Page 312 of 402 FirstFirst ... 212262302310311312313314322362 ... LastLast
Results 3,111 to 3,120 of 4013

Thread: Makkal Thilakam MGR -PART 15

  1. #3111
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    Dear Sir,

    Sorry to respond to a response that you have given for Mr.Murali.

    I will put up some advertisement AVANAM that was published in the newspaper TWO DIFFERENT ADVERTISEMENT which certainly can be considered as "ORU PAANAI SOATRUKKU ORU SOARU PADHAM"

    It is your kindself who had said that RASIGAR MANDRAM NOTICES cannot be taken as AUTHENTIC RECORD during initial stages. NOW you are saying it is AAVANAM....

    RKS
    Dear Sir,

    As mentioned yesterday, I have put up here Authentic collection records whatever I have for Both the Thilagams. This is not to invite any fresh debate or argument but to stress on one generic point.

    Unless and Until such paper advertisement is available at both the ends, where both the thilagam's film had release in same theater, it is very absurd to make even a comparison because we are not considering any other points like time of release, gap of release, theater capacity etc., When such a comparison is made, how can both of us say, we have surpassed you....?

    Both the Thilagam's does not require anybody to vouch because they have already proved their mettle and capabilities in different forms in Cine Field. At the same time, I cannot accept without a paper advertisement in this similar form of comparison and even it applies for you.

    From this one single paper ad published by the producers / distributors of MT's Rickshawkaran & NT's Raja that was released in same theater in Mount Road.

    This advertisement proves that Nadigar Thilagam's film has collected more amount in less number of days in comparison from same theatre

    while I am not saying that Makkal Thilagam film has not unlike some of our other friends..who will still refuse to accept even after seeing this advertisement.


    This is again, only a request to all friends, if at all a comparison is made, please make in absolute terms as below and not compare at our whims and fancies that too with Rasigar Mandram Notices. Otherwise, Let us Praise the Glories of our Demi God's without comparing with each other.

    There are other areas to proudly talk about like their friendship, their love and affection for each other, their mutual respect for their families, their bonding than these rasigar mandram notices that invites unwanted discussions that deviates from our mission etc.,

    Thanks and Regards
    RKS

    Last edited by RavikiranSurya; 15th June 2015 at 08:25 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3112
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    டியர் ஆர்.கே எஸ்

    ரிக்ஷாக்காரன் வெளிவந்த நேரத்தில் சென்னை தேவி பாரடைஸ் டிக்கெட் நிலவரம் .
    29.5.1971
    1.25
    2.00
    2,50
    3.00

    26.1.1972
    கட்டணம் உயர்ந்தது
    1.35
    2.10
    2.60
    3.50
    மேலும் 2.50 இருக்கைகள் குறைக்கப்பட்டு 3.50 இருக்கைகள் அதிகமாக உயர்த்தினார்கள் .ராஜா படத்திற்கு அதிகமாக காலை காட்சிகள் நடந்தது . இப்போது புரிந்ததா ? அதுவும் தேவி பாரடைஸ்
    அரங்கில் மட்டும் வசூல் வித்தியாசம் 21.769 மட்டும் . அனால் 100 நாட்கள்- ராஜா வசூல் ரிக்ஷாகாரனை விட குறைவு இதை ஏன் சொல்லவில்லை ?
    விபரம் தெரியாமல் இனிமேலாவது யோசித்து பதிவிடவும் .




  4. #3113
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    MGR.Remembered- 28
    courtesy -sachi srikantha
    ‘Turns’ in Cinematic Life

    In chapter 111 of his autobiography, MGR identified 14 of his movies as providing ‘turns’ in his cinematic life, among a cumulative total of 133 movies in which he had starred. These were,

    1st turn: ‘Rajakumari’ (The Princess, 1947); debut as hero.

    2nd turn: ‘Maruthanaatu Ilavarasi’ (The Princess from Marutha Land, 1950); pairing with V.N. Janaki and its difficulties.

    3rd turn: ‘Marma Yogi’ (Mysterious Mystic, 1951)

    4th turn: ‘Malai Kallan’ (Mountain Thief, 1954)

    5th turn: ‘Nadodi Mannan’ (Vagabond King, 1958); double role, own production.

    6th turn: ‘Thirudathe’ ( Don’t Steal, 1961)

    7th turn: ‘Thai Sollai Thattathe’ (Don’t reject Mother’s Words, 1961)

    8th turn: ‘Enga Veetu Pillai’ (Our Own Child, 1965); double role.

    9th turn: ‘Kaavalkaaran’ (Protector, 1967)

    10th turn: ‘Kudiyiruntha Kovil’ (Family residing temple, 1968); double role

    11th turn: ‘Oli Vilakku’ (Light Lamp, 1968) – 100th movie

    12th turn: ‘Adimai Penn’ (Slave Woman, 1969); own production

    13th turn: ‘Maatukara Velan’ (Cowherd Velan, 1970); double role

    14th turn: ‘Ricksawkaran’ (Rickshaw Guy, 1971)



  5. #3114
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    If cinema was the 20th century art form, the same muse concept applied for popular and predominant actors and directors. Among his heroines, multi-talented Charlie Chaplin (1889-1977) had three muses; namely, Edna Purviance (1895-1958), Georgia Hale (1906-1985) and Paulette Goddard nee Levy (1910-1990). These three muses were 6 – 21 years younger than Chaplin. Chaplin married only Goddard.

    Similarly, MGR also had four muses, who played the heroine role in majority of his 133 movies. They are, B. Saroja Devi, Jayalalitha, Manjula and Latha. The age difference between MGR and these four muses were, 21 years (Saroja Devi), 31 years (Jayalalitha) and 36 years (both Manjula and Latha). One who dominated MGR’s movies in the first half of 1960s was B. Saroja Devi (b. 1938). Three of MGR’s chosen 1960s movies, Thirudathe (6th turn), Thai Sollai Thattathe (7th turn) and Enga Veetu Pillai (8th turn) featured her. Saroja Devi also had appeared previously as a second heroine in MGR’s own production, Nadodi Mannan (5th turn). Then, Jayalalitha (b. 1948) came to dominate MGR’s movies in the second half of 1960s. Saroja Devi got married in 1967. Check the fact that there is a ten year age gap between Saroja Devi and Jayalalitha. Five of MGR’s chosen 1960s movies, Kaavalkaaran (9th turn), Kudiyiruntha Kovil (10th turn), Oli Vilakku (11th turn), Adimai Penn (12th turn) and Maatukara Velan (13th turn) featured Jayalalitha. Saroja Devi and Jayalalitha did appear together in one MGR movie, Arasa Kattalai (King’s Command, 1967), which was touted as the one show a ‘rejuvenated’ MGR, after his gun-shot injury. More about this incident, later.

    K.R. Vijaya (b. 1948), another competent heroine, was also paired with MGR in 1964 and 1965 for three movies. In one additional MGR movie (Kanni Thai/ Virgin Mother, 1965), Vijaya shared the second billing with Jayalalitha. But in the subsequent year, Vijaya got married and temporarily left the arena for childbirth. This made it easier for Jayalalitha to become MGR’s leading lady, until the latter switched his interest to two muses in 1970s, who were younger than Jayalalitha. These two, in the chronological order, were Manjula (1953-2013) and Latha (b. 1953). MGR had identified his 14th turn with the Ricksawkaran (1971) movie, which featured Manjula.

    As his autobiography ends in October 1972, with his eviction from post-Anna DMK party, MGR became more interested in politics after founding his splinter Anna DMK party and building it as alternative option for DMK in Tamil Nadu. Thus, the final 16 of MGR movies (released between 1973 and 1978) in which his fourth muse Latha appeared (a total of 12 movies) never receive mention at all.


  6. #3115
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    http://www.dailythanthi.com/Cinema/C...temptation.vpf



    சினிமாவின் மறுபக்கம் : 77. சின்ன அண்ணாமலைக்கு வந்த சோதனைகள்
    கருத்துகள்
    0
    வாசிக்கப்பட்டது
    3261
    பிரதி

    மாற்றம் செய்த நாள்:
    சனி, ஜூலை 05,2014, 4:09 AM IST
    பதிவு செய்த நாள்:
    சனி, ஜூலை 05,2014, 3:58 AM IST
    ‘தமிழ்ப்பண்ணை’ நூல் பிரசுரகர்த்தாவும், அந்நாள் அனைத்திந்திய சிவாஜி ரசிகர் மன்றத் தலைவரும், ‘விஜயவேல் பிலிம்ஸ்’ சிவாஜி, கே.ஆர்.விஜயா நடித்த ‘‘ஜெனரல் சக்ரவர்த்தி’’ வெற்றிப்படத்தை தயாரித்தவர் அண்ணன் சின்ன அண்ணாமலை. 1979 ம் ஆண்டில் ஒருநாள், தியாகராயநகர் ராமசாமி தெருவில் இருந்த தனது அலுவலகத்திற்கு வருமாறு தொலைபேசி வாயிலாக என்னை அன்புடன் அழைத்தார்.

    நான் சென்றேன்.

    அப்பொழுது அவருக்கும், எனக்கும் நடந்த உரையாடலை அப்படியே அவர் பாணியிலேயே எழுதுகிறேன்:– (அவர் மொழியில் செட்டிநாட்டுச் செந்தமிழ் ஒலிக்கும்)

    சின்னஅண்ணாமலை:– வாங்க வாங்க. வணக்கம் வணக்கம். நல்லாருக்கியள்ளே?

    நான்:– ரொம்ப நல்லாருக்கேன். நீங்க நல்லாருக்கீங்கள்ளே?

    சின்னஅண்ணாமலை:– (சலித்துக்கொண்டு) உச்! இருக்கேன்.

    நான்:– என்னண்ணே அப்படி இழுக்கிறீங்க? ஜெனரல் சக்ரவர்த்தி நல்லா போயிருக்கு. அந்தப்படத்துல நிறைய லாபம் வந்திருக்கும்ல. அப்புறம் என்னா?

    சின்னஅண்ணாமலை:– லாபம் வந்து என்ன பிரயோசனம்? பாதிப்பணம் வட்டிக்குப் போயிடுதுல்ல? பாக்கிக் கிடைக்குறதுல எனக்குப்பாதி, ஆனா ரூனாவுக்கு (பங்குதாரர்) பாதி! கைக்கும் வாய்க்கும் சரியாப்போச்சு. அம்புட்டுத்தேன்! மேற்கொண்டு மிச்சம் மீதியை எப்.டி.ல போடுறாப்போல ஒண்ணும் இல்லே. போவட்டும். அடுத்தபடியா அதே சிவாஜி, விஜயாம்மாவை வச்சு இன்னொரு படம் எடுக்கிற துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன். அதுக்கு நீங்க வசனம் எழுதிக்கொடுக்கணும். கொடுப்பியள்ளே?

    நான்:– அதுக்கென்னண்ணே? உங்களுக்கு இல்லாமலா? அதான் உங்க ஆஸ்தான ஹீரோ – ஹீரோயின் அண்ணன் சிவாஜியும், விஜயாம்மாவும் இருக்காங்களே – அப்புறம் என்னா?

    சின்னஅண்ணாமலை:– உண்மை தான். சிவாஜி வெளிப்படங்களுக்கு வாங்குற சம்பளத்துல இருவதோ – இருவத்தஞ்சாயிரமோ தம்பி ஷண்முகம் குறைச்சிக்குவாரு. விஜயாம்மாவும் குறைச்சுக்குவாங்க. அவுங்க ரெண்டு பேரும் சொல்லித்தான் இந்தப்படத்துக்கு எழுத உங்களை நான் கூப்பிட்டேன்.

    நான்.– அப்படியாண்ணே?

    சின்னஅண்ணாமலை:– ஆமாமா. உள்ளதைச் சொல்லணும்ல. இந்தப்படத்துக்கு ஆரூரானை எழுதச் சொல்லுங்கன்னு ஆரம்பத்துலேயே சிவாஜி சொல்லிட்டாரு. நீங்களே அவருக்கு ஒரு சம்பளம் பேசி விட்டுடுங்கண்ணேன். சேச்சே! அது நல்லாருக்காது. அன்பு கெட்டுடும். அதனால், நீங்களே அவன்கிட்டே பேசிக்குங்கன்னு நைசா நழுவிக்கிட்டாரு. ஒரு விதத்துல அது நல்லதுதான்!

    இதைக்கேட்டு நான் நகைத்தேன்.

    சின்னஅண்ணாமலை:– சொல்ல உட்டுட்டேன். இந்தப்படத்துக்கு உங்க தேவரோட தம்பி திருமுகத்தை டைரக்டரா பேசியிருக்கேன். திருமுகம் டைரக்ட் பண்றதுனால ஆரூர்தாசை எழுத வச்சிங்கன்னா நல்லாருக்கும்னு விஜயாம்மா தான் சொன்னாங்க. எனக்கும் ஏற்கனவே அப்படி ஒரு ஐடியா இருந்தது. அதோட சிவாஜியும், விஜயாம்மாவும் விரும்புறாங்க. அப்புறம் என்னா? மனம்போல் மாங்கல்யம் – வந்திட்டியே! சரி, சந்தோஷம். உங்களுக்கு நான் எவ்வளவு சம்பளம் கொடுக்கணும்?

    நான்:– (தயங்கியபடி) அது...

    (அதற்குள் அவர் இடைமறித்து)

    சின்னஅண்ணாமலை:– அப்படின்னு உங்களை நான் கேட்கமாட்டேன். ஏன்னா, நீங்க கேட்கிற சம்பளத்தைக் கொடுக்குற சக்தி எனக்கு இல்லே... அதனால நான் என்ன சொல்றேன்னா...

    (நான் குறுக்கிட்டு)

    நான்:– அண்ணே! சிவாஜி, விஜயாவை வச்சுப் படம் எடுக்குற நீங்க இப்படிச் சொல்லலாமா?

    சின்னஅண்ணாமலை:– அதனால என்ன? ஆதாயம் அடையணும்னா கூச்சத்தைப் பார்த்தா முடியுமா? நீங்க என்ன பண்றியே... சிவாஜி இருவதோ – இருவத்தையாயிரமோ கொறைச்சிக்கிறார்ல – அந்த மாதிரி நீங்களும் கொறைச்சிக்கணும்னு கேட்டுக்குறேன்.

    நான்:– அண்ணே! ‘டி கிரேடிங்’குன்னு இங்கிலீஷ்ல ஒரு வார்த்தை இருக்கு தெரியும்ல... ஒருத்தருடைய மதிப்பைக் குறைக்கிறது – குறைச்சு மதிப்பிடுறதை ‘டி கிரேடிங்’குன்னு சொல்வாங்க. நீங்க என்னைக் குறைச்சு மதிப்பிடுறீங்க. அதுவும் ரூபாயை வச்சு.

    சின்னஅண்ணாமலை:– ஐயையோ அப்படி இல்லே...

    நான்:– அப்படித்தான். அந்த மாதிரி நான் உங்களைக் குறைச்சு மதிப்பிடலே. அதனாலதான் நீங்க கூப்பிட்டதும் உங்க அலுவலகத்துக்கு நானே வந்தேன். இல்லேன்னா வந்திருக்கமாட்டேன். முதல்லே அதைத் தெரிஞ்சிக்குங்க – ரெண்டாவது... என் சம்பளத்தைக் குறைக்கணுங்குறதுக்காகத்தான் போன படத்தைப்பத்தி எங்கிட்டே பொலம்புனீங்க. சிவாஜியும், விஜயாவும் என்னை சொன்னதை எனக்குச் சாதகமா எடுத்துக்கிட்டு உங்ககிட்டே அதிகச் சம்பளம் நான் கேக்கலாம். ஆனா கேக்கமாட்டேன். உங்களுக்கு ஒண்ணு சொல்றேன். சிவாஜி, விஜயாவை வச்சு இதுவரைக்கும் யாரும் ‘லோ பட்ஜெட்’ படம் பண்ணவும் இல்லே – நான் எழுதவும் இல்லே.

    மன்னிக்கணும். உங்க லோ பட்ஜெட்டுக்குத் தகுந்தமாதிரி வேற யாரையாவது பாருங்க. நான் சிவாஜி கிட்டேயும், விஜயாகிட்டேயும் சொல்லிக்குறேன்.

    (என்று சொல்லி எழுந்ததும் வெலவெலத்துப்போன அண்ணன் ‘சி’னா (சிவாஜி இவரை எப்பொழுதும் ‘சி’னா என்றுதான் அன்புடன் அழைப்பார்) என் கையை இறுகப்பற்றி என்னை இருக்கையில் இருத்தி வைத்து லேசாக அரும்பிய வியர்வையைத் துண்டால் துடைத்துக்கொண்டு...

    சின்னஅண்ணாமலை:– என்ன இப்படி அடிச்சிட்டியே? சிவாஜி கிட்டேயும், விஜயாம்மா கிட்டேயும் போய் சொல்லிட்டிங்கன்னா அப்புறம் என் பொழைப்பு என்னாகிறது? நானும் ஒரு எழுத்தாளன்கிறதுனால தான் அப்படி உங்ககிட்டே கேட்டுக்கிட்டேன்.

    நான்:– அப்படின்னா உங்க படத்துக்கு நீங்களே எழுதிக்கலாமே. அந்தப்பணம் மிச்சந்தானே? போன படம் ஜெனரல் சக்ரவர்த்திக்குக்கூட தம்பி ‘வியட்நாம் வீடு’ சுந்தரந்தானே எழுதியிருக்கான்? அவனையே இந்தப்படத்துக்கும் வச்சிக்கலாமே. அவனை ஏன் விட்டிங்க?

    (இதற்குப்பதில் சொல்ல முடியாமல் அவர் தலைகுனிந்தார் – நான் தொடர்ந்தேன்)

    நான்:– பதினாறு வருஷங்களுக்கு முந்தி சிவாஜி பிலிம்ஸ் ‘‘புதிய பறவை’’ படத்துக்கு சண்முகம் எனக்கு இவ்வளவும், இப்போ அதே சிவாஜி நடிச்சு நான் எழுதின ‘‘நான் வாழவைப்பேன்’’ படத்துக்கு விஜயா இவ்வளவு சம்பளமும் கொடுத்தாங்க. அதே மாதிரி நீங்க எனக்குக் கொடுக்க முடியுமா?

    சின்னஅண்ணாமலை:– (தயக்கத்துடன்) சிவாஜியும், விஜயாம்மாவும் எங்கே? – நான் எங்கே? அவுங்களோடு என்னை ஒப்பிடுறீயளே!

    நான்:– பயப்படாதீங்க. என் தோட்டத்துப்பழத்தை யாருக்கு, என்ன விலைக்கு விக்குறதுன்னு எனக்குத் தெரியும். நான் மனச்சாட்சிக்குக் கட்டுப்படுறவன். இங்கே வந்து உங்களோட ‘பேரம்’ பேசுற இந்த அரை மணி நேரத்துல – இந்நேரம் அஞ்சாறு சீனுக்கு வசனம் எழுதியிருப்பேன். இதோ பாருங்க. நம்ம பேரத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வருவோம்.

    சின்னஅண்ணாமலை:– இப்போ நான் என்ன பண்ணனுங்குறியே?

    நான்:– ஒரு சவரன் – ஒரே ஒரு சவரன் தங்கக்காசை வாங்கிக்கிட்டு வாங்க. இல்லே. இப்போ உங்க கிட்டே இருந்தா அதை எடுத்து ஒரு தட்டுல மூணு வெத்தலை ரெண்டு பாக்கோட வச்சு எனக்குக் கொடுங்க. அதுதான் உங்கப்படத்துக்கு நான் வாங்குற சம்பளம். அதைத்தவிர மேற்கொண்டு ஒரு ரூபா உங்களைக் கேக்கமாட்டேன். அண்ணே! என்னைப்பத்தி உங்களுக்கு சரியா தெரியாது. ஆனா உங்களை ‘அ’னாவுலேருந்து ‘அக்கன்னா’ வரைக்கும் எனக்குத் தெரியும்.

    என்னைக் காட்டிலும் அறிவும், அனுபவமும், அதிக வயசும் உள்ளவர் நீங்க!

    சின்ன வயசுலேயே பர்மாவுக்குப்போய் வட்டிக்கடையில கணக்கெழுதினவர் நீங்க! மூதறிஞர் ராஜாஜியினால சின்ன அண்ணாமலைன்னு அழைக்கப்பட்டு, பெருந்தலைவர் காமராஜராலேயும், பேராசிரியர் கல்கியினாலேயும் பாராட்டப்பட்ட பெருமைக்குரியவர் நீங்க! விடுதலைப் போராட்டத்துல கலந்து வெள்ளைக்காரனால கைது செய்யப்பட்டு, திருவாடானை ஜெயில்ல அடைக்கப்பட்டு, கம்பிக்கதவை மக்கள் உடைச்சி வெளியே கொண்டு வரப்பட்டவர் நீங்க!

    உங்க தம்பி மாதிரி நான் – தங்கத்தை வச்சு என்னை எடை போடுங்க. தயவு செய்து தவிட்டுனால என்னை வெலைக்கு வாங்கிடலான்னு நினைக்காதீங்க. எனக்கு விலை உண்டு. ஆனா அன்னையின் அருளால என் பேனாவோட விலை என்னன்னு எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும், தேவரண்ணனுக்கும், ஏவி.எம். செட்டியாருக்கும், வாகினி ரெட்டியாருக்கும் மட்டும்தான் தெரியும். அதோட கூட....

    என்று நான் தொடருவதற்குள் அண்ணன் சின்ன அண்ணாமலை ‘பட்’ என்று எழுந்து சென்று மேஜை டிராயரைத் திறந்து காசோலைப் புத்தகத்தை எடுத்து ஏதோ எழுதி அந்த இதழோடு கூட தன் சட்டைப்பையில் இருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டையும் சேர்த்து வைத்து என்னிடம் நீட்டினார்.

    நான் குனிந்து அவர் பாதந்தொட்டு நிமிர்ந்து அந்தக்காசோலையை அவரிடமிருந்து வாங்கிப் பார்த்தேன். அதில் அவருடைய கையெழுத்து மட்டுமே இருந்தது. தொகை இவ்வளவு என்று எதுவுமே குறிப்பிடவில்லை.

    நான்:– என்னண்ணே? ‘அமவுண்ட்’ எதுவும் எழுதாம வெறும் ‘பிளாங்’ செக் கொடுத்திருக்கீங்க?

    சின்னஅண்ணாமலை:– ஆமா. அதுல நீங்க எவ்வளவு வேணுன்னாலும் எழுதிக்குங்க. உங்க இஷ்டம். என் வாழ்க்கையில நான் ‘பிளாங்’ செக் கொடுக்கிறது இதுதான் முதல் தடவை.

    நான்:– என் வாழ்க்கையில நான் இதுவரைக்கும் யார்கிட்டே இருந்தும் சென்டிமென்டலா ‘பிளாங் செக்’ வாங்கினதே இல்லே. அப்படி ஒரு அந்தஸ்து எனக்குத் தேவையும் இல்லே. இதோ அதோட சேர்த்து நூறு ரூபா கொடுத்திருக்கீங்களே. இதை நான் வச்சிக்குறேன். இந்த செக்கை நீங்களே வச்சிக்குங்க என்று அவரிடமே கொடுத்துவிட்டேன்.

    சின்னஅண்ணாமலை:– இன்னிக்கு எனக்கு ராசிபலன் சரியில்லே. போவட்டும். இப்போ இந்த செக்குல நான் எவ்வளவு தொகை எழுதட்டும்?

    நான்:– அது உங்க இஷ்டம். என் வாயால நான் சொல்லமாட்டேன். ‘கொடா கண்டன்’ – ‘விடாகண்டன்’ கதை மாதிரி ஆயிடுச்சு. ஏதோ ஒண்ணு எழுதிக்கொடுத்து உங்க பேரத்தை முடிங்க. நான் ரொம்ப களைச்சுப்போயிட்டேன். பிளீஸ்.

    சின்னஅண்ணாமலை:– நீங்க நல்லா எழுதுவீயே. அது எனக்கு முந்தியே தெரியும். ஆனா அதைவிட நல்லா பேசுவியேன்னு இப்போதான் தெரிஞ்சிக்கிட்டேன். இதோ பாருங்க கூடவோ, குறைச்சலோ எம்மனசுல படுற ஒரு தொகையை எழுதுறேன். அட்வான்ஸ்தானே. இப்போ இதை வாங்கிக்குங்க. அப்புறம் அப்பப்போ உங்க விருப்பப்படியே கொஞ்சம் கொஞ்சமா – பிச்சிப்பிச்சிக் கொடுத்திடுறேன்.

    (என்று காசோலையில் ஒரு தொகை எழுதி என்னிடம் கொடுத்தார். அதை வாங்கி மடித்து என் சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன்)

    சின்னஅண்ணாமலை:– விஷயம் முடிஞ்சிது. ஒண்ணும் நினைச்சிக்காதியே. சரி – எப்போ கதை கேக்குறியே.

    நான்:– இப்பவே கேக்குறேன். சொல்லுங்க...

    சின்னஅண்ணாமலை:– இருங்க வந்திட்டேன்... (என்று தொலைபேசி எண்களைச் சுழற்றி...)

    சின்னஅண்ணாமலை:– நான்தான் பேசுறேன். வசனகர்த்தா வந்திருக்காரு. அட்வான்ஸ் கொடுத்திட்டேன். கதை சொல்லணும். பத்து நிமிஷத்துல வாங்க... (என்னிடம்) ஆர்.கே.தர்மராஜ்னு...

    நான்:– தெரியுண்ணே. இப்போ தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவுல இருக்காரே...

    சின்னஅண்ணாமலை:– அவரேதான். அவரும் நானுமாகச் சேர்ந்து ஒரு கதை பண்ணி வச்சிருக்கோம். சிவாஜிக்கு வித்தியாசமான வேஷம். கராத்தே பயில்வான்!

    நான்:– கராத்தே பயில்வானா? சிவாஜியா? என்னண்ணே? நடிக்கிறவரைப்போயி அடிக்கிறவராக்கி இருக்கீங்க?

    சின்னஅண்ணாமலை:– சரியாச் சொன்னியே. அதுதான் வித்தியாசமான வேஷம்னு சொன்னேன். கூடவே ஹீரோயின் விஜயாம்மாவும் இருக்காங்க.

    நான்:– அவுங்களும் கராத்தே பயில்வானியா?

    சின்னஅண்ணாமலை:– பயில்வானியா? அப்படின்னா?

    நான்:– ஆமா, பயில்வானுக்கு பெண் பால் பயில்வானி!

    அண்ணன் சின்னஅண்ணாமலை சிரித்தார். இதற்குள் கதாசிரியர் நண்பர் ஆர்.கே.தர்மராஜ் வந்தார். ஒருவருக்கொருவர் வணக்கம் கூறிக்கொண்டோம்.

    அடுத்து அரை மணி நேரத்திற்குள்ளாகவே, அந்தக்காலத்து சினிமா பாட்டுப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருக்கும் கதைச் சுருக்கத்தைப்போல ஏதோ ஒன்றைக்கூறி முடித்தார்.

    அதில் சிவாஜி ஜப்பானுக்குச் சென்று ‘கராத்தே’ சண்டையில் ‘யல்லோ (மஞ்சள்) பெல்ட்’, ‘பிளாக் (கறுப்பு) பெல்டெல்லாம் வாங்குகிறார்.

    அவருக்கு ஒரு வில்லன். அந்த வேஷத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான நண்பர் கே.பாலாஜி. அவர் ஏராளமான யானைகளை எங்கெங்கோ வளர்த்து வைத்திருக்கிறார். குறிப்பிட்ட இடத்தில் ஒரு பரண் மீது நின்று பாலாஜி ‘டார்ஜான்’ மாதிரி குரல் கொடுத்தால், எல்லா யானைகளும் பிளிறி அவரிடம் ஓடிவந்து சூழ்ந்து கொள்ளும். அது எப்படி சாத்தியம் என்று நான் கேட்டதற்கு சின்னஅண்ணாமலை குறுக்கிட்டு:–

    சின்னஅண்ணாமலை:– ஒவ்வொரு யானையோட காதுலேயும் ‘மைக்ரோபோன்’ (மின்சார ஒலிபெருக்கி) பொருத்தி வச்சு, அதோட ‘ஒயர்லஸ் கனக்ஷன்’ வில்லன் பாலாஜி கையில இருக்கிற ‘மைக்’குல இருக்கு என்று அண்ணன் சின்னஅண்ணாமலை என் காதில் பூ சுத்தினார்.

    தர்மராஜ் கதையைத் தொடர்ந்து கே.ஆர்.விஜயா இந்தியாவின் ராணுவ ரகசியங்களை ஜப்பான் தலைநகரான டோக்கியோவுக்குக் கடத்திச் செல்வதாகக் கூறினார்.

    அது எப்படி என்று நான் கேட்டதற்கு, இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு விஜயாம்மா போகும்போது ஒரு ஸ்பெஷல் சில்க் புடவை கட்டுக்கிட்டுப் போவாங்க. அங்கே போனதும் வேற புடவை மாத்திக்கிட்டு, இந்த ஸ்பெஷல் சில்க் புடவையைத் தரையில் பரப்பி, அதுமேல பாலை ஊத்தின கொஞ்ச நேரத்துல, இந்தியாவோட மேப்பும் ராணுவ ரகசியத் தகவலும் பளிச்சின்னு தெரியும் என்றார்.

    இதைக்கேட்டு எனக்கு வந்த சிரிப்பை உள்ளுக்குள்ளேயே அடக்கிக்கொண்டேன்.

    வழக்கம்போல ‘ஹீரோ’ சிவாஜி ‘வில்லன்’ பாலாஜியை வீழ்த்திவிட்டு, ‘ஹீரோயின்’ விஜயாவை மணந்து கொண்டு – ஏற்கனவே பாதிப்படத்தில் பாடிய டூயட் பாடலின் பல்லவியைப்பாடி முடிப்பதுடன் படமும் முடிகிறது. ‘வணக்கம்’ கடைசி கார்டு!

    கதையே கடுகத்தனையும் இல்லாத ஒரு கராத்தே பயில்வானைப் பற்றிய பத்துப்பன்னிரண்டு ரீல்களுக்கு இந்தப் ‘பாசமலர்’ ஆரூர்தாஸ் என்ன வசனம் எழுதிக் கிழிக்கப்போகிறான் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தபோது அண்ணன் சின்னஅண்ணாமலை என்னைக் கேட்டார்:–

    சின்னஅண்ணாமலை:– எப்படி சார்? கதை நல்லாருக்குல்ல.

    நான்:– அண்ணே! மன்னிக்கணும். மனசைத் திறந்து சொல்லட்டுமா? இல்லே மூடிமறைச்சு சொல்லட்டுமா?

    சின்னஅண்ணாமலை:– என்ன அப்படி கேக்குறியே? சும்மா தொறந்தே சொல்லுங்க.

    நான்:– இதுல கதைன்னு சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லே. ஒரு கராத்தே பயில்வானோட வீரதீர சாகசங்கள்! இடையில் லவ்வுக்கும், லவ் டூயட் பாடுறதுக்கும் ஒரு பொண்ணு. இதைத்தவிர ஒரு சினிமா படத்துக்கான சிறப்பு அம்சம் இதுல என்ன இருக்கு?

    சின்னஅண்ணாமலை:– அதைத்தான் சொல்லப்போறேன் சார். எம்.ஜி.ஆரோட ‘‘உலகம் சுற்றும் வாலிபன்’’ மாதிரி, நீங்க எழுதி சிலோன்ல எடுத்த ‘‘பைலட் பிரேம்நாத்’’ மாதிரி, சிவாஜியையும், விஜயாம்மாவையும் ஜப்பானுக்கு அழைச்சிக்கிட்டுப்போய் அங்கேயே வச்சிப் படமாக்கி, இன்னொரு ‘‘உலகம் சுற்றும் வாலிபன்’’ படம் பண்ணனுங்குற திட்டத்தோடதான் இந்தக் கதையைப் பண்ணி வச்சிருக்கோம்.

    நான்:– ஓகோ. அப்போ இது ‘ஜப்பான் சுற்றும் வாலிபனா?’

    சின்னஅண்ணாமலை:– (சிரித்து) அட போங்க சார். நீங்க வேற.

    ஒருபுறம் சிவாஜி! மறுபுறம் புன்னகை அரசி! இந்த இருவருடனும் சேர்ந்து சின்னஅண்ணாமலையிடமும் நான், சிறகொடிந்த பறவையாய்ச் சிக்கிக்கொண்டு, பறக்கவும் முடியாமல், துறக்கவும் முடியாமல் படபடத்தேன்.

    வழக்கம்போல வெள்ளை காகிதத்தின் உச்சியில் ‘சிலுவைக்குறி’யும் ‘மாதா துணை’ மந்திரச் சொல்லையும் நான் வரையாமலே இருந்திருக்கலாம். ஏனெனில், எப்பொழுதுமே, ஏடெடுத்து, எழுதுகோல் தொட்டு நான் எழுதத் தொடங்கிய உடனே வானதியாக வந்து கொட்டுகின்ற வசனம் – இந்தக் கதையைப் பொறுத்தமட்டில் கார்ப்பொரேஷன் குழாய்த் தண்ணீர்போல விட்டு விட்டுச் சொட்டிற்று.

    ஒழுங்காகப் பாடங்களைப் படிக்காத ஒரு மக்கு – மண்டு மாணவன் பரீட்சை ஹாலில், வினாத்தாளை வைத்துக்கொண்டு விடை எழுதத் தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பானே – அந்த நிலை எனக்கு ஏற்பட்டு விட்டது.

    நான் வசனம் எழுதிய ஏராளமான படங்களில் எழுத வராமல் – எழுதத் தெரியாமல் – எழுத முடியாமல், திணறித் திண்டாடிய ஒருசில படங்களில் இந்த ‘தர்மராஜா’வும் ஒன்று.

    ஜப்பானுக்குப் போய்வந்து, குறிப்பிடும்படியாக எந்த ஒரு சிறப்பு அம்சமும் இல்லாமல் ‘தர்மராஜா’ ஒருவழியாக உருப்பெற்று ரிலீசுக்குத் தயாரானார். சென்னை நகர வினியோக உரிமை வழக்கம்போல மூன்று பிரதிகளுடன் (பிரிண்டுகள்) எட்டு லட்சங்கள் வரையில் ‘அவுட் ரைட்’ ஆகக் கேட்டார்கள். எட்டு லட்சங்கள் என்பது அந்நாட்களில் நல்ல விலை. ஆனாலும் ஜப்பானில் படப்பிடிப்பு நடத்தியதை வைத்து, பத்து லட்சங்களுக்கு குறைத்துக் கொடுக்க விரும்பாத தயாரிப்பாளர்கள், தங்கள் சொந்தப் பொறுப்பில் தமிழ் வருடப்பிறப்புக்கு இரண்டு வாரங்கள் கழித்து 26.4.1980–ல் ‘தர்மராஜா’வை வெளியிட்டு நஷ்டப்பட்டனர்.

    ரிலீஸ் அன்றைக்கு என்று பார்த்து ஒரு பயங்கர மழை பெய்ததால் சென்னை நகரம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் எல்லாம் மழை நீரில் நனைந்து சுவரிலிருந்து நழுவிக் கீழே விழுந்து நாசமாகிவிட்டன. அத்துடன் கூட தமிழ்நாடு முழுவதுமே ‘தர்மராஜா’ வெற்றி வாய்ப்பை இழந்தது.

    (கேரளத்து மோகினி! – அடுத்த வாரம்)

    விதியின் விளையாட்டு

    அண்ணன் சின்னஅண்ணாமலை 18.6.1980–ல் அவர் தனது 60–வது வயது நிறைவு மணி விழாவைக் (சஷ்டி அப்தபூர்த்தி) கொண்டாட இருந்தார். அதை அறிந்து அவரிடம் நான் எடுத்துரைத்தேன்:–

    நான்:– அண்ணே! மன்னிக்கணும். என்னைக்காட்டிலும் வயசுல பெரியவர் நீங்க. அறிவாளி! உங்களுக்கு நான் சொல்லக் கூடாது. ஆனாலும் சொல்லாம இருக்கமுடியலே...

    சின்னஅண்ணாமலை:– பரவாயில்லை. வயசுல என்ன இருக்கு. எதுவாயிருந்தாலும் சொல்லுங்க.

    நான்:– பொதுவா மனைவி இல்லாதவுங்க – இழந்தவுங்க சாஸ்திரப் பிரகாரம் மணி விழா கொண்டாடக்கூடாதுன்னு சொல்லக் கேட்டிருக்கேன். ஏன்னா, வலதுபாரிசத்துல பத்தினியை வச்சி ரெண்டாவது மாங்கல்யம் புனையணும்லியா?

    அவதாரப்புருஷன் அயோத்தி ராமனே – அவன் தொடங்க இருந்த அஸ்வமேத யாகத்தை தர்மபத்தினி இல்லாம பண்றது சாஸ்திரப்படி தவறுன்னு வசிஷ்டர் சொல்லி, தங்கத்தினால் சீதை மாதிரி ‘பிரதிமை’ (பொம்மை) பண்ணி வலது பாரிசத்துல வச்சிக்கிட்டப்புறந்தான் யாகத்தைத் தொடங்குனதா ராமாயணத்துல நான் படிச்சிருக்கேன்... அதுலயும் உங்க நகரத்தார் இனத்துல... (என்று நான் கூறிக்கொண்டிருக்கும்போதே சின்னஅண்ணாமலை குறுக்கிட்டு)

    சின்னஅண்ணாமலை:– அதுலபாருங்க – நான் கொஞ்சமும் எதிர்பாராத விதமா – நான் பிறந்த அதே தேதியில, அதே நட்சத்திரமும், அதே திதியும் வருது. இது ரொம்ப அபூர்வம்னு ஜோசியர் சொல்லித் தான் செய்றேன். எல்லாம் நல்லபடியாவே நடக்கும் – கவலைப்படாதியே.

    குறிப்பிட்ட 18.6.1980! தியாகராயநகர் பனகல்பார்க் அருகில் உள்ள திருமண மண்ட பம்! அண்ணன் சின்னஅண்ணாமலையின் அறுபதாண்டு நிறைவு விழா நடைபெற்றது. சுமங்கலிப் பெண்கள் புண்ணிய தீர்த்தத்தை அவர் தலையில் பொழிந்தார்கள். எதிரில் அண்ணன் சிவாஜியும், நானும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம்.

    சின்னஅண்ணாமலை தலையில் விழுந்த தண்ணீரைக் கைகளால் தடுத்தார். சற்று நேரத்தில் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தது. மூச்சுத்திணறி அப்படியே சாய்ந்தார்.

    எந்தத் தேதியில், எந்த நட்சத்திரத்தில், எந்தத் திதியில் பிறந்தாரோ அறுபது ஆண்டுகளுக்குப்பிறகு அதே நாளில் அண்ணன் சின்னஅண்ணாமலை அமரர் ஆனார். ‘விதி’ தன் வேலையை முடித்துக்கொண்டு, திருமண மண்டபத்திலிருந்து வெளியேறி விட்டது!

    சிவாஜியின் கோபம்

    ‘தர்மராஜா’ படத்தின் படப்பிடிப்பில் ஒருநாள் காலை வழக்கம்போல சிவாஜியின் ஒப்பனை அறைக்குள் நுழைந்தேன். பரஸ்பரத் தோத்திரப் பரிமாற்றம் முடிந்ததும் அண்ணன் என்னைக் கேட்டார்:–

    சிவாஜி:– என்னப்பா எடுத்த வரைக்கும் படம் பாத்தியா? எப்படி வந்திருக்கு?

    நான்:– அண்ணே! கோவிச்சிக்காதிங்க. இந்தப்படத்துல நீங்க நடிக்கணுமா?

    (என்றதும் எதிர்பாராத என்னுடைய இந்தக் கேள்வியைக் கேட்டதும் சிவாஜி மேக்கப் போட்டுக்கொள்வதை நிறுத்திவிட்டு)

    சிவாஜி:– (சற்று கடுப்புடன்) என்ன சொல்றே?

    நான்:– இல்லே – தெரியாமத்தான் கேக்குறேன். நீங்க இந்தப்படத்துல நடிக்கணுமா?

    (என்று நான் சற்று அழுத்தமாகக் கேட்டதும், ‘கோவிச்சுக்காதிங்க’ என்ற நான் கூறியுங்கூட கோபத்துடன் என்னை முறைத்துப்பார்த்து)

    சிவாஜி:– அப்போ (தன் வலது கை விரல்களைக் குவித்து வாயில் வைத்து) சோத்துக்கு என்னை என்ன பண்ணச் சொல்றே?

    நான்:– (சிரித்தபடி) இந்தப்படத்துல நடிச்சித்தான் நீங்க சோறு திங்கணுமா?

    சிவாஜி:– அப்படின்னா நீ ஏன் எழுதுறே?

    நான்:– நீங்க சொன்னதுனால எழுதுறேன்.

    சிவாஜி:– இல்லேன்னா எழுதமாட்டியா?

    நான்:– சத்தியமா எழுதமாட்டேன்.

    சிவாஜி:– (அதிகக் கோபத்துடன்) நீ தேறமாட்டே! நீ பொழைக்கத் தெரியாதவன். இதோபார். இந்தப் படத்துக்கு எழுதித்தான் நீ பேரு வாங்கப்போறியா? இல்லே இதுல நடிச்சித்தான் எனக்குப் புகழ் வரப் போவுதா? சொன்ன கதைக்கு எழுதவேண்டியது உன் வேலை. கொடுத்த வேஷத்துல நடிக்கவேண்டியது என் வேலை. என்னையும் உன்னையும் வச்சு சக்ஸஸ்புலா ஒரு படம் பண்ண வேண்டியது அவனுங்க வேலை. இந்தப்படம் ஓடாது, அந்தப்படம் ஓடாதுன்னு ஒதுக்குனா நம்மளை நம்பி இருக்கிற பொண்டாட்டிப்புள்ளைங்களை எப்படிக் காப்பாத்துறது? எப்படி வாழ்றது?

    ஒரு புரொடியூஸரையோ, டைரக்டரையோ நாமளா போய் சான்ஸ் கேக்குறோமா? நம்மளை வச்சுப் பொழைக்குறதுக்கு அவனுங்க வர்றாங்க. அவங்களை வச்சுப் பொழைக்கவேண்டியது நம்ம கடமை! இப்போ, இந்தப்படத்துல கூட எனக்குப் பொருந்தாத ஒரு கேரக்டரை சின்னஅண்ணாமலை கொடுத்திருக்காரு. சொன்னேன். கேக்கலே. என்னை என்ன பண்ணச் சொல்றே? நண்பராச்சேன்னு நடிச்சிக் கொடுக்குறேன்.

    ஆரூரான்! சொல்றேன்னு தப்பா நினைக்காதே.

    நான்:– இல்லேண்ணே. சொல்லுங்க.

    சிவாஜி:– உங்கிட்டே நிறைய நல்ல சரக்கு இருக்கு. ஆனா அதை விக்கிற சாமர்த்தியம் உனக்கு இல்லே. ஒவ்வொருத்தன் ஒண்ணுமே இல்லாம வாயால வெறும் வெத்து வேட்டு வெடிச்சி, பந்தா பண்ணி இந்த சினிமாவுல சம்பாதிக்கிறானுங்க. நீ என்னன்னா, எதுக்கெடுத்தாலும் கோவிச்சிக்குறே. கடுப்படிக்கிறே! குறை சொல்றே! ஏற்கனவே பல தடவை உனக்குச் சொல்லியிருக்கேன். எல்லாத்தையும் விட்டுட்டு, உன் வேலையை மட்டும் நீ பாரு. புரிஞ்சிதா?

    நான்:– எனக்குப் புரியாம இல்லேண்ணே. நல்லா புரியுது. ஆனாலும் மனசு கேக்கமாட்டேங்குதே! என்ன பண்றது?

    சிவாஜி:– கடிவாளத்தைப்போட்டு அடக்கு.

  7. #3116
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by varadakumar sundaraman View Post
    டியர் ஆர்.கே எஸ்

    ரிக்ஷாக்காரன் வெளிவந்த நேரத்தில் சென்னை தேவி பாரடைஸ் டிக்கெட் நிலவரம் .
    29.5.1971
    1.25
    2.00
    2,50
    3.00

    26.1.1972
    கட்டணம் உயர்ந்தது
    1.35
    2.10
    2.60
    3.50

    மேலும் 2.50 இருக்கைகள் குறைக்கப்பட்டு 3.50 இருக்கைகள் அதிகமாக உயர்த்தினார்கள் .ராஜா படத்திற்கு அதிகமாக காலை காட்சிகள் நடந்தது . இப்போது புரிந்ததா ? அதுவும் தேவி பாரடைஸ்

    அரங்கில் மட்டும் வசூல் வித்தியாசம் 21.769 மட்டும் . அனால் 100 நாட்கள்- ராஜா வசூல் ரிக்ஷாகாரனை விட குறைவு இதை ஏன் சொல்லவில்லை ?
    விபரம் தெரியாமல் இனிமேலாவது யோசித்து பதிவிடவும் .

    டியர் சார்

    வேறு சிறந்த காரணங்கள் ஏதாவது இருந்தால் நீங்கள் பதிவிடுங்கள்.

    என்னுடைய நோக்கத்தை உங்களுக்கு புரியவைக்க எனது பதிவால் இயலவில்லை என்று நினைக்கிறன்.

    பத்து பைசா வித்தியாசம் 21,769 ருபாய் ஏற்படுத்துமா என்று புரியவில்லை.

    முதலில் ரசிகர் மன்ற நோட்டீஸ் பார்பவர்களுக்கு குறைந்த நாட்களில் அதிக வசூல் என்பதுபோல...அதற்க்கு நான் பத்திரிகைகளில் வந்த விளம்பரத்தை எடுத்து ஒப்பீடு உதாரணம் ஒரே திரை அரங்கை பற்றி கூறினால்....நீங்களோ ஒரே ஒரு திரை அரங்குதானே ...என்றும் 10 பைசா வித்தியாசம் கொண்டதால் அதிக வசூல் என்று கூறுகிறீர்கள்.

    அந்த 10 பைசாவை நீங்கள் கழித்து வசூல் ஒப்பிட்டால் கூட 50 நாட்களில் ராஜா வசூல் செய்தது 51 நாள் ரிக்க்ஷகாரன் வசூலை விட அதிகம் தான் வரும்....!

    விஷயம், அது வசூல் அதிகமா...இது அதிகமா என்பதல்ல....ஒப்பீடு தங்கபதக்கம் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் சரியான ஒப்பீடு இல்லை என்பதுதான் !

    மேலும் நான் இங்கு "இவரை விட அவர்" என்றோ "அவரை விட இவர்" என்றோ பதிவிடும் நோக்கத்தை கொண்டு இதை பதிவு செய்யவில்லை. ஒப்பீடு apple to an apple என்ற முறையில் இருந்தால் மட்டுமே அது சரியான ஒப்பீடு என்பதை குரிப்பிடதான் !

    உலகம் சுற்றும் வாலிபன் தேவிபரடிசே திரை அரங்கில் சென்னை சாந்தியை விட அதிக இருக்கை கொண்ட திரை அரங்கம் என்பதை நீங்கள் மறுக்கமுடியுமா ?

    அப்படி சாந்தியை விட அதிக இருக்கைகள் தேவி பரடிசே திரை அரங்கில் இருக்கும்பட்சத்தில், உங்கள் ஒப்பீடே தவறு ! இதுதான் நான் கூற வருவது !

    மேலும் ....தங்கபதக்கம் தமிழகம் ஏன்...இந்தியா முழுவதும் நூறு முறைக்கு மேல் நாடகமாக நடிகர் திலகத்தின் நாடகம் வாயிலாக...அதற்க்கு முன் செந்தாமரையின் நாடக வாயிலாக மக்களுக்கு மிகவும் தெரிந்த பழக்கப்பட்ட கதை....ஏற்கனவே இவ்வளவு மக்கள் நாடகமாக பார்த்த ஒரு கதை திரைப்படமாக வெளிவரும்போது இத்தனை வரவேற்ப்பு பெற்றது என்பது எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாதா இமாலய சாதனையாகும்...!

    நீங்கள் கூறியிருப்பது வெறும் ஒரு திரை அரங்குதானே என்று...! நான் கூறுவது அந்த ஒரு திரை அரங்கில் இருவர் படமும் வெளிவந்து ஒரே இருக்கைகள் கொண்ட திரை அரங்கம்..மேலும் 51 நாள் வசூல் தொகையை 50 நாட்களில் வசூளித்ததோடு மட்டும் அல்லாமல் 21759 ரூபாய் அதிகம் வசூல் நடிகர் திலகம் படம் செய்துள்ளது என்பதாகும். திரு mgr அவர்கள் படம் அப்படி செய்யவில்லை என்று நான் எப்போது கூறினேன் ?

    மற்ற திரை அரங்கு வசூல் விபரங்கள் எதுவும் என்னிடம் இல்லை...நீங்கள் குறிப்பிட்ட 100 வது நாள் வசூல் விளம்பரம் உட்பட ...

    பம்மலார் என்ற மகா புருஷர் அதனை வைத்துள்ளாரா என்பதும் எனக்கு தெரியாது. வைத்திருந்தாலும் இந்த பதிவை படித்திருப்பார என்பது தெரியாது..படித்தாலும் அந்த விளம்பரத்தை (அப்படி வைத்திருக்கும் பட்சத்தில்) இங்கு பதிவிடுவார என்பதும் தெரியாது !

    காரணம் 100 நாட்கள் வசூல் விபரங்கள் அடங்கிய விளம்பரம் இதுவரை நான் பேப்பரில் வந்த விளம்பரமாக நான் பார்த்ததில்லை. நீங்கள் கூறுவதை எல்லாம் உங்களிடமிருந்து கேட்டுக்கொண்ட செய்தியாக ஞாபகம் வைத்துக்கொள்ளலாமே தவிர அதை ஒரு "ஆவணமாக" ஏற்றுக்கொள்ளமுடியாது, காரணம் ரசிகர் மன்ற நோட்டீஸ்கு என்ன மதிப்போ அதுபோல தான் அதுவும்.

    இதுபோல நூறு நாள் வசூல் விளம்பரம் இருந்தால் இரண்டு விளம்பரமும் பதிவிடுங்கள்...நான் ஒத்துகொள்கிறேன்...authentic விளம்பர ஆவணம் 100 வது நாள் வசூல் ஒப்பீட்டுடன் என்னிடம் இரேண்டுக்குமே இல்லை. எனக்கு அதுபற்றி தெரியவும் தெரியாது...இந்த இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தபோது எனக்கு வயது 1 & 2.

    ஒப்பிடுங்கள்....வேண்டாமென்று கூறவில்லையே...அதை உரிய முறையில் ஒப்பிடுங்கள் என்றுதான் கூறுகிறேன்..அதை விடுத்து ரசிகர் மன்ற நோடிசை ஒரு "ஆவணம் " என்று நீங்கள் கூறியதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறுவீர்களே யானால்....அது ஞாயம் அல்ல...காரணம்...நீங்கள் கூறியதுதான் முன்பே...ரசிகர் மன்ற நோடிசை ஆவணமாக எடுத்துகொள்ள முடியாது என்று...!

    விளம்பரம் இருந்ததை நான் பதிவுசெய்தது உதாரனத்திர்க்காக மட்டும் ! இந்த விஷயத்தை இத்துடன் விட்டுவிடுவோம்..சார் !


    Rks
    Last edited by RavikiranSurya; 15th June 2015 at 03:27 PM.

  8. #3117
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=MGR RAJKUMAR;1231767]http://www.dailythanthi.com/Cinema/C...temptation.vpf

    வழக்கம்போல நல்ல கற்பனை வளம் கொண்ட ஒரு கதா வசனகர்த்தாவின் சுவாரஸ்யமான தொடர்கதை sir .

    ஆரூர்தாஸ் அவர்கள் - சமீபத்தில் டிஜிட்டல் வடிவில் வெளியான பாசமலர் திரைப்பட TRAILER வெளியீட்டு விழாவில் மைக் முன் நின்று பேசுகிறார்...

    இடையிடையே மேடையில் அமர்ந்துள்ளவர்கள்...அவர்கள் பின்னே நின்றுகொன்றிப்பவர்கள் இப்படி பலர்...அவர்களுக்குள் பல விஷயங்களை பெசிகொண்டிருக்கிரார்கள் அவ்வப்போது....

    மைக் இல் பேசிகொண்டிருந்த திரு ஆரூர்தாஸ் அவர்கள்...பேசுவதை ஒரு கணம் நிறுத்தி...அவர்களை திரும்பி பார்த்து...." நீங்க இங்கே கொஞ்சம் கவனிக்கணும்..முக்கியமான விஷயம் சொல்லபோறேன்...உங்க பேச்சு குரல் கேக்கும்போது சொல்லவந்தது மறந்துடுவேன்..என்கிறார் எழுதி வைத்ததை கையில் வைத்துகொண்டிருக்கும்போதே...!

    அப்படிபட்ட,
    கையில் பேப்பரில் எழுதிவைத்துள்ளதை கூட ஞாபக மறதியால் மறந்துவிடுவேன் என்று கூறிய ஆரூர்தாஸ் அவர்கள்.......இந்த மேற்கூறிய தொடரில்..அதாவது 30 வருடத்திற்கு முன் நடந்ததாக புனயபட்டிருக்கும் விஷத்தை இவ்வளவு துல்லியமாக....அதாவது....அவர் என்ன பேசினார்....இவர் என்ன பதில் உரைத்தார்...பேசும்போது பேசுபவர் என்ன BODY LANGUAGE காட்டினார்....என்ன MANNERISM உடன் பேசினார் என்ற சகலவிஷயங்களையும் கூறுகிறார் என்றால் .....அவருடைய கதை...திரைக்கதை ..வசனம் எழுதும் திறமையை என்னவென்று பாராட்டுவது !

    அவர் ஆரூரான் மட்டும் அல்ல....ஆறு ஊரான் கூட !
    Last edited by RavikiranSurya; 15th June 2015 at 03:05 PM.

  9. #3118
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post
    Afternoon RKS Sir

    Please watch Jaya Movie, Choudhry is is full flow. I came back from work for Lunch, It is TP , I have not moved one inch.

    Thanks
    Dear Sir

    Just saw your message...i could watch the film only for the last 30 mins...

    Regards
    RKS

    thanks for the information sir..so kind of you..

  10. Likes ainefal liked this post
  11. #3119
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Morning RKS Sir,

    This is just my suggestion, I think [ not sure because memory is getting bad] Sorgam was the first "Tamil" movie to be released in "Devi" complex. If we look into Rikshawkaran [29/5/1971] vs. Sorgam [ 29/10/1971], 50 days run, may be we will have a better picture since the ticket prices would have been the same.

    The above is said because both were super hit movies.

    Thanks for your understanding.

    Better Ignore the above, since it is not going to help anyone/anything. Sorry for the inconvenience.
    Last edited by saileshbasu; 15th June 2015 at 02:25 PM. Reason: additional comment.

  12. #3120
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    வெறும் கையில் முழம் போடுகிறார் ஒருவர். Everything is basically wrong with him.



    The above video is posted exclusively for that .......!

    Last edited by saileshbasu; 15th June 2015 at 02:23 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •