Results 1 to 10 of 398

Thread: பாகுபலி -A SS Rajamouli Film

Threaded View

  1. #11
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ஒரு ”ஈ’ய வெச்சி மொத்த சினிமாவையும் திருப்பீட்டீங்களே! கரண் ஜோஹர் , ராஜ மௌலியின் சுவரஸ்யமான உரையாடல்!

    பாகுபலி படத்தின் ரிலீஸை மொத்த இந்தியாவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
    பிரம்மாண்ட பொருட் செலவு, டாப் நடிகர்கள், தமிழ் , தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழி ரிலீஸ், உலக சாதனை படைத்த போஸ்டர் என படக்குழு தினம் தினம் ஒரு சர்ப்ரைஸை கொடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அப்படத்தின் இயக்குநர் ராஜமௌலியிடம் இந்தி பாகுபலியின் விநியோகஸ்தர், இந்தியின் பிரபல இயக்குநர், தயாரிப்பாளர் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்கள் கொண்ட கரண் ஜோஹர் மனம் விட்டு பேசியுள்ளார்.

    கரண் : எப்படி இப்படி ஒரு படத்தை எடுத்து இந்தியாவையே ஒரு ஈர்ப்புக்கு ஆளாக்கிட்டு இவ்ளோ அமைதியா இருக்கீங்க. என்ன யோகா பண்றீங்க?
    ராஜமௌலி: நடிக்கிறேன்னு கூட சொல்லலாம்.

    கரண் : உங்க பேரு ஸ்க்ரீன்ல வரும் போது ஃபேன்ஸ்ல கைதட்டி , விசில் குடுக்கறாங்க? அப்படி என்ன செஞ்சீங்க?
    ராஜமௌலி: எல்லாமே டாப் ஹீரோக்களோட படங்கள், கமர்ஷியல், டாப் ஹீரோக்களுக்கும் ஹிட் கொடுக்கற படங்கள், அதுதான் அப்படியே ரிஃப்லெக்ட் ஆகுது.

    கரண் ; இது உங்க தன்னடக்கத்த காட்டுது. ஒரு இயக்குநரா டாப் ஹீரோக்களுக்கு ப்ளாக்பஸ்டர் படங்கள் குடுக்கறது அவளோ ஈஸி இல்லையே. அப்படி பார்த்தா அந்த ’ஈ’ படம் எப்படி. திடீர்னு ஒரு ’ஈ’ டாப் கேரக்டரா சினிமாக்குள்ள சுத்த ஆரம்பிச்சிடுச்சே. எப்படி அந்த தீம் உங்களுக்கு தோணுச்சு. நடிகர்கள் மேல இருந்த வெறுப்பா?
    ராஜ மௌலி: அய்யய்யோ அப்படி இல்லை.நடிகர்கள் ரொம்பப் பெரிய ஆயுதம். அவங்களால உங்க கதையைவே 100 மடங்கு உயர்த்த முடியும். என்னோட கெரியரே அவங்களால தான்.அவங்க மேல நான் எப்படி வெறுப்பாவேன். இந்த கான்செப்ட் எனக்கு ரொம்ப கஷ்டமாவோ, இல்லை ஒரு பிராஜெக்டாவோ தோணலை. அதே சமயம் ஆடியன்ஸை ஈஸியா கனெக்ட் பண்ண முடியும்னு தோணுச்சு. நான் இதை செய்ய முடியுமான்னு யோசிச்சிருந்தாலே கண்டிப்பா என்னால இந்த கான்செப்ட் வெச்சி பெரிய ப்ளாக்பஸ்டர் கொடுத்திருக்க முடியாது.

    கரண்:
    ஆனாலும் ஒரு ஈ யை சூப்பர் ஸ்டாராக்கி, இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வெச்சிட்டீங்க. அடுத்து கரப்பான் பூச்சிய வெச்சி படம் பண்ணி ப்ளாக் பஸ்டர் குடுத்துருவீங்க போலன்னு எல்லாரும் கேட்க ஆரம்பிச்ச்சிட்டாங்க. ஆனால் அடுத்து ’பாகுபலி’ இது உங்க சினிமா வாழ்க்கையில முக்கியமான படம், எப்படி இந்த கான்செப்ட் தோணுச்சு.
    ராஜ மௌலி: ஒரு மொமெண்ட்ல தோணுன படம் தான் இது. மண்டைக்குள்ளையே பல வருஷம் மேக்கிங் பண்ணிட்டு இருந்தேன். எனக்கு ஃபிக்*ஷன்ல படம் பண்றது ரொம்பப் பிடிக்கும். பெரிய சூழல், பெரிய பெரிய பாத்திரங்கள், சவாலான காட்சிகள்.இப்படி சொல்லப்போனா அதுதான் என்னோட உலகம். சரி நீங்க எப்படி உள்ள வந்தீங்க.
    கரண்: எனக்கு உங்க வேலை ரொம்ப பிடிக்கும். உங்க படைப்புக்கு நான் ரசிகன் . அதனால நான் உள்ள வந்துட்டேன். நீங்க காமிச்ச சின்ன ஷாட்லயே நான் இம்ப்ரஸ் ஆயிட்டேன். முக்கியமா உங்கள நம்பினேன். என்னொட கேரியர்ல இது முக்கியமான படம். அதான் படத்தோட ரிலீஸ்ல நானும் பங்கெடுத்துக்கிட்டேன்.
    ராஜமௌலி: எத்தனையோ இயக்குநர்கள் தர்மா புரடக்*ஷன்ல படம் பண்ண வெயிட் பண்றாங்க எனக்கு இந்த வாய்ப்பு குடுத்தது ரொம்ப பெரிய மரியாதையா நினைக்கிறேன். ஒரு தயாரிப்பாளரா நீங்க இயக்குநர்கள் கிட்ட என்ன எதிர்பார்க்கறீங்க.

    கரண்: நாம என்ன நினைக்கிறோம்னு இல்ல. இப்போ உங்களையே எடுத்துக்கோங்க ரொம்ப அமைதியா இருக்கீங்க. ஆனால் உங்க செயல் ரொம்ப பெரிசா இருக்கு. அதுதான் வேணும். என் உள்ளுணர்வுக்கு தோணனும், ஒரு சில படம் ஃபெயிலாகலாம், ஹிட்டடிக்கலாம் அதெல்லாம் வேற, ஆனால் என்னப் பொருத்தவரைக்கும் உள்ளுணர்வுக்கு தோணனும். ஏன்னா ஒரு சினிமாவை ப்ளாக் பஸ்டர் ஆக்கணும்னா அது டைரக்டரால மட்டும் தான் முடியும். மத்ததெல்லாம் ஒண்ணுமே இல்ல. அதே போல என் கிட்ட நாலு கதை இருக்குன்னு வருவாங்க. எனக்கு அதெல்லாம் தேவையே இல்லை.ஒரு ஐடியா அதுதான் உன்னோட மூச்சா இருக்கணும். என்னால இதை புரிஞ்சிக்கவே முடியல. ஒரு டைம்ல எப்படி மூணு நாலு படம் பண்றது. ஆனால் ஒரு விஷயம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்திப் படங்கள்ல எந்த படம் ரிலீஸ் ஆனால் படம் நல்லா இருந்தா செம அப்ளாஸ், அதே ஃபெயில்னா அவ்ளோ தான் அட்டாக் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. இதே மாதிரி சௌத் சினிமாவுலயும் இருக்குமா?
    ராஜ மௌலி: என் படம்னு இல்லை எந்த படம் ரிலீஸ்னாலும் மக்கள் ரெடியா இருப்பாங்க. ஃபெயில் ஆச்சுன்னா அட்டாக் தான். இது நல்ல விஷயமா தான் நான் பாக்குறேன்.

    கரண்:
    உங்க படங்கள்ல பெஸ்ட் விமர்சனம் எந்த படத்துக்கு கிடைச்சிது.
    ரா.மௌ: என் படங்கள்ல ’ஈகா’(ஈ) , ’மார்யாத ராமண்ணா’ ரெண்டு படத்துக்கும் நல்ல விமர்சனங்கள் கிடைச்சது. ஆனால் எனக்கு தெரியலை பாகுபலி படம் மேல ஏன் இவ்ளோ ஆர்வமா இருக்காங்க ஒவ்வொருத்தரும் பாஸிட்டிவ்வான கமெண்ட்ஸ். மீடியா, மக்கள், எல்லாருமே.

    கரண் :
    ஒரு கஷ்டமான கேள்வி நீங்க திருப்தியா இருக்கீங்களா?
    ரா.மௌ: கண்டிப்பா இல்லை. இருக்க மாட்டேன்.

    கரண்:
    படம் ரிலீஸ்க்கு அப்பறம் பெரிய பிஸினஸ் பண்ணாலுமா?
    ரா:மௌ: பிஸினஸ் ஒரு பார்ட்தான. ஆனா என் மனசுக்கு திருப்தி கண்டிப்பா இருக்காது.

    கரண்:
    ஒருவேளை நீங்க நடிகர்களை வெச்சு சொல்றீங்களா. ரொம்ப டார்ச்சர் பண்ணீட்டாங்களா?
    ரா.மௌ: கண்டிப்பா நிறைய பண்ணியிருக்காங்க. ஆனா என்னன்னு தெரியலை படம் முடியற நேரத்துல மொத்த யூனிட்டும் கொஞ்சம் டவுன் ஆக ஆரம்பிச்சிட்டாங்க. சின்ன நடிகர்கள்ல ஆரம்பிச்சு டெக்னீஷியன்ஸ், அடித்தள வொர்க்கர்கள் வரைக்கும் எல்லாரும் கொஞ்சம் சோர்வுதான்.

    கரண்:
    அப்போ ரொம்ப சவாலா இருந்துருக்குமே. ஒரு கப்பலோட கேப்டன் மாதிரி மொத்த டீமையும் எனர்ஜியாக்கி வேலை வாங்கணுமே?
    ரா.மௌ: ஆமா என்னோட கேமரா மேன் எனக்கு நல்ல நண்பனும் கூட அவர் கிட்ட நான் சொன்னேன் டீம் எனர்ஜி குறையுதுன்னு. அதுக்கு அவர் கவலைப் படாதிங்க உங்கட்டருந்து எனர்ஜிய இழுத்துப்பாங்கன்னு சொன்னாரு. எனக்கு புது மாஸ்கே தேவைப்பட்டிச்சு.

    கரண்:
    இந்திப் படம் எல்லாமே பாப்பீங்களா?
    ரா.மௌ: எல்லாப் படமும் பாக்க மாட்டேன். ஒரு சில படங்கள். அதுலயும் ராஜ் குமார் ஹிராணி படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.இந்திப் படங்கள பொருத்த வரைக்கும் நடிகர்கள் ஒரு நடிப்பு கட்டுக்குள்ள மாறிடுறாங்க.

    கரண்:
    சரி நீங்க எப்படி நடிகர்கள செலக்ட் பண்றீங்க?
    ரா.மௌ: அதேதான் நான் சொல்ல வரேன். ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு ஸ்பெஷல் குவாலிட்டி நடிப்பு இருக்கும் ஒருவேளை என்கிட்ட இருக்கற கதைக்கு அந்த ஹீரோ கரெக்ட்னா கண்டிப்பா நான் அவர செலக்ட் பண்ணிடுவேன்.என்னோட கதைதான் என்ன அந்த நடிகர் கிட்ட கூட்டிட்டுப் போகும். அதுக்காக நடிகருக்காக ஒரு கதைய ரெடி பண்ணி நடிக்க வைக்கிறதுல எனக்கு உடன்பாடில்ல. 90கள்ல அஜய் தேவ்கன் படங்கள்லாம் என்ன ரொம்ப இம்ப்ரஸ் பண்ணும், ‘தபாங்’ படத்துல சல்மான் அம்மா கேரக்டர் முன்னாடி அழும் போது சல்மான் மேல ஒரு தனி ஈடுபாடு இருந்துச்சு. லகான் பார்த்தப்ப அமீர்கான். ஆனா என்னப் பொருத்தவரை என்னோட கதைக்கு ஒரு நடிகரை செலக்ட் பண்ணிட்டா அவரை கதைக்கேத்த மாதிரி மாத்திடுவேன்.

    கரண்: ஒரு இயக்குநரா இந்தி, தெலுங்கு, தமிழ் , இதுல உள்ள வித்தியாசங்கள் என்ன?
    ரா.மௌ: பெரிய வித்யாசங்கள்லாம் எதுவுமே இல்லை. ஒரே விஷயம் தான் சென்ஸ் கொஞ்சம் வித்தியாசப்படும். கலாச்சாரம் அதனால சின்ன சின்ன சேஞ்ச், அவ்ளோதான். மத்தபடி பெரிய வித்தியாசம்லாம், இல்ல. ஆனா இந்தி படங்கள் சமீபமா கொஞ்சம் வெரைட்டியா வருது. இதே மாதிரி தமிழ்ல கொஞ்சம் அதிகமாவே வெரைட்டி படங்கள் வருது. கமர்ஷியலும் வருது, அதே சமயம் எக்ஸ்பெரிமெண்டல் படங்களும் வருது. இந்த மாற்றம் இப்பதான் இந்தி படங்கள்ல நான் பாக்கறேன்.

    கரண்: ஆனா அதே தெலுங்கு படங்கள் ரொம்ப கலர்ஃபுல்லா, கமர்ஷியலா இருக்கே?
    ரா.மௌ: ஆமா கமர்ஷியல் அளவுல தெலுங்கு படங்கள் நல்ல முன்னேற்றம் தான் ஆனா எக்ஸ்பரிமெண்டல் படங்கள்ல கொஞ்சம் கேப் இருக்கு. இந்தி மிக்ஸிங் தான் ரெண்டுமே இருக்கு தமிழ் மாதிரி.

    கரண்
    : இங்கயும் சில பிரச்னைகள் இருக்கு. ஒரு ’பிகு’ படம் வந்தா எல்லாரும் அதே பிகு, அல்லது தணு வெட்ஸ் மணுன்னா உடனே அந்த லிஸ்ட் படம் இது ஒரு ஜெனியூன் மிஸ்டேக் இங்க பண்றாங்க. தெலுங்கு ரீமேக் சக்ஸஸ் ஆனா அடுத்து ஒரே தெலுங்கு ரீமேக். இது இங்க பொதுவாவே நடந்துட்டு இருக்கு. சரி நீங்க சொல்லுங்க பாகுபலி முடிச்சவுடனே உங்களுக்கு என்ன கிடைச்சிது.
    ரா.மௌ: எல்லாத்துலயும் கேர்ஃபுல்லா இருக்கணும். கடைசி நேரத்துல எதையும் செய்யக் கூடாது இப்படி நிறைய கத்துக்கிட்டேன். பெரிய பட்ஜெட் படங்கள் பண்ணும் போது எல்லாத்தையும் திட்டமிடணும் இப்படி நிறையா லெசன்ஸ்.

    கரண்:
    கண்டிப்பா உங்களுக்கு ஃபர்ஸ்ட் டே, லாஸ்ட் டே அனுபவம் ரொம்ப நல்லா இருந்துருக்கும். எப்படி ஃபீல் பண்ணினாங்க. எல்லாரும் ச்சே.. முடிஞ்சிடுச்சேன்னா?
    ரா.மௌ: எல்லாரும் பெரிய ரிலீஃபா நினைச்சாங்க. அப்பாடா முடிஞ்சிடுச்சுன்னு. ஆனா மிஸ்ஸிங் ஃபீல் புரமோஷன் டைம்ல எல்லாருக்கும் தொணுச்சு. ரெண்டு வருஷம் சேர்ந்து வேலை செஞ்சது. எமோஷனல் கூட ஆனோம்.

    கரண்:
    நல்லது. எனக்கும் படம் பார்க்கணும். என்னால காத்திருக்க முடியல. உங்களாலயும் தான் நினைக்கிறேன். மொத்த டீமுக்கும் வாழ்த்துகள்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •