Page 14 of 401 FirstFirst ... 412131415162464114 ... LastLast
Results 131 to 140 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #131
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    The last rites for our honorable simpleton People's erstwhile President of India Dr. APJ Abdhul Kalaam are on the anvil.
    May his soul rest in peace even as his vision for having prompted our younger generation to 'dream' to become the cream of our national development would remain a mission under his eternal guidance
    Last edited by sivajisenthil; 30th July 2015 at 08:44 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #132
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல, எவரும் எட்டாத அதிசியம்...

  4. Thanks eehaiupehazij thanked for this post
  5. #133
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள்தலைவர் சிவாஜி சிவாஜி அவர்களின் 14வது நினைவுநாளையொட்டி நாம்தமிழர் கட்சி சார்பில் திரு.செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26.7.2015 அன்று மாபெரும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திரு.சீமான் அவர்கள் நமது தலைவரை பற்றி ஒரு மணி நேரம் பேருரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அகிலஇந்திய சிவாஜி மன்றத்தின் செயலாளர் திரு.முருகவிலாஸ் நாகராஜன் அவர்கள், சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் திரு.சந்திரசேகரன் அவர்கள், அகிலஇநதிய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் செயல்தலைவர் திரு.நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.
    மாநாடு போல் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில் திரு.சந்திரசேகரன், திரு.நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா ஆகியோர் உரையாற்றியபோது தலைவரைப் பற்றி தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
    இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நாம்தமிழர் கட்சி தலைவர் திரு.சீமான் அவர்களுக்கு உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும், சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
    இந்நிகழ்ச்சியின் நிழற்படங்களை காண visit... www.sivajiganesan.in


    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல, எவரும் எட்டாத அதிசியம்...

  6. #134
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



  7. Thanks eehaiupehazij thanked for this post
  8. #135
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகத்தில் பிறந்து தங்களுடைய தொழில் பக்தி, தொழில் நேர்த்தியால் உலகபுகழ் பெற்ற தமிழகத்தின் பெருமைகலான நடிகர் திலகம் மற்றும் கலாம் அவர்களிடம் உள்ள ஒற்றுமை பாருங்கள் தோழர்களே.

    இரு விஞ்ஞானிகளும் அக்டோபர் மாதம் பிறந்து.... ஜூலை மாதம் இப்பூவுலகை விட்டு பிரிந்தார்கள் -
    உலகபுகழ் பெற்ற உண்மையான மண்ணின் மைந்தர்களிடையே உள்ள ஒற்றுமை .....வியக்கவைக்கிறது !


    மறைதிரு கலாம் அவர்களின் படிப்பை தனது நடிப்பில் கொண்டுவந்து காட்டிய நமது நடிகர் திலகம் - குழந்தைகள் கண்ட குடியரசு திரைப்படத்தில் 103 வயதுள்ள விண்கல விஞ்ஞானியாக !!


  9. #136
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    " இராமேஸ்வரத்தில் பாவங்கள் தினந்தோறும் கழிக்கப்படும் . ஆனால் தற்போது புண்ணியம் விதைக்கப்படுகிறது !!"

    இன்று ஒரு வினோதமான நாள் . - இரண்டு உடல்கள் மண்ணுக்குள் செல்லும் நாள் . இந்த இரண்டு ஆத்மாக்குள்த்தான் எத்தனை எத்தனை வித்தியாசங்கள் , முரண்பாடுகள் .....

    ஒற்றுமை


    இரண்டு ஆத்மாக்களும் மிகவும் பிரபலமானவை - உலகமே திரும்பி பார்க்க வாய்த்தவைகள் . Both were involved with missiles !!

    முரண்பாடுகள் / வேற்றுமைகள்

    1. ஒரு ஆத்மா உலக அரங்கில் நம் பெருமையை உயர்த்தியது . எழுச்சி உள்ள இந்தியாவாக வர கனவு காணுங்கள் என்று வலியுறுத்தியது - கனவுகள் கண்டால் தான் உங்கள் கனவுகள் நிஜமாகும் என்று இளய தலைமுறையைத்தட்டி எழுப்பியது . மனிதன் என்ற போர்வையில் வலம் வந்தது அந்த தெய்வம் .

    2.உலக அளவில் எல்லோரையும் வெட்கி தலை குனிய வைத்தது இன்னொரு ஆத்மா . அது கனவு கண்டவர்களை சுட்டு வீழ்த்தியது .- பலரின் கனவுகள் மலராமல் மண்ணில் புதைந்தன . மனிதன் என்ற போர்வையில் திரிந்து கொண்டிருந்தது அந்த மிருகம் .

    3. புனிதமான குறிக்கோள் - தளராத உழைப்பு --- ஒரு ஆத்மாவிற்கு
    தவறான பாதை , தவறிய குறிக்கோள் , வீணாகி விட்ட வாழ்க்கை - இன்னொரு ஆத்மாவிற்கு .
    ( one had a vision and the other was on a misplaced mission.)


    4. இலட்சம் , இலட்சம் மக்கள் கடைசி மரியாதை செய்ய விரும்பினர் - போக்குவரத்து ஸ்தம்பித்தது ஒரு ஆத்மாவின் பூத உடலை கடைசி முறை தரிசிக்க .

    5. இலட்சம் , இலட்சம் மக்கள் வேண்டினர் இன்னொரு ஆத்மாவின் உடல் சீக்கிரம் மண்ணில் விழ ....

    6. இரு ஆத்மாக்களில் ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்து அந்த இடத்திற்கு பெருமையை சேர்த்தவர் . அவருக்கு இளாயதலை முறையின் மீது நம்பிக்கை இருந்தது இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக அவர்கள் சீக்கிரம் கொண்டு வருவார்கள் என்று .

    7. இன்னொரு ஆத்மாவிற்கு கடைசி வரை நம்பிக்கை இருந்தது இந்த நாட்டின் ஜனாதிபதியின் மீது - தனக்கு கருணை புரிவார் என்று . ( one was ex president and the other' s last hope was the president!)

    8.இறந்தும் நம்மிடையே வாழப்போவது ஒரு ஆத்மா ! வாழும்போதே நம்மிடையே இறந்துபோனது இன்னொரு ஆத்மா . விதியின் விளையாட்டு - இரு உடல்களும் இதே மண்ணுக்குள் இன்று உறங்க செல்கின்றன !!!!

    என்றும் நம் நினைவில் வரும் தலைவரின் பாடல் தான் இன்றும் கண்ணில் தெரிகின்றது -- யாரடா மனிதன் இங்கே ???


  10. #137
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    Sun TV Programme Vanga Pesalam, dedicated to the memory of NT.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Thanks eehaiupehazij, Russellbpw thanked for this post
    Likes KCSHEKAR, Russellbpw liked this post
  12. #138
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நாம் பெற்ற செல்வம் நடிகர் திலகம் .... ஒரு நினைவு கூறல்!

    நடிகர்திலகத்தின் பாந்தமான ஜோடிகளில் ஜி வரலக்ஷ்மியும் முக்கியமானவர். நான் பெற்ற செல்வம் திரைப்படத்தில் சற்றே தனது பேரர் விக்ரம் பிரபுவை நினைவு படுத்தும் தோற்றப் பொலிவில் குடும்பப் பாங்கான வரலக்ஷ்மியுடன் நடிகர்திலகம் மனதை ஈர்த்த பாடல் காட்சியமைப்பு !!



    மீண்டும் ஹரிச்சந்திராவில் நடிகர்திலகம் இணைவில் மனத்தைக் கொள்ளை கொண்டார் !

    குளோசப் காட்சிகளில் நவரச பாவங்காளையும் சீராக வெளிப்படுத்துவதில் உலக நம்பர் ஒன் நடிகர்திலகமே !
    பாடல் காட்சி முழுவதும் குளோசப்...நினைத்துக் கூடப் பார்க்க முடியாதே வேறு எந்த நடிகராலும்......!


    Last edited by sivajisenthil; 30th July 2015 at 07:50 PM.

  13. Thanks vasudevan31355 thanked for this post
  14. #139
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வாசு,

    மன்னிக்கவும். நெஞ்சிருக்கும் வரை படத்தில் முத்துராமன் ஏற்றிருந்த கதாபாத்திரத்தின் பெயர் உங்கள் மனதில் இந்தளவிற்கு அதிர்வலைகளை உருவாக்கி வேதனைப்படுத்தும் என்று தெரிந்திருந்தால் நான் அதை சொல்லியிருக்கமாட்டேன். எனக்கு ரொம்ப பிடித்த படம். நடிகர் திலகத்தின் பாத்திரவார்ப்பும் மிகவும் பிடிக்கும் என்ற காரணத்தினால் ரகுராமன் என்றே எப்போதும் குறிப்பிடுவேன். அந்த காரணத்தினாலேயே இப்போதும் அப்படி வந்து விட்டது. மீண்டும் மன்னிக்க.

    அன்புடன்

  15. #140
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    சிவராமன் மற்றும் ரகுராமன் இந்தப் பெயர்கள் நம் வாழ்வில் எந்த ஒரு கட்டத்திலாவது நம்முடன் தொடர்பில் நிச்சயம் இருந்திருக்கும். ஆனால் அது எந்த விதத்தில் நம்முடன் தொடர்பில் இருந்திருக்கிறது, அல்லது எந்த விதத்தில் நம்மை பாதித்திருக்கிறது என்பதில் தான் விதி அல்லது இறைவன் அல்லது இயற்கை ..எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.....இவற்றின் இருப்பை நாம் உணர்கிறோம்.

    இதே நெஞ்சிருக்கும் வரை சிவராமன் என்ற பெயர் எனக்கும் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறது. என் பள்ளி காலத்து நண்பன் ஒருவனின் பெயர் சிவராமன். அவனும் நடிகர் திலகத்தின் ரசிகனே. நாங்கள் அப்போது கடற்கரையில் நெஞ்சிருக்கும் வரை படப்பிடிப்பைப் பார்த்தவர்களில் அடங்குவோம். ஆனால் அப்போது அந்த பாத்திரங்களின் பெயர்களெல்லாம் தெரியாது. படம் வெளிவந்தவுடன் மிகவும் ஆவலாய் நாங்கள் பார்த்தது, Of Course தலைவர், என்றாலும் அதற்குப் பிறகு நாங்கள் பார்த்த காட்சி வருகிறதா என ஆவலோடு காத்திருந்தோம். ரொம்ப நேரம் கழித்து பாடல் காட்சியாகவே அது இடம் பெற்ற போது எங்களுக்கு அளவற்ற மகிழ்வையூட்டியது. அதுவும் ஒரு பாத்திரத்தின் பெயர் அவன் பெயர் என்று அறிந்த போது அவன் ஆனந்தக் கூத்தாடினதைப் பார்க்க வேண்டுமே...பள்ளிப் பருவம் முடிந்த பின் அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் கனவுகள், அழுவதும் சிரிப்பதும் அவனவன் விதிப்படி என்பார்களே அதைப் போல அவன் எங்கோ சென்று விட்டான். அதன் பிறகு அவனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

    ஆனாலும் அந்த மெரினா கடற்கரையில் சுடும் மணலில் கால் கொதிக்க - அப்போதெல்லாம் காலில் செருப்பணிந்திருந்தால் பெரிய பணக்கார வீட்டுப் பையன் என்று எங்கள் வட்டாரத்தில் அர்த்தம் - அந்த படப்பிடிப்பைப் பார்த்த ஞாபகத்தையும் குறிப்பாக முடியும் நேரத்தில் அந்த சிலை இருக்கும் இடத்தில் ஒரு சேர் போட்டு உட்கார்ந்து தலைவர் ரிலாக்ஸ் பண்ணியதையும் பார்த்து திறந்த வாய் மூடாமல் பார்த்த நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன.

    ஒரு விதத்தில் சிவராமன் என்றாலே எனக்கு அந்த தோழன் தான் நினைவுக்கு வருவான்.

    ஆனால் இந்த சிவராமன் தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்பைப் படிக்கும் போதே கண்களெல்லாம் குளமாகி விட்டன.

    ஆனால் முரளி எழுதியதும் ஒரு விதத்தில் நல்லது தான். இந்த சந்தர்ப்பத்தில் இவர்களையெல்லாம் நாம் நினைவு கூர்கிறோமே..

    அதுவும் ஒரு நெகிழ்வான அதே சமயம் சுகமான அனுபவமே.
    Last edited by RAGHAVENDRA; 30th July 2015 at 10:49 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Likes KCSHEKAR liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •