Page 310 of 402 FirstFirst ... 210260300308309310311312320360 ... LastLast
Results 3,091 to 3,100 of 4013

Thread: Makkal Thilakam MGR -PART 15

  1. #3091
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post





    மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும்
    " நம் நாடு " புரட்சிகரமான வசூல் சாதனை.
    கடந்த வாரம் ஓடி முடிய வசூல் ரூ.1,03,000/-
    மதுரை சென்ட்ரல் சினிமாவில்
    சமீபத்தில் மறுவெளியீட்டில் வெளியான படங்களில்

    அடிமைப்பெண் - ரூ.1.09.000/- முதலிடம்.

    நம் நாடு - ரூ.1.03.000/- 2 வது இடம்.

    எங்க சின்ன ராசா -ரூ.1,02,000/- 3 வது இடம்.





    தகவல்கள் உதவி: மதுரை திரு. எஸ். குமார்.
    மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நம்நாடு திரைப்படம் ரூ.1,03,000/- வசூலை அள்ளிக் குவித்திருப்பது மகிழ்ச்சி. இத்தனைக்கும் திரு.சைலேஷ் சார் கூறியிருப்பது போல விடுமுறை நாட்களோ (ஞாயிறு தவிர) பண்டிகைகளோ இல்லாத நிலையில் இந்த வசூல் சுனாமி என்றால் தலைவரின் மாஸ் வியக்க வைக்கிறது. தகவலை தெரிவித்த மதுரை எஸ்.குமார் அவர்களுக்கும் அதை பதிவிட்ட திரு.லோகநாதன் அவர்களுக்கும் நன்றி.

    படம் வெளியாகும் முன்பு அது வெளியிடப்படும் விவரத்தை தெரிவித்ததுடன், படத்துக்காக வடிவமைக்கப்பட்ட பேனர் டிசைனையும் நண்பர் மதுரை திரு.சுந்தரராஜன் நமது திரியில் பதிவிட்டார். படம் நன்கு வசூலாகி விநியோகஸ்தருக்கு லாபத்தை கொடுக்க வாழ்த்து தெரிவித்தேன். நல்ல லாபத்தை கண்டிருக்கும் விநியோகஸ்தருக்கு வாழ்த்துக்கள். பேனரை வடிவமைத்த நண்பர்களுக்கும் அதை நமது திரியில் பதிவிட்ட திரு.சுந்தரராஜன் அவர்களுக்கும் நன்றிகள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. Thanks orodizli thanked for this post
    Likes Russellbpw, siqutacelufuw, orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3092
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    பொன்மனசெம்மலின் நெல்லை மாவட்டத்து சாதனைகள் பற்றி பதிவிட்ட சகோதரர் வினோத் அவர்களுக்கு நன்றி !

    விரிவான செய்திகள் : திரி அன்பர்கள் பார்வைக்கு :

    நெல்லை மாவட்டத்தில், புரட்சித்தலைவரின் திரையுலக சாதனைகளை தொடர்ந்து, அரசியல் வெற்றிகள், 1977, 1980 மற்றும் 1984ல் நடந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களிலும் எதிரொலித்தது. ஒவ்வொரு முறையும் அதிசயிக்கத்தக்க வகையில், முன்பிருந்ததை விட அதிக பலத்துடன், அதிக வாக்குகள் பெற்று, மக்களின் முழு நம்பிக்கையையும் பெற்றவர் பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனச்செம்மல் அவர்கள் .

    ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில்,

    விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, சங்கரநயினார் கோயில், வாசுதேவநல்லூர், தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம், திருநெல்வேலி, சேரன்மாதேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, சாத்தான்குளம், ராதாபுரம், திருச்செந்துர், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி ஆகிய 18 தொகுதிகள் அடங்கியிருந்தது.



    1977

    நமது புரட்சித்தலைவரின் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், 1977ல் நடந்த சட்டமன்ற தேர்தலில், இடது கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நான்கு முனை போட்டியில் (தி.மு.க., காங்கிரஸ் மற்றும் மத்தியில் அப்போது ஆட்சியிலிருந்த ஜனதா ஆகிய 3 கட்சிகளையும் எதிர்த்து ) 12 தொகுதிகளை கைப்பற்றீயது. இந்த 12 தொகுதிகளில் இடது கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற வாசுதேவநல்லூர், அம்பாசமுத்திரம் ஆகிய இரு தொகுதிகளும் அடக்கம். .

    தி.மு.க. சங்கரநாயினார் கோவிலில் வெறும் 337 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ் - வலது கம்யூனிஸ்ட்கட்சி கூட்டணி 3 தொகுதிகள் (தென்காசி, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம்) வென்றது. கோவில்பட்டியில், நமது அ.இ. அ .தி.மு.க. வேட்பாளர் பி. சீனிராஜ் வெறும் 383 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தார். ஜனதா கட்சி நாங்குநேரி மற்றும் சாத்தான்குளம் ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் நாங்குநேரி தொகுதியில், நமது அ.இ. அ .தி.மு.க. வேட்பாளர் டி. வெள்ளையா அவர்கள் வெறும் 204 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஜனதா கட்சி சார்பில் வெற்றி பெற்ற திரு. ஜான் வின்சென்ட் பின்னர் நமது புரட்சித்தலைவர் தலைமையை ஏற்று அ.இ. அ .தி.மு.க..வில் தன்னை இணைத்து கொண்டார் என்பது தனி கதை. சாத்தான்குளத்தில் புரட்சித்தலைவர் அவர்கள் வேட்பாளர் எவரையும் நிறுத்த வில்லை. அங்கு சி.பா. ஆதித்தனார் அவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு நெல்லை ஜெபமணியிடம் தோற்றுப் போனார்.

    3ல் இரண்டு பங்கு வெற்றி


    1980

    நமது புரட்சித்தலைவரின் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், 1980ல் நடந்த சட்டமன்ற தேர்தலில், தி.மு.க. - காங்கிரஸ் மெகா கூட்டணியை எதிர்த்து,திரு. குமரி அனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், திரு. நெடுமாறனின் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் மற்றும் வலது கம்யூனிஸ்ட், இடது கம்யூனிஸ்ட், தமிழ்நாடு முஸ்லிம் லீக் போன்ற சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தீரமாக போராடியது.

    மொத்தம் உள்ள 18 தொகுதிகளில், நமது புரட்சித்தலைவர் அவர்கள் கண்ட பேரியக்கம் 10 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் சாத்தான் குளம், ராதாபுரம், மற்றும் ஆலங்குளம் ஆகிய 3 தொகுதிகளிலும் , வலது கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் ஆகிய 2 தொகுதிகளிலும், இடது கம்யூனிஸ்ட் கட்சி வாசுதேவநல்லூர், அம்பாசமுத்திரம் ஆகிய 2 தொகுதிகளிலும் , வெற்றி பெற்றது.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கடையநல்லூர் தொகுதியில் மட்டுமே வென்றது. தி. மு.க. ஒரு இடம் கூட பெறவில்லை.

    1984

    1984ல் நடந்த சட்டமன்ற தேர்தலில், நமது புரட்சித்தலைவரின் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கூட்டணி காண விருப்பம் கொண்டதால், காட்சிகள் மாறி அணிகளும் மாறியது. ஆனால் கூட்டணியில் திரு. குமரி அனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் நீடித்த காரணத்தால் ராதாபுரம், சாத்தான்குளம் ஆகிய தொகுதிகளை கைப்பற்ற முடிந்தது. 1980ல் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ், நமது மக்கள் தலைவருடன் கூட்டணி கொண்டதால், இம்முறை ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி,, வாசுதேவநல்லூர், தென்காசி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளை வெல்ல முடிந்தது.

    தி.மு. க. விளாத்திகுளம் மற்றும் பாளையங்கோட்டை ஆகிய 2 தொகுதிகளை வென்றது.

    இந்த தேர்தலில் அ.இ. அ .தி.மு.க. வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அதிக வாக்குகள் பெற்று, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமையால், புரட்சித்தலைவரின் வாக்கு வங்கி உறுதி செய்யப்பட்டது.


    நெல்லை மாநகரில், நமது .எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்களின் கலையுலக - அரசியல் சாதனைகள் ஏராளம் என்றே கூறலாம்.

    நெல்லையில் தலைவரின் அரசியல் சாதனைகளை விரிவாக பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  6. #3093
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று ரோமியோ ஜூலியட் திரைப்படம் பார்த்தேன். ஆரம்பத்தில் அன்பே வா திரைக்காவியத்தில் இருந்து மக்கள் திலகமும் சரோஜா தேவி அவர்களும் நடித்த காட்சி காட்டுவார்கள். அப்போது திரை அரங்கில் எழுந்த ஆரவாரம் அடங்க வெகு நேரமாகியது.

  7. Thanks orodizli thanked for this post
  8. #3094
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை டிலைட் திரை அரங்கில் நம்நாடு இரண்டாவது வாரம்.

  9. Thanks orodizli thanked for this post
  10. #3095
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  11. #3096
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  12. Likes siqutacelufuw liked this post
  13. #3097
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  14. #3098
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  15. #3099
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  16. #3100
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by muthaiyan ammu View Post
    excellent art work . Thanks sir

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •