Page 76 of 400 FirstFirst ... 2666747576777886126176 ... LastLast
Results 751 to 760 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #751
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    ரவி,

    கருவின் கருவில் நீங்கள் மட்டும் என்னவாம், எல்லோரையும் கண்ணீர் சிந்த வைத்து படிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அவரவர்கள் அம்மா, அப்பாவை நினைத்து நெக்குருக எல்லோருக்கும் புண்ணியம் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நன்றி.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #752
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சி.க.,

    எடை போடும் பாடல்கள் அருமை. என்ன "கத்திரிக்காய், கத்திரிக்காய், குண்டு கத்திரிக்காய்" என்று எடை போட்டவரை உணர்ச்சி வயப்பட செய்யும் பாடலையும் சேர்த்திருக்கலாம். பரவாயில்லை. மற்றபடி நல்ல தொகுப்பு.

    இதில் நீங்கள் "நிலவில் பொருள்கள் எடை இழக்கும்.." என்ற வரிகளை சொன்னவுடன் ராஜண்ணாவின் நினைவுதான் வந்தது. ஏன் என்றால் நானும் அவரும் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது அவரிடம் நான் சொன்னேன், "பூமியில் இருக்கும் வெயிட், நிலாவிற்கு போனபின்பு ஆறில் ஒரு மடங்காக குறைந்து விடும். உதாரணத்திற்கு 60 கிலோ வெயிட் உள்ளவர் நிலாவிற்கு போனால் 10 கிலோ ஆகி விடுவார்" என்றேன். "அட அப்படியா?" என்று ஆச்சரியப்பட்டவர் சொன்னார் "அப்படியென்றால் வெயிட் குறைக்க ஆசைப் படுபவர்களை எல்லாம் நிலாவிற்கு அனுப்பி வைத்தால் எளிதாக வெயிட் குறைத்துக் கொள்வார்களே!!!" என்றார்.

    வழக்கம் போல நான் ஒன்றும் பேச வில்லை. ஆனால் நினைத்துக் கொண்டேன் "அதைப் போல வயதைக் குறைக்க ஒரு கோளோ, துணைக் கோளோ கண்டு பிடித்தால், நமது திரியில் இருக்கும் நம்ம ரவி மற்றும் நான் இந்த விஷயத்தில் டூ விட்ட நம் நண்பர் ஒருவர் போன்றவர்களை அங்கே அனுப்பி வைத்தால் சந்தோஷமாக சென்று வருவார்கள்" என்று. நீங்க என்ன சொல்றீங்க?
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  4. Thanks chinnakkannan thanked for this post
    Likes gkrishna liked this post
  5. #753
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சி.க.,
    காஜோல் பிடிக்காது என்று சொல்லியே பக்கெட் பக்கெட்டாக தகவல் வாங்கி விட்டீர்கள். நுங்கு நுங்காக நுங்குடன் அடுக்கி வைத்து விட்டார்கள். பாராட்டுகள். அடுத்த தூண்டிலும் போட்டு விட்டீர்கள் சுஷ்மிதா சென் என்று சொல்லி. வாழ்த்துகள். தண்ணீர் வரலையே என்று கவலைப் பட்டு கவலைப் பட்டு ஜல தோஷம் வரவைத்துக் கொண்டு விட்டீர்கள். குழாயில் தண்ணீர் கண்ட பின்பாவது மூக்கு குழாயில் ஜலம் நிற்கட்டும். உடல் நலனை பேணுவீர்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  6. Thanks chinnakkannan thanked for this post
  7. #754
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    " தெய்வம் த்ந்த பூவே பாட்டுக்கே ஒரு வியாசம் எழுதலாம் ரவி.. விட்டுட்டீங்களே..."

    ck - தேர்ந்தெடுக்கும் எல்லா பாடல்களுக்குமே வியாசம் தேவை - இந்த பாடலும் அதற்க்கு ஒரு விதிவிலக்கு அல்ல - எழுத ஆரம்பித்துவிட்டால் எங்கு முடிப்பது என்று தெரியவில்லை - எழுதும் விஷயங்களுக்கு உதவியாகத்தான் பாடல்களை தேர்ந்தெடுக்கிறேன் - பாடல்களுக்காக விஷயங்களை எழுதவில்லை . இருப்பினும் வியாசம் தேவைப்படும் பாடல்களில் கண்டிப்பாக எழுத முயற்சி செய்கின்றேன் - நன்றி

  8. #755
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    பூவின் பாடல் 24: "பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ"
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    கேள்வி பதிலா வர்ற பாட்டு. சரோ அம்மா நடிச்சிருக்காக. கூட குழந்தையாக ஸ்ரீதேவி வர்றாக. கவியரசர் கண்ணதாசன் எழுதி இருக்காக. சுசிலாம்மா பாடியிருக்காக. கேளும்மா மின்னலு. மன்னிக்கணும். கேளுங்க நண்பர்களே.

    நான் நெறைய பாட்டு எழுதனுமின்னு நெனைச்சுகிட்டு இருக்கேன். சட்டுன்னு பூவிலே சிறந்த பூ அன்புன்னுட்டாங்களே. நான் எழுதற பூ வரிசையிலே அன்பு பத்திய பாடல்களையும் எழுதணுமா? இல்லையின்னா சி.க. கேட்டுருவாரே. என்ன பாட்டு எழுதிருக்கீங்க. பூவிலே சிறந்த பூ அன்புன்னு கவியரசரே சொல்லியிருக்காரு. அதைப் பத்தி சொல்லாம வேற எல்லாப் பூக்களையும் எழுதி என்ன உபயோகம்?-ன்னு. சரி அவருக்கு அந்த சிறந்த பூவை எழுதிச் சொல்லிட்டு மத்த பூவையெல்லாம் நாம எழுதிடலாம். சரியா நண்பர்களே?

    இப்ப இந்த பாட்டை கேட்போம்.



    அது சரி குலவிளக்குக்கு அந்த சிறந்த பூவைச் சூட முடியுமா? சூடினால்தான் குலவிளக்கா இருக்க முடியுமா... யாருங்க சொல்றது?
    Last edited by kalnayak; 8th June 2015 at 11:39 AM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  9. Likes rajeshkrv, gkrishna liked this post
  10. #756
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    ரவி,

    கருவின் கருவில் நீங்கள் மட்டும் என்னவாம், எல்லோரையும் கண்ணீர் சிந்த வைத்து படிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அவரவர்கள் அம்மா, அப்பாவை நினைத்து நெக்குருக எல்லோருக்கும் புண்ணியம் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நன்றி.
    நன்றி கல்நாயக் சார் , இந்த திரியில் இருக்கும்/ திரியைப்படிக்கும் எல்லா உள்ளங்களும் அம்மா, அப்பாவிற்கு சேவை செய்த, செய்துகொண்டிருக்கும் , கருணை நிறைந்த, கடமை உணர்சிகள் நிறைந்த உள்ளங்கள் ஆகத்தான் இருக்க முடியும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை -

    எடுத்து எழுதும் எல்லா உண்மை சம்பவங்களும் , என் வாழ்வில் , என் உறவினர்கள் வாழ்வில் , எனது நண்பர்கள் வாழ்வில் நடந்த , நடக்கின்ற சம்பவங்களே ... இதில் எதுவுமே கற்பனை இல்லை , பெயர்களைத்தவிர ---- . ஆராதிக்க வேண்டியவர்களை அவமானம் படுத்துகிறார்கள் ; நடமாடும் தெய்வங்களை , முதியோர் இல்லங்களில் நடை ஒடிந்த கல்லறை சின்னமாக ஆக்குகிறார்கள் ; பேசும் தெய்வங்களை ஊமையாக்கி மகிழ்வதில் என்ன வாழ்க்கை இருக்கிறது ? position , possesion எதற்குமே ஒரு மதிப்பை உண்டாக்குபவள் ஒரு தாய் தான் - அவளை தீண்டாத உலகம் , தீண்டும் நெருப்பிற்கு இரையாகட்டும் - இப்படிப்பட்ட எண்ண குமறல்களுக்கு ஒரு மாறுதல் /ஆறுதல் தருவதற்காகத்தான் இந்த கருவின் கருவை ஆரம்பித்தேன் - இதை முடிக்கும் தருவாயில் இருக்கிறேன் - அம்மாவிற்கு முடிவில்லை , அவள் கருணை மடிவதில்லை - உங்கள் எல்லோருடைய ஆதரவு இருப்பதால் , என் எண்ண ஓட்டங்களுக்கும் தடை வருவதில்லை -----

  11. Likes kalnayak liked this post
  12. #757
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Disaster Management Plan (DMP) , இந்த திரிக்கு உடனே தேவை என்று சற்று நாட்களுக்கு முன் எல்லோரையும் கேட்டுக்கொண்டேன் - யாருமே அதை படித்தமாதிரியும் , கவலைப்பட்டதாகவும் , கவலைப்படுவதாகவும் தெரியவில்லையே - அது ஏன் , ஏன் , ஏன் ????????

    மீண்டும் இந்த திரியில் "பாலாவின்" சூராவளிப்பயணம் .. கூரைகள் தரைமட்டம் - வீடுகள் இடிந்தன , ஒயர்கள் அறுந்தன , தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன - கடைசியாக வந்த செய்தி நம்மையெல்லாம் கதி கலங்க வைக்கிறது - ஆமாம் எது நடக்ககூடாது என்று நினைத்தோமோ அது நடந்து விட்டது - ராஜேஷையும் , கிருஷ்னாஜியையும் காண வில்லை - வெள்ளம் அடித்து செண்டிருக்ககூடும் என் நம்பப்படுகிறது - இனி வரப்போகும் புயலில் நாமும் இருப்போமா என்பது சந்தேகமே !!

    திரு CK , திரு கல்நாயக் , திரு ஆதிராம் , திரு ராகவேந்திரா , திரு கலை , எல்லோருக்கும் பணிவான வேண்டுகோள் - ஏதாவது உடனே செய்யுங்கள் ப்ளீஸ் -------நம்மை நாம் தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் !?

  13. Thanks gkrishna thanked for this post
    Likes rajeshkrv liked this post
  14. #758
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே

    காலை வணக்கம்

    மூன்று தினங்கள் உறவினர்கள் கல்யாண வேலையாக கோயம்புத்தூர் குருவாயூர் சென்றதால் திரியில் சங்கமிக்க முடியவில்லை.
    மன்னிக்கவும்.

    நல்லதொரு நட்பு திரியில் மூன்று நாட்கள் நடந்த சில அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆசை.அனைத்தும் உண்மை . எதுவும் கற்பனை இல்லை. 7/6/15 சண்டே அன்று என் மனைவியின் தாய்மாமனின் பெண்வழி பேரனுக்கு கல்யாணம் . மணபெண் என் மனைவியின் சித்தப்பாவின் பெண் . மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் குருவாயூரில் நடப்பதாக நிச்சயக்கப்பட்டு கோயம்புத்தூர்இல் சனிகிழமை reception ,ஞாயிறு (நேற்று) குருவாயூரில் கல்யாணம் என்று தீர்மானிக்கப்பட்டு இருந்தது. என் மனைவிக்கு இரு வழி உறவு என்பதால் நிச்சயம் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்பது எனக்கு இடப்பட்ட கட்டளை. கட்டளையை நிறைவேற்ற தவறி விட்டால் சவுக்கடி தான் (பூவா தலையா ஜெமினி எஸ் வரலட்சுமியை அடிப்பது போல் ) வெள்ளிகிழமை இரவே அனைவரும் சென்னையில் ஆஜர் ஆகிவிட்டனர். இரவு 8.45 alleppy எக்ஸ்பிரஸ்இல் பயணம்.பயணத்தின் போது மணப்பெண் ,மணப்பையன் இருவருமே ஒருவரை ஒருவர் கிண்டல்,கேலி,கலாய்ப்பு அடித்து கொண்டு தான் வந்தார்கள். எல்லோருமே மிக சந்தோசமாக இருந்த தருணம். சனிகிழமை காலை 4.15 கோயம்புத்தூர் ஜங்ஷன் இல் இருந்து எல்லோரும் கல்யாண சத்திரம் சென்றோம். காலையில் 10 மணிக்கு எங்கள் இன வழக்கப்படி பெண்ணுக்கும் பிள்ளைக்கும் காப்பு (சிலர் அதை கை விலங்கு என்பார்கள் ) அணிவிப்பார்கள்.மணபையன் குளித்து ரெடி ஆகி காப்புக்கு தயாராகி விட்டான். சாஸ்த்ரிகள் அருமையாக வேத மந்திரம் ஓதி மணப்பையனுக்கு காப்பையும் கட்டி விட்டார். பிறகு 'பெண்ணை அழைத்து கொண்டு வாருங்கள். அவாளுக்கும் காப்பு கட்டி முடிந்தது என்றால் பிறகு சாப்பாடு தான் ' என்றார் தீடிர் என்று பரபரப்பு. .அங்கும் இங்கும் ஒரே ஓட்டம் சாட்டம். ஆளாளுக்கு. ஒருவர் 'போலீஸ் க்கு போன் போடு ' என்றார் . இன்னொருவர் "நேற்று ட்ரெயினில் பார்த்தேனே.இன்று என்ன ' என்று சந்தேகபட்டார் மற்றொருவர் 'எல்லா ரூமும் தேடி பார்த்தேளா' என்றார். இதில் காமெடி சத்திரத்தில் ரூம் என்று எதுவுமே கிடையாது. ஒரு நீண்ட ஹால் அதை ஓட்டிஒரு மணப்பெண் அறை.அதை அறை என்று சொல்ல முடியாது. ஒரு தடுப்பு தான் .இறுதியில் தான் தெரிந்தது.மணப்பெண்ணை காணவில்லை என்று. பிறகு விசாரித்ததில் காலை 4.15 மணிக்கு கோயம்புத்தூர் ஜங்ஷன்இல் இறங்கி பேங்க் atm இல் பணம் எடுத்து வருகிறேன் என்று சென்ற பெண் அப்படியே எஸ்கேப்.பெண்ணின் தாயாரும்,தந்தையும் கிட்டத்தட்ட 6 மணி நேரமாக எதையும் யாரிடமும் சொல்லாமல் மனதிற்குள் அப்படியே வைத்து கொண்டு பின் function நேரத்தில் சொல்கிறார்கள். மாப்பிள்ளை பையன் MBA . மணப்பெண் MA ,M Phil . பெண்ணின் தந்தை பெங்களுருவில் ஒரு பிரபல தொழில் அதிபர். எல்லோரும் நல்ல நிலையில் இருப்பவர்கள்.

    "உன்னை சொல்லி குற்றமில்லை .என்னை சொல்லி குற்றமில்லை.காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி ' என்று பெரியவர்கள் எல்லோரும் பாட ஆரம்பித்து விட்டார்கள்

    இதுவும் கடந்து போகும் என்பார்கள்.

    என்னமோ போ கோபாலா . நடந்தது,நடப்பது,நடக்க போகிறது எல்லாமே வாசுதேவனின் (I mean கிருஷ்ண பரமாத்மா) செயல்

    இது ஒரு பகிர்வு மட்டுமே . மன அழுத்தத்தை பகிரும் போது பாரம் சற்று குறையும் என்பார்களே அது போல் தான் . நமது திரியை நான் சாய்ந்து கொள்ளும் ஒரு தோள் போலவே கருதுகிறேன் .
    gkrishna

  15. #759
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ரவி அருமையாக எழுதுகிறீர்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால் சில சமயம் மனம் வெறுமையாக இருக்கும் போது உங்களின் பல பதிவுகளை படித்து தெளிவு அடைகிறேன் . எந்த சுனாமி வந்தாலும் தொடர வேண்டும்
    gkrishna

  16. Likes rajeshkrv liked this post
  17. #760
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    lovely சாங் வாசு . பாலாவின் ஹம்மிங் (ரீங்காரம்) மற்றும் சுசீலாவின் தேன் குரல் இணைந்து பின்னி எடுக்குமே .அதுவும் சுசீலாம்மா குரல் வளைந்து நெளிந்து போகும் அழகு .கேரளாவின் மலை பாதைகளில் வண்டி வழுக்கி கொண்டு சொல்வது போல்

    இந்த நாணம் என்ற சொல் தான் கவிஞர்கள் கையில் சிக்கி கொண்டு எப்படி எல்லாம் கற்பனை ஊற்றாக வருகிறது .

    உன் பாதம் தொட்ட அலைகள் என் பாதம் தொட்டது
    நம்மிருவரையும் ஒன்றுசேர்க்க பாலமிட்டது
    இந்த நேரம் பார்த்து நாணம் வந்து கோலமிட்டது
    கொஞ்சநாள் வரையில் பொறுத்திருக்க ஆணையிட்டது

    இன்னொரு definition for நாணம் (இதுவும் வாலி தானே )

    ஆடவர் கண்களில் காணாதது
    அது காலங்கள் மாறினும் மாறாதது
    காதலன் பெண்ணிடம் தேடுவது
    காதலி கண்களை மூடுவது அது எது

    நாணமோ இன்னும் நாணமோ

    gkrishna

  18. Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •