-
25th June 2015, 01:19 PM
#11
Senior Member
Veteran Hubber
விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் மீனாவின் மகள
அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அங்கிள் என்று அழைத்த ரஜினிக்கே ஜோடியாக நடித்தவர் மீனா. 2009 -இல் திருமணம் செய்து கொண்டவர், அவ்வப்போது படங்களில் தலைகாட்டுகிறார். இவரது மகள் நைனிகாவுக்கு இப்போது வயது, 5.
தன்னைப் போலவே மகளையும் கலைத்துறைக்கு கொண்டுவர மீனா ஆசைப்படுகிறார் போலிருக்கிறது. ஸ்டுடியோ வட்டாரத்தில் அடிபடும் செய்திகள் அப்படிதான் உள்ளது.
என்ன விவகாரம்?
மௌனராகம் மற்றும் கன்னடப் படத்தை காப்பி செய்து ராஜா ராணி படத்தை எடுத்த அட்லி, அடுத்து விஜய்யை வைத்து இயக்கப் போகும் படம், விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் என்கின்றன செய்திகள். அதில் விஜய்காந்துக்கு குழந்தைகள் இருந்தது போல் இதில் விஜய்க்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தை கதாபாத்திரத்தில் மீனாவின் மகள் நைனிகா நடிப்பதாக தகவல்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் வேலையில்லா பட்டதாரி 2 வில் நடித்து வரும் சமந்தா, ஏமி ஜாக்சன் இருவரும் நடிக்கின்றனர். ராதிகா, பாரதிராஜா ஆகியோரும் நடிக்கயிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
-
25th June 2015 01:19 PM
# ADS
Circuit advertisement
Bookmarks