Page 55 of 400 FirstFirst ... 545535455565765105155 ... LastLast
Results 541 to 550 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #541
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி கல்நாயக், வீடியோ கிடைக்கலையா?

    காலையிலேருந்து திரியில் பார்க்கலையேன்னு கேட்டேன். மற்றபடி நீங்கள் பெரியவர்னு சரியாத்தானே புரிஞ்சுண்டுருக்கேன்?

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #542
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் குரலில் ஒலித்த "புதியதோர் உலகம் செய்வோம்" சந்திரோதயம் படத்தின் டைட்டில் சாங் என்பதால் வீடியோ தனியாக கிடைக்கவில்லை என நினைக்கிறேன்.

  4. Likes rajeshkrv, kalnayak liked this post
  5. #543
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    நன்றி கல்நாயக், வீடியோ கிடைக்கலையா?

    காலையிலேருந்து திரியில் பார்க்கலையேன்னு கேட்டேன். மற்றபடி நீங்கள் பெரியவர்னு சரியாத்தானே புரிஞ்சுண்டுருக்கேன்?

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    உங்க பெரிய மனசு யாருக்கு வரும் - வயசுல என்னை விட பல மடங்கு அதிகமானவரு நீங்க, உங்களை விட மிகச் சிறியவனை பெரியவர்-னு மரியாதை போட்டு கூப்பிடறதை பார்க்கிறப்போ, நான் மட்டும் இல்லை உலகத்தில பார்க்கிற எவருமே உங்களை விட (அதாவது கலைவேந்தனை விட) பெரியவர் யாரும் இருக்கவே முடியாதுன்னு சூடம் அணைச்சு சத்தியம் பண்ணுவாங்க.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  6. Likes rajeshkrv liked this post
  7. #544
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    பூவின் பாடல் 21: "பூப்பூப்பூ பூப்பூத்த சோலை பூப்பூப்பூ பூமாதுளை"
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    அது என்னவோ தெரியலைங்க. இந்த பாட்டுன்னா ஒரு விதமா ஈர்க்குதுங்க. ராசா, பாரதிராஜாவோட கூட்டணி போட்ட இரண்டாவது இன்னிங்க்ச்ல என்னா மாதிரி பாட்டு போட்டிருக்கார் பாருங்க. நடிகர்கள பத்தி இன்னா சொல்லலாம். நாயகன், நடிகை ராதாவின் தம்பியாம் பேரு தெரியலைங்க. நாயகி அஷ்வினி (கிழக்கு சீமையிலே படத்துல கூட ஆக்ட் விட்டதுங்க). எஸ். பி. பி.யும் ஜானகி அம்மாவும் பாடியிருக்காங்க. புது நெல்லு புது நாத்து பத்தலைன்னு இந்த பூப்பூத்த சோலை வேற வருதுங்க.

    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  8. Likes chinnakkannan liked this post
  9. #545
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் குரலில் ஒலித்த "புதியதோர் உலகம் செய்வோம்" சந்திரோதயம் படத்தின் டைட்டில் சாங் என்பதால் வீடியோ தனியாக கிடைக்கவில்லை என நினைக்கிறேன்.//எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது எந்த தேவனின் குரலோ வாங்க மதுண்ணா.. உடம்பு தேவலாமா..

  10. #546
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    பூவின் பாடல் 21: "பூப்பூப்பூ பூப்பூத்த சோலை பூப்பூப்பூ பூமாதுளை"
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    அது என்னவோ தெரியலைங்க. இந்த பாட்டுன்னா ஒரு விதமா ஈர்க்குதுங்க. ராசா, பாரதிராஜாவோட கூட்டணி போட்ட இரண்டாவது இன்னிங்க்ச்ல என்னா மாதிரி பாட்டு போட்டிருக்கார் பாருங்க. நடிகர்கள பத்தி இன்னா சொல்லலாம். நாயகன், நடிகை ராதாவின் தம்பியாம் பேரு தெரியலைங்க. நாயகி அஷ்வினி (கிழக்கு சீமையிலே படத்துல கூட ஆக்ட் விட்டதுங்க). எஸ். பி. பி.யும் ஜானகி அம்மாவும் பாடியிருக்காங்க. புது நெல்லு புது நாத்து பத்தலைன்னு இந்த பூப்பூத்த சோலை வேற வருதுங்க.

    Radha's brother Ramarjun

  11. Thanks kalnayak thanked for this post
  12. #547
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கலை சார் , எனக்கு நன்றாக கிறுக்க வரும் - இதைப்போய் நீங்கள் கவிதை என்று சொன்னால் - காளமேக புலவர்களின் மனம் வலிக்காதா ?

    ஒன்று நிச்சயம் சார் , கம்பர்கள் வாழும் இந்த திரியில் கட்டு தரியான எனக்கும் கவி பாடும் திறமை வருவதில் வியப்பில்லையே !!

    என் தாயை மட்டும் மனதில் வைத்து கருக்குள் கருவை ஆரம்பிக்க வில்லை - முகம் காணாத எவ்வளவோ தாய் மார்கள் , அழத்தெரியாமல் அழுதுகொண்டிருக்கும் அந்த கற்பகிரகளுக்கு ஒரு சிறிய அஞ்சலி செய்யவ்வே ஆரம்பித்தேன் - அவ்வளவே !

  13. #548
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கலை அண்ட் கல்நாயக் - நீங்கள் உங்கள் சந்தேகத்தை கன்னித்தீவு மாதிரி தொடர்ந்துகொண்டே செல்கிறீர்கள் - உங்கள் இருவரையும் விட மிகவும் குறைந்த வயதுள்ள பிள்ளைகளான எங்களை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவதாக தெரியவில்லை - நீங்கள் இருவருமே இப்படி இருந்தால் அடுத்ததற்கும் அடுத்த தலைமுறையான எங்களுக்கு யார் வழி காட்டுவார்கள் ? சீக்கிரம் ஒருமனத்த முடிவுக்கு வாருங்கள் --- :-d

  14. Likes rajeshkrv liked this post
  15. #549
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **
    உலகத்திலேயே மிகத் துன்பமாய் ஒலிப்பது எது.. வரிசையாக நிறையச் சொன்னாலும் கொஞ்சம் வேதனையைத் தூண்டுவது பெண்ணின் அழுகை..

    இப்படித்தான் தோன்றியது அந்த அண்ணனுக்கு.. எப்பொழுதும் இன்னிசை, சிரிப்பொலிகள் என்று கேட்டிருந்த காதுகள் இன்று சோகத்தைக் கேட்கின்றனவே…

    யார்..யாரது…

    நான் நான் தானண்ணா.. – அழுகையின் குமுறலில் வார்த்தைகள் குழறலாக வர அவனுக்குப் புரியவில்லை

    பார்த்தான்..தெரியவில்லை..எனில் வந்தவள் ஒரு மெல்லிய சீலையால் மோவாய் மூக்கு கன்னம் எல்லாம்மூடியிருந்தாள்..கண்கள் மட்டும் கலங்கிச் சிவந்து அழுது களையிழந்து..

    யாரிவள்..மிகப் பரிச்சயமான கண்கள்.. இந்தக் குரல்.. மிகப் பரிச்சயமான குரல்..ஓ என் தங்கை..

    தங்கையே.. என்ன ஆயிற்று..

    அண்ணா – மெல்லிய சீலையை ஒரு கணம் விலக்கி மறுபடி மூடிக்கொண்டாள்.. அடடா.. இது என்ன மாபாதகம்.. மூக்கை யார் வெட்டினார்கள்.. என் தங்கையை அப்படிச் செய்வதற்கு யோசிப்பவர் கூட உண்டா..இருக்காது

    இவள் எதன் மீதாவது விழுந்து விட்டாளா.. எந்த ஆயுதமாயிருக்கும்..

    என்ன ஆயிற்று தங்கையே…

    தங்கை கலங்கிக் கலங்கிக் கூறினாள் “அண்ணா.. கானகத்தில் இருவரை ச் சந்தித்தேன்.. மூத்தவர் பால் ஆசைபட்டேன்..என்னை மணம்புரியச் சொன்னேன்.. மறுத்தார்.. இளையவரைக் கேள் என்றார்..அந்த இளையவரால் எனக்கிந்த நிலை…ஆனால் அண்ணா..அந்த மூத்தவர் இருக்கிறாரே..அவருக்கு ஒரு மனைவி..அவள்…”

    என ஆரம்பித்த தங்கை சிரிக்க ஆரம்பித்தாள்..

    “என்ன சொல்.. தங்கையே..”

    அவள் அழகைச் சொல்லி மாளாது அண்ணா.. அவள் போன்ற அழகி உன்னுடன் இருக்கத் தகுந்தவள் என்று தான் அவளைக் கவரப் பார்த்தேன்..ஆனால் அண்ணா.. “ மேலும் சிரிப்பு..

    பெண்கள் சாமான்யமாக பிற பெண்ணை அழகு என்று சொல்வதில்லை..இது அண்ணனுக்கும் தெரியும்..

    சொல் இவளே..

    “கயிலையில் இருக்கும் பரமசிவன் பார்வதியைத் தன் இடப்பக்கத்தில் வைத்திருக்கிறான்.. திருமாலோ திருமகளைத் தன் மார்பிலே வைத்திருக்கிறான். தன்னுடைய தேவியான கலைமகளைத் தன் நாவிலேயே வைத்திருக்கிறான் பிரம்மன்..இப்படி மும்மூர்த்திகளும் தத்தம் தேவியரைத் தங்களுக்கு உள்ளேயே வைத்து வாழ்கிறார்கள்..

    நீயோ மும்மூர்த்திகளை விடவும் கீர்த்தி பெற்றவன்..

    மின்னலை விட மிக நுண்ணிய இடை கொண்ட அந்த அழகு நங்கை – செம்பொன்னால் செய்த சிற்பத்தைப் போன்ற சீதையை- அடையும் போது அவளை எங்கே வைத்துவாழ்வாய் நீ என நினைத்தேன் .. சிரிப்பு வந்தது..”

    அண்ணன் ராவணனினுள் சீதையின் அழகு புகுந்து கொண்டது தங்கை சூர்ப்பனகை சொன்ன வார்த்தைகளினால்.
    .
    இதைத் தான் கவிச்சக்கரவர்த்தி கம்பன் கீழ்வரும் வரிகளில் சொல்கிறார்..

    பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பெண்ணை
    ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்
    மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண்இடையாளை
    மாகத்தோள் வீர பெற்றால் எங்கனம் வைத்து வாழ்தி!"

    சரி.. கம்பனை விரும்பாதவர்கள் யாரேனும் உண்டோ.. கவியரசர் கண்ணதாசனுக்கும் அவரை மிகப்பிடிக்கும்..

    கம்பன் சொன்னதை தான் புனைந்தபாடலிலும் கையாண்டிருக்கிறார்..

    பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான் அந்த
    பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
    பாற் கடலில் மாதவனே பக்கத்தில் வைத்தான் - ராஜா
    பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான்.

    (நெட்டில் படித்ததை கொஞ்சம் பெப்பர் சால்ட் போட்டுத் தந்திருக்கிறேன்)

    அழகாய்த் தான் இருக்கிறது..ஆனால் இந்தப் பரமகுரு என்பது பிரம்மனா.. ரெண்டு பக்கம் என்பது நாவுக்கு உண்டு என்பதால் சொல்கிறாரா.. இல்லை.. அவர் சொல்வது பரமகுரு –பரமனுக்கும் குருவான முருகன் தனது தேவியர் இருவரையும் இரண்டு பக்கமும் வைத்தான் என்பது..

    அச்சோ.. இப்போ பாட்டை மறுபடி கேட்க வேண்டுமே..

    பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
    அவர் பழக்கத்திலே குழந்தையைப் போன்றொரு அம்மாஞ்சி ராஜா.. யாரம்மா..

    ந.தி. + பத்மினி..




    கவிதையிலும் கலைகளிலும் பழக்கமில்லையே
    அவர் காதலிக்க நேற்று வரை ஒருத்தி இல்லையே – ந.தியின் முகபாவங்கள் மிகவும் ரசிக்கும் விதமாக இருக்கும்..

    *

    வியட் நாம் வீடு. இதுவும் மதுரை ஸ்ரீ தேவி தான்..வெகு சின்ன வயதில் ஆஸ்யூஸ்வல் அம்மா கூட்டிச் சென்று காட்டியிருக்கிறார்.. பின் நினைவு தெரிந்த பிறகு பார்த்தது துபாய் தான்..வீடியோ. தான்..
    ஆனால் அந்தவாடி ரமணி போடி ரமணி மட்டும் படம் பார்த்து வந்த பிறகு சொல்லிக் கொண்டே இருப்பேன் என சகோதரி சொல்லியிருக்கிறார். (யாராக்கும் அந்த ஆக்ட்ரஸ்) என் அண்ணன் அந்த வீடு ஷேப்பில் இருக்கும் பாட்டுப் புத்தகம் வாங்கிவந்தவுடன் புரட்டிப் பார்த்தது நினைவிருக்கிறது..

    குமுதத்தில்கூட ஏதோ போட்டி வைத்து பிரஸ்டீஜின் மூக்குக் கண்ணாடி, கைத்தடி எல்லாம் ந.தியே பரிசாக வழங்கும்படி ஏற்பாடு செய்திருந்ததை பைண்ட் செய்யப் பட்ட புத்தகத்தில் படித்த நினைவு..

    ந.தியின் கம்பீரம்..உன் கண்ணில் நீர்வழிந்தாலில் துவளும் மனோபாவம், எஸ்.வி.ராமதாஸின் அலட்சியத்துக்குக் காட்டும் பதில் அலட்சியம்.. ம்ம் மறக்க முடியாது..ம் மறுபடி ஒரு தடவை பார்க்க வேண்டும் பார்த்து ஒரு இருபது வருடம் இருக்கும்..

  16. Likes kalnayak, uvausan liked this post
  17. #550
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கலை , ck - நீங்கள் எவ்வளவு அழகாக ஆன்மிகத்தை திலகங்களின் பாடல்களுடன் இணைக்கிறீர்கள் - தனி திறமை வேண்டும் - இவர்கள் சாதித்த சாதனைகளிலே மிக உயர்ந்த சாதனை - இவர்கள் பாடல்களை எந்த சப்ஜெக்ட் உடனும் இணைக்க ஏதுவானவை . நாம் பார்க்கும் கான்னோட்டமும் ஒரு முக்கிய காரணம் . நடத்துங்கள் - ரசிக்க காத்திருக்கிறோம் .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •