-
8th June 2015, 06:20 AM
#11
Junior Member
Platinum Hubber
எம்.ஜி.ஆர் பேச ஆரம்பித்தார்.
’உங்களுக்கெல்லாம் தெரியும். சென்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எதிர்கொண்ட எதிர் பாராத தோல்வியைத்தொடர்ந்து என்னுடைய மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் என்னுடைய ஆட்சியைக் கலைத்து விட்டார்கள். அந்த நேரத்தில் நாகிரெட்டியாரின் மூத்த புதல்வர் பிரசாத் அகால மரணமடைந்து விட்டார். நான் துக்கம் விசாரிக்க நாகிரெட்டி அவர்களின் வீட்டிற்கு போயிருந்தேன். என்னை கண்டதும் அவர் ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்து “உங்கள் ஆட்சியை கலைத்து விட்டார்களே” என்று கதறி அழ ஆரம்பித்துவிட்டார். ( இந்த இடத்தில் எம்.ஜி.ஆர் சற்று நிறுத்தி விட்டார்.) எவ்வளவு உயர்ந்த உள்ளம் பாருங்கள். அவர் பெற்ற பிள்ளை இறந்து விட்டார்.ஆனால் அவர் என்னுடைய ஆட்சியை கலைத்துவிட்டார்களே என்று அழுகிறார். என் மீது அவர் எப்படிப் பட்ட அன்பைக்கொண்டிருக்கிறார் பாருங்கள்.
நான் இப்போது அவரிடம் மேடையில் ஏதோ கேட்டதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். நான் கேட்டேன். ‘ இன்று எனக்கு ஆட்சி மீண்டும் கிடைத்து விட்டது. ஆனால் உங்களுக்கு உங்கள் மகன்? உங்கள் மகனை என்றென்றைக்குமாக நீங்கள் இழந்தே விட்டீர்கள்.’
( எம்.ஜி.ஆர் குரல் மிகவும் நெகிழ்ந்து தழுதழுத்தது)
1980களில் வந்த படங்கள் குறித்த தன் அதிருப்தியை தொடர்ந்து எம்.ஜி.ஆர் வெளிப்படுத்திய விதம் கீழ் வருமாறு:
”’இதயக்கனி’ படம் வெளிவந்திருந்தபோது நான் என் ரசிகர் ஒருவரிடம் படம் பற்றி கேட்டேன். அவர் எனக்கு பிடித்திருக்கிறது என்று சொன்னார். நான் அவர் சொன்னதைக் கேட்டு திருப்தியடைந்துவிடவில்லை.” உன் தாயார் இதயக்கனி படம் பார்த்தார்களா? அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று மீண்டும் கேட்டேன். அவர் சற்று தயங்கினார். “ தயவு செய்து அவர் சொன்னதை அப்படியே சொல்” என்றேன். என் ரசிகர் மெதுவாக சொன்னார். ”வர வர எம்.ஜி.ஆர் படம் கூட இனி பார்க்க முடியாது போலிருக்கிறதே என்று என் தாயார் வேதனைப்பட்டார்.” இடி இறங்கியது போல நான் துடித்துப்போய் விட்டேன். அந்த படத்தில் நான் ராதா சலூஜாவுடன் நெருக்கமாக நடித்து விட்டேன் என்று பலரும் பேசியதை அறிய வந்தேன். மீண்டும் நானே எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து அப்படிப்பட்ட காட்சிகளை நீக்கினேன். மீண்டும் படத்தை வெளியிட்டேன். அதற்கே அப்படி என்றால் இப்போது நடப்பது என்ன? எவ்வளவு ஆபாச காட்சிகள். எப்படியெல்லாம் கற்பழிப்பு காட்சிகள். இது தான் திரையுலகம் காணும் பண்பாடா? இது நியாயமா? நான் மிகுந்த பணிவோடு எச்சரிக்கிறேன். தயவு செய்து நல்ல படங்களை மக்களுக்கு கொடுங்கள்.உங்களை கை கூப்பி வேண்டிக்கேட்கிறேன். தயவுசெய்து கண்ணியம் மீறாதீர்கள்.வளர்ச்சியில் தான் மலர்ச்சியை காண்கிறோம். அதே நேரம் மலர்ச்சியில் வளர்ச்சியைக் காண்கிறோம்.”
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th June 2015 06:20 AM
# ADS
Circuit advertisement
Bookmarks