Page 368 of 401 FirstFirst ... 268318358366367368369370378 ... LastLast
Results 3,671 to 3,680 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #3671
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    291
    Post Thanks / Like

    தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார் சரித்திரத்தைச் சான்று சொல்வார் தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டுத் தன்மான வீரரென்பார் மர்மமாய்ச் சதிபுரிவார் வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கு நஞ்சுவைப்பார் கர்மவினை யென்பார் பிரம்மனெழுத் தென்பார் கடவுள்மேல் குற்றமென்பார்................... கர்மவினை யென்பார் பிரம்மனெழுத் தென்பார் கடவுள்மேல் குற்றமென்பார்......... இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் இல்லாத நன்னாளை உண்டாக்கணும் எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் இல்லாத நன்னாளை உண்டாக்கணும் இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி பொதுநலம் பேசும் புண்ணியவான்களின் போக்கினில் அனேக வித்தியாசம் புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம் புவியை மயக்கும் வெளிவேஷம் _ அந்தப் பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த நல்லோரை எல்லோரும் கொண்டாடணும் இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே கருதவேண்டியதை மறந்தாச்சு _ பழங் கதைகளைப் பேசி காலம் வீணாச்சு; கையாலே முன்னேற்றம் கண்டாகணும் இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க படிப்பவங்க வீடு புடிப்பவங்க பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க படிப்பவங்க வீடு புடிப்பவங்க பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க இன்னும் _ பொம்பளைங்க ஆம்பளைங்க அத்தனை பேரையும்வச்சு மாடாஇழுக்கிறோம் வேகமா; நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் நம்ம வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் இல்லாத நன்னாளை உண்டாக்கணும் இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

    Last edited by sivaa; 14th July 2015 at 09:07 PM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. Likes KCSHEKAR, Russellmai, Georgeqlj liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  4. #3672
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy Mr. Sudhangan Facebook
    செலுலாய்ட் சோழன் – 83
    `சாந்தி’ படத்தின் `யாரந்த நிலவு’ பாடலை கேட்டுக்கொண்டேயிருந்தார் சிவாஜி!
    ஆனால் படப்பிடிப்புக்கான தேதியை மட்டும் ஒத்திப் போட்டுக்கொண்டே வந்தார்!
    யாருக்கும் காரணம் புரியவில்லை
    சிவாஜியால் எந்த காலத்திலும் படப்பிடிப்பு தாமதப்பட்டதேயில்லை!
    இப்படி ஒரு பதினைந்து நாள் தள்ளிப்போன பின்பு ஒரு நாள் வந்து நடித்துக்கொடுத்தார்!
    நடித்து முடித்ததுதான் காரணத்தைச் சொன்னார்!
    `பாட்டை பலமுறை கேட்டேன். கவிஞர் அற்புதமா எழுதிட்டாரு!
    விசு அபாரமா ட்யூன் போட்டுட்டான்!
    டி.எம்.எஸ் கலக்கிட்டாரு!
    இந்த பாட்டுக்கு டான்ஸ் மாஸ்டர் கிடையாது!
    இயக்குனராலயும் தீர்மானிக்க முடியாது!
    இந்த மூணு பேரையும் தாண்டி நான் பேர் வாங்கியாகணும்! ட்யூம் போட விசு பத்து நாள் எடுத்துக்கிட்டான்! கவிஞர் பத்து நாள் எடுத்துக்கிட்டார்!
    எனக்கு நேரம் வேணாமா ! அதனால்தான் மண்டையை உடைச்சிக்கிட்டிருந்தேன்!
    அதான் அந்த பாட்டுக்கு ஸ்டைல்ல நடிக்கணும்னு முடிவு பண்றவரை ஷுட்டிங்கை தள்ளிப் போட்டேன்!
    வியப்பால் அனைவருமே வாயடைத்து நின்றார்கள். ஒரு பாடலாசிரியரையும், இசையமைப்பாளரையும் மிஞ்சிக் காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு மாபெரும் கலைஞன் அதைப் பற்றியே சில நாட்கள் சிந்தித்தது என்பது அன்று நிலவிய ஆரோக்கியமான போட்டிக்கு அடையாளம்!
    இந்தப் படம் வெளியானது!
    படம் வெற்றி பெறவில்லை!
    ஆனால் கவிஞர் கண்ணதாசனுக்கு ஒரு ஆர்வம்!
    சிவாஜி என்னதான் இந்தப் பாடலில் செய்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆசை!
    முதல் நாள் தியேட்டரில் போய் படம் பார்த்திருக்கிறார்!
    படம் பார்த்து விட்டு விஸ்வநாதனுக்கு போன் செய்து ` விசு நம்ம இரண்டு பேரையும் மிஞ்சிட்டார்! தியேட்டரில் அவருக்குதான் அப்ளாஸ்!
    ஆமாம் படம் தோல்வியடைந்தாலும் இந்த பாடலில் சிவாஜிக்குத்தான் வெற்றி!
    இந்தப் படப்பிடிப்பு பற்றி இன்னொரு தகவலுமுண்டு!
    இந்தப் பாடல் முழுவது சிவாஜி சிகரெட் பிடித்துக்கொண்டே தான் நடப்பார்!
    அதனால் பல சைஸ்களில் சிகரெட்டை கட் பண்ணி வைத்திருந்தார்களாம்! தொடர்ச்சி அதாவது கண்டினியுட்டி போய்விடக்கூடாது என்பதற்காக!
    சிவாஜி எந்த தயாரிப்பாளரையும் சந்தித்ததில்லை!
    அவருடைய பேச்செல்லாம் இயக்குனர்கள், கதாசிரியர்களிடம் தான்!
    கதாசிரியர்களை பார்த்தால் `என்ன ஆசிரியரே நமக்கு ஒரு கதை சொல்ல மாட்டிங்களா?’’ என்பதுதான்!
    எப்போதும் தனக்கு தீனி போடக்கூடிய கதாபாத்திரங்களையே தெடிக்கொண்டிருந்த சிவாஜிக்கு அமைந்த ஒரு அற்புதமான பாத்திர படைப்பு ` ஆண்டவன் கட்டளை’ படத்தில் சிக்கியது!
    இது பி.எஸ். வீரப்பாவின் பிஎஸ்வி பிக்சர்ஸ் தயாரித்த படம்!
    இதில் அருமையான கூட்டணி அவருக்கு அமைந்தது!
    பாசமலர் படத்திற்கு கதை எழுதிய கே.பி. கொட்டரக்கரா தான்! திரைக்கதை மேதை என்று தமிழ்த் திரையுலகில் புகழப்பட்ட ஜாவர் சீதாராமன் திரைக்கதையமைத்து வசனம் எழுதியிருந்தார்!
    வழக்கம்போல் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர்கள் தான் இசை!
    இந்த படத்தில் ஒரு வித்யாசமான சிவாஜி!
    பிரம்மசர்யத்தை கடை பிடிக்கும் ஒரு கல்லூரி பேராசிரிய கிருஷ்ணன் கதாபாத்திரம் இவருடையது!
    அவரை அவரது மாணவி தேவிகாவே காதலித்து கவர்ந்திழுப்பதுதான் கதை!
    கதை கொஞ்சம் க்ரைம் கலந்தது!
    ஆனால் இந்த படத்திற்கு இன்று முகவரி சொல்லிக்கொண்டிருப்பது இன்றும் மக்கள் மனதை விட்டு நீங்காத பாடல்கள் தான்!
    `அமைதியான நதியினிலே ஒடும்!
    ஒடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்!
    காற்றினிலும் மழையினிலும்
    கலங்க வைக்கும் இடியினிலும்
    அருகினிலே ஒருத்தி வந்தால்
    ஆடும்!
    இந்தப் பாட்டின் இசையை இன்று பலரின் செல்போன்களில் அந்த ஆரம்ப புல்லாங்குழல் இசையின் தேவ கானத்தை கேட்கலாம்!
    இந்தப் படத்தில் சிவாஜி ஒரு பிரம்மச்சர்யம் கடை பிடிக்கும் பேராசிரியர்!
    முந்தைய படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம்!
    எப்படி சிவாஜி இந்த கதாபாத்திரத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்கிறார்!
    அந்த காலங்களில் ஒரு படத்தில் சிவாஜி மெலிதாக இருப்பார்!
    அடுத்த படத்தில் குண்டாக தெரிவார்!
    கமல்ஹாசன் இவரைப் பின்பற்றியதன் உண்மை இப்போதுதான் புரிகிறது!
    சிவாஜி சொல்வார், ` நடிக்கின்ற பாத்திரத்திற்கேற்ப மனித உடலில் ஒவ்வொரு அங்கத்திலும் ஏற்படும் அசைவும், முகபாவமும் மொத்தமாகச் சேர்ந்ததுதானே நடிப்பு!
    அதில் கால்கள் நடிக்க வேண்டும்.
    கைகள் நடிக்க வேண்டும்!
    கண்கள் நடிக்க வேண்டும்!
    உடலின் தசைகள் நடிக்க வேண்டும்!
    அப்பொழுதுதான் ஏற்றுக்கொண்ட நடிப்பைக் காண முடியும். அந்த நிலையில்தான் அந்தப் பாத்திரத்தை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த முடியும்.
    உதாரணமாக ஒரு டென்னிஸ் விளையாட்டுக்காரனைப் பார்த்தால், அவன் கைகள் மட்டுமல்ல, அவன் கால்களும் விளையாடும். அதுப்போல்தான் கிரிக்கெட்! ஃபுட்பால் என்று எந்த விளையாட்டை எடுத்துக்கொண்டாலும், விளையாடுபவனின் ஒவ்வொரு அங்கமும் ஒத்துழைத்தால்தான் ஆட்டத்தில் வெற்றி காண முடியும்.
    அது போல்தானே நடிப்பும்!
    மேடையில் வரும்போதே கம்பீரமாக வரவேண்டும்!
    அங்கே கால்களும், கைகளுமே நடிக்க வேண்டும். நவரசங்களைக் காட்டும்போது, கண்விழிகளின் ஒவ்வொரு அசைவிலும் அந்த மாற்றங்களை காட்ட வேண்டும்.
    பேசுகின்ற வசனங்கள் நாம் போடுகின்ற பாத்திரத்திற்கேற்ப ஏற்றத் தாழ்வுகளுடனும் நல்ல உச்சரிப்புடனும் பேச வேண்டும். அதுதான் நல்ல நடிப்பு!’ இதை அவர் தன் சரிதையில் சொல்லியிருக்கிறார்!
    இதற்கு உதாரணம் ` ஆண்டவன் கட்டளை’ படம்!
    அந்தப் படத்தின் ஆரம்பத்தில் ஒரு கோவில் எழும்பும்!
    அங்கிருந்து பி.எஸ். வி பிக்சர்ஸின் அடையாள சின்னம்
    `அங்கெங்கெனாத பரம்பொருள் வெடியைப் படைத்தான்!
    அதில் ஒளியைப் படைத்தான்!
    பல கோடி உயிர்களைப் படைத்தான்!
    மனிதனையும் படைத்தான்!
    எல்லா உயிர்களும் இப்படித்தான் வாழவேண்டுமென்கிற சட்டம் வகுத்தான்!
    ஆனால் மனிதன் மட்டும் தன்னிச்சைப்படி வாழ விரும்புகிறான்!
    முடிவில் நடப்பதென்னவோ ` ஆண்டவன் கட்டளை’ படியே!
    இது ஜாவர் சீதாராமன் குரலில் ஒலிக்கும்!
    மறுபடியும் ஜாவர் சீதாராமனை நினைவு படுத்த நினைக்கிறேன்!
    இவர்தான் `பட்டணத்தில் பூதம்’ படத்தில் பூதமாக நடித்த ` ஜீபூம்பா’
    இவர் பேசி முடிந்தவுடம் ஒரு பெயர்ப் பலகை!
    ஆங்கிலத்தில், PROF R. KRISHNAN, M.A., M.LITT,D.LITT,ECON (DIP} LONDON என்றிருக்கும்.
    அடுத்து ஒரு ஜன்னல் வழியாக சூரிய வெளிச்சம் உள்ளே வரும்!
    அப்படியே காமிரா நகர்ந்தால் ` கடமையே வெற்றிக்கு வழி’ என்கிற பெயர்ப் பலகை மேஜையில் இருக்கும்!
    அப்படியே காமிரா நகர்ந்தால சிவாஜி படுத்திருப்பார்!
    காலை அலாரம் அடிக்கும்!
    எழுந்து உட்கார்ந்து தன் கைகளைப் பார்த்துக் கொள்வார் சிவாஜி!
    `ஆண்டவா! என்றும் என் தெய்வமே! என்றும் என் தாய்நாட்டில் கல்வி பெருக வேண்டும்!
    கலை வளரவேண்டும்
    இப்படித்தான் துவங்குவார்!
    (தொடரும்)

  5. Likes KCSHEKAR, Russellmai, Georgeqlj liked this post
  6. #3673
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    291
    Post Thanks / Like
    1965 ல் வெளிவந்த சாந்தி திரைப்படம் 100 நாட்களுக்குமேல் ஓடி
    வெற்றிபெற்ற படம் கட'டுரை எழுதுபவர்கள்
    விபரங்களை தெரிந்துகொண்டு எழுதுவதில்லையா?
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #3674
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பெரியார் தந்த
    சிவாஜி
    பட்டமும்
    சிவாஜி தந்த
    மெல்லிசை மன்னர்
    பட்டமும்
    கலையுலகில் கல்வெட்டுக்கள்
    Last edited by senthilvel; 15th July 2015 at 06:34 AM.

  8. Likes ifohadroziza liked this post
  9. #3675
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    MSV - A legend is gone. As YGM said, TN today is ashamed of not bestowing any major awards on him. TN and its people owe a lot to him. with tears. RIP sir.

  10. Likes ifohadroziza liked this post
  11. #3676
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    From today's daily thanthi epaper online:

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. #3677
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றைய தினத்தந்தி

  13. Likes Russellmai liked this post
  14. #3678
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like

    [புகைப்படத்திற்கு நன்றி ராகவேந்தர் சார்!]

    இன்றைக்கு 112 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் உதித்த துருவ நட்சத்திரமே!

    விருதுபட்டி ஈன்றெடுத்த கர்ம வீரரே!

    சுதந்திர பாரதத்தின் சோஷலிச சிற்பியே!

    விடுதலை இந்தியாவில் தமிழகத்தின் விடிவெள்ளியே!

    1947-க்கு பின் இந்த

    அறுபத்தெட்டு ஆண்டு தமிழக வரலாற்றில் ஒரே ஒரு பொற்கால ஆட்சி வழங்கிய அற்புத முதல்வனே!

    தொழிற் புரட்சி ஏற்படுத்திய தொழிலாளர் தோழனே!

    பல்வேறு அணைகளை கட்டி பாசன வசதியை மேம்படுத்தி

    பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் அளித்த ஏழை பங்காளனே!

    பள்ளி சிறார்களுக்கு மதிய உணவு அள்ளி தந்த படிக்காத மேதையே!

    எண்ணிக்கையில் வெறும் 9 அமைச்சர்களை வைத்துக்கொண்டு [அதிலும் முதல் இரண்டு அமைச்சரவைகளில் எட்டே பேர்] ஊழலற்ற அரசாங்கமாய் வெளிப்படையான நிர்வாகமாய் எண்ணிலடங்கா மக்கள் நல்வாழ்வு திட்டங்களை நிறைவேற்றிய செயல் வீரனே!

    அகில இந்தியாவையும் ஆர் ஆள வேண்டும் என்பதை

    அகிலத்திற்கே அறிவித்த பாரத ரத்தினமே!

    ஆட்சியிலிருந்தவரை ஆராலும் தோற்கடிக்கப்பட முடியாத சாதனை சரித்திரமே!

    1947-க்கு பின் இந்த

    அறுபத்தெட்டு ஆண்டு தமிழக வரலாற்றில்

    ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து பெரும்பான்மை பலம் பெற்று

    ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்து மீண்டும்

    ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து பெரும்பான்மை பலம் பெற்று

    வெற்றி பெற்ற ஒரே தமிழக தலைவனே!

    என்றென்றும் எங்கள் பெருந்தலைவனே!

    ஏங்கி கிடக்கிறோம் பல்லாயிரம்

    எப்போது வரப்போகிறது உன் மறு அவதாரம்

    அன்றுதான் ஆரம்பமாகும்

    தாழ்ந்து கிடக்கும் தமிழகம்

    தலை நிமிரப் போகும் பொற்காலம்!

    அன்புடன்

    பொதுவாகவே மீள் பதிவு என்பது எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லாத ஒன்று. ஆனால் இந்த மீள் பதிவு நானே விரும்பி செய்த ஒன்று.

  15. Thanks ifohadroziza thanked for this post
    Likes KCSHEKAR, ifohadroziza, Russellmai liked this post
  16. #3679
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    காமராஜர் காலம் ஏன் பொற்காலம்?

    ஆ.கோபண்ணா

    1956-ல் தமிழகத்துக்கு வருகைதந்த வினோபா பாவேவைத் திருவள்ளூர் அருகே வரவேற்கிறார் முதல்வர் காமராஜர்.

    காமராஜர் ஆட்சிக் காலகட்டத்தைத் தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று சொல்லும்போது, பலரும் ஏதோ அதை வெற்றுப் புகழாரம்போலவே இன்றைக்கு நினைக்கின்றனர். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த காங்கிரஸார் பலருக்குமேகூட அந்த வார்த்தைகளின் பின்னால் உள்ள பெறுமதி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. “மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் தமிழகத்தில் நடந்தது காமராஜர் ஆட்சியில்!” இப்படிக் கூறியவர் யார் தெரியுமா? தந்தை பெரியார். உண்மையில், காமராஜர் ஆண்ட அந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்தில் என்ன நடந்தது? ஏன் வரலாறு தெரிந்தவர்கள் இன்றைக்கும் அதைப் பொற்கால ஆட்சி என்று கூறுகின்றனர்? முக்கியமான சில பதிவுகளை மட்டும் தருகிறேன்.

    இன்றைக்கு தமிழக அரசின் 2014-15-ம் ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் தொகை ரூ. 1.27 லட்சம் கோடி. ஆனால், காமராஜர் முதல்வராகப் பொறுப்பேற்ற 1954-55-ல் மொத்த பட்ஜெட் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.47.18 கோடி. அவர் பதவி விலகியபோது 1962-63-ல் ரூ.121.81 கோடி. அன்றைக்கெல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவுமே ஏழை தேசம்தான். இப்படிப்பட்ட பின்னணியில்தான் மகத்தான காரியங்களை காமராஜர் தன் ஆட்சியில் மேற்கொண்டார். அவருடைய சாதனைகளைப் படிக்கும் முன், அன்றைய தமிழகத்தின் இந்த மொத்த நிதியாதாரப் பின்னணியை நாம் கருத்தில் கொள்வது முக்கியம்.

    முதல் திருத்தத்தின் மூலவர்

    தமிழகத்தில் நீண்டகாலமாக அமலில் இருந்த, பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் ‘கம்யூனல் ஜி.ஓ.’ செல்லாது என சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பு கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. இந்நிலைமையை நன்கு உணர்ந்த காமராஜர், பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவர வித்திட்டார். அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த சில மாதங்களிலேயே 1951-ல் அதில் திருத்தம் கொண்டுவரக் காரணமாக இருந்து, பின்தங்கிய சமுதாய மாணவர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் பெற்றுவந்த இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றுத் தந்தவர் காமராஜர். இதனால் அவரை ‘முதல் திருத்தத்தின் மூலவர்’ என்று தமிழகம் போற்றிப் பாராட்டி அழைத்துப் பெருமிதம் கொண்டது.

    சமூக நீதிக்கான ஆட்சி

    தமிழகத்தின் முதலமைச்சராக ஏப்ரல் 13, 1954-ல் பொறுப்பேற்ற காமராஜர், அக்டோபர் 2, 1963 வரை ஒன்பதரை ஆண்டு காலம் ஆட்சி செய்தார். முதலில் எட்டு, பிறகு ஒன்பது அமைச்சர்களோடும் எளிமையான, நேர்மை யான ஆட்சி நடத்தினார். தமது முதல் அமைச்சரவையை உருவாக்கும்போது, ஹரிஜனத் தலைவரான பி.பரமேசு வரனுக்கு இந்து அறநிலையத் துறையை அளித்தார். உழைப்பாளர் கட்சித் தலைவரான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியைக் காங்கிரஸில் இணைத்து, அமைச்சர் பொறுப்பு வழங்கி, பின்தங்கிய மக்களை முன்னேற்றப் பாதையில் பயணம் செய்ய வழிவகுத்தார்.

    கல்விப் புரட்சி

    காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையே குலக்கல்விமுறை ஒழிப்புதான். “சிலர் பரம்பரைத் தொழிலையே செய்து வர வேண்டும் என்கிறார்கள். நாம் கீழேயே இருக்க வேண்டுமாம். நம்மைப் படிக்காதவர்களாக வைத்திருந்து, நாம் ரோடு போடவும், கல் உடைக்கவும், ஏர் ஓட்டவும், சேறு சகதியில் நாற்று நடவும் பயன்பட வேண்டுமாம்.

    காட்பாடி பள்ளிக்கூட ஏழைக் குழந்தைகளுக்கு உணவு பரிமாறுகிறார் காமராஜர்.

    அவர்கள் மட்டும் நகத்தில் மண் படாமல் வேலை செய்து முன்னேற வேண்டுமாம். எப்படியிருக்கிறது நியாயம்? நாமும் படித்து, நாலு தொழில் செய்து முன்னேற வேண்டாமா?” என்று நறுக்குத் தெறித்தார்போல் கூறினார்.

    எந்தச் சொத்தும் இல்லாதவர்களுக்குக் கல்வி என்ற சொத்தை வழங்கி, வாழ்க்கையில் முன்னேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசக் கல்வியையும், மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டுவந்தார். இதனால் 1957-ல் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள், 1962-ல் 29,000 ஆக உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரித்தது. 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,995 ஆனது.

    தொழில் வளர்ச்சி

    ஜவாஹர்லால் நேரு ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முதலாவது, இரண்டாவது ஐந்தாண்டு திட்டங்களின் முழுப் பலனையும் தமிழகம் பெற்று முன்னேறும் வகையில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக தமிழகத்தில் தொழில் புரட்சி நடந்தது. சென்னை - பெரம்பூரில் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை, சென்னை, கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை, ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை, திருச்சி, திருவெறும்பூரில் உயர் அழுத்த கொதிகலன் தொழிற்சாலை (BHEL) அமைய 750 ஏக்கர் பட்டா நிலமும், 2,400 ஏக்கர் புறம்போக்கு நிலமும் வழங்கப்பட்டன.

    1958-ல் கிண்டி தொழிற்பேட்டையைப் பார்வையிட வந்த பிரதமர் நேருவுடன்...

    இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்று, பொதுத் துறை நிறுவனங்களிலேயே அதிக லாபத்தைத் தருகிற ‘மகாநவரத்தினா’என்ற தகுதியை பெற்றுள்ளது பெல் நிறுவனம். பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உட்பட்ட ஆவடி டாங்க் ஃபேக்டரி தொழில் வளர்ச்சியில் அரசுத் துறையோடு, தனியார் துறையும் இணைந்து பல தொழில்கள் தொடங்கப்பட்டன. ‘மதராஸ் இண்டஸ்டிரியல் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன், அசோக் லேலண்ட் தொழிற்சாலை, டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலை, சிம்சன், இந்தியா பிஸ்டன்ஸ், டி.வி.எஸ், லூகாஸ் இவையெல்லாம் அந்தக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டவைதான். 1951-ல் தமிழகத்தில் 71-ஆக இருந்த நெசவாலைகளின் எண்ணிக்கை, 1962 முடிவில் 134-ஆகப் பெருகியது. அதேபோன்று கூட்டுறவுத் துறையில் நூற்பு ஆலைகள் தொடங்கப்பட்டன. சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து எட்டாக உயர்ந்தது. இவற்றின் உற்பத்தி 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 டன்.

    மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, கூடுதலாகப் பல சர்க்கரை ஆலைகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆண்டொன்றுக்கு 20 ஆயிரம் டன் காகிதம் உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை ஈரோடு அருகே பள்ளிபாளையத்தில் சேஷசாயி காகிதம் மற்றும் போர்டுகள் லிமிடெட் நிறுவனம் தொடங்கியது. அதே போன்று, மாநிலத்தில் கூடுதலாக காகிதக்கூழ் மற்றும் வைக்கோல் அட்டைகள் தயாரிக்க எட்டு ஆலைகள் தொடங்குவதற்கு உரிமை வழங்கப்பட்டது. கோவை மாவட்டம் மதுக்கரை, திருச்சி மாவட்டம் டால்மியாபுரம், ராமநாதபுர மாவட்டம் துலுக்கப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து என நான்கு சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகள் தொடங்கப்பட்டன.

    இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது ‘மெட்ராஸ் சிமெண்ட்ஸ் லிமிடெட்’ என்ற ஒரு புதிய சிமெண்ட் ஆலை ராஜபாளையத்தில் தொடங்கப்பட்டது. 1962-ல் சேலம், சங்கரிதுர்க்கம் என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டது. கரூரில் மற்றொரு ஆலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    தொழிற்பேட்டைகள்

    காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொழில் வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பு வழங்கவும் தொழிற்பேட்டைகள் சென்னை, கிண்டி, விருதுநகரில் தொடங்கப்பட்டன. இவற்றின் பயன்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து கும்பகோணம், விருத்தாசலம், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கோவில்பட்டி, ராஜ பாளையம், நாகார்கோவில், சென்னையை அடுத்த அம்பத்தூர் போன்ற இடங்களில் இத்தகைய தொழிற் பேட்டைகளை உருவாக்குதவற்காக ரூ.4.08 கோடி ஒதுக்கப் பட்டது. இவற்றைத் தவிர மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் மார்த்தாண்டம் (கன்னியா குமரி) ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப் பட்டன. சென்னை அம்பத்தூரில் தொழிற்பேட்டை தொடங்கி 1,200 ஏக்கர் நிலம் வழங்கி இடஒதுக்கீட்டுடன் 400 தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டன.

    பாசனத் திட்டங்கள்

    மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு தமிழகம் தனது நீர்வளத்தைப் பெருக்க உரிய பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக காமராஜர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அவற்றின் பயனாக கீழ்பவானி திட்டம், மணிமுத்தாறு திட்டம், மேட்டுர் கால்வாய் திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி திட்டம், வைகை திட்டம், சாத்தனூர் திட்டம், கிருஷ்ணகிரி திட்டம், 30 லட்ச ரூபாய் மதிப்பிலான காவிரி கழிமுக வடிகால் திட்டம் ஆகியவை உருவாகின.

    கன்னியாகுமரி மாவட்டம் விளாத்துறையில் இறவைப் பாசனத் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார்.

    இவை தவிர, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைத் திட்டம், வீடூர் நீர்த்தேக்கத் திட்டம், கொடையாறு வாய்க்கால் திட்டம், நெய்யாறு திட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் ஆகிய ஏழு புதிய திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.

    இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தின்போது, மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய திட்டம். இது கிட்டத்தட்ட ரூ. 30 கோடி செலவில் நீர்ப்பாசனத்தோடு மின்சாரம் வழங்கும் பல்நோக்குத் திட்டமாகும். கோவை மாவட்டத்தில் 2.4 லட்சம் ஏக்கர் நில பரப்புக்கும் நீர்ப்பாசன வசதி வழங்குவதோடு, 1.80 லட்சம் கிலோவாட் திறன்கொண்ட மின்உற்பத்தி செய்யும் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதே இத்திட்டம். அம்மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம் ஆகிய பகுதிகளுக்கு இத்திட்டம் நீர்ப்பாசன வசதி செய்கிறது. அண்டை மாநிலங்களோடு நல்லுறவு இருந்தால் இத்தகைய நதிநீர்ப் பகிர்வுத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்பதற்கு இத்திட்டம் சிறந்த எடுத்துக்காட்டு.

    மின்உற்பத்தி

    காமராஜர் ஆட்சிக்காலத்தில் மின்உற்பத்தியில் வியக்கத் தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. மின்உற்பத்தியிலும், அதைப் பயன்படுத்துவதிலும் சென்னை மாகாணம் இந்தியாவில் மூன்றாவது இடத்தை வகித்தது. காமராஜர் ஆட்சியில்தான் பெரியார் நீர்மின்உற்பத்தித் திட்டம், குந்தா நீர்மின்உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டது. நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் ரூ. 86 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் மின் உற்பத்தியில் மகத்தான சாதனைகள் நிகழ்ந்தன. இன்று ரூ.1,500 கோடிக்கும்மேல் லாபம் ஈட்டித்தரும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக வளர்ந்துள்ளது.

    மின் உற்பத்திக் கருவியைப் பார்வையிடும் காமராஜர்…

    சென்னை மாகாணத்தின் மின்பற்றாக்குறையைச் சமாளிப் பதற்காக 5 லட்சம் கிலோவாட் மின்உற்பத்தித் திறன்கொண்ட அணுமின் நிலையத்தைக் கல்பாக்கத்தில் அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட காமராஜர், இந்திய அரசின் அணுமின் உற்பத்தித் துறையை அணுகி, இத்திட்டத்தைப் பெறுவதில் வெற்றிகண்டார். அதன் பயன்களைத் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இன்று அனுபவித்துவருகின்றன.

    நிலச் சீர்திருத்தம்

    காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குத்தகைதாரர்களின் பாதுகாப்புக்காக, ‘குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் - 1955’ காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. நிலச் சீர்திருத்தத்தை மேன்மைப்படுத்தும் நடவடிக்கையாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்துக்கும்மேல் வைத்திருந்தால் அவற்றை அரசுடமையாக்கும் நில உச்சவரம்புச் சட்டம் 1962-ல் கொண்டுவரப்பட்டது.

    பஞ்சாயத்து ராஜ்

    காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, பஞ்சாயத்து ஆட்சி செயல்படுத்தப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நேரு தொடங்கியதையொட்டி தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958-ல் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் காமராஜர் ஆட்சியில் 373 பஞ்சாயத்து யூனியன்களும், 12 ஆயிரம் பஞ்சாயத்துக்களும் தொடங்கப்பட்டுச் செயல்படத் தொடங்கின.

    தமிழ் வளர்ச்சி

    சென்னை மாகாணத்தின் பட்ஜெட்டை 1957-58-ல் தமிழிலேயே சமர்ப்பித்தார் காமராஜர். 1956-ல் தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் கொண்டுவந்ததும் காமராஜர் ஆட்சியே. 1959 ஜனவரியில், தமிழ் அறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராகக் கல்வி அமைச்சர் நியமிக்கப்பட்டார். கல்லூரிப் பாடங்களைக் கற்பிக்கும் மொழியாக தமிழைக் கொண்டுவரவும் மலிவான விலையில் உயர் கல்விக்கான பாடநூல்களைத் தமிழில் வெளியிடவும் இந்த அமைப்பு செயல்பட்டது. இத்துடன் ‘தமிழ்ப்பாடநூல் வெளியீட்டுக் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டது. தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படிப்பவர்களுக்கு மாத ஊக்கத்தொகையும், அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் வழங்கப்பட்டன. பாடங்கள் தொடர்பான ஆங்கில நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.

    காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் கலைச்சொல் அகராதி 1960-ல் வெளியிடப்பட்டது. 1956-ல் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டவுடன் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து சட்டமன்றத்தில் 24.2.1961-ல் நடந்த விவாதத்தில் உரையாற்றிய சி.சுப்பிரமணியம், “மெட்ராஸ் ஸ்டேட் என்று குறிப்பிடப்படும் இடத்தில் சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்குப் பதில் தமிழ்நாடு என்று எழுதலாம் என பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’என்று தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரும் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

    எளிமை நேர்மை - தூய்மை

    எல்லாவற்றையும்விட முக்கியமானது இது. காமராஜரின் பொதுவாழ்க்கை எளிமை, நேர்மை, தூய்மை எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. முதல்வராக இருந்த காலத்தில் சென்னையில் உள்ள தனது வீட்டில் தனது தாயைக்கூட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேலாகத் தங்க காமராஜர் அனுமதித்ததில்லை. தனது சம்பளத்திலிருந்து மாதம் ரூ.120 கொடுத்து விருதுநகரில்தான் தனது தாயைத் தங்கவைத்திருந்தார். தன்னைச் சுற்றி தனது குடும்பத்தினர், உறவினர் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார் என்ற ஒரு செய்தி போதும், கறை படியாத கைகளுக்கு.

    பெரியாரின் வார்த்தைகள்

    காமராஜர் ஆட்சியைப் பிரதமர் நேரு உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் அனைவருமே மனதாரப் பாராட்டியுள்ளனர். முக்கியமான பாராட்டு, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்த தந்தை பெரியாருடையது. சுமார் ஒன்பதரை ஆண்டு காலம் காமராஜர் ஆட்சியைத் தம் தோள்மீது சுமந்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்செய்து பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார் பெரியார்.

    1961-ல் தேவகோட்டையில் பேசும்போது, மரண வாக்குமூலம்போலத் தமது உள்ளக்கிடக்கையை தந்தை பெரியார் வெளியிட்டார். அதில், ‘‘தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம்போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது முவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை.

    தோழர்களே நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.”

    காமராஜரின் ஆட்சிக் காலம் ஏன் தமிழகத்தின் பொற்காலம் என்பதற்கு இதைவிடவும் சான்று வேண்டுமோ?

  17. Thanks ifohadroziza, adiram thanked for this post
    Likes KCSHEKAR, ifohadroziza, Russellmai, adiram liked this post
  18. #3680

  19. Likes KCSHEKAR liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •