-
17th June 2015, 01:59 PM
#11
வரலாற்று விற்பன்னர் (????) திரு சிரஞ்சீவி அனீஸ் அவர்கள் அறிவது.
'தாலி பாக்கியம்', 'ஒருதாய் மக்கள்' வெற்றிப்படங்கள். ஆனால் 'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு', 'கிருஷ்ணன் வந்தான்' தோல்விப்படங்களா?. எந்த வகையில்?.
'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு' (உங்கள் வார்த்தைப்படி) படுதோல்வி என்றால் அந்த தயாரிப்பாளர் புஷ்பா ராஜன் மீண்டும் நடிகர்திலகத்தை வைத்து படம் எடுத்திருப்பாரா?.
கிருஷ்ணன் வந்தான் படத்துக்கு நடிகர்திலகம் பணம் வாங்கிக் கொள்ளாமல் நடித்துக்கொடுத்தார் (தேங்காய் எம்.ஜி.ஆர். ஆதரவாளர் என்று தெரிந்தும்). அப்படம் 50 நாட்களுக்கு மேல் ஓடி தேங்காய்க்கு நல்ல லாபம் கொடுத்தது என்பது தெரியுமா?. .
1974-ல் சிரித்து வாழவேண்டும் படம் வெளியான பின்புதான் எஸ்.எஸ்.பாலன் முத்துராமனை கதாநாயகனாக நடிக்க வைத்து எல்லோரும் நல்லவரே படம் தயாரித்து 1975-ல் வெளியிட்டார். அப்படியிருக்க, எல்லோரும் நல்லவரே தோல்வியடைந்தபின் எப்படி சிரித்து வாழவேண்டும் படத்தை இயக்க எம்.ஜி.ஆர் வாய்ப்பளித்தார்?. எல்லோரும் நல்லவரே படம் தயாரிக்க துவங்கும் முன்பே தோல்வி அடைந்தது எப்படி?
அனீஸ் அவர்களே, இதுபோன்ற தவறான தகவல்களை பத்திரிகைகளில் பரப்பாதீர்கள்.
-
17th June 2015 01:59 PM
# ADS
Circuit advertisement
Bookmarks