    ‘மத்தவங்க வயிறு நிறைஞ்சா இவருக்கு மனசு நிறைஞ்சுடுமே...’

    சத்தியமான வார்த்தைகள்.

    அட..நிகழ்ச்சியை விவரிக்கும் வேகத்தில் முக்கியமானதை சொல்ல விட்டு விட்டேனே. விருந்து சாப்பிடும்போது உபசரித்த தலைவரின் தாயன்பை பார்த்து கண்கலங்கினார்களே, இரண்டு திமுகவினர்...

    அவர்கள் இருவரும் எதிரிகளையும் வசியப்படுத்தும் தலைவர் முன்னிலையில் மறுநாள் அதிமுகவில் சேர்ந்து விட்டனர்.

    அவர்தான் தலைவர்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்




  9. Thanks ujeetotei thanked for this post
    Likes ujeetotei, Richardsof liked this post
  10. #2506
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்

    ரிக்ஷாக்காரன் படத்தின் சிறப்புகளை தாங்கள் பதிவிட்ட விதம் மிகவும் அருமை .பாராட்டுக்கள் .ஒரு கைதியின் டயரி படப்பிடிப்பில் நடந்த ருசிகர தகவல்கள் சூப்பர் .உங்களுக்காக ரிக்ஷாக்காரன் சண்டை காட்சி வீடியோ .
    Last edited by esvee; 31st May 2015 at 06:55 PM.

  11. Thanks ujeetotei thanked for this post
    Likes ujeetotei liked this post
  12. #2507
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  13. Likes ujeetotei liked this post
  14. #2508
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like

  15. #2509
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  16. #2510
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்

    ரிக்ஷாக்காரன் படத்தின் சிறப்புகளை தாங்கள் பதிவிட்ட விதம் மிகவும் அருமை .பாராட்டுக்கள் .ஒரு கைதியின் டயரி படப்பிடிப்பில் நடந்த ருசிகர தகவல்கள் சூப்பர் .உங்களுக்காக ரிக்ஷாக்காரன் சண்டை காட்சி வீடியோ .
    Thanks for uploading the video sir, watched it two times.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •