-
4th August 2015, 02:26 PM
#241
Senior Member
Veteran Hubber
உலக அளவில் 500 கோடி வசூலித்த பாகுபலி - இந்திய அளவில் மூன்றாவது இடம் - Webulagam
எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி திரைப்படம், உலக அளவில் 500 கோடிகளை வசூல் செய்ததாக பிரபல ஃபோர்பஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தயாராகும் படங்களில் இந்தி மொழிப் படங்களே அதிகம் வசூல் செய்கின்றன. விதிவிலக்காக ஷங்கரின் எந்திரன் நல்ல வசூலை பெற்றது. ஆனாலும் இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த படங்களில் முதல் ஐந்து இடங்களில் இடம்பெற எந்திரனால் முடியவில்லை.
ராஜமௌலியின் பாகுபலி அதிரடியாக 500 கோடிகள் வசூல் செய்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அமீர் கானின் பிகே திரைப்படம் உலகம் முழுவதும் 740 கோடிகளை வசூல் செய்து முதலிடத்திலும், அவரது தூம் 3 படம் 540 கோடிகள் வசூலித்து இரண்டாவது இடத்திலும் உள்ளன. பாகுபலி 500 கோடிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
சமீபத்தில் வெளியான சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் இப்போதுதான் 400 கோடிகளை கடந்திருக்கிறது.
-
4th August 2015 02:26 PM
# ADS
Circuit advertisement
-
5th August 2015, 04:22 PM
#242
Senior Member
Veteran Hubber
ராஜமௌலியின் வாழ்நாள் கனவு!
இந்தியாவின் டாப் இயக்குநர் லிஸ்டில் முக்கிய இடம் பிடித்த ராஜமௌலியின் கனவுப் படம் பிரம்மாண்ட ‘பாகுபலி’ கூட இல்லையாம். அவரது கனவு வாழ்நாள் சாதனை என சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி எடுத்த ஒரு பேட்டியில் போது கூறியுள்ளார்.
மகாபாராதம் இதிகாசத்தை படமாக எடுப்பதுதான் ராஜமௌலியின் கனவாம். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘ மகாபாரதம்’ இதிகாசத்தை படமாக எடுப்பது அவ்வளவு சுலபமல்ல. மூன்று மணி நேரத்தில் ஒரு படமாக எடுத்து முடிவு கொடுப்பதோ, அல்லது மூன்று மணி நேரம் இரண்டு படங்களாகவோ என மகாபாரதத்தை எடுத்துவிட முடியாது.
மகாபாரதத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு கதை இருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு படமாக எடுக்கப்பட வேண்டியவை. கடைசியாக ஒவ்வொரு கேரக்டரும் கடவுள் கிருஷ்ணனை மையப் படுத்தி சொல்லப்பட்டிருக்கும் இந்த இதிகாசத்தை தெலுங்கில் படமாக எடுப்பதே எனது கனவு ‘ என அந்த பேட்டியில் கூறியுள்ளார் ராஜமௌலி.
இதை படமாக எடுத்தால் உலக படங்களின் மத்தியில் நாம் பேசப்படுவோம். அந்த அளவிற்கு சிறப்பான கதாபாத்திரங்களும்,அவைகளின் முக்கியத்துவமும் இருக்கின்றன. ஆனால் அது ஒரு கடல் என நெகிழ்ந்துள்ளார் ராஜமௌலி
-
7th August 2015, 01:57 PM
#243
Senior Member
Veteran Hubber
'பாகுபலி 2' தமிழக உரிமைக்கு கடும் போட்டி
'பாகுபலி' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 'பாகுபலி 2' தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை தமிழகமெங்கும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டது.
இந்தியளவில் வெளியான 'பாகுபலி' படத்துக்கு, மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. 'பாகுபலி 2' படத்துக்கான படப்பிடிப்பு செப்டம்பர் 15ம் தேதி முதல் துவங்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படாத 2ம் பாகத்துக்கு, தற்போதே விநியோகஸ்தர்கள் மத்தியில் உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. 'பாகுபலி' முதல் பாகத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சுமார் 12 கோடிக்கு கைப்பற்றியது.
ஆனால், 'பாகுபலி 2' படத்தை சுமார் 40 கோடிக்கு விலைபேசி வருகிறார்கள். இப்படத்திற்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
-
7th August 2015, 08:37 PM
#244
Senior Member
Diamond Hubber

Originally Posted by
balaajee
மகாபாராதம் இதிகாசத்தை படமாக எடுப்பதுதான் ராஜமௌலியின் கனவாம்.
It would be virtually impossible to do the whole series as a film, but a film based on One of the most important character , "Karna" would be "awesome", we all know, how well NT'S Karnan did those days, given the technologies used these days ,if the movie is recreated by him now, it would do wonders @BO!
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
7th August 2015, 08:55 PM
#245
Senior Member
Veteran Hubber
பாகுபலி படத்திற்கு மிகப்பெரிய வசூல் என்பது உண்மையா?
பாகுபலி படத்தின் வசூல் பற்றி மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் வருவதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்படம் தமிழகத்தில் சுமார் அறுபதுகோடி வரை வசூல் செய்துவிட்டதாகச் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அதில் உண்மையில்லை என்று சொல்கிறார்கள்.
அந்தப்படத்தின் தமிழகஉரிமையை சுமார் 14 கோடிக்கு வாங்கிய நிறுவனம் மேலும் ஒரிருகோடி இலாபம் வைத்து இன்னொரு நிறுவனத்துக்கு விற்றுவிட்டது. அந்த நிறுவனத்துக்கு இந்தப்படத்தின் மூலம் சுமார் சில கோடிகள் இலாபம் கிடைத்திருக்கலாம் என்றும் ஆனால் அதைத்தாண்டி பலமடங்கு அந்தப்படம் வசூல் செய்துவிட்டதாகச் சொல்லப்படுவதற்குக் காரணம் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
என்ன காரணம்? பாகுபலி படத்தின் இரண்டாம்பாகத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிப்பதோடு அதன் விலையையும் உயர்த்துவதற்குத்தான் இவ்வளவு வேலைகளும் நடக்கின்றன என்கிறார்கள்.
இந்தப்படம் இலாபம் சம்பாதித்ததில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் சொல்லப்படுகிற தொகைகளில் வேறுபாடு இருக்கலாம், அதற்குக் காரணம் ஆளாளுக்கு ஒரு தொகையைச் சொல்லத்தொடங்கிவிட்டதுதான் என்றும் சொல்கிறார்கள்.
-
9th August 2015, 10:28 AM
#246
Senior Member
Veteran Hubber
கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? சிபி ராஜ் ட்விட்டரில் கொடுத்த பதில்!
சினிமா ரசிகர்களின் ஒரே கேள்வி இப்போதைக்கு ’பாகுபலி’ படத்தில் கட்டப்பாவாக வந்த சத்யாராஜ் ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பது தான். சில குறும்புக்கார வலைவாசிகள் மீம்ஸ்களை கூட இதற்காக உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சிலர் இருட்டுக்குள்ள எதிரின்னு நினச்சு பாகுபலியை கட்டப்பா பலி செய்து விட்டார் என கிண்டலும் அடிக்க ஆரம்பித்து விட்டனர். சிலர் அந்தக் கொலையையே நீங்கள் தான் செய்றீங்க என ராஜமௌலி கதை சொல்லியிருப்பாரோ என்ற ரீதியில் மகா நடிகனின் அந்தக் குழந்தையே நீங்க தான் பாணியில் மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர்.
இதன் காரணத்தை தெரிந்துகொள்ள விரும்பிய சிலர் இதை டுவிட்டரில் இருக்கும் அவருடைய மகன் சிபிராஜிடம் கேட்டு குடையத் துவங்கி விட்டனர். இதற்கு சிபி ராஜ் படு கிண்டலாகவே பதிலளித்து கலகலப்பாக்கியுள்ளார்.
சிபிராஜ் தனது ட்விட்டரில் இயக்குநர் ராஜமௌலி இந்த படத்தில் அவரை பாகுபலியாக நடிக்க வைக்க வில்லை, அந்த கோபத்தில் தான் அப்பா பாகுபலியை கொன்று விட்டார்’ என நகைச்சுவையாக கூறியுள்ளார். இவர் கேரக்டரையும் புரிஞ்சுக்கவே முடியலை
இதற்கும் தற்போது மீம்ஸ்களை உருவாக்கிவிட்டனர் வலை குறும்பர்கள்!
யே
-
9th August 2015, 10:58 PM
#247
Member
Regular Hubber

Originally Posted by
PARAMASHIVAN
It would be virtually impossible to do the whole series as a film, but a film based on One of the most important character , "Karna" would be "awesome", we all know, how well NT'S Karnan did those days, given the technologies used these days ,if the movie is recreated by him now, it would do wonders @BO!
Instead of doing a timeline-based series, they could do a character-based series like Avengers and have them converge in the finale - the War!
-
9th August 2015, 11:05 PM
#248
Senior Member
Veteran Hubber

Originally Posted by
lord_labakudoss
Instead of doing a timeline-based series, they could do a character-based series like Avengers and have them converge in the finale - the War!
shiva.. sathya sothanai..
My onions and Signature changes according to my desperate need to be in lime light as the BIG Brother :0 - just saying..
-
10th August 2015, 12:03 PM
#249
Senior Member
Veteran Hubber
-
11th August 2015, 02:00 PM
#250
Senior Member
Veteran Hubber
'Baahubali' (Bahubali) 5th Weekend Box Office Collection: Prabhas' Film Turns 3rd All Time Highest Grosser in 31 Days - http://www.ibtimes.co.in
Baahubali - the Beginning" (Bahubali) has continued to keep the bells ringing at the worldwide box office in its fifth weekend and has become the third all-time highest grossing Indian movie.
Trade experts predicted that "Srimanthudu", which released in theatres on 7 August, would halt the rocking run of Bahubali. As predicted, the Mahesh Babu starrer forced the Rajamouli-directed movie out of some key centres across the globe, but it could not stop the latter from doing good collection in the running cinema halls.
When compared to its fourth Friday collection, Bahubali witnessed around 40 percent drop in its business on its fifth Friday and the decline in the numbers is due to its decreased screen count. But there is absolutely no decrease in its occupancy in the cinema halls.
In its fifth weekend, the Telugu version of Bahubali registered an average of 90 percent occupancy in almost all the centres. The Tamil, Hindi and Malayalam versions of the period film have also managed to record the same amount of footfalls - an average of 70 percent that they had in the previous week. All the four versions had 100 percent occupancy in some areas.
All the four versions of Bahubali are estimated to have collected approximately Rs 25 crore gross at the worldwide box office in its fifth weekend. Its 31-day global total collection stands at Rs 550 crore gross. The film has collected approximately Rs 415 crore nett in the global market.
Bahubali has become the third all-time highest grosser Indian movie, pushing down Aamir Khan's "Dhoom 3" (Rs 542 crore) to the fourth place. The movie is now on its way to beat the record of the second all-time highest grosser – "Bajrani Bhaijaan", which is still doing well at the box office.
Bookmarks