-
28th July 2015, 06:43 PM
#11
Senior Member
Seasoned Hubber
செந்தில்வேல்
தங்களுடைய எழுத்தின் சிறப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. தாங்கள் தேர்வு செய்யும் பாடல்கள், இங்கு அதிகம் அலசப்படாதவையாக இருக்கின்றன. அதற்கே தங்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.
குறிப்பாக அமர காவியம் என்றாலே ஏதோ தீண்டத்தகாதைத் தொட்டு விட்டது போல் ஒதுக்கப் பட்டதை உடைத்து அதில் இருக்கும் அந்த அருமையான இசையை, மெல்லிசை மன்னரின் தனித்துவமான இசையமைப்பை, பாடகர் திலகத்தின் நெஞ்சை உருக்கும் குரலை, நினைவுகளை மீட்டும் வரிகளை, அனைத்தையும் தன் அமைதியான நடிப்பால் தூக்கிப் பிடித்துள்ள நடிகர் திலகத்தின் மேன்மையை அருமையாக எழுதியுள்ளீர்கள்.
பாடலின் சூழ்நிலையை அறிந்து அந்த இசையில் அந்த பாத்திரத்தின் மனநிலையை உணர்ந்து அதற்கேற்ப மேடைப் பாடகரின் நிலைமைய இப்பாடலில் சித்தரித்திருப்பார். அதிகம் அலட்டிக்கொள்ளாமல் மெல்லிய சோகத்தை தன் முகத்தில் கொண்டு வந்து பார்ப்பவர்களுக்கு தன் முகத்திலேயே அந்த காட்சியின் உட்பொருளை உணர்த்திவிடுவார்.
இதே போலத் தான் மோகன புன்னகை பாடலும். வாசு சார் சொன்னதை நான் அப்படியே வழிமொழிகிறேன். என் மனதில் உள்ளதை அப்படியே அவர் எழுதி விட்டார்.
என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th July 2015 06:43 PM
# ADS
Circuit advertisement
Bookmarks