-
30th July 2015, 02:08 PM
#11
Senior Member
Veteran Hubber
நேரம் படஇயக்குநருக்கு ரஜினியிடமிருந்து அழைப்பு?
மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றப் படம் பிரேமம். தமிழில் நேரம் படத்தை இயக்கிய அல்போன்ஸ்புத்திரன் தான் அந்தப்படத்தையும் இயக்கியிருந்தார். முதல்படமான நேரமும் வெற்றி, அடுத்த படமான பிரேமமும் வெற்றி என்பதால் அவரிடன் பணியாற்றிய பல நடிகர்கள் ஆர்வமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, அண்மையில் அல்போன்ஸ்புத்திரனைத் தொடர்பு கொண்ட ரஜினி மகள் சௌந்தர்யா, அப்பாவுக்கு ஏற்ப ஒரு கதை தயார் செய்யுங்கள் அவரை வைத்து நீங்கள் இயக்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னதாகத் தெரிகிறது. சூப்பர்ஸ்டாரிடம் இருந்து அழைப்பு என்றால் எல்லோரும் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் இவரோ அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.
அவரை வைத்துப் படம் இயக்கும் அளவுக்கு நான் இன்னும் தயாராகவில்லை, அவரை மட்டுமல்ல வேறு யாரை வைத்தும் பெரியபட்ஜெட்டில் படம் எடுக்க நான் தயாராகவே இல்லை. சின்னயூனிட்டை வைத்துக்கொண்டு அமைதியாகப் படம் எடுக்கவே நான் விரும்புகிறேன் என்று சொன்னதாகத் தெரிகிறது.
அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கும் மூன்றாவது படத்தில் ரஜினி நடிக்கிறார், அல்போன்ஸ்புத்திரன் தயாராக இருந்தால் அவருடைய மூன்றாவதுபடத்திலும் ரஜினி இருந்திருப்பார் என்று திரையுலகில் பேச்சு இருக்கிறது.
-
30th July 2015 02:08 PM
# ADS
Circuit advertisement
Bookmarks