Page 178 of 216 FirstFirst ... 78128168176177178179180188 ... LastLast
Results 1,771 to 1,780 of 2160

Thread: Latest News on Tamil Cinema

  1. #1771
    Senior Member Devoted Hubber k_vanan's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    KL malaysia
    Posts
    310
    Post Thanks / Like
    Quote Originally Posted by balaajee View Post
    I too have same memory...only songs where hit...
    AMARAN utter flop rombha prachanai kullana padam antha timeleh

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1772
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by k_vanan View Post
    AMARAN utter flop rombha prachanai kullana padam antha timeleh
    Guess Amaran released in 1992
    On 1st Jan 1993... Indian Express stated Amaran as 100-days venture in their paper..!!

  4. #1773
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    எங்கேயும் எப்போதும் படத்தின் இயக்குனர் சரவணன் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்துள்ளார் - Webulagam

    திரைப்பட இயக்குனர் சரவணன் எங்கேயும் எப்போதும், வலியவன், இவன் வேறமாதிரி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சரவணன் மற்றும் அவரது மைத்துனரும், உதவி இயக்குனருமான கௌதம் ஆகிய இருவரும் தங்களது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம், வரகூரில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளனர்.

    சென்னையிலிருந்து தொழுதூர், பெரம்பலூர், துறையூர் வழியாக நாமக்கல்லுக்கு கார் சென்றுகொண்டிருந்துள்ளது. பெரம்பலூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வி.களத்தூர் பிரிவு பாதையில் கார், சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

    இருவரும் உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்

  5. #1774
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    படம் 'பாஸ்'னா.. வசூல் 'மாஸ்'.. 2015ன் முதல் 100 கோடிப் படமாக உயர்ந்த காஞ்சனா 2! - Tamilone

    ரூ.100 கோடி வசூல் வேட்டையாடிய 'காஞ்சனா 2' - Tamil Hindu


    ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா 2' திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. தற்போது 50 நாட்களைக் கடந்து ஓடி வரும் இத்திரைப்படம், இன்னமும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிவருவது குறிப்பிடத்தக்கது.
    ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், 'காஞ்சனா' முதல் பாகத்தைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 'காஞ்சனா 2'-ம் பாகம் வெளியானது. லாரன்ஸ், நித்யா மேனன், தாப்ஸி, கோவை சரளா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'காஞ்சனா 2', விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.
    இது குறித்து பேசிய பாக்ஸ் ஆஃபிஸ் வல்லுநர் த்ரிநாத், "தமிழ் சினிமாவில் இந்த வருடம் முதல் ப்ளாக்பஸ்டர் படமாக 'காஞ்சனா 2' உருவாகியுள்ளது. டிக்கெட் விற்பனையில் மட்டும் இத்திரைப்படம் ரூ.108 கோடியை அள்ளியுள்ளது" என்றார்.
    ரூ.17 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் 'காஞ்சனா 2', சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் லாபகரமான படமாக அமைந்துள்ளது.
    தற்போது 'காஞ்சனா 3'-ஆம் பாகத்துக்கான கதை தயாராகி வருவதாக லாரன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Last edited by balaajee; 10th June 2015 at 02:19 PM.

  6. #1775
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    உருமாறும் ஏவிஎம் ஸ்டுடியோவின் முக்கியப் பகுதிகள்!



    ஏ.வி.எம். ஸ்டூடியோவின் கட்டிடப் பணிகள். | படம்: சிறப்பு ஏற்பாடு.

    தமிழ் சினிமாவின் மிக முக்கியமான அடையாளம் ஏவிஎம் ஸ்டுடியோ.

    உலக உருண்டையுடன் இருக்கும் ஏவிஎம் ஸ்டுடியோவில் சினிமா, சீரியல், ரியாலிட்டி ஷோ என எல்லாவிதமான படப்பிடிப்புகளும் நடந்து வருகின்றன.
    தற்போது ஏவிஎம் ஸ்டுடியோ மெய்யப்ப செட்டியாரின் மகன்கள் ஏவிஎம் சரவணனுக்கும், பாலசுப்பிரமணியனுக்கும் சொந்தமாக உள்ளது.

    இதில், பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான பகுதிகள் மட்டும் இடிக்கப்படுகின்றன. அந்தப் பகுதியில் பாலசுப்பிரமணியன் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டலாம் என்று திட்டமிட்டுள்ளார்.
    ஸ்டுடியோக்களால் வருமானம் இல்லை என்பதாலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    கோயில், பூங்கா, காவல் நிலையம், நீதிமன்றம், பேருந்து நிலையம் என்று சினிமாவுக்குத் தேவையான எல்லா செட்டும் போடுவதற்கு வசதியாக இருந்த ஏவிஎம் ஸ்டுடியோ பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வருவதால், இனி சின்ன பட்ஜெட்டில் சினிமா எடுப்பவர்கள் லொக்கேஷனுக்காக கொஞ்சம் மெனக்கெட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

  7. #1776
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து விஷால் வழக்கு

    ஜூலை 15ம் தேதி தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் மீண்டும் சரத்குமார் போட்டியிட தலைவர் பதவியில் போட்டியிட இருக்கிறார். இவரது அணி சார்பில் பொதுச்செயலாளராக உள்ள ராதாரவி, துணைத் தலைவர் கே.என்.காளை போன்றோரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில் புதிதாக விஷால், நாசர் அணியினரும் தேர்தலில் நிற்க தயாராகி வருகிறார்கள்.இந்நிலையில் நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டும் பணி நடந்துவருகிறது. எனினும் தேர்தல் நடக்கவிருப்பதாக அறிவித்துள்ள ஜூலை 15ம் தேதியான புதன் கிழமை என்பது வேலை நாள்.

    எப்போதும் தேர்தல் இரண்டாம் ஞாயிறான விடுமுறை தினத்தில் தான் நடக்கும் அதே போல் இந்த முறையும் மாற்ற வேண்டும். இல்லையேல் வெளியூரில் படப்பிடிப்புகளில் இருப்போரால் தேர்தலில் கலந்துகொள்ள இயலாது. அதே போல் தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் எனவும் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து வழக்கு தொடுத்துள்ளார் விஷால்.

    முக்கியமாக நாடக நடிகர்கள் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும் அதனால் தேர்தல் தினத்தை மாற்ற வேண்டும் என வழக்கில் கோரப்பட்டுள்ளது. எனவே நீதிபதி விசாரணைக்கு பிறகு தேர்தல் தேதி மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  8. #1777
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    பனுவல் ஃபிலிம் சொஸைட்டி - சென்னையில் புதிதாக ஆரம்பம்

    திரைப்பட ஆர்வலர்களுக்கு, இந்தியாவுக்கு உள்ளேயும், இந்தியாவுக்கு வெளியேயும் தயாராகும் சிறந்தப் படங்களை பார்க்க இன்றும் ஆதாரமாக இருப்பது திரைப்பட சங்கங்கள்.

    தனிநபர்களின் அல்லது ஒரு குழுவின் முயற்சியில் ஆரம்பிக்கப்படும் இந்தச் சங்கங்கள், உலகில் வெளியாகும் சிறந்தப் படங்களை கண்டறிந்து, அவற்றை திரையிட்டு நமது திரைப்பட அறிவை, ரசனையை வளர்ப்பதில் பெரும் பங்காற்றி வருகின்றன. அந்த வகையில் கோவையை மையமாக வைத்து இயங்கும் கோணங்கள் ஃபிலிம் சொஸைட்டி முக்கியமானது.

    அதேபோன்ற ஒரு ஃபிலிம் சொஸைட்டியை சென்னை திருவான்மியூரில் இயங்கிவரும், பனுவல் புத்தக நிலையம் ஆரம்பிக்க உள்ளது. பனுவல் ஃபிலிம் சொஸைட்டி என்ற இந்த புதிய திரைப்பட சங்கம் வரும் ஞாயிறன்று (14-06-15) பனுவல் புத்தக நிலையத்தில் முறைப்படி தொடங்கயிருக்கிறது.

    அன்றைய தினம், மதியத்திற்கு மேல் 3 மணிக்கு சே குவேரா குறித்து பிரபல இயக்குனர் ஸ்டீவன் சோடர்பெர்க் இயக்கிய, சே திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்பட உள்ளன. மூன்று மணிக்கு முதல் பாகம் (134 நிமிடங்கள்) திரையிடப்படும். அதனைத் தொடர்ந்து பனுவல் ஃபிலிம் சொஸைட்டியின் தொடக்கவிழா. அதன் பிறகு சே திரைப்படத்தின் இரண்டாம் பாகம்.

    தொடர்ச்சியாக பனுவல் ஃபிலிம் சொஸைட்டி அரிய திரைப்படங்களை திரையிட உள்ளது. இதற்கு ஒரு வருட உறுப்பினர் கட்டணம் 500 ரூபாய் மட்டுமே. 500 ரூபாயுடன் மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் எடுத்து வந்து எப்போது வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகிக் கொள்ளலாம்.

    மேலும் தகவல்களுக்கு - நேரில் செல்ல - பனுவல் ஃபிலிம் சொஸைட்டி, 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை 41. தொலைபேசி எண்கள் - 8939967179, 044-43100442.

    அரிய வாய்ப்பு, திரைப்பட ஆர்வலர்கள் அவசியம் பயன்படுத்திக் கொள்ளவும்.

  9. #1778
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    வைரலாகும் நஸ்ரியா -ஃபகத் ஃபாசில்!

    சமீபத்தில் தனது ரேஞ்ச் ரோவர் கார் மீது ரோட் சைட் கார் வாசி விபத்தை ஏற்படுத்த வரிந்துகட்டிக்கொண்டு இறங்கி சண்டைக்கு போனார் நஸ்ரியா. இந்நிலையில் இந்த விபத்தால் செண்டிமெண்ட்டாக வருந்திய நஸ்ரியா காரை மாற்றிவிட்டார்.

    அந்த ரேஞ்ச் ரோவர் காருக்கு பதில் இப்போது புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கியிருக்கிறார் நஸ்ரியா. வீட்டில் டிரைவரே இருந்தாலும் ஃபகத் மற்றும் நஸ்ரியா தம்பதியர் இருவரும் தானாகவே கார் ஓட்டி செல்லும் வழக்கம் உடையவர்கள்.
    காரையும் அதிகம் நேசிக்கும் இருவரும் தற்போது புது காரான மெர்டிஸ் பென்ஸ் வாங்கிய நிலையில் போஸ் கொடுத்து போட்டோ வெளியிட ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கார் மட்டுமல்ல பல விஷயங்களில் நஸ்ரியா, ஃபகத் இருவருக்கு ஒரே எண்ணங்கள், ஒரே விருப்பங்கள் என்பது யாவரும் அறிந்ததே. கலக்குங்க!

  10. #1779
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    வாழ்க்கையில் உத்தம வில்லன்கள் - கமலை நேரடியாக தாக்கிப் பேசிய லிங்குசாமி- webulagam

    லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருக்கும் ரஜினி முருகன் படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில், கமலை பெயர் குறிப்பிடாமல் தாக்கிப் பேசினார் லிங்குசாமி.

    திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த, வாங்கி வெளியிட்ட பெரும்பாலான படங்கள் லாபத்தையே சம்பாதித்தன. மஞ்சப்பை, சதுரங்க வேட்டை என்று வெற்றிகளை ருசித்துக் கொண்டிருந்த நேரத்தில் கமலை வைத்து உத்தம வில்லன் படத்தை தயாரித்தனர். கதை, திரைக்கதை, நடிப்பு மூன்றுக்கும் லம்பாக கோடிகளை வாங்கிய கமல், ஒரு ரூபாய் செலவளிக்காமல் தயாரிப்பிலும் தனது பெயரை போட்டுக் கொண்டார். படத்தின் வெளிநாட்டு உரிமையையும் அவர் வைத்துக் கொண்டதாக கேள்வி.

    விஸ்வரூபம் படத்தின் போது கமலுக்கும், விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மீது கமல் வழக்கு தொடுத்திருந்தார். அதனை அவர்கள் உத்தம வில்லன் ரிலீஸின் போது பிரச்சனையாக முன் வைத்தனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்தியும், பணம் தந்தும் அதனை முடிவுக்கு கொண்டு வந்தது திருப்பதி பிரதர்ஸ்தான்.

    பணம் போட்டதுடன் இதுபோன்ற பிரச்சனைகளையும் லிங்குசாமி எதிர்கொண்டார். ஒருவழியாக படம் வெளியானது. அனைத்து சென்டர்களிலும் படம் அட்டர் பிளாப். சம்பளம் தவிர்த்து 35 கோடி படத்தின் பட்ஜெட் என்று காசு வாங்கிய கமல் 15 கோடிகளைக்கூட படத்துக்கு செலவளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மொத்தத்தில் உத்தம வில்லனால் திருப்பதி பிரதர்ஸ் சுத்தமாக மொட்டையடிக்கப்பட்டது.

    நேற்றைய விழாவில் இதனை குறிப்பிட்டார் லிங்குசாமி. "நீங்க எதாவது நல்லது செய்யணும்னு நினைச்சா உடனே பண்ணிடுங்க. ஏன்னா, வாழ்க்கையில் நாம் நிறைய உத்தம வில்லன்களை சந்திக்க வேண்டிவரும்" என்றார்.
    ஆளவந்தான் தோல்வியின் போது தாணு வீசிய வார்த்தைகளைப் போலன்றி மென்மையாகவே லிங்குசாமி கமலை விமர்சித்தார். அது அவரது நாகரிகம்.

  11. #1780
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ரஜினிமுருகன் விழாவில் வருண்மணியனை வறுத்தெடுத்த லிங்குசாமி!

    சில வாரங்களுக்கு முன்பாக, பிரபல தயாரிப்பாளரும் தொழிலதிபருமான வருண்மணியன், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், மஞ்சப்பையோடு வந்தவர்கள் மஞ்சப்பையோடு போவார்கள் என்கிற பொருளிலும், ரஜினிமுருகன் அடுத்த எம்ஜிஆர் ஆகுமா என்கிற மாதிரியும் எழுதியிருந்தார். இவை இரண்டும் இயக்குநர் லிங்குசாமியைத் தாக்கி எழுதப்பட்டதென்று அப்போதே சொல்லப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக ரஜினிமுருகன் படத்தின் டீஸர் வெளியீட்டுவிழாவில் பேசினார் இயக்குநர் லிங்குசாமி.
    அவர் பேசும்போது, "மஞ்சப்பையோடு வந்தவன் மஞ்சப்பையோடு போவான் என்பது போன்ற கமெண்ட்டுகள் வந்தன. ஆனால் நான் நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டுவந்தவன், ஜி படத்துக்குப் பிறகுதான் சண்டக்கோழி படம் செய்தேன், பீமாவுக்குப் பிறகு பையா எடுத்தேன், எங்கள் நிறுவனத்தில் எடுத்த தீபாவளி, பட்டாளம் ஆகிய இரண்டுபடங்களும் ஓடாதநிலையில் நானே தயாரித்து இயக்கிய படம் பையா.

    அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது துணைநடிகர்களுக்குச் சம்பளம் தரவில்லை என்பதற்காக மொத்தமாக எல்லோரும் கிளம்பிப்போக முடிவெடுத்த சம்பவமும் உண்டு. அவற்றையெல்லாம் கடந்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்.

    ரஜினியா எம்ஜிஆரா என்றெல்லாம் கேட்டார்கள், ரஜினியே பெரியவர் அதைவிடப் பெரியவரான எம்ஜிஆராக எங்களை ஆக்க நினைத்தற்குச் சந்தோசம்தான். இந்த ரஜினிமுருகன் படம் திட்டமிட்டபடி வெளிவரும், எட்டுக்குஎட்டு அறைக்குள் இருந்துதான் ஆனந்தம் படத்தை எடுத்தோம்.
    அபிபுல்லாசாலையின் டிராபிக்குகளுக்கு மத்தியில்தான் ரன் கதையை எழுதினேன், உண்மையும் நேர்மையும் எந்நாளும் நம்மைக்காக்கும், சோதனைகள் வரும்போதுதான் நல்லவன் யாரு கெட்டவன் யாரு என்பதெல்லாம் தெரியவரும், நம்மைச் சுற்றிப்பார்த்துக்கொள்ள நிதானமாக விளையாட ஒரு வாய்ப்புக் கிடைக்கும், பிரச்சினை இல்லை என்று சொல்லவில்லை, இருக்கு அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டுவருவோம்" என்று லிங்குசாமி பேசினார்.

Similar Threads

  1. Karthik Raja (KR) Albums and Latest news
    By Hulkster in forum Current Topics
    Replies: 161
    Last Post: 13th January 2011, 06:58 PM
  2. Latest News & Other Tidbits on AR Rahman (II)
    By NOV in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 1486
    Last Post: 2nd September 2009, 08:30 AM
  3. Listen to Latest n Old Tamil Albums Over 2k Here
    By logon2future in forum World Music & Movies
    Replies: 0
    Last Post: 19th February 2007, 10:45 PM
  4. Latest Tamil songs & Videos
    By mottufx in forum Classifieds
    Replies: 0
    Last Post: 3rd August 2005, 02:01 PM
  5. TAMIL LATEST RINGTONES
    By ferrari9845 in forum Classifieds
    Replies: 1
    Last Post: 20th June 2005, 08:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •