-
22nd July 2015, 04:11 PM
#11
Senior Member
Veteran Hubber
'பாகுபலி' திரையிடப்பட்ட தியேட்டர் மீது குண்டுவீச்சு: மதுரையில் பரபரப்பு
'பாகுபலி' திரையிடப்பட்ட தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'பாகுபலி' திரைப்படம் அண்மையில் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்துக்கு மதுரையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் சமுதாயம் மற்றும் அருந்ததியர் சமூகத்தை இழிவுபடுத்துவதாக கூறி படத்தின் தயாரிப்பாளர், இயக்குநரை கண்டித்து தமிழ் புலிகள் அமைப்பினர் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாகுபலி படம் திரையிடப்பட்டுள்ள தமிழ் தியேட்டர் மீது இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டுவீச்சு சம்பவத்துக்கு தமிழ் புலி அமைப்பினர் காரணமாக என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்து வருகிறது.
-
22nd July 2015 04:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks