-
22nd July 2015, 11:28 AM
#211
Senior Member
Veteran Hubber
கே.வி.விஜயேந்திர பிரசாத் - பாகுபலி, பஜ்ரங்கி பைஜான் வெற்றியின் காரணகர்த்தா - Webulagam
கே.வி.விஜயேந்திர பிரசாத் என்ற பெயர் ஆந்திராவில் பிரபலம். சினிமா கதாசிரியர். பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலியின் தந்தை என்றால் சட்டென்று தெரியும்.
இன்று இந்தியாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாகுபலி, பஜ்ரங்கி பைஜான் இரண்டு படங்களின் கதாசிரியர் இவர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதில்லையா?
விஜயேந்திர பிரசாத் இயக்குனராகும் ஆசையில் தெலுங்குப் படவுலகில் நுழைந்தவர். 1996 -இல் அர்த்தங்கி என்ற படத்தை இயக்கினார். படம் தோல்வியடையவே அதன் பிறகு படம் இயக்கும் வாய்ப்பு இல்லாமலே போனது. 1988 -இல் ஜானகி ராமுடு படத்தின் கதையை எழுதி கதாசிரியரானார். அதன் பிறகு 18 படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார். அதில் பெரும்பாலானவை ஹிட் படங்கள்.
அப்பாவின் தோல்வியிலிருந்து எழுந்து வந்தவர் ராஜமௌலி. வெற்றி மட்டும்தான் அவரது இலக்காக இருந்தது. அப்பாவின் கதை ஞானத்தை பலமாகக் கொண்டு இவ்வளவு தூரம் உயர்ந்திருக்கிறார். ராஜமௌலியின் சிம்மாத்ரி, யமதொங்கா, விக்ரமார்க்குடு, மகாதீரா, பாகுபலி எல்லாம் விஜயேந்திராவின் கதையில் உருவானவைதான்.
கதாசிரியராக பெயர் வாங்கிய பின் தனது கனவான இயக்கத்துக்கு விஜயேந்திர பிரசாத் திரும்பினார். 2006 -இல் ஸ்ரீ கிருஷ்ணா படத்தை இயக்கினார். 2011 ராஜன்னா. இந்தப் படம் ஆந்திர அரசின் நந்தி விருதை வென்றது.
பஜ்ரங்கி பைஜான் கதை விஜயேந்திர பிரசாத்தினுடையது. பத்திரிகையில் வந்த ஒரு செய்தியை அடிப்படையாக வைத்து இந்த கதையை அவர் இயக்குனர் கபீர் கானிடம் கூறியுள்ளார். அதேநேரம், இந்தக் கதை ஜெர்மன் இயக்குனர் விம் வெண்டர்ஸின், ஆலிஸ் இன் தி சிட்டீஸ் (1974) படத்தின் தழுவல் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. பஜ்ரங்கி பைஜான் போலவே வழி தவறிய சிறுமியை அவளது வீட்டில் சேர்ப்பதுதான் விம் வெண்டர்ஸின் படத்தின் கதையும். சிறுமியிடம் தனது பாட்டி வீட்டின் முகப்பு புகைப்படம் மட்டுமே இருக்கும். அதனை வைத்து சிறுமியும், அவளுக்கு உதவும் எழுத்தாளரும் ஊர் ஊராக அலைவதுதான் கதை. விம் வெண்டர்ஸின் படத்தை இந்திக்கு ஏற்படி மாற்றியிருக்கிறார்கள் என சிலர் கூறுகின்றனர்.
ராஜமௌலியின் மரியாத ராமண்ணாவுக்கும் இதே போன்ற குற்றச்சாட்டு எழுந்தது. மரியாத ராமண்ணாவுக்கு கதாசிரியர், ராஜமௌலியின் ஒன்றுவிட்ட சகோதரர் எஸ்.எஸ்.காஞ்சி. இவர்தான் நான் ஈ படத்துக்கும் கதாசிரியர். பஸ்டர் கீடனின், அவர் ஹாஸ்பிடாலிட்டி படத்தை தழுவி எழுதப்பட்டது மரியாத ராமண்ணா.
இந்த சர்ச்சைகளைத் தாண்டி ஒருவிஷயம் தெளிவாக புரிகிறது. அது, கதை. இந்திய சினிமாவைப் பொறுத்தவரை சிறந்த கதையும், திரைக்கதையும் இருந்தால் வெற்றி பெற முடியும். தெலுங்கு, இந்தி, மலையாளப் படங்களில் எழுத்தாளர்களுக்கு மரியாதை இருக்கிறது. பெரிய இயக்குனர்களும் கதாசிரியர்களிடம் கதைக்கான பொறுப்பை ஒப்படைக்கின்றனர். ராஜமௌலியின் வெற்றியும், பஜ்ரங்கி பைஜானின் வசூலும் அதைத்தான் சொல்கின்றன.
கதை, திரைக்கதை, வசனம் மூன்றையும் சேர்த்து போட்டுக் கொண்டால்தான் இயக்குனருக்கு பெருமை என்ற அபத்தம் தமிழ் சினிமாவின் மூளையில் எப்படியோ பதிந்துவிட்டது. நேர்மையான முறையில் கதையை வாங்கி பயன்படுத்தாமல் கதைத்திருட்டு அதிகமாக நடப்பதும் இங்கேதான். ராஜமௌலியைப் பார்த்தாவது நம்மவர்கள் திருந்தினால் நல்லது.
-
22nd July 2015 11:28 AM
# ADS
Circuit advertisement
-
22nd July 2015, 01:37 PM
#212
Senior Member
Veteran Hubber
வாட்ஸப்பை கலக்கும் ‘பாகுபலி’ ஆச்சர்யங்கள்!
படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கும் மேல் அதன் வசூலும் பாராட்டுகளும் குறையாமல் இருப்பது மிக ஆச்சர்யமே. இப்போது அடுத்த கட்டமாக வாட்ஸப் மற்றும் சமூக வலைகளில் ‘பாகுபலி’யின் சிறப்பு விஷயங்கள் குறித்த ஒரு ஃபார்வர்ட் மெஸேஜ் அனைவராலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதில் கண்டிப்பாக படிக்கவும் என்ற வாசகத்துடன் மெஸேஜ் ஆரம்பிக்கிறது...
பாகுபலி படம் மாபெரும் வெற்றி மற்றும் வசூல் சாதனை படைத்தது.... அந்த வெற்றியின் ரகசியம் இதோ
☺250 கோடி செலவு செய்த முதல் படம்.. மொத்தம் 733 நாட்கள் படமாக்கப்பட்டது...
☺ஹீரோ பிரபாஸ் 560 நாட்கள் நடித்து 24 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர்...
☺23 புகழ்பெற்ற கேமராமேன் 48 கேமராக்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்..
☺56 துணை இயக்குனர்கள் வேளை செய்த முதல் இந்திய படம்
☺தினமும் 40 முட்டை உண்டு படத்திற்காக 45 கிலோ உடல் எடையை எற்றிய பிரபாஸ் மற்றும் ராணா ....
☺அவர்கள் உடற்பயிற்சி காக மட்டுமே 1.5 கோடிகளை செலவு செய்த முதல் படம்
☺40 கலை இயக்குனர்கள் 90 உதவி கலை இயக்குனர் வேலை செய்த முதல் இந்திய படம்
☺2000 தொழிலாளர் வேலை செய்த முதல் இந்திய படம்
☺2000 நடிகர்கள் நடித்த முதல் இந்திய படம்
☺20000 ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
☺125 அடி உயர சிலை பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
☺4000 திரையரங்குகளில் வெளியான முதல் இந்திய படம்
☺திரையிட்ட 36 மணி நேரத்தில் 100 வசூல் செய்த முதல் இந்திய படம்
☺26 (அவார்டு) பதக்கங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் இந்திய படம்
☺3மொழிகளில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்
☺கொச்சியில் 52,400 அடி அகலத்தில் தரையில் போஸ்டர் வைத்த முதல் இந்திய படம்
☺1120 ஏக்கர் பரப்பளவில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்
☺கம்பியூட்டர் கிராப்பிக்ஸ்க்கு மட்டுமே 82 கோடி செலவு செய்த முதல் இந்திய படம்
☺உலக புகழ்பெற்ற 7 சண்டை இயக்குனர்கள் பயன்படுத்த பட்ட முதல் இந்திய படம்
☺மின்சார செலவுக்கு மட்டுமே 9 கோடி, உணவுக்கு 24 கோடி செலவு செய்த முதல் இந்திய படம்
☺சுமார் 1லட்சம் டன் மரக்கட்டைகள் , பலகைகள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
☺90 நாட்கள் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்
☺அதிக ஆடை , ஆவரணங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
☺மூன்று மொழிகளில் 1800 வார்த்தைகள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
☺போரின் போது வில்லன் பேசும் உலகில் எங்கும் இல்லாத மொழி பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
☺அரசர்களின் வாழ்க்கையையும் உண்மையையும் திரையில் கொண்டு வந்த முதல் இந்திய படம்
☺இத்தகைய பிரம்மாண்ட படைப்புக்கு சொந்தமான இயக்குனர் உயர்திரு ராஜ மௌலி தலைவா யூ ஆர் கிரேட்
என்ற வாசகத்துடன் இந்த மெஸேஜ் தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலாமி வருகிறது.
-
22nd July 2015, 04:11 PM
#213
Senior Member
Veteran Hubber
'பாகுபலி' திரையிடப்பட்ட தியேட்டர் மீது குண்டுவீச்சு: மதுரையில் பரபரப்பு
'பாகுபலி' திரையிடப்பட்ட தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'பாகுபலி' திரைப்படம் அண்மையில் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்துக்கு மதுரையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் சமுதாயம் மற்றும் அருந்ததியர் சமூகத்தை இழிவுபடுத்துவதாக கூறி படத்தின் தயாரிப்பாளர், இயக்குநரை கண்டித்து தமிழ் புலிகள் அமைப்பினர் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாகுபலி படம் திரையிடப்பட்டுள்ள தமிழ் தியேட்டர் மீது இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டுவீச்சு சம்பவத்துக்கு தமிழ் புலி அமைப்பினர் காரணமாக என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்து வருகிறது.
-
22nd July 2015, 04:28 PM
#214
Senior Member
Veteran Hubber
நாம் கிராபிக்ஸில் நிரூபித்தது என்ன?- 'பாகுபலி' வி.எஃப்.எக்ஸ். கலை நிபுணர் பகிரும் 10 தகவல்கள்
'பாகுபலி' மூலம் உலக அளவில் கவனம் ஈர்த்த இந்திய இயக்குநர் ராஜமெளலி. அவருக்கு இணையாக, திரைத்துறை ஆர்வலர்களால் கூகுளிடப்படுபவர் ஸ்ரீனிவாஸ் மோகன். இவரே 'பாகுபலி' படத்தின் விஷுவல் எஃபக்ட் கலை நிபுணர். 'தி இந்து' ஆன்லைன் செய்தியாளரும், வீடியோ பிரிவை நிர்வகிப்பவருமான கார்த்திக் கிருஷ்ணாவுக்கு ஸ்ரீனிவாஸ் மோகன் நீண்ட பேட்டி அளித்துள்ளார்.
இந்த வீடியோ நேர்காணலில் விஷுவல் எஃபக்ட் கலை நிபுணர் ஸ்ரீனிவாஸ் மோகன் தன் துறை சார்ந்து, பாகுபலி குறித்தும் பேசியதில் இருந்து முக்கிய 10 அம்சங்கள் இவை:
* இயக்குநர் ஷங்கருடன் முதலில் பணியாற்றியது, 'பாய்ஸ்' திரைப்படத்தில் 'மாரோ மாரோ' என்ற ஒரே ஒரு பாடலுக்காக. அதன்பின் எந்திரன், ஐ படங்களில் பங்காற்றினேன். எனக்கு பிரேக் கிடைத்ததில் இயக்குநர் ஷங்கருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு
* இந்தியாவில் கிராபிக்ஸ் துறையின் குழந்தைப் பருவம்தான் இது. வளர இன்னும் சில வருடங்கள் ஆகும். மேற்கத்திய நாடுகளைப் போல பல்கலைக்கழகங்களின் துணை இருந்தால் கிராபிக்ஸில் இன்னும் பல புதிய தொழில்நுட்பங்களை எடுத்து வரலாம். ஹாலிவுட்டோடு நம்மூர் கிராபிக்ஸை ஒப்பிடுவது தவறு. நம்மைவிட 100 மடங்கு பட்ஜெட் அவர்களிடம் உள்ளது. நமது பட்ஜெட்டில், என்ன எப்படி செய்யவேண்டும் என்பதை நாம் புத்திசாலித்தனமாக திட்டமிடவேண்டும்.
* 'மாற்றான்' படத்துக்காக ஒரு வாரத்துக்கு 12,000 டாலர் என்ற கேமராவை வாடகைக்கு எடுக்காமல், நாங்களே இங்கு ஒரு ஹெல்மெட், மற்றும் மொபைலை இணைத்து வெறும் ரூ.2,000 ரூபாயில் ஒரு கேமராவை ஏற்பாடு செய்து கொண்டோம். செலவுமிக்க தொழில்நுட்பத்தை ஐடியாவால் வெல்லும் உத்திக்கு இது உதாரணம்.
* நமக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவான பின்பே கிராபிக்ஸ் வேலைகளைத் துவங்க வேண்டும். இது பட்ஜெட்டை மிச்சப்படுத்தும். இரண்டரை வருடங்களுக்கு முன்பு பாகுபலியின் கதையை ராஜமௌலி சொன்னார். அதற்கு முன்னரே படத்துக்கான வேலைகளை அவர் துவங்கியிருந்தார். ராஜமௌலி பாகுபலி கதையை விவரித்த போது, இயக்குநர் ஷங்கர் 'எந்திரன்' கதையை விவரித்த அதே உணர்வை எனக்குத் தந்தது ஆச்சரியமாக இருந்தது.
* தயாரிப்பு வடிவமைப்பின் ஓர் அங்கமாக ஒவ்வொரு முக்கியப் கதாபாத்திரத்துக்கும், அந்த பாத்திரத்தைப் பற்றிய அனைத்து தகவல்களும் அடங்கிய ஒரு களஞ்சியத்தை பாகுபலிக்காக உருவாக்கினோம். அருவி, போர்க்காட்சிகள்தான் மிகுந்த சவால்களாக இருந்தன.
* பாகுபலியைப் பொறுத்தவரையில், பட்ஜெட்டும் கால அவகாசமும் போதுமானதாக இல்லை என்ற காரணத்தால், இயக்குநரின் கற்பனையில் 60 முதல் 70 சதவீதத்தை மட்டுமே எங்களால் திரையில் கொண்டு வர முடிந்தது.
* பின்னணி இசை, சிறப்பு சப்தங்கள் இல்லாமல் பார்த்தால் பாகுபலி படத்தின் கிராபிக்ஸில் நிறைய தவறுகளை நீங்கள் கண்டுபிடிக்கலாம். பின்னணி இசையும், உணர்வுபூர்வ காட்சியமைப்புகளும் படத்தின் தரத்தை மேம்படுத்தி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து, சிறு சிறு தவறுகளை மறைத்தன.
* பாகுபலியில் மொத்த போர்க்களக் காட்சியுமே 300x300 அடி நீள, அகலம் கொண்ட பெரிய பச்சைத் திரைக்கு முன் தான் படமாக்கப்பட்டது. போர்க்காட்சிகளில் கேமராவுக்கு முன்னால் 25 அடி வரை இருப்பது மட்டுமே நிஜம். 25 அடியைத் தாண்டி இருக்கும் அனைத்தும் கிராபிக்ஸே.
* பாகுபலியை பொருத்தவரை, கிராபிக்ஸ்சில் நாம் உச்சத்தைத் தொடவில்லை என்றே சொல்ல முடியும். ஏனென்றால், நினைத்ததில் வெறும் 60 சதவீதமே திரையில் வந்தது. இன்னும் சிறிது கால அவகாசம் இருந்தால் பாகுபலியில் மேலும் 30 - 40 ஷாட்களை மேம்படச் செய்திருப்போம்.
* மக்கள் ஹாலிவுட் படத்துக்கும், இந்தியப் படத்துக்கும் ரூ.120 தான் டிக்கெட்டுக்காக செலவழிக்கின்றனர். எனவே அவர்கள் இரண்டு படங்களிலும் ஒரே மாதிரியான கிராபிக்ஸ் தரத்தைதான் எதிர்பார்ப்பார்கள். ஆனால், ஹாலிவுட்டோடு ஒப்பிட்டால் பட்ஜெட் மட்டுமே நமக்கு ஒரே கட்டுப்பாடு. கற்பனை மற்றும் புதிய சிந்தனைகளில் அவர்களை விட நாம் நிச்சயமாக மேம்பட்டு இருக்கிறோம். விஷுவல் எஃபக்டை பொருத்தவரை, நாம் ஹாலிவுட் தரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் எனலாம்.
-
22nd July 2015, 06:42 PM
#215
Senior Member
Veteran Hubber
Rajamouli demurred on this point, but not before confessing that he and lead actor Prabhas “kept our remuneration low and pushed all the money into production.”
Shankar ji and rajni ji pls take note endhiran would have been a much better product if the above was applied to both of them
Usurae Poguthey Usurae Poguthey..Othada Nee Konjam Suzhikayila
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd July 2015, 09:48 PM
#216
Senior Member
Diamond Hubber
Above all, there is another thing we should follow. Having separate story and screenwriting departments. We will be able to deliver much better products. Directors like KSR and Mani have occasionally used other writers. GVM used Kumararaja and Raghavan for screenwriting YA. Earlier we had good writers in Panchu Arunachalam and Selvaraj. Now its almost obsolete.
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
22nd July 2015, 10:36 PM
#217
Senior Member
Veteran Hubber
Portrayal of tribals in ‘Baahubali’ sparks Twitter war
News18 | Wed Jul 22, 2015 | 02:31 IST # Former Indian Express editor Shekhar Gupta is once again in the news! This time he has grabbed headlines for slamming blockbuster movie Baahubali.
The well-known journalist has strongly attacked the makers of Baahubali over portrayal of tribals in Baahubali. Deeply upset with the Baahubali makers, Shekhar Gupta took to Twitter to vent his anger and thereafter sparked a tweet war among pro and anti Baahubali audience.
"Most awful film portrayal of tribals in #Bahubali. Dark, scar-faced, ugly rapist brutes with rotting black teeth. Shameful profiling (sic)," Shekhar Gupta wrote on Twitter triggering a tweet war.
aking on Shekhar Gupta, a number of users came forward to show their support to Baahubali.
Baahubali, a film by SS Rajamouli, featuring Prabhas, Rana Daggubati and others in lead roles has created several records by its box-office collection. It's getting praises for its larger than life characters and special effects.
What a shame @ShekharGupta ji! Dark, scar faced was the portrayal. But "UGLY" is YOUR INTERPRETATION. Very Racist!
-
22nd July 2015, 10:39 PM
#218
Senior Member
Veteran Hubber
Amitabh Bachchan @SrBachchan 23h23 hours ago T 1937 - Back to back 'Bahubali' and 'BB' .. riveting, emotional, and a sense of delight and pride to be a small part of this fraternity !!
-
22nd July 2015, 10:40 PM
#219
Senior Member
Veteran Hubber
rajamouli ss @ssrajamouli 4h4 hours ago rajamouli ss retweeted GuinnessWorldRecords
Now it is officially awarded.. Congratulations to Mr. Prem Menon and his team at global United media
-
23rd July 2015, 07:48 AM
#220
Senior Member
Senior Hubber
Waiting to watch 2nd time on small screen..
We have just signed the India's biggest blockbuster in 85 years of Indian cinema Bahubali coming soon at Tentkotta in best HD quality and Dolby 5.1 surround sound.
Bookmarks