-
29th July 2015, 09:29 PM
#2211
Senior Member
Senior Hubber
செந்தில் வேல்..
வித்யாசமான ரசனை அணுகுமுறையில் தூள் பரத்துகிறீர்கள்.. எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் எனக்கும் மிகப் பிடித்த பாடல் நன்றி.. மோகனப்புன்னகை எப்படியோ எடுத்திருக்க வேண்டிய படம்..ம்ம் அந்தப் பாட்டும் பிடிக்கும்..செல்வமேயும் தான்..
வாசு..
காவியத் தலைவி ஏனோ இதுவரை பார்த்ததில்லை முழுக்க.. அவ்வப்போது டிட் பிட்ஸாய்த் தான் பார்த்திருக்கிறேன்..முழுக்கதையையும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்..
சொன்னாற்போல பாட்டெல்லாம் அமர்க்களம் தான்.. கணீர்க்குரலில் நேரான நெடுஞ்சாலை என் ஃபேவரிட்..
யூ டோண்ட் பிலீவ்..இந்த ஆரம்பம் இன்றே ஆகட்டும்.. நேற்று எழுதலாம் என நினைத்திருந்தேன்..பட்.. ராஜேஷை வரவேற்று மதுண்ணா போட்டிருந்தாரா பாகம் 3ல் அல்லது கிருஷ்ணா வை வரவேரற்றா ( ஆளையே காணோமே).. எனில் போட்டாச் என்று வரும் எனப் பேசாமல் விட்டு விட்டேன்..
ஆரம்பம் இன்றே ஆகட்டும் அதற்கும் செள சரியில்லை தான்.. ஆனால் என்ன காரணமோ அவர் விடாப்பிடியாய் இளமையாகவும் இருப்பதாக எண்ணி நடித்துக் கொண்டிருந்தார்..
நன்னாவே எழுதியிருக்கேள்..ரொம்ப டாங்க்ஸூ..
*
சி.செ. டிமோத்தி டால்டன் படங்கள் நான் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன்..living daylights vida licence to kill கொஞ்சம் பெட்டர்.. ஆமாம் வியூ டு எ கில் எழுதினேளோ..மற்ற வீடீயோஸ்லாம் பாக்கணும்.. கொஞ்சம் வேலை கொஞ்சம் உடல் நிலை கொஞ்சம் டயம் இல்லை என நிறைய ரீஸன்ஸ்..
நாகேஷின் கன்னி நதியோரம் விட்டுப்போனதில் கண்ணாக்கு ரொம்ப வருத்தமாம் (ஏன் மனசாட்சி.. உன்னையார் இங்க வரச்சொன்னா!)
*
மதுண்ணா வெல்கம் பேக்.. உங்கள் பாடலையும் கேட்க வேண்டும்
*
ராக தேவன்..ஜுகல் பந்தி சிகப்புரோஜாக்களுக்கு தாங்க்ஸ்.. ஹிந்தி பாட் கேட் சொல்றேன்!
*
ராகவேந்திரர்..ஆஹா நினைவலைகள் அழகாக இருந்தன..தெரிந்தும் கொண்டோம்..அப்போ நான் க்க்குட்டிக் கண்ணன்..தாங்க்ஸ்
*
Rajesh..மல்லிகைப் பூச்சரம் பாடலுக்கு நன்றி.. சுத்தமாக நினைவிலில்லை.. ( நினைவிலிருப்பது ந.தியின் கம்பீர ஐயங்கார் நடை ஆரம்பக் காட்சிகளில் டைட்டில் என நினைக்கிறேன்..(படம்பார்த்த போது என் தந்தையை நினைவு படுத்தினார்)) ஆனால் பூர்ணிமா ஜெயராம் ஒய் ஜி எம்முக்கு என நினைக்காமல் குறைவற நடித்திருப்பார்.. நாடகம் சினிமா என இரண்டையுமே பார்த்திருக்கிறேன்.. ( நாடகத்தில் ஒய்.ஜி.பி) சரி..ரிலீஸ் மதுரை நியுசினிமா..(சரிதானா)
*
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
29th July 2015 09:29 PM
# ADS
Circuit advertisement
-
29th July 2015, 09:33 PM
#2212
Junior Member
Diamond Hubber
Thankyou
Chinnakannan sir
-
29th July 2015, 09:41 PM
#2213
Senior Member
Senior Hubber
என்னமோ போங்க – 24
**
முடிவில் இருக்கும் வார்த்தைகளை வைத்து பாடல்கள் எவ்வளவு வந்திருக்கின்றன என யோசித்தேன்..யோசித்தேனா..
அதாவது.. நான் இன்று ஒன்றரை கி.மி நடந்தேன் (கண்ணா பொய் சொல்லாதே) என்பதில் நடந்தேன் என வைத்து பாட்டு வந்ததா..என்பது போல் யோ..செய்ததில்..
இறந்த காலம்
**
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்..
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
பாடினாள் ஒரு பாட்டு பால் நிலாவினில் நேற்று
பார்த்தாய் பார்த்தேன் சிரித்தாய் சிரித்தேன்..இரவும் பகலும்..இதுதான் காதலா..
எதிர்காலம்
*
வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை
வாராதிருப்பானோ வண்ணமலர்க்கண்ணனவன்
வருவேன் நானுனது மாளிகையின் வாசலுக்கே
*
நிகழ்காலம்..
சொல்லுகிறேன் என்றெல்லாம் பாட்டு இல்லை.. கண்டதைச் சொல்லுகிறேன் என ஒரு க்ளாஸிக் பாட் இருக்கிறது..
இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என பாட் இருக்கிறது
ஓடும் மேகங்களே..ஒரு சொல் கேளீரோ
வேறு என்ன இருக்கிறது..ஹை இருக்கே..
வேறென்ன வேண்டும் உன்னைத் தவிர ( நிகழ்காலம் தானே)
*
இதன் பொருட்டு வேறு சில பாடல்கள் தேடிப் பார்க்கையில் எனக்குள்ளும் ஒரு பாடல் பிறந்தது!.. பாட்டும் கிடைத்தது..!
உறங்கிட எண்ணும் பொழுதினில் உந்தன்
…உருவமும் வருமே இமைக்குள்ளும்…..
புறந்தளி அதனைப் போவெனச் சொன்னால்
…புன்னகை பூத்தே திரும்பிவிடும்
கரங்களைக் கண்ணில் பொத்தியே உதட்டைக்
..கடிக்கவும் நீயும் கலக்கமுற
சுரமுளம் கொண்டே சுந்தரி நானும்
…புரளுவேன் இந்தப் படுக்கையிலே..
வண்டிக்காரன் மகனில் குண்டு பூசணிப் பூவாய் தமன்னா நிறப் புடவையில் ஜெய்சித்ரா, கருகருவென குண்டுக் கத்திரிக்காய் மீது கொஞ்சம் மீசை என ஜெய்சங்கர்.. பாலா பாட் தான் (அப்படித்தானே) வாசு ஷமிக்கணும்..
கொஞ்சம் ரொமாண்டிக் லிரிக்ஸ்க்கு நடுல்ல இப்படியா தலைகாணி உறை மாதிரி ஒரு ப. நா டிரஸ் கொடுத்து ஜெ.சியை
தையா தக்கா என குதிக்க விடுவாங்க....என்னமோ போங்க....
*
படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை (ஒரு ஸ்லீப்பிங் டேப்லட் போட்டிருக்கலாமில்லையா..)
(பின்ன வாரேன்)
*
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
29th July 2015, 09:51 PM
#2214
Senior Member
Senior Hubber
வாசு பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி பாடலும் அதன் பின்புலமான உங்கள் மாமா , அன்னை பற்றிய பதிவு மிகவும் சோகப் பட வைத்தது..இப்போது நலமுடன் உம் அன்னை இருக்கிறாரல்லவா..
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
29th July 2015, 10:09 PM
#2215
Junior Member
Veteran Hubber
காமெடியர்களின் கலக்கல் மதுர கானங்கள்
பகுதி 4 : நடிகவேள் எம் ஆர் ராதா
என்றுமே நடிகர்திலகத்தின் மரியாதைக்குகந்தவராக விளங்கிய நடிகவேள் ஒரு சகாப்தமே !
கதாநாயகராக வில்லனாக குணசித்திர நடிகராக காமெடியனாக ....கலக்கியெடுத்த பகுத்தறிவு சிந்தனாவாதி!
இவரும் அபூர்வமாகவே ஆடல் பாடல் காட்சிகளில் முத்திரை பதித்திருக்கிறார் !
நடிகர்திலகத்துடன் பின்னியெடுத்த பலே பாண்டியா , இருவர் உள்ளம் ,வில்லத்தனமான குமுதம், ...ஹலோ மிஸ்டர் ஜமீன்தாரின் சிகையலங்காரக் கலைஞர் மறக்க முடியாத நகைச்சுவையாட்டங்கள்!!
சொந்தமுமில்லே பந்தமுமில்லே..... சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்!
நாங்க மன்னருமில்லே மந்திரியில்லே வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்! ......என்ன மாதிரி வரிகள் !
அஞ்சுக்குப் பின்னாலே வந்த பிள்ளை இது ஆறாவதாக வந்த செல்லப் பிள்ளை....
ஆராரோ அடி ஆராரோ அட அச(த்தல்)ட்டுப்பய புள்ளே ஆராரோ !!
சிட்டுப் போல பெண்ணிருந்தா சுத்தி சுத்தி வட்டமிட்டு கிட்ட கிட்டஓடிவந்து தொடலாமா...மாமா...மாமா,,,மாமா
நடிகவேளே ..நீங்களே உங்களுக்கு என்றும் நிகரானவர்...
பாட்டாலடிக்கிறார் நிகரற்ற நடிகர்திலகம் !!
நடிகர்திலகம் Vs நடிகவேள் விருந்து அலுக்கலுக்கு சரியான மருந்துக் குலுக்கலை வாசுதேவன் சார் Vs சின்னக்கண்ணன் சார் கலக்கலில் இருந்து எதிர்பார்க்கலாமா !?
Last edited by sivajisenthil; 30th July 2015 at 05:02 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 5 Likes
-
29th July 2015, 10:51 PM
#2216
Junior Member
Veteran Hubber
சி.செ. டிமோத்தி டால்டன் படங்கள் நான் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன்..living daylights vida licence to kill கொஞ்சம் பெட்டர்.. ஆமாம் வியூ டு எ கில் எழுதினேளோ..மற்ற வீடீயோஸ்லாம் பாக்கணும்..
CK
210/#2094 A View to A Kill
please see this page CK!
Last edited by sivajisenthil; 30th July 2015 at 09:43 AM.
-
29th July 2015, 11:53 PM
#2217
Senior Member
Senior Hubber

Originally Posted by
sivajisenthil
சி.செ. டிமோத்தி டால்டன் படங்கள் நான் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன்..living daylights vida licence to kill கொஞ்சம் பெட்டர்.. ஆமாம் வியூ டு எ கில் எழுதினேளோ..மற்ற வீடீயோஸ்லாம் பாக்கணும்..
CK
210/#2094 A View to A Kill
please see this page CK!
ஓஹ் வயசாய்டுத்தோன்னோ.. மறந்து போச்..லைக் கூட போட்டிருக்கேனே (துபாயில் நண்பர் வீட்டில் அவசரமாகப் போட்ட லைக்).. அழகான வில்லன்.. அழகான(?!) கறுப்பழகு வில்லி ..ஈஃபில் டவரிலிருந்து குதிப்பவர்.. கொஞ்சம் விறு விறுவென்றுதான் சென்ற்து படம்..கடைசியில் நதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பெரியவர் நதி வற்றி படகுடன் கட்டாந்தரையில் இருக்கும் காட்சி... எல்லா சேஸூம் போட்டாச் என நினைத்ததாலோ என்னவோ ஃபயர் இஞ்சின் சேஸ் பாலம் என காட்டு காட்டு எனக் காட்டியிருப்பார்கள்!
பூனைக்கண் கதானாயகி பரவால்லை தான்.. காரை ஓட்டும் ஸர் பட்டம் பெற்ற பிரமுகர் கார் வாஷின் போது பின் சீட்டிலிருந்து அந்த ஜேனட் டால் கழுத்தில் இழுக்கப்பட்டு உயிர்விடும் பரிதாபம் ம்ம். ஃபெய்ல்யூர் ஆ ஆச்சு? எனக்குப் பிடிச்சிருந்ததே..
க்ளைமாக்ஸ்.. கோல்டன் கேட்டை ஸான்ஃப்ரான்ஸிஸ்கோவில் நேரில் பார்த்த போது நினைவில் வந்ததும் இந்தப் படம் தான்.. ஸோரின் இண்டஸ்ட்ரீஸ் விமானம் தென்படுகிறதா என்று கண்ணிடுக்கிப் பார்த்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..மூருக்கு வயதானது அப்பட்டமாகத்தெரிந்ததும் ஒரு சோகம் தான்...
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
30th July 2015, 08:34 AM
#2218
Junior Member
Veteran Hubber
The last rites for our honorable simpleton People's erstwhile President of India Dr. APJ Abdhul Kalaam are on the anvil.
May his soul rest in peace even as his vision for having prompted our younger generation to 'dream' to become the cream of our national development would remain a mission under his eternal guidance
Last edited by sivajisenthil; 30th July 2015 at 08:47 AM.
-
30th July 2015, 09:08 AM
#2219
Senior Member
Diamond Hubber
நன்றி சிவாஜிசெந்தில் சார்.
எம்.ஆர்.ராதா நடிகவேள் என்ற பட்டத்துக்குத் தகுதியானவர் என்பதை நகைச்சுவை, வில்லத்தனம் இவற்றுடன் மனதை நெகிழ வைக்கும் சோகக் காட்சிகளிலும் நிரூபித்தவர். பங்காளிகள் படத்தின் இந்தப் பாடலும் அவர் நடிப்புக்கு இன்னொரு முத்திரை பதிக்கும் சான்று
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
30th July 2015, 01:29 PM
#2220
Junior Member
Veteran Hubber
நன்றி சிவாஜிசெந்தில் சார்.
எம்.ஆர்.ராதா நடிகவேள் என்ற பட்டத்துக்குத் தகுதியானவர் என்பதை நகைச்சுவை, வில்லத்தனம் இவற்றுடன் மனதை நெகிழ வைக்கும் சோகக் காட்சிகளிலும் நிரூபித்தவர். பங்காளிகள் படத்தின் இந்தப் பாடலும் அவர் நடிப்புக்கு இன்னொரு முத்திரை பதிக்கும் சான்று
madhu
Madhu Sir
ரத்தக் கண்ணீரின் இறுதிக் கட்ட முத்திரை பாடல் காட்சியும் அவரது பன்முக நடிப்பாற்றலுக்கு எடுத்துக்காட்டே !!
குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது ?!
செல்வச் சீமானாக மனம் போன போக்கில் வாழ்க்கையை அனுபவித்த கோமான்....
உப்பைத் தின்றவர் தண்ணீர் குடிப்பார்...தப்பைச் செய்தவர் தண்டனை கொள்வார் என்ற கூற்றுக்கேற்ப.........
செல்வமிழந்து ஒழுக்கக் கேட்டின் விளைவால் சாக்கடை ஜீவனாக விழுந்து கிடக்கும் அதிர வைக்கும் காட்சியில் நடித்திட மன தைரியம் யாருக்குண்டு ?! அதுதான் நடிகவேளின் பலம்!! விழித்திட்ட மனசாட்சி போதித்திடும் பாடம்!!
Last edited by sivajisenthil; 30th July 2015 at 01:41 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks